- ஜமாலன் – 29-03-2012
”மலடி மகனின்” கலை அனுபவம் தினவாழ்வு
Posted வியாழன், மார்ச் 29, 2012 in பொதிகை, பொதுவானவை, philosophy by ஜமாலன்எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது
Posted செவ்வாய், செப்டம்பர் 09, 2008 in அறிவியல், பொதுவானவை, மீள்பதிவு, வாசித்தவைப் பற்றி by ஜமாலன்கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும்
-ராஜன் குறை
அறிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய கோட்பாடுகள் உருவாயின. இதை முழுதும் புரிந்துகொள்ள அணு ஆற்றல் பருப்பொருளாக மாறுவதன் மர்மத்தை அறிய வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் பற்றிய கோட்பாட்டை (Theory of Everything) உருவாக்கமுடியும்.
ஜெனிவாவிற்கு அருகே, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு 300 அடி ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் LHC (Large Hydron Collider) என்ற பிரம்மாண்டமான ஆய்வுக்கூடத்தில் அறிவியலின் அறியப்பட்ட எல்லைகளைக் கடக்கும் பரிசோதனை ஒன்று இன்னும் சில நாட்களில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கவிருக்கிறது. இரு திசைகளிலிருந்து அணுக்கதிர்கள் அச்சுரங்கத்தினுள்ளே செலுத்தப்படப்போகின்றன. அவை சந்திக்கும்போது…?
(ரோபோ படத்திற்கான செட் இல்லை: இதுதான் LHC)
1290 டன் எடையுள்ள ‘அணுத்துகள்மானி’-சும்மா நான் வைக்கும் பெயர்- இத்துளையின் வழியாக 100 மீட்டர் இறக்கப்பட்டது. (இதுபோன்ற பிரம்மாண்ட தகவல்களை வலைத்தளங்களில் தவறாமல் படித்து மகிழுங்கள். Google இல் போய் Large Hydron Collider என்று போட்டால் போதும். CERN என்று போட்டால் இந்த அமைப்பு பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும்) ஒருமுறை அல்ல, ஆயிரக்கணக்கான முறை அணுத்துகள்களை (particles) பல விதமான வேகங்களில், சூழல்களில் மோதவிடுவதுதான் இந்த ஆராய்ச்சி என புரிந்து கொள்கிறேன்.
ஒரு ஆராய்ச்சி அல்ல; ஆறு பெயர்களில் பல ஆய்வுகள் அணுத்துகள் மோதல்களின் மூலம் நடத்தப்படப் போகின்றன. இதன் பலன்களுள் ஒன்று என்னவென்றால் ஆற்றலிலிருந்து பருப்பொருள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என கருத்தளவில் ஊகிக்கப்பட்டுள்ள ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்ற சமாச்சாரத்தைக் காட்டித்தரலாம் எனக் கூறப்படுகிறது. இதை கடவுள் துகள் (God Particle) எனக் குறிப்பிடுகின்றனர். ஹிக்ஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அறிவியலாளர்களில் பலர் இறைவனை அணுக விழைபவர்கள். இத்திட்டத்தின் அறிவியலாளர் ஒருவர், Jos Engelen, “கடவுளுக்கு மிக அருகே மனிதன் செல்லப்போகும் தருணமிது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதை அணுகிச்சென்று புரிந்துகொள்வதே இப்பரிசோதனையின் நோக்கம். எதிலிருந்து என்றோ, எதனால் என்றோ அறிவியலால் கேட்க முடியுமா? எனவே கடவுளை நெருங்குவதாக நினைக்கிறார்கள் அறிவியலாளர்கள். (கடவுள் துகள் உருவாகும் சாத்தியத்தை குறிக்கும் போலி நிகழ்வு “simulated event”)அணுத்துகள் மோதும் பரிசோதனை புதியது அல்ல. அதன் பரிமாணங்கள் இம்முறை பிரம்மாண்டமாயிருக்கின்றன. Anti-matter எனப்படும் எதிர்பொருள் எப்படி இயங்குகிறது என்ற முக்கிய கேள்விக்கு பதில் தேடுகிறார்கள்.இந்த பரிசோதனைகள் எதைக்குறித்து என்று விளக்கும் விதமாக LHC அறிவியலாளர் ஒருவர் ஒரு ராப் பாடல் படம் எடுத்திருக்கிறார். விஞ்ஞானிகள் ஆடிப்பாடி விளக்கும் இந்த அற்புதமான பாடலை அவசியம் கேளுங்கள். நாளும் கோடிக்கணக்கானவர்கள் youtube இல் கேட்டு மகிழும் இதை நாமனைவரும் உடனே கேட்க வேண்டிய தேவையும் உரிமையும் கடமையும் இருக்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டு மேலே படியுங்கள். http://link.brightcove.com/services/link/bcpid1488655367/bclid1453516501/bctid1753815421ஆனால்
இந்த அறிவியலாளர்கள்களும் மற்ற துறையினர் போலத்தான். ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பது. LHC-ஐ எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? LHC அணுத்துகள் மோதல்களில் கருந்துளைகள் உருவாகும் என்கிறார்கள். இந்த கருந்துளைகளுக்கு ஒரு கெட்ட பழக்கம். அது சில சமயம் உலகத்தையே அல்லது உலகங்கள் அடங்கிய பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். (அதாவது பூமியின் சுற்று வட்டாரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.) இப்பரிசோதனையை நிறுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த ஒட்டோ ரோஸ்லர் என்ற ஜெர்மானிய பேராசிரியர் “ஒரு ஓடுகாலி கருந்துளை நான்கு ஆண்டுகளில் வளர்ந்து உலகை விழுங்கிவிடும்” என்கிறார்.
இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட அரசாங்கங்கள் CERN அமைப்பில் பார்வையாளர் தகுதி வகிக்கின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதன் உறுப்பினராக உள்ளன. இப்பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் உலக விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ள பிரம்மாண்டமான தகவல் பகிரும் ஆற்றல் கொண்ட GRID என்ற கணனி மற்றும் optical fibre தொடர்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பரிசோதனை அறிவியலின் விளிம்பில் நிகழ்வதால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை முற்றிலும் கணிக்க முடியாது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏதுமறியா மக்களின் உயிரை பணயம் வைத்து இப்பரிசோதனையை செய்ய இந்த அரசாங்கங்களுக்கும், அறிவியல் நிறுவனத்திற்கும் உரிமை இருக்கிறதா என இந்த வழக்கு கேட்கிறது.
உலகில் வெகுஜன இயக்கங்கள் எதுவும் இந்த பரிசோதனைக்கு இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை (குறைந்த பட்சம் வலைத்தளங்களில் இன்னும் நான் பார்க்கவில்லை) பெரும்பான்மையோருக்கு இன்னும் தகவலே தெரிந்திருக்காது. இந்நிலையில் மக்களின் ஒப்புதலை பெறாமல் இத்தகையை பரிசோதனைகளில் ஈடுபடுவது மனிதர்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமை மீறல் என்கிறது ஹவாயில் போடப்பட்டுள்ள வழக்கு.
மக்களின் ஒப்புதலை பெறலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, கூடவே அழியக்கூடிய விலங்கினங்கள், தாவரங்கள் இவற்றின் ஒப்புதலை எப்படிப் பெறுவது என்று ஒருவர் கேட்கலாம். எந்த அறத்தின் அடிப்படையில் இதுபோன்ற துணிகர செயல்களில் அனைத்துயிர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன? இதை ஹவாய் நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? இதுபோன்ற வழக்குகள் முடிவுக்கு வர பல்லாண்டுகள் ஆகும். இன்னும் சில நாட்களில் தொடங்கும் இப்பரிசோதனையும் பல்லாண்டுகள் நடக்கலாம். திடீரென்று ஒருநாள் பிரபஞ்சத்தைக் காணவில்லையென்றால் தேடாதீர்கள் என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது. “இந்த எரியும் பிரபஞ்சம் என் தலையில் சுழல்கிறது; அதை எங்கே வைப்பது எனக்குப் புரியவில்லை” என்ற பிரக்ஞை பத்திரிகையில் படித்த சதிகுமார் என்ற பஞ்சாபிக் கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.
