ஈழப்போரும் அமைதியின்மையும்

"முரண்கள் பற்றிய ஒரு ஆரம்பமாக இருக்க கூடிய பதிவு।குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் முதன்மை முரணை அடையாளங் கண்டு அதன் அடிப்படையில் நிறுவனப்படும் அமைப்புக்களே, மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு போராட்டத்தை நடாத்தக்கூடிய வல்லமையைப் பெறுகின்றன.வெற்றுக் கோசங்களின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழலில் எழுந்த போராட்டங்களைப் பிரதியிடும் எவருமே வரலாற்றை எழுதப் போவதில்லை.ஈழப் போராட்டத்தில் இது நிதர்சனமாகத் தெரியும் உண்மை. " - அற்புதன் எழுதிய பின்னோட்டம்.

அற்புதனுக்கு... உங்கள் கருத்துக்கள் நிதர்சனமான உண்மைதான். ஈழப்போராட்டம் அதன் உபவிளைவாக நிகழும் அவலங்களும், நெஞ்சைப்பதறச் செய்பவை. நினைத்துப் பார்க்கிறேன், ஈழப்போராட்டத்திற்காக எனது கல்லூரி நாட்களின் பல போராட்ட வடிவங்களில் ஈடுபட்டுள்ளேன். அக்கதைகளே தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டியவை. ஈழப்போர்தான் என்னை ஒரு அரசியல்ரீதியாக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியது.
தமிழகத்தின் ஒரு சிற்றூரைச் செர்ந்தவன் நான்। முதன்முதலாக உள்ளுர் மக்களைத்திரட்டி ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பில் துவங்கியது எனது போராட்டம். எங்களுரூக்கு அருகில் ஏற்படுத்தபப்பட்டிருந்த இ.பி.ஆர்.எல்.எஃப்-அமைப்பிற்கு பொருளதவிகள் செய்தல், போன்றவற்றின் வழியாக வளர்ந்தது. பிறகு அரசியல் தெளிவடைந்ததாக எண்ணிக்கொண்ட காலங்களில் எங்கள் ஊரில் ஒரு சர்வகட்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்தோம். அதில் ஒரு சிறு நாடகம் ஈழப்போரின் முதுகில் குத்திய ராஜிவ் காந்தியாக நானே நடித்தும் இருக்கிறேன். ராஜிவ் காந்தி திருவையாறு இசைக்கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதிணைந்து -நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். (அனாதைகளின் வன்முறையை ரொமாணடிஸைஸ் ரஜனி படங்களைப்போல॥ இது சிறைச்சென்றதை ரொமாண்டிஸைஸ் செய்யும் நோக்கில் சொல்லப்படவில்லை.)

ஈழப்போரை ஆதரித்து ஒரு மாணவர் முண்ணனியை சென்னையில் தி।க. மற்றும் பொதுவுடமைக்கட்சிகளை இணைத்து உருவாக்கினோம். அதற்கு வழிகாட்டியது மாவோவின் இக்கோட்பாடுதான். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை திரட்டி ஒரு ஊர்வலமும் நடத்தினோம். அப்பொழுது இதனை செண்ணையில் நான் முழுநேரப்பணியாகவே வீட்டைவிட்டு வெளியேறி செய்து கொண்டிருந்தேன். லெணிணும் மாவோவுமே ஆதர்சம். நாற்பதற்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் ஈழப்போருக்கு ஆதரவாக பேசியிருக்கிறேன்.

கண்களில் புரட்சிப்பற்றிய கனவுகள் வழிய... புரட்சி அது ஒன்றே மந்திரச் சொல்... இழப்பதற்கு ஏதுமில்லை அடிமை விலங்குகளைத்தவிர பெறுவதற்கோ ஒரு பொன்னான உலகம் இருக்கிறது... என்று எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்த மந்திர வாசகம் அது... அது ஒரு உன்னதமான நாட்கள்தான்... பதிணைந்து ஆண்டுகளக்குமேல் ஓடிவிட்டது। நமது சகோதரத் தமிழர்களின் அவலம் ஒயவில்லை... தின வாழ்வு என்கிற மலம் கழிக்கும் பணியைத்தவிர வேறு ஒன்றம் அறியேன் பராபரமே என்று ஓடுகிறது எனக்கும் வாழ்க்கை. வாழ்க்கைச் சூழல் அடித்த சூறாவளி... கணிப்பொறியில் ஓடகிறது காலம் இன்று.