நன்றி சத்தியக்கடுதாசி.
ரமேஷ்-பிரேமின் படைப்புகள் - ஒருநாள் கருத்தரங்கு
Posted திங்கள், ஏப்ரல் 07, 2008 in அறிவிப்பு, பிரேம், பொதுவானவை by ஜமாலன்ரமேஷ்-பிரேம் படைப்புகள் முழுமையும் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு புதுவையில் மிதக்கும் நூலகம் என்கிற அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டள்ளது.
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம் - வள்ளலார் சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி.
நாள்: 12-04-2008
நேரம்: காலை 9:30 மணி.
தொடர்புக்கு: மணோ.மோகன் - 9944757467 - வெ. குமார் - 9894910605.
அறிவிப்பு:
பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள்
Posted புதன், ஏப்ரல் 02, 2008 in பதிவர் வட்டம், பொதுவானவை, விவாதம் by ஜமாலன்நண்பர் நாகார்ஜினன் தனது இரண்டுமாத கால பதிவு அனுபவங்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பேசியுள்ளார். அதில் பதிவில் நடந்தவரும் பிரபு ராஜதுறை மற்றும் வெங்கட் ஆகியவர்களின் பின்னொட்டப்பெட்டிக் குறித்த விவாதம் ஒன்றை சுட்டிக்காட்டி தானும் பின்னொட்ட பெட்டியை திறப்பதாக சொல்லியுள்ளார். அந்த விவாதத்தில் வெங்கட்டிற்கு இடப்போன பின்னொட்டம் வளர்ந்து பதிவாகிறது இங்கு.
இது ஒரு பயனுள்ள விவாதம். மீண்டும் மீண்டும் பேசப்படும் பதிலவுலகமா? பத்திரிக்கை உலகமா? என்கிற விவாதமாக இருப்பதால் இது குறித்து வெங்கட் கட்டுரையை முன்வைத்து வெட்டியும் ஒட்டியம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்
1. வெங்கட்டின் பின்னோட்டத்தில் பத்ரி மற்றும் சிரில் அலக்ஸ் கூறுவதுபோல மின்னஞ்சல் மற்றும் பின்னோட்ட பெட்டியில் பெரிய வேறுபாடுகள் இல்லை. என்ன மின்னஞ்சலில் கொஞ்சம் வேலை அதிகம், பலரும் பின்னோட்டம் இடமாட்டார்கள். போகிற போக்கில் எதையாவது போடமுடியாது என்பதைத்தவிர இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உண்மையில் உரையாட விரும்புபவர்கள் மின் அஞ்சல் செய்வதன் மூலம் காத்திரமான உரையாடலை துவக்கலாம். “பெருசு“ என்று நீங்கள் கூறுபவர்கள் மின் அஞ்சலை திறந்துதான் வைத்துள்ளனர்.
2. செத்த மரத்திற்கும், தினமும் தண்ணீர் ஊற்றும் உயிர்ப்புள்ள மரத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய, என்றாலும், பத்தி எழுத்தைப் பொறுத்தவரை வெங்கட் சில நியாயமான வாதங்களை வைத்துள்ளார். அதே நேரம் இலக்கிய வகைப்பட்ட எழுத்தையும் இதழியல் வகைப்பட்ட எழுத்தையும் பிரித்து பார்ப்பது அவசியம். அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்கமுடியாது. எழுத்து என்பதற்கு மதிப்பீடுகள் வாசக தளத்திலும் எழுதப்படும் தளத்திலும் உண்டு. அம்மதிப்பீடுகளி்ல் உயர்வு தாழ்வு கற்பிப்பவை அரசியல் சார்ந்தது. ஞாநியின் எழுத்தும் ஜெயமோகன் எழுத்தும் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் அதனளவில் சரியானதே. அதற்கான அரசியல் குணாம்சங்களைக் கொண்டவை. அவர்கள் எழுதுவது சிறந்தது என்றோ பதிவுகளில் எழுதுவதோ தவறு என்றோ பார்க்க முடியாது.
3. பதிவுகள் வெறும் பத்தி எழுத்தை மட்டும் கொண்டதாக அதாவது தகவல் அடிப்படையிலானவையாக மட்டும் இல்லை. பத்தி எழுத்து என்பது தகவல் அடிப்படைகளில் அல்லது நிகழ்வுகள் அடிப்படையில் பேசப்படுவது. அதில் கோட்பாட்டு தத்துவங்கள் அதிகம் பேசப்படுவதில்லை. அனால் அதை தாண்டிய எழுத்து என்பதாக நாம் அறியும் “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்” எழுத்துக்களில் அரசியல், தத்துவம், ஆன்மீகம் இலக்கியம் என பலவகை எழுத்துக்கள் அவற்றின் கோட்பாட்டு தர்க்க அடிப்படையில் உள்ளன. அவை இதழியல் சாராதவை அல்லது இலக்கியம் சார்ந்தவை. சாரு, ஜெயமோகன், எஸ்ரா மற்றும் நாகார்ஜினன் போன்ற எழுத்தாளார்கள் செத்த மரங்களில் செதுக்கிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. அவர்களது எழுத்தும் பத்தி எழுத்தும் ஒன்றல்ல. அவற்றில் இலக்கியம் அரசியல் ஆன்மீகம் எனப் பலவற்றைப்பற்றிய உரையாடல்கள், குறிப்புகள் உள்ளன. அவற்றிற்கு பெருக்கச் (generative) செயல்பாடு உள்ளது. அதனால் அவற்றை பத்தி எழுத்துக்களின் மட்டத்தில் மட்டுமே நிறுத்திப் பார்க்க முடியாது. இதன் பொருள் பத்தி எழுத்து தரம் குறைந்தவை என்பதல்ல அதன் நோக்கம் வாசகத் தளம் வேறு. பத்தி எழுத்துக்கள் உடனடித் தன்மை வாய்ந்தவை. அவற்றின் ஆய்வுத்தன்மையும் குறைவு. அனால் நம்பகத் தன்மை அதிகம். கூடுதலாக அவை புனைவு அல்ல, உண்மையாகவோ அதற்க்கு நெருக்கமானதாகவோ நம்பப்படும் இதழியல்வகை எழுத்துக்கள்.
4. பிரபு ராஜதுறை முன்வைக்கும் ஆங்கில வார்த்தைகளை கூடுமானவரை தவிர்ப்பது என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. பதிவுகள் அந்தவகையில் தமிழிற்கு பெரும் பங்காற்றியுள்ளதை யாரும் மறுத்தவிடமுடியாது. பதிவுகளை குறைத்து மதிப்பிடமுடியாது என்பதுடன் வெங்கட்டின் வாதமே பத்திரிக்கை எழுத்தை ஒரு உயர்ந்த மதிப்பிட்டில் வைத்துதான் எழுதப்பட்டுள்ளது. அல்லது பதிவுலக எழுத்தை உரைப்பதற்கான உரைகல்லாக அந்த எழுத்துக்களில்தான் போய் அளவிட்டுப் பார்க்ககப்படுகிறது. அவரது பதிவின் முன் அனுமானமே அந்த அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளது.