ஈழப்போர் இந்திய புரட்சிகர இயக்கங்களுக்கான ஒரு புத்துணர்வையும் பல கோட்பாட்டு விளக்கங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது। தேசிய இனக்கோட்பாடுபற்றி மார்க்சியர்களை மீழ்படிப்பிற்கு உட்படுத்தியது. பிரிந்து போகும் தன்னாட்சி உரிமை என்கிற லெனினியக் கோட்பாடே அப்பொழுதான் தூசி தட்டி எடுத்துப் புரட்டப்பட்டது. இவற்றை திரும்பவும் நினைத்துப் பார்க்கும்போது எல்லாம் "பொய்யாய் பழுங்கதையாய் மெல்லப் போய்விட்டது". ஈழம் ஒருநாள் மலரும் என்கிற நம்பிக்கை மட்டும் ஆழமாக ஒரு உள்ளுணர்வாக எஞ்சியிருக்கிறது... எல்லா யதார்தங்களையும் கடந்து.....

இன்னுமொரு நினைவுக் குறிப்பு... கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் செய்வோம் நாவலிற்கு முதன்முதலில் தோழர் ஒருவர் நடத்திய "நீண்ட பயணம்" இதழில் 85-ல் என நினைக்கிறேன் அறிமுக உரை ஒன்ற எழுதினேன்। அந்த நாவல் தற்சமயம் மீழ்பதிப்பாக வந்துள்ளது। கைவசம் என்னிடம் இல்லை. அதனை பெறுவதற்கும் இங்க வாயப்பில்லை. அந்நாவல் ஈழப்போராட்டம் குறித்து பலவற்றை முன்அனுமானிக்கிறது என்றே நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால் அந்நாவல் குறித்த ஒரு அறிமுகஉரை தோழர்கள் யாரேனும் எழுதலாம். எனது அறிமுக உரை இதழ் என்னிடம் இல்லை. கிடைப்பின் அதனை நான் பதிவில் இடுவேன். நினைவுபாதையில் பின்னோட்டத்தின் மூலம் பின்னோட்டம் போடவைத்த அற்புதனுக்கு நன்றி.

13 comments:

அற்புதன் சொன்னது…

http://www.noolaham.net/noolaham/index.php?option=com_content&task=view&id=87&Itemid=32

//கடும் உழைப்பில் 400-க்கு மேலான ஈழத்து நூல்கள், கவிதை நூல்கள் உட்பட, இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளன. இணையத்தளம் www.noolaham.net//வணக்கம் தோழரே,

புதியதோர் உலகம் மேற் தந்த இணைப்பில் நூலகம் என்னும் மின்னூல் திட்டத்தில் இன்று எல்லோராலும் வாசிக்கப்படும் வண்ணம் உள்ளது.அது வெளி வந்த காலகட்டத்தில் சென்னையில் 'ப்லொட்' கோஸ்டியினரால் பல பிரதிகள் தேடி எரியூட்டப்பட்டன,இன்று அது எவராலும் வாசிக்கப்படும் வண்ணம் இணயத்தில் இலவசமாக இருக்கிறது.இந்த நூலகத்தில் பல ஈழத்தில் இருந்து வெளி வந்த காத்திரமான படைப்புக்கள் இருக்கின்றன.