5. ஆக, எப்படி வெங்கட் முன்வைக்கும் பின்னோட்ட பெட்டி என்பது நமது உரிமையோ அதேபோல் மின்னஞ்சலை மட்டும் முன்வைப்பது அவர்களது உரிமை. அதை நாம் கீழிறக்கம் செய்து பார்க்க முடியாது. அவர்களை “பழமையில் ஊறிப்போன படைப்பாளிகளாலும், விமர்சகர்களாலும்“ என்று எழுதுவதன் மூலம் நாம் அடைய விரும்பம் அடையாளம் பதிவுலகம் நவீன சிந்தனையின் பிரதிநிதி என்பதா? இணையத்தில் படித்துவிட்டு ஒரே வாரத்தில் அவர்கள் எழுதினால்.. அடுத்த நிமிடமே நாம் பதிவில் எழுதுகிறோம். இரண்டிலுமே எழுதுபவரின் புரிதல்தான் பிரச்சனையே ஒழிய எப்படி என்பதில் இல்லை. ஒரு வசதி பதிவில் எழுதினால் தட்டிக் கேட்கலாம் உடனடியாக. தற்சமயம் பத்திரிக்கையில் எழுதினாலும் பதிவில் தட்டிக் கேட்கலாம் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளது என்பதால் இதில் பின்னோட்டம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. சமீபத்தில் ஜெயமோகனை பதிவுகளும் பத்திரிக்கைகளும் ஒன்று சோ்ந்து காய்ச்சி எடுத்தது நினைவிருக்கலாம்.
6. சான்றாக, ஜெயமோகன் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். அதில் பத்திரிக்கை என்ன செய்தது? பதிவுலகம் என்ன செய்தது? என்பதை பார்த்தால் இப்பேச்சுக்களின் வழியாக கட்டப்படும் விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஒரு எழுத்தாளனின் 'தான்' குறித்த அரசியல் கோட்பாடுகளிலிருந்து, ஊடகங்களின் எல்லைகள் அவை கட்டமைக்கும் கருத்துக்களம், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் வரை இதற்குள் வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டன. பகடி, அங்கதம், நையாண்டி, நகைச்சுவை அவற்றின் கோட்பாடுகள் உளவியல் அரசியல் ஆழ்மன தணிக்கை என இன்னும் ஆழமாக உள்ளே செல்ல வேண்டிய பல தளங்கள் இவற்றில் மிச்சமிருந்தாலும் இதனை மேலோட்டமாக ஒட்டியும் வெட்டியும் சென்றுள்ளன இந்த பதிவுலக உரையாடல்கள். இனி தமிழ் எழுத்தாளன் புதிதாக உருவாகி வந்துள்ள வித்தியாசமான இந்த பதிவுலக வாசக வட்டத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இனி எழுத்தாள ஆழ்மனம் பதிவுலக வாசகனையும் தனது உரையாடலுக்குள் உள்ளடக்கி அவனது கண்காணிப்பு தணிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு எழுத்துச் சூழலை இந்த உரையாடல் திறந்து விட்டுள்ளது. இதோடு ஜெயமோகன் குறிப்பிடுவதைப்போல ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் கையாளும் வெகுசன அரசியல்தளம் பற்றிய கவனமும் இந்த எழுத்தாளனை கட்டமைக்கும் கூறாக மாறியுள்ளது. நுட்பமாக பார்த்தால் இந்த உரையாடல் பெரும்பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை வெகுசன எழுத்து/இலக்கிய எழுத்து அல்லது கனமான எழுத்து போன்ற வகைத்திணைகளின் முரண்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருப்பதை காணலாம். ஜெயமோகனின் இப்பிரச்சனைக் குறித்த பதிவுகள் அனைத்திலும் இரண்டு முக்கிய அரசியல் கருத்தாக்கங்கள் நுண்ணளவில் விழிப்புற்று போராடின. அது ஒரு 'பண்பாட்டு போராக'வே நிகழ்ந்தது. அதில் ஜெயமோகனை ஆதரிப்பவர்கள் யார் என்பதும் அவரை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்பதையும்கூட இவை சொல்லிக் காட்டியுள்ளன. பரந்துபட்ட மக்களுக்கு புரியாததை எழுதுவதாக வைக்கப்படும் வாதத்தையும் அதில் கண்டோம். உண்மையில், எழுத்தின் அல்லது இத்தகைய கனமான இலக்கியத்தின் பணி ரசிகர்களை உருவாக்குவதல்ல வாசகனை உருவாக்குவதுதான். மக்கள் எல்லோரையும் கடைத்தேற்றுவதல்ல மாறாக மக்களை மேம்படுத்தும் முன்னணிகளை உருவாக்குவதுதான். பதிவுகள் பத்திரிக்கைகளைவிட குறைவான வாசகப் பரப்பையே கொண்டுள்ளன. அதேசமயம் பொது வாசகத் தளத்தைவிட சற்றே வலிமையானதாக உள்ளது. அறிவின் அதிகாரத்தைக் கொண்டதாக உள்ளது. ஆனந்த விகடனைவிட அதிக துயரத்தை ஜெயமோகனுக்கு பதிவுலகம் தந்துள்ளது. அதிகமான அதிகாரத்தை இந்த பதிவெழுத்துக்கள் செலுத்தியுள்ளன. அதிக உரிமையையும் எடுத்துக் கொண்டுள்ளன. இவை தனிமனித தாக்குதலையோ அல்லது குழு நலன்களையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அதேசமயம் தன்னை வெளிப்படுத்தி தனக்கான ஒரு அடையாளத்தை கட்டமைத்துக் கொள்வதாகவும் பதிவுலகம் இப்பிரச்சனையை அனுகியுள்ளது. ஆக, ஜெயமோகன் பின்னோட்ட பெட்டியை இணைக்கவில்லை என்பதற்காக அவரது எழுத்துக்கள் பதிவுலக விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டதா?
7. பின்னோட்டப்பெட்டி இல்லாவிட்டாலும் நம்மைப்போல தனிப்பதிவாக பொட்டு அதனை கண்டிக்கும் வசதி உள்ளது. பிறகு எதற்காக அவர்களை “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்“ என்று அழைக்க வேண்டும். செத்த மரத்தில்தான் சிற்பம் செதுக்க முடியும். உயிருள்ள மரத்தில் (சுயபுலம்பல்களைக் கொண்ட பதிவுகளைப்போல) முதிராத காதலர்கள் பெயர்தான் செதுக்கமுடியும் என்பதாக இந்த தலைப்பை விமர்சிக்க முடியும். பிரச்சனை சில முன்முடிவுகளுடன் எழுதப்படுவதின் விளைவே இது என்பதைச் சொல்லத்தான்.
8. பதிவுகளை உயர்த்துவதன் மூலம் பத்திரிக்கைகளை குறைவாக மதிப்பிட முடியுமா? பதிவர்களை ஜனநாயகவாதிகளாக சித்தரிக்கும் இந்தபோக்கு சரியா? உண்மையில் பதிவுகளின் மதிப்பீடுகள் அப்படித்தான் வெளிப்படுகிறதா? பதிவுலக சண்டைகள் பத்திரிக்கை சண்டைகளைவிட பிரபலம். அப்புறம் போலிப்பிரச்சனைகள். ஆக, நிறைகுறை இரண்டிலும் உள்ளது. சாதகமானதை நமக்கு சாத்தியமானதாக எடுத்தக்கொள்வதே சரியானது. தவிரவும் அவர்கள் பின்னோட்ட பெட்டியை போடாததால் விமர்சனத்தை சந்திக்கும் திராணியற்றவர்கள் என்பது பல ஆயிரம் ஆண்டுகால எழுத்து சரித்திரத்தையே மறந்துபோனதாகிவிடும். பதிவுகளுக்கு முன்பே எழுத்தும் பத்திரிக்கையும் உண்டு. அதில் இந்த எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். உண்மையில் பதிவுலகம் என்பதும் தற்காதலின் மற்றொரு அதீத வடிவமே. அதற்கு இந்த எழுத்தாளர்கள் தங்கள் வாசகப்பரப்பை விரிப்பதுடன் அவனுடன் ஒரு உயிரோட்டமுள்ள தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே பதிவுகளில் எழுதுகிறார்கள். அதைவிட்டு இங்கும் அவர்கள் திரண்டு வந்து விட்டதாக எண்ணிக் கொள்வது “ஆலையில்லாத ஊரில் இழுப்பைப் பூ சக்கரை“ என்கிற மணோபாவத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும்.
வால்பகுதியாக (டைல்பீஸ் என்பதை இப்படிச் சொல்லலாமா?) ஒரு சின்ன கலந்துரையாடல்.
(வெங்கட்- வாதம் இந்த வண்ணத்தில் உள்ளது.)
"இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது.”
- இணையம் என்பது பொதுவானது. அதன் பிரதிநிதியாக நாம் நம்மை கருதிக்கொள்ள முடியாது. இணையம் பரவலானது என்பதுடன் அனுக எளிமையானது என்பதாலும்தான்.
”ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை.”
- அச்சில் ஏறுபவை எல்லாம் இணையத்திற்கும் பதிவிற்கும் எதிரானவை அல்ல. அவர்களும் பதிவுகளை எல்லாம் வாசிக்கிறார்கள். அப்படி வாசிக்க வேண்டும் என்பதும் அவர்களது அங்கீகாரம் தேடுவதும் பதிவர்களிடம் உள்ள ஒரு ஆசைதானே.
”இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை.”
- பதிவுலகம் மற்றொரு பிம்ப உற்பத்தித் தொழிற்கூடம்தானே ஒழிய இங்கு எந்த பிம்பமும் அழிக்கப்படுவதில்லை. பிம்பப் பால்வினை நோய் பீதிக்கப்படாமல் சீரோ-டிகிரியில் எழுத்து சாத்தியமா?
”மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ள முடிவதில்லை.”
- மேல்நின்று உபதேசிப்பதாக ஒரு எழுத்தாளனை அனுகுவதால்தான் பிரச்சனை. கறாரான விமர்சனம் என்பதே தவறான ஒரு அனுகுமுறை. எழுத்துக்களுடன் உரையாடலாம், மறுக்கலாம், அழிக்கலாம். விமர்சனம் என்ற பெயரில் நடைபெறும் தனிமனித தாக்குதல்தான் பிரச்சனை. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு எழுத்தாளர் அல்லது பதிவர் என்ன சொல்வார். Artaud கூறியதுதான் “are you critic? suck my cock". எழுதுபவர் தனது உலகம் சிறியது என்பதை உணர்ந்தால் போதும். அதேபோல் விமர்சிப்பவரும்.
”மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்..."”
இதற்கு பதில் நாகார்ஜினன் கூறியுள்ளார்.
ஒரு விஷயம் - என் எழுத்துக்கு இணையத்தை மாத்திரம் நான் நம்புவதில்லை. புத்தகங்கள் எப்போதும் உண்டு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நான் முக்கியமாகக் கருதும் அறிவியல்-இலக்கிய-தத்துவ-வரலாற்றுப் பிரச்னைப்பாடுகள் என் சிந்தனையில் எப்போதும் இடம்பெறும்.
இருந்தாலும் இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!
என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - விரைவில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.
அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை!
-ஜமாலன் - 02-04-2008
நான் ஒரு மநு விரோதன் - நூல் வெளியீட்டு விழா
Posted திங்கள், மார்ச் 17, 2008 in அறிவிப்பு, பொதுவானவை by ஜமாலன்| புத்தகத்திலிருந்து: "....வர்ண அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்ன மன்னர்கள் யாரையாவது தமிழ் மரபிலிருந்து நீங்கள் காட்ட முடியுமா? வருண அமைப்பை ஒப்புக்கொண்டவர்களை என்னுடைய மன்னன் என்று நான் ஏன் கொண்டாட வேண்டும்? வடக்கேயிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்து வளமான பகுதிகளில் குடியமர்த்தி வைத்தவர்கள் தமிழ்மன்னர்கள்தானே? அந்த பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டுத்தானே தலித்துகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தார்கள்? சாதியைத் தாங்கிப் பிடிக்கிற, பெண்களை இரண்டாம்பட்சமாக போகப்பொருளாக நடத்துகிற ஒரு மன்னனை அவன் தமிழன் என்பதாலேயே நான் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்?..." "...யோனி என்கிற வார்த்தையை எழுதிவிட்டால் அது ஏதோ பெரிய புரட்சி என்று இங்கு மதிப்பிடப்படுகிறது. இது நகரம் சார்ந்த நடுத்தரவர்க்க மனோநிலை. அவளுடைய படிப்பும், நாசூக்கும் யோனி என்கிற வார்த்தையை தன் சகமனிதர்களுடனான உரையாடலில் பேசுவதற்கு அவளுக்கு பெரிய மனத்தடையை உருவாக்கியுள்ளது. அதனால் அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கலகக்குரலாக நமக்குத் தெரிகிறது. ஆனால் கிராமத்திலோ நகரத்திலோ ஒரு அடித்தட்டு பெண் ஒரு நாளைக்கு நூறுமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறாள். இதற்காக ‘நானும் கலகக்காரி’ என்று அவள் தோள் தட்டிக் கொள்வதில்லை. ..." "...சுஜாதா ‘சிவாஜி’ திரைப்படத்தில், ‘அங்கவை, சங்கவை இருவரும் கறுப்பு’ என்று எழுதுகிறார். அவர் பார்த்த பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள். எனவே கறுப்பாக இருப்பவர்களை அவரால் எளிதாக அவமானப்படுத்த முடிகிறது. இதைச் சொல்கிற அதிகாரத்தை சுஜாதாவிற்கு அவரது ஜாதிதானே தந்தது? எங்கள் ஜாதிப்பெண்கள் வெள்ளைத்தோல் உடையவர்கள் என்று அவர் சொன்னால் அதுவும் ஜாதித்திமிர் தானே? அவர் பார்வையில் பெண்கள் வெறும் தோல் சம்பந்தப்பட்டவர்கள் என்றுதானே அர்த்தம்? இந்த பார்ப்பனக் கிழடின் வக்கிரத்தை, துவேஷத்தை எதிர்த்துப் பேச எந்த வெள்ளைத்தோலிகளும்/தோழிகளும் முன்வராமல் இருப்பதற்கும் சாதிதானே காரணமாயிருக்கிறது? ..." "... ‘சுந்தரராமசாமியின் எழுத்துக்கள் தேவ வார்த்தைகள். அதை குறை காணும் தகுதி மனிதப்பிறவிகளுக்கு கிடையாது. நம் புலன்களுக்கு அது எட்டாது. இது உடன் இருந்தவர்களுக்குத் தெரியும், அவரை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். ஆதவன் போன்றவர்களுக்கு அது தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முயற்சிகளின் மூலம் தான் அவர் தவறு செய்தார் என்பதை நாம் மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது...." "..ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ படிக்கும் அல்லது பார்க்கும் வாசகனோ, நேயரோ அதனால் பாதிப்பு அடைந்தால் அவனது மனதில் சிறு கீறலோ, அசைவோ ஏற்பட்டால் அவன் வேண்டுமானால் எழுதியவனைப் பாராட்டலாம். அதை விடுத்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதற்காக, ஷீல்டு வாங்கி ஜோல்னாப் பையில் வைத்துக்கொண்டு அலைவது தேவையற்ற விஷயம். சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டுத்தான் உலகம் விடிகிறது என்று சொல்வதோ, தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அபத்தமான காரியம்..." |
மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்