உங்களைப் போல் பல உண்மையாக உழைத்த தோழர்களைச் சந்தித்து இருக்கிறேன்.இன்று இணையம் எம்மை எல்லாரையும் தமிழால் இணைக்கிறது.இங்கே சந்தித்ததில் மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள்.
எல்லோரும் பட்ட கஸ்ட்டங்கள் ஓர் நாள் விடியும் போது தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜமாலன் சொன்னது…

தோழர் அற்புதன் தகவலுக்கு நன்றி.. ஒருமுறை ஒரத்தநாட்டில் ஒரு மேடையில் நான் பிளாட் அமைப்பினரால் நடத்தப்பட்டுவந்த வதைமுகாம்கள் பற்றி கண்டித்துபேசியபோது.. அக்குழுவினர் மேடைக்கு அருகில் வந்து கடுமையாக மிரட்டல் விடுத்தனர். அவ்வூருக்கு அருகில்தான் அவர்களது முகாமிருந்தது. ஈழப்பிரச்சனைக்கு அரசுகளைவிட இக்குழுக்கள்தான் அதிகமான நஷ்டத்தையும் கஸ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் அந்நாவலை வாசித்துவிட்டு இதனை தொடரலாம். நன்றி.

பெயரில்லா சொன்னது…

உங்களைப் போன்றவர்களின் உழைப்பும் கனவும் வீனாகாது. உங்களை சகோதர உணர்வுடன் ஈழத்தில் விரைவில் வரவேற்போம்.

ஒரு ஈழத் தமிழன்

பெயரில்லா சொன்னது…

உங்களைப் போன்றவர்களின் உழைப்பும் கனவும் வீனாகாது. உங்களை சகோதர உணர்வுடன் ஈழத்தில் விரைவில் வரவேற்போம்.

ஒரு ஈழத் தமிழன்

காரூரன் சொன்னது…

தோழமையுடன் சில வரிகள்,
வாழ்வியலில் ஒரு பகுதியை, தமிழ்நாட்டு மண்ணில் மாணவனாக கழித்திருக்கின்றேன். ஈழப் போராட்டம் சம்பந்தமான விழிப்புணர்வுகளை ஊட்ட குக்கிராமங்களுக்கு சென்று, உள்ளூர் மக்களின் உதவியுடன் தெருக்கூத்து போன்ற விடயங்களை செய்திருக்கின்றோம். உங்களைப் போன்றவர்களின் ஆதரவு தான் எமக்கும் விடியல் ஒரு நாள் வரும் என்பதை அடிக்கடி நினைவூட்டுபவை.நாங்களும் பிற்காலங்களில் பல அழுத்தஙகளுக்கு உள்ளானோம். எம்மை அரவணைத்த பலருக்கு பல மட்டத்தில் சோதனைகள். உங்கள் பதிவுக்கு நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

Hello Jamal,

Can You enlighten me about this article:

http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&cid=1188044064970&pagename=Zone-English-News/NWELayout


anputan

ஜமாலன் சொன்னது…

திருவாளர் அணாணி.. உங்கள் உண்ர்விற்கு நன்றி.. உணர்வைக்கூட மறைவாக வெளிப்டுத்த வேண்டியது அவசியமா? அல்லது அரசியலா? புரியவில்லை...

பெயரில்லா சொன்னது…

ஜமாலன்,

ஈழப்போராட்டம் அல்லது தமிழீழப்போராட்டம் என்று அழைக்கப்பட்டு வருகின்ற ஏதோ ஒரு போராட்டம் தொடர்பான உங்கள் அக்கறைகளைப் படித்தேன். நல்லது. அயல் நாட்டிலுள்ள ஒருவரது இலங்கைத்தமிழர்கள் மீதான ஆதரவினை இலங்கைத்தமிழனாகிய நான் உண்மையில் வரவேற்கின்றேன்.
இலங்கை பேரினவாத ஒடுக்குமுறைபற்றி இலங்கைத்தமிழர்களால் ஏராளமாக எழுதிக்குவிக்கப்பட்ட போதிலும் ஈழப்போராட்டம் அல்லது தமிழீழப்போராட்டம் தொடர்பாக மிக மிகக்குறைவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதனை நீங்கள் அறிவீர்களோ என்னவோ.

தமிழ்நாட்டில் புளொட் இயக்கத்தின் இராணுவப்பயிற்சி முகாம், எப்படி ஈழப்போராட்டத்திறகாக அல்லது தமிழீழப்போராட்டத்திறகாக போராடவந்த இலங்கைத்தமிழ் இளைஞர்களுக்கு ‘புதியதோர் உலகமாக’ அமைந்தது என்பதையே கோவிந்தன் ‘புதியதோர் உலகம்’ என எழுதியிருந்தார். ஆனால் அதே கோவிந்தன் ‘இன்னுமொரு புதியதோர் உலகம்’ அல்லது ‘புதியதோர் உலகம் - இரண்டாம் பாகம்’ என இன்னுமொரு நாவலையும் நிட்சயம் படைத்திருப்பார் அவர் புலிகளின் சிறையிலிருந்து உயிரோடு விடுவிக்கப்பட்டிருந்தால்.