Posted திங்கள், மார்ச் 03, 2008 in திறனாய்வு, பின்நவீனத்துவம், பொதுவானவை, வாசித்தவைப் பற்றி by ஜமாலன்மொழியும் நிலமும் என்கிற இந்நூல் 2003-ல் பதிபிக்கப்பட்டது. இது 1990-துவங்கி 2000-ம் வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு நண்பன் கானின் முயற்சியால் வெளியடப்பட்டது. இந்நூல் வெளிவந்தபோது சிறுபத்திரிக்கை ஒன்றில் எழுதப்பட்ட இந்த அறிமுகக் குறிப்பினை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். அதுவே இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. வலைப்பதிவு நண்பர்கள் சிலர் இதன் பதிப்பகம் பற்றிய விபரங்களை கேட்டள்ளனர். அவர்களுக்கும் மற்றும் பொதுவாகவும் ஒரு அறிமுகமும் இதில் செய்யப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------
மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்
----------------------------------------------------------------
மொழியும் நிலமும் (கட்டுரைகள்) -ஜமாலன் வெளியீடு: புதுமலர் பதிப்பகம் 176-10, வைகை தெரு, ஈரோடு 638 004. பக்: 240. விலை: ரூ. 100. (பதிப்பு: 2003) |
விளிம்பு நிலையில் அரை நாடோடி வாழ்க்கை வாழும் இனத்தாரின் பஞ்சாயத்திற்குப் போயிருந்தேன், அங்கு செருப்பினால் இன்னொருவரை அடித்தவருக்கு ரூ. 2 அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 'செருப்பால் அடிப்பேன்' என்று பிறரைத் திட்டுகிறவருக்கு ரூ. 250 அபராதம் என்று கேள்விப்பட்டேன். காரணம் கேட்டபோது, "ஒரு சொல் வெல்லும்: ஒரு சொல் கொல்லும்" என்று பதில் கிடைத்தது. புலவர் யார் மீதாவது 'அறம்' வைத்து பாட்டு இயற்றினால் சம்பந்தப்பட்டவர் இறந்துவிடுவார் என்பது நாட்டார் நம்பிக்கை. தமிழர்களுக்கு எப்பவும் மொழிமீது ஒருவிதமான பயம். மொழி வழியே புனையப்படும்போது மந்திரங்கள் அதியற்புதமான ஆற்றல் மிக்கவை என்ற நம்பிக்கை நிலவுகிறது. மொழியின் சாத்தியப்பாடுகள் யாவை? மொழியின் விநோதங்கள் என்ன? பல்வேறு கேள்விகள் புதிராக வெளிப்படுகின்றன. இந்நிலையில் மொழி பற்றிய விசாரணையைத் தொடங்க பின்நவீனத்துவக் கோட்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. கலவைத் தொடர்கள் மூலம் வாசகரை கதறடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சூழழில், எளிய முறையில் கோட்பாடுகளை விவாதிக்கும் ஜமாலனின் 'மொழியும் நிலமும்' புத்தகம் அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான வரவு ஆகும்.
மார்க்சிய பின்னணியில் பின் நவீனத்துவக் கோட்பாட்டினை பயன்படுத்தி இலக்கியத்தினையும் சமூகத்தினையும் ஆராய்ந்நதிடும் இவரது விமர்சன அனுகுமுறை தனித்துவமானது. ஒரு பிரச்சனையின் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தீவிரமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் தமிழ் இலக்கியம்/சமூக விமர்சனஙகளுக்கு வளம் சேர்க்கின்றன.
தமிழர்களுக்கு எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை. மனித இருப்பு முதலாகப் பிரபஞ்சத்தின் பேரியக்கம் வரை, 'காப்ஸ்யுல்' வடிவில் விடைகள் தெளிவாக உள்ளன. யார் வேண்டுமானாலும் தத்தம் நோக்கத்தினுக்கேற்ப உருவேற்றிக் கொள்ளும் வகையில் தமிழ்ச் சூழல் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஜமாலனின் கட்டுரைகள் தமிழரிடையே அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன், வறண்டு இறுகியிருக்கும் தமிழ் மனோபாவத்தில் ஊடுறுவ முயலுகின்றன.
மொழியானது மனிதனுக்கு ஆறாவது புலன், அது சமூகத்தினைக் கட்டமைப்பதுடன், கடந்தகாலம் என்ற வரலாற்றினையும் ஏற்படுத்துகிறது. 'அர்த்தப்படுத்துதல்' மூலம் ஒவ்வொரு மொழியும் புதிர்த் தன்மையுடையதாகின்றது. ஒரு மொழிக்கு எழுதப்படும் இலக்கணத்தின் தேவை என்னவென்பது முக்கியமான கேள்வி. பண்டைத் தமிழின் இலக்கணம் பற்றி விளக்கிடும் 'தொல்காப்பியம்' குறித்து ஏற்கனவே தமிழவன், பிரேம்-ரமேஷ் பின் நவீனத்துவ நோக்கில் ஆராய்ந்துள்ளனர். அவர்களுடைய வழியில் பயணப்படும் ஜமாலன், இன்னும் ஆழமான நிலையில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் நுட்பமாக ஆராய்ந்து தொல்காப்பியப் பிரதியை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். இலக்கணம் மூலம் பல்வேறு வட்டார மொழிகள், குறுமொழிகளை ஒருங்கிணைத்துப் பேரினச் சமூகம் தோற்றுவிக்கப்படுகின்றது. மொழியானது செறிந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளம் என்ற புரிதலுடன் தொல்காப்பிம் ஆராயப்பட்டுள்ளது. "தொல்காப்பியமானது தமிழின் ஐந்திணை வாழ்விற்கு வரையறைகளும், இலக்கணங்களும் தொகுக்கும் போக்கில் ஒரு பொது அறிதலைக் கட்டமைக்கிறது. அல்லது சிறுசிறு குடிகளிடம் நிலவும் அறிதல்களை ஒருமுகப்பட்ட அறிதலுக்குள் தொகுக்கிறது" என்று மொழியைச் சமூக செயற்பாட்டின் தளமாக ஜமாலன் அறிமுகப்படுத்துகின்றார்.
பண்டைத் தமிழரின் மதமானது, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை, நாட்டார் தெய்வ வழிபாடு, வெறியாட்டம், நடுகல், சகுனம் பார்த்தல், இயற்கை வழிபாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. பல்வேறு தொன்மங்கள், பழமரபுக் கதைகள் வடமொழி இலக்கியத்திலிருந்து தமிழ் மையப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தமிழரின் மதநம்பிக்கையானது வைதிகத்துடன் கலந்தது. இத்தகைய போக்கு காரணமாகத் தமிழக நில எல்லைகள், இந்தியப் பரப்புடன் உள்ளடக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழ்ப் பெருங்கதையாடல் தொடங்கப்பட்டது. தமிழ்க் கட்டுமானத்துடன் கலந்திடும் புதிய கலப்புகள், நாளடைவில் எல்லாவற்றையும் மாற்றி எழுதுவதற்கான களத்தினை உருவாக்கின. தமிழர்களின் மனவோட்டம் மறுகட்டமைப்பிற்கு உட்படுவது மெல்லத் தொடங்கியது. இத்தகைய மறுகட்டமைப்பினை நிறுவுவதே மொழியின் முக்கியச் செயற்பாடு. இச் செயற்பாட்டின் முதன்நிலை முயற்சியாகத்தான் தொல்காப்பிம் பிரதி உருவானதா? அல்லது தொல்காப்பியம் உருவாக்க விரும்பிய தமிழன் யார்? என்று அடிப்படையான கேள்வியை ஜமாலன் எழுப்புகின்றார். இதுவரை தமிழ்ப் பேராசிரியர்களால் தொல்காப்பியம் என்றாலே புனிதமானது எனவும் தமிழ் அடையாளத்துடன் தொடர்புடையது எனவும் முன்னிறுத்தப்பட்ட சொல்லாடல்கள் தருக்க நெறியில் மறுதலிக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு அடையாளத்தினைத் தாங்கிக்கொண்டு விரைத்து நிற்கும் எல்லா மேன்மைகளையும் கவிழ்த்துப்போட வேண்டிய காலகட்டத்தில், தொல்காப்பியப் பிரதியும் விதிவிலக்கு அல்ல.
மொழியானது அடிப்படையில் அதிகாரத்தன்மையுடையது. மொழியின் வழியாக நிறுவப்படும் நிறுவனங்கள் அதிகாரத்தின் மையங்களாக விளங்குகின்றன. அதிகாரம் ஒவவொரு உடலிலும் பாய்ந்து பாசிசத்தின் வேர்களைப் பரப்புகின்றது. அதிகாரங்களுக்கிடையிலான மோதல் இன, மத, மொழி, சாதிப் பேராட்டங்களாக வடிவெடுக்கின்றன. இந்தியாவில் மொழியானது மதத்தின் பெயரால், பாசிச வடிவமெடுத்து, அதிகாரத்தின் குவிமையமாகிவிட்டது. மொழி, மத ரீதியில் புனித உடல்களைக் கட்டியமைப்புதாகக் கூறி, பாசிச உடல்களைக் கட்டியமைக்கிறது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த பிரதேசத்திலிருந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தோன்றின என்று எளிதாகச் சொல்லாடலை வடிவமைத்திருக்கலாம். ஆனால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது என்ற புனைவு மொழியானது, தொடாந்து இரு நாடுகளிலும் பாசிச உடல்களைத் தயாரிக்கின்றது. இதற்கு எதிரான கலகமே இன்றைய அவசரத் தேவையாக இருக்கின்றது என்று வலியுறுத்தும் ஜமாலனின் அரசியல் பார்வை தொலைநோக்குடையது.
இலக்கியத்தின் ரசனைவயப்பட்ட நிலையில் அனுபவித்து நலம் பாராட்டுவதனையே விமர்சனம் என்று கருதிடும் பொதுப்புத்தி தமிழில் உள்ளது. அழகியல் வயப்பட்ட பார்வை என்று பிரதியினை அப்பழுக்கற்றதாகக் கருதி, புனிதப்படுத்தும் போக்கு, ஒரு வகையில் அதிகாரத்துடன் தொடர்புடையது. இத்தகைய அழகியல், நாட்டார் கலைகள், விளிம்புநிலை மக்களின் பண்பாட்டு மீது செலுத்தும் மூர்க்கமான வன்முறை என்பது ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. தேவரடியார் ஆடினால் 'சதிர்' என்ற இழிவாகக் கருதப்படும் கலை, உயர்ஜாதிப் பெண்கள் ஆடினால் 'பரதம்' என்று புனிதப்படுத்தப்படுகின்றது. எனவே இலக்கியப் பிரதியனை அழகியல் ரீதயில் அனுகுதல் என்பது பொருத்தமற்றது என்ற ஜமாலனின் வாதம் ஏற்புடையதகாகவே உள்ளது.
யதார்த்தம் என்பது மொழி விளையாட்டின்மூலம் எற்படுத்தப்படும் புனைவு. அது வாசிப்பில் ஒருவகையான மயக்கத்தினைத் தரக்கூடியது. இதனால் வாசகன், மொழியின் வழியே கட்டமைக்கப்பட்டஒழுங்கமைவிற்குள் சிக்கிக் கொள்கின்றான். இலக்கியத்தில் ஒற்றைப் போக்கு மட்டும் சாத்தியம் என்ற நிலைப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனால் அதிகார கட்டமைவிற்குள் வாசகன் சிக்கும் நிலையேற்படுகிறது. தமிழின் தொடக்க கால நாவலான கமலாம்பாள் சரித்திரம் அருமையான இலக்கியப் பிரதியென்று தொடர்ந்து விமர்சகர்களால் போற்றப்படுகின்றது.
புராணக் கதைமாந்தர் போல லட்சியமயப்படுத்தப்பட்ட் பாத்திரங்கள், வைதீக மதத்தின் தத்தவத்தினை உள்ளடக்கிய கதைப்போக்கு என்று நாவலானது ஒற்றை மையக் கதையடலை வாசகருக்குப் போதிக்கிறது. இந்நாவல் வேதாந்தப் போக்குக் காரணமாகச சிறப்பிக்கப்பட்டமையினால், தமிழின் மரபு வழிப்பட்ட கதையாடல் சிதைக்கப்பட்டுவிட்டது. இதனால் 'யதார்த்தம்'என்ற ஒற்றைப் போக்கிலிருந்து தமிழ் கதையாடல் விலகிட ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்காலம் கடந்து விட்டது. நாவலின் மூலம் அறம் காக்கும் உடல்களும், தூய்மையான உடல்களும் முன்னிலைப்படுத்துவது, வாசகரின் பன்முகத் தேடலினைச் சிதைத்துப் பாசிசத்தினை ஏற்கும் உடல்களைத் தயாரிப்பதற்கான களமாகி விடுகின்றது.
புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம்' 'நாரத ராமாயணம்', மெளனியின் சிறுகதைகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில், மூலப் பிரதிகள் நுட்பமாகக் கட்டுடைக்கப்பட்டுள்ளன, பிரதி ஆக்கத்தில் புதைந்துள்ள நுட்பமான அம்சங்களை விளக்குவதில் ஜமாலனின் கோட்பாட்டு அறிவு வெளிப்பட்டுள்ளது. இலக்கியப் பிரதிகளைக் கட்டுடைக்கும் பணியை இன்னும் விரிவான தளத்தில் ஜமாலன் தொடர்ந்து செய்திட வேண்டும். ஏனெனில் அதற்கான தேவை தமிழில் உள்ளது.
'மத அடிப்படைவாதம்' குறித்து விரிவாக ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை முக்கியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. 'மதவாதம் பற்றி ஊடகங்களினால் வடிவமைக்கப்படும் பொதுப் புத்திக்கு எதிராக விழிப்பு அடைய வேண்டிய நேரமிது. இந்து/இந்தியா/இந்துத்துவா என்று மையப்படுத்தப்படும் அரசியல் சூழலில், மத நம்பிக்கையற்ற முஸ்லிம்களுக்குக்கூட பெரும் பிரச்சினை எதிர்நோக்கியுள்ளது. பரஸ்பர அவநம்பிக்கை, பதற்றம், கையறுநிலை, கண்காணிப்பிற்குள்ளாவது காரணமாக முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுங்கும் நிலையேற்பட்டுள்ளது. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அதிகார பீடங்கள் கிறிஸ்தவ மதத்துடன் உற்சாகமாகக் கைகோர்த்துள்ளன. அரேபிய நாடுகளில் ஜனநாயகம் துளியும் வளர்ந்த விடாமல் தடுத்திடுவதற்காக அரசியலில் மதவாதச் சக்திகளைத் திட்டமிட்டு வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கும் அமேரிக்க ஏகாதிபத்தியம் இன்னொருபுறம் 'முஸ்லிம் மத அடிப்படைவாதம்' என்று சொல்லாடலைக் கட்டியமைக்கின்றது. அமேரிக்காவின் இரட்டை வேடமானது, அரேபிய நாடுகளிலுள்ள எண்ணெய் வளத்தினைச் சுரண்டுவதற்காகத்தான். இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று பட்டியல் தொடர்கிறது. தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் 'மத அடிப்படைவாதம்' குறித்து நிலவும் கருத்தியலுக்கு மறுதலையாக ஜமாலனின் கட்டுரை உள்ளது. அரசியலை அடிப்படையாகக் கொண்டு மதரீதியில் அதிகாரம் ஏற்படுத்தும் விளைவுகளை நுணுக்கமாக விளக்கியுள்ளது கட்டுரை.