ஈழப்போராட்டம் அல்லது தமிழீழப்போராட்டம் என்பதே பல புதிய உலகங்களின் திரட்சி. எனவே ஈழம் என்பது கற்பனைக்கிரகம் ஒன்றிலே சாத்தியம்.

ஈழம் மலருமென நீங்கள் உண்மையிலே நம்புவதையிட்டு நான் உண்மையிலே வருத்தப்படுகின்றேன்.

- செ.குணரத்தினம் -

பெயரில்லா சொன்னது…

Hello jamal,

I am not sure whether I obscured about what I wanted to ask. could not get your allegation that I express my 'feelings' indirectly. I was very clear. I gave a link to stroy of relavence to a situation in Elam, and asked your opinion. If you have time to read that link you may comment on it.

It alleges prabhakaran and LTTE. The alegations are not strange. They appeared in various news medias including BBC (which finds place in the good books of people supporting LTTE).

The point you may try to address is: enlighten me, whether LTTE fights for the people being oppressed by SL governemnt ? Or They fight for the people whom they call as 'Tamils'. Does their notion of 'tamil' has religion too ?

பெயரில்லா சொன்னது…

Jamalan sometimes the people, who want to kill muslims in india are very much sympathetic about them in Sri Lanka. That's the irony. Mr. Anonymous is one of them. His main issue is LTTE. He thinks LTTE may harm his Hindustan.

I wish you would not get into this politics. If you oppose them you will be blamed in the name of Islam though you are a marxist in nature. Do not try to respond these people

பெயரில்லா சொன்னது…

yeah respond what fits you..don't let the truth come out....

பெயரில்லா சொன்னது…

Dear Jamal,

Unlike the anonymous above has stated, this anonymous is not the one among those killing Muslims. Rather, I am in the fold of those being killed, persecuted in India as well as in Srilanka, and I find myself in Iraq, Afghanistan, Palestine. Yes I am an innocent human.

I have got a special interest in leaving comments in your blog because of your name. I will make point more clearer.

First, I understand that you are a Marxist. I take this as an action of someone who wants to rise for rights. In this aspect, I too a marxist.

That is true, those who wants to kill Muslims in India are against the creation of Elam too. I am not to deny that.

At the same time, you have no reason to take whoever shuns LTTE are in the folds of Muslim killers. You have no reason because LTTE themselves are Muslim killers. LTTE fights for Tamil-land, no doubt. But they also meditate the 'purification' of Tamil-race in the way they actively did during 90's.

You may also consult this with some Srilankan Muslims.

No doubt, SL governement has been so biased in its policies. But on the way of going against them, you should n't end-up in finding yourself with another fascist group. because, as time passes, you will integrate with the group well and kill your own people, but this time not only they are your own peeple by language. A sense of egoism will occupy you, and you will violate your own feeling to rise against the oppression, this time you will start oppressing.

Srilankan Tamils deserves a peace solution minus LTTE. Else LTTE will do the same blood bath what they did in 90's. you please don't be a part of them. You may identify you as a marxist rather than a Muslim. But LTTE will use you as a Muslim being in support of their actions for the political gain.

I wish you to be a real Marxist, who don't care to have any fame and money, and rise for the rights of ALL people. You may also try not to be bothered about being labeled, 'a muslim sympathetic marxist'. You have to be sympathetic for those oppressed.

All the best.

பெயரில்லா சொன்னது…

செ. குணரட்ணம் தற்பொழுது அங்கோடை என்னும் இடத்தில் இருப்பதால் ஈழப் போராட்டம் குறித்து தெரியாமல் இருக்கலாம். ஈழம் என்பது விரைவில் நனவாகும்.

சக்தி

ஜமாலன். Blogger இயக்குவது.