இன்று உலகமயமாக்கலின் கோர விளைவுகள் ஒருபுறம், உலகத்துச் சண்டியரான அமேரிக்கா திட்டமிட்டு ஏற்படுத்தும் போர்கள் இன்னொருபுறம்... இத்தகைய சூழலில், 'தூய இலக்கியவாதி' என்று யாரும் ஒதுங்கிவிட இயலாது. நெருக்கடிகள் மிகுந்திடும் காகலகட்டத்தில் வாழ்வின் ஒவ்வொரு புள்ளியிலும் நுண் அரசியல் ஏற்படுத்திவரும் தாக்கங்களை மார்க்சியம், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஜமாலன் விளக்கியவற்றைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இரு மாறுபட்ட கோட்பாடுகளிலிருந்து வேண்டியவற்றை மட்டும் எடுத்துப் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது. அவற்றில் ஜமாலனின் ஆழ்ந்த புலமையும் சுய சிந்தனையும் வெளிப்பட்டுள்ளன. தமிழில் நவீன இலக்கியத்தினையும், இலக்கிய விமர்சனத்தினையும் அடுத்த தளத்திற்கு நகர்த்திட முயலும்/விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் இந்தப் புத்தகத்தினை வாசித்து விவாதத்தினை தொடங்கிட வேண்டும். ஏனெனில் இது அடிப்படையில் வாசிப்பினை மட்டுமல்லாமல், செயலூக்கம் மிக்க நடைமுறையினையே கோருகின்றது.
-ந. முருகேச பாண்டியன்.
எழுதியதில் பிடித்தது
Posted திங்கள், ஜனவரி 21, 2008 in பொதுவானவை by ஜமாலன் எனது முதல் அறிமுக பதிவு எழுதப்பட்டது 31-05-2007-ல். மொத்தம் 53 பதிவுகள். இவற்றில் எனக்கு பிடித்ததையும் அப்படி பிடித்ததற்கான காரணத்தையும் எழுதும் ஒரு வலை-விளையாட்டை துவக்கி அதற்குள் என்னையும் இணைத்துவிட்டார் நண்பர் கையேடு. வலைப்பதிவிற்கு வந்த இந்த 7 மாதங்களில் எனக்கு கிடைத்து பெரும்பேறு என்றால் ஒரு நட்பு வட்டம் உருவாகியுள்ளதுதான். பல துறைசார்ந்த பல சிந்தனைப்போக்கு கொண்ட நண்பர்கள். இந்நட்பு இவ்வட்டத்தையும் தாண்டிய ஒரு நட்பாக உறுதிப்படுமா? இல்லையா என்பதை காலம்தான் சொல்லும் என்றாலும்.. ஒரு அறிமுகம் ஏற்பட்டிருப்பதும் சிந்தனை அல்லது எழுத்து என வரும்போது அவர்களையும் உள்ளடக்கி சிந்திக்கும் ஒரு பழக்கமாக மாறி இருப்பதை மறுக்க முடியாது. இவ்வட்டம் வேறு எந்த ஊடகத்திலும் கிடைக்காத ஒன்று. பிற ஊடகங்கள் தொடர்பு என்பது வலைப்பதிவுபோல உடனுக்குடன் நடைபெறும் ஒரு நிகழ்வல்ல.
பதிவில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் பைத்தியக்காரன் துவங்கி சமீபத்திய சுந்தர் வரை பல நண்பர்கள். இதில் நான் பணிபுரியும் நாட்டிலேயே கிடைத்த ஒரு அனுக்கமான நண்பர் முபாரக். சென்ற மாதம் நான் அலுவலகப் பணியாக அவரது நகரத்திற்கு சென்றபோது ஒரு வாரக்காலம் அவருடன் பலவற்றை விவாதித்ததும் அவரது நட்பு இறுக்கமாகியதும் அவர் எனது இல்லத்திற்கு வந்து ஒருநாள் தங்கி விவாதித்து நகர்ந்த நேரங்களும் பதிவுலகம் தந்த அற்புதங்களில் ஒன்றுதான். நான் சந்தித்த முதல் பதிவரும் அவர்தான். மலேசிய பிரச்சனை வந்தபோது தொடர்நது என்னுடன் விவாதித்த நண்பர்கள் கோவி. கண்ணன் மற்றும் பாரி.அரசு ஆகியோர்கள். இத்தகைய வாய்ப்புகள் பதிவுலகம் தவிர வேறு எதிலும் சாத்தியமில்லை. பதிவுலகம் அக்கணமே உலகை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் அடையாளமற்ற ஒரு நாடோடி வெளிதான். உடனுக்குடன் பதிவுலக நண்பர்களுடன் பலவற்றையும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பான தளம். இந்த சந்தர்ப்பத்தில் இதனை குறிப்பிடக் காரணம் உண்டு. எனது பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவு என்பதை இந்த நண்பர்களின் விவாதங்கள் புரிதல்கள் அடிப்படையிலலேயே தேர்ந்தெடுக்க முயல்கிறேன் நான்.
அம்பேத்கர், மாவோ மற்றும் பெரியார் போன்ற முக்கிய சிந்தனைபோக்குகள் துவங்கி பின்நவீனத்துவம், வளைகுடா பொருளியல் நிலமை, மருத்துவத்துறை, பெண் என்கிற பாலின கட்டமைப்பு, பெண் பாலியல், திருமணம் குறித்து சில கோட்பாடுகள், புதுமைபித்தனின் காஞ்சனை மற்றும் ஆற்றங்கரைப் பிள்ளளையார், தமிழின் திணைக்கோட்பாடு, கோபி கிருஷணனின் கதையுலகம், ஆபிதினின் நையாண்டி என பதிவுகள் பல புள்ளிகளில் தொடர்பற்றதாக எழுதப்பட்டிருப்பதை காணமுடிகிறது. பந்து மற்றும் ஈழம் குறித்த பதிவுகள் உடனடித்தன்மைகொண்டு ஒரு எதிர்விளைவாக எழுதப்பட்டவை. இவை தவிர்த்து திரைப்படங்கள் குறித்து ஹே ராம், கற்றது தமிழ், கல்லூரி மற்றும் அந்நியன் குறித்த பதிவுகளில் ஒரு சில மாற்றுப் பார்வைகளை பகிர்ந்துகொள்ள முடிந்தது்.
சரி. தலைப்பிற்கு வருவோம். பதிவுகளில் எழுதியவற்றில் எனக்கு பிடித்தது "பெண் ஆண்களுக்கு கலவரம் ஊட்டக்கூடியவளாக இருக்கிறாள்" - ஒரு சொல்லாடல் ஆய்வு." என்கிற இப்பதிவே. எனது பதிவுகளில் எழுதப்பட்டவை எல்லாம் எனக்கு பிடிததே எழுதப்படுகிறது என்றாலும் இதனை தனித்துக் குறிப்பிடக்காரணம் இதில் பெண்ணியம் மார்க்சியம் ஆகிய இரண்டு துறைகளின் சொல்லாடலை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் பெண் குறித்த இந்திய தத்துவ கருத்தாக்கம் துவங்கி தேசிய விடுதலை வழியாக இவ்வாய்வு நீண்டு செல்வதும் ஒரு காரணம். இது ஒரு விளையாட்டாக இருப்பதால் ஒன்றை சொல்வதற்காகவும் இதனை சொல்வதாகவும் கொள்ளலாம்.
விளையாட்டு விதிப்படி மற்ற 3 பதிவரிடம் இந்த தொடர் ஓட்ட ஒளி தீபத்தை தரவேண்டும். தேடிக்கொண்டிருக்கிறேன்......
அன்புடன்
ஜமாலன் 21-01-2008 இரவு 02:03.
பொதுப்புத்தியும் பெரியாரும்
Posted திங்கள், செப்டம்பர் 17, 2007 in சாதியம், தேசியம், பெரியாரியம், பொதுவானவை by ஜமாலன்இங்கு பெரியாரை நான் புரிந்துகொண்டவகையில் எனக்குள் மறுமுறை சொல்லிப்பார்க்கும் முயற்சியே இது.
பதிவுகளில் பெரியார் குறித்த விவாதங்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றதாக இருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்றாகாது. காரணம் பெரியாரின் சிந்தனைகள் அதன் ஆதரவாளர்களை விட எதிர்ப்பவர்களால்தான் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள்தான் பெரும்பாண்மை என்பதும் கண்கூடு. பெரியார் ஒரு எதிர்மறையான சிந்தனையாளராக மட்டுமே பதிவுறுததப்பட்டிருக்கிறார். குறிப்பாக பிராமண எதிர்ப்பாளர் இந்து மத எதிர்ப்பாளர் என்பதாக. இவ்விரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்துகொள்ளக்கூடிய கருத்தாக்கங்கள்தான். இந்துமதம் என்கிற அமைப்பே பிராமண மேலாண்மையைக் கொண்ட ஒரு அமைப்புதான் என்பதை பெரியார்தான் வெளிப்படுத்திக்காட்டினார் வெகுசன தளத்தில்.
பெரியாரின் அடிப்படை சிந்தனை முறை என்பது தமிழக அல்லது திராவிட மக்களிடம் பதிவுறுத்தப்பட்டுள்ள பொதுபுத்தியை சுயசிந்தனை எனகிற தளத்திற்கு நகர்த்தியது. இதற்காக பகுத்தறிவு என்கிற ஒரு சுயசிந்தனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுபுத்தி என்பது ஒரு மனிதன் உலகை புரிந்துகொள்ளவும் உலகுடன் உறவாடவும் ஆன மன அமைப்பு ஆகும். இப்பொதுபுத்தி பெரியாருக்கு முன்பே சித்தர்கள் தொடங்கி வள்ளாளர் வரை ஒரு பாரம்பரியமாக வளர்ந்தவந்தது. அவர்கள் இம்மன அமைப்புடன் தங்களையே ஒரு சோதனைக்களனாக மாற்றிக்கொன்டனர். கடவுளை மறுப்பதும், கடவுளை அடைவதும் தர்க்கரீதியாக ஒன்றுதான். கடவுள் நிலையை அல்லது மர்மமான மதச்சடங்குகள் மூலம் கடவுள் இடத்தை அடைய முடியுமெனில் கடவுளின் இருப்பு அங்கு அழிந்து வேறு ஒரு புதிய இருப்பாகிவிடுகிறது. கடவுள் என்கிற அளப்பற்ற சக்தி அடையக்கூடிய சக்தியாகிவிடுகிறது. கடவுள் என்கிற தனிச்சிறப்பான தன்மை சாதாரண தளத்திற்கு இறக்கப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் ஒழுங்கமைக்கபட்ட மதச்சடங்குகளுக்கு வெளியே தங்களது இயக்கங்களை வடிவமைத்துக் கொன்டனர். வாழும் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பிறகு மதங்களினால் உள்வாங்கப்பட்டு கடவள்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஆக பொதுப்புத்திக்கு எதிரான இயக்கம் என்பது சமூக மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆணால் பெரியார் இப் பொதுபுத்திக்கு எதிரான தனது இயக்கத்தை மக்களின் தினவாழ்வின் எல்லாக் கூறுகளிடமும் விரவலாக்கினார். இதன்மூலம் ஒரு புதிய உலகை மக்களிடம் திறந்து காட்டினார் என்றால் மிகையாகாது. தினவாழ்வின் ஒவ்வொரு கூறிலும் பெரியாரின் பாதிப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இயங்கிக் கொண்டிருப்பதுதான் பெரியாரின் தனிப்பெரும் சாதனை எனலாம். இன்று கடவள் பற்றிய அல்லது மதம் பற்றிய எந்த சிந்தனையும் பெரியாருடன் ஒரு உரையாடலை நிகழ்த்தவேண்டிய ஒரு தவிர்க்கவியலா நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.
பெரியார் தனது செயல்களில் தெளிவுடன் இருந்தார். புரட்சி மற்றும் சமூக மாற்றம் என்கிற எல்லோருக்குமான விடுதலை இவ்வுலக துயரங்களிலிருந்து மீட்சி மோட்சம் போன்ற பெருங்கதையாடல்கள் குறித்த தெளிவு அவருக்கு இருந்தது. அதனால் தனது பணியை சமுக சீர்திருத்தம், சுயமரியாதை, பெண்விடுதலை, சாதீய எதிர்ப்பு, முடநம்பிக்கை எதிர்ப்பு என்கிற தளததிற்குள் சுருக்கிக்கொண்டார். அதனால் பெரியாரின் அரசியல் இயக்கம் நுண் அளவிலானது. அது எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. மனிதனின் தன்னிலை மாற்றம் குறித்தே சிந்தித்தது. தமிழக அல்லது இந்திய மனிதனுக்கு ஆதிக்கச் சக்திகளால் கட்டமைக்கப்ட்டுள்ள மதம், சாதி, ஆண் என்கிற அடையாளத் தன்னிலைகளை கேள்விக்கு உட்படுத்தியது.
பெண் உடல் என்பது ஒரு வாரிசு உருவாக்க எந்திரமாக கட்டமைக்கப்பட்டதை அம்பலப்படுத்திக் கிழித்துப்போட்டது. ஒரு பெண் தனது கருவை ஆளும் உரிமை உள்ளவள் என்பதை சொல்லியது. ஒரு ஆண் உடல் சாதீய மதக் கருத்தியலால் சுயமரியாதையற்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்திக் காட்டியது. சாதி என்பது எப்படி ஒரு மனித தன்னிலையை ஆதிக்க வெறிமிக்கதாக ஆக்குகிறது என்பதை அம்பலப்படுத்தியது. மதம், சாதி, மொழி, இனம், பாலினம், தேசியம், சுதேசியம், நாட்டுபப்ற்று போன்ற எல்லா அதிகார மையங்களையும் கேள்விக்குட்படுத்தியது. மனிதனின் அடிப்படை உரிமை சுயமரியாதை என்பதை உத்தரவாதப்படுத்தக் கோரியது. மனித உடலின் குறைந்தபட்ச நிபந்தனையாக சுயமரியாதையை முன்வைத்ததுதான் பெரியாரியத்தின் ஆகப்பெரும் சாதனை எனலாம்.
பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை பிரதிநிதத்துவப்படுத்திய ஒரு தேசிய முதலாளிய இயக்க குரலே பெரியாரியம் எனகிற மார்க்சிய வர்க்க ஆய்வை மறுக்கமுடியாது என்றாலும், ஒருகட்டத்தி்ல் அவ்வுயர்வர்க்கம் அரசதிகாரம் கோரியபோது அதனை மறத்து தனது சுயமரியாதைக் கோட்பாட்டில் உறுதியாக நின்றது பெரியாரியத்தின் மற்றொரு வெற்றி எனலாம்.


