மார்க்சியம் என்பது முரண்பாடுகள் பற்றிய இயங்கியல்ரீதியான ஆய்வுதான் என்பதை மாவோ தனது "முரண்பாடுகள் பற்றி" - என்கிற நூலில் மிகச்சிறப்பாக விளக்குகிறார். இந்நூல் பின் நவீணத்துவம் பேசுபவர்களின் அடிப்படையான பன்மைக் கோட்பாட்டை மார்க்சிய அடிப்படையிலிருந்து பல்முரண்பாட்டு கோட்பாடாக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
மார்க்சிய இயங்கியல் ஒரு சமூகம் துவங்கி சாதாரணமானதாகக் கருதப்படும் நிகழ்வுவரை தனிச்சிறப்பான ஒரு ஆய்வுமுறையை ஒரு பார்வையை அல்லது உலக கண்ணோட்டத்தை தருகிறது. எந்த ஒரு சமூகமும் தனக்குள் பல முரண்பாடுகளைக் கொண்டிருக்கும். ஒரு குறிப்பட்ட முரண்பாடு ஒரு குறிப்பிட்ட சூழலில் முதன்மையானதாக இருக்கும். மற்ற முரண்பாடுகள் துணைமுரண்பாடுகளாக மாறும். சான்றாக, ஆங்கிலேயருக்கு எதிரானக் காலணியப்போரில் ஏகாதிபத்தியத்திற்க்கும் இந்திய தேசியத்திற்குமான முரண்பாடு முதன்மையாக இருந்தது. அப்பொழுதும் சாதியம், தலித்துகள், பெண்கள், விவசாயக் கூலிகள், தொழிலாளிகள் போன்ற பலமுரண்பாடுகள் இருந்தது. இம்முரண்பாடுகளை அன்று தீர்மாணித்தது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முரண்பாடுதான்.
ஒரு சமூகம் குறித்த ஆய்வில் பல முரண்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும்। ஒரு குறிப்பான சூழலில் ஒருகுறிப்பிட்ட முரண்பாடு பிற முரண்பாடுகளின் மீது மேல் நிர்ணயம் செய்யக்கூடியதாக இருக்கும்। இதனையே மார்க்சியத்தை அமைப்பியல் நோக்கில் மறு விளக்கம் செய்த அல்தூஸர் தனது சிந்தனைகளுக்கு அடிப்படையாக எடுத்துக்கொண்டுள்ளார்। இதனை உளவியலில் பிராய்டு முன்வைத்த மேல்நிர்ணயம் என்கிற கனவுகள் பற்றிய கோட்பாட்டுடன் இணைத்துக்காணலாம்। கனவுகளில் வரும் பல பிம்பங்கள் இவ்வாறாக ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தி ஒரு குறிப்பிட்ட முரணால் தீர்மாணிக்கப்படுகிறது। அத்தீர்மானகரமான முரனே கனவுகளிக் அர்த்தத்தை தீர்மாணிக்ககூடியதாக உள்ளது।
இலக்கிய அமைப்புகளை ஆய்வு செய்த பிரஞ்சு சிந்தனையாளரான தெரிதா, இப்பன்முரண்கோட்பாட்டை இலக்கியத்திற்குள் செயல்படும் பல அமைப்புகளாக விளக்குகிறார்। ஒரு குறிப்பிட்ட அமைப்பு இதர சிறு சிறு அமைப்புகளை உள்ளடக்கி இருக்கும் இதனை இலக்கியத்தை கட்டுடைப்பு செய்து ஒடுக்கப்பட்ட அந்த அமைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்।
மாவோவின் முதன்மை முரண்பாட்டிற்கு மட்டுமே அதிக அழுத்தம் தந்தால் மற்ற பல முரண்களின் தன்மையை மறுதலிக்கும் போக்கிற்கு ஆளாக நேரிடும்। உதாரணமாக ஒரு மனிதனின் அடையாளம் பல முரண்களை உள்ளடக்கி உள்ளது। இந்தியன், தமிழன், இந்து, சாதி, ஆண், பெண் - என பல முரண்களில் ஒன்றை தேர்வு செய்து அதனால் தனக்கான அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதைக் காணலாம்। ஒருவன் எந்த அடையாளத்தில் இயங்ககிறான் என்பதை ஒரு குறிப்பான சூழலே தீர்மாணிக்கிறது। அல்லது ஒரு முரண்பாடு முதன்யைமானதாக மாறுகிறது। அதனால் மற்ற முரண்கள் உள்ளடக்கப்படுகிறது। அதனால்தான் ஒரு அமைப்பில் ஒடுக்கப்பட்டவனாக உள்ளவன் இன்னொரு அமைப்பில் ஒடுக்குபவனாக மாறுகிறான்। மனிதனின் பன்முக அடையாளம் குறித்த ஆய்விற்கும் இம்முரண்பாடுகள் பற்றிய மாவோவின் சிந்தனை பங்களிகக்கக்கூடியதாக உள்ளது என்பதையே இங்கு நாம் நமக்கு தெரிந்த அளவில் விளக்க முயற்சித்தோம்.
7 comments:
ஜமாலன், உங்கள் எழுத்துக்களை பல வருடங்கள் முன்பு வாசிக்க நேர்ந்திருகிறேன். நீங்கள் பதிவு தொடங்கி எழுத வந்ததும், உங்களை போல இன்னும் வருவதும் மிக ஆரொக்கியமான அறிகுறி. வருக!
நண்பருக்கு நன்றி. தாங்கள் எனது எழுத்துக்களை வாசித்திருப்பதாக கேட்பதற்கே சற்தோஷமாக இருக்கிறது. நான் சமீபத்தில்தான் வலைப்பதிவிற்கே வந்தேன். தொடாந்து பேசலாம்...உங்கள் பதிவை வாசித்தபின்.. எனது கருத்துக்களைச் சொல்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள். கட்டுரைக்கு நன்றி
----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
நல்ல முயற்சி,
உங்கள் வருகையும் எழுத்தும்,இந்த தமிழ்மண நச்சுச் சூழலில் நம்பிக்கை தருகிறது.
முரண்கள் பற்றிய ஒரு ஆரம்பமாக இருக்க கூடிய பதிவு.
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் முதன்மை முரணை அடையாளங் கண்டு அதன் அடிப்படையில் நிறுவனப்படும் அமைப்புக்களே, மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு போராட்டத்தை நடாத்தக்கூடிய வல்லமையைப் பெறுகின்றன.
வெற்றுக் கோசங்களின் அடிப்படையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழலில் எழுந்த போராட்டங்களைப் பிரதியிடும் எவருமே வரலாற்றை எழுதப் போவதில்லை.
ஈழப் போராட்டத்தில் இது நிதர்சனமாகத் தெரியும் உண்மை.
வணக்கம் ஜாமலன், உங்கள் எழுத்துக்களை அசை இதழில் படித்தது. நீங்கள் வலைப்பதிய வந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விதயம். வாழ்த்துக்கள்
வரவனையானுக்கு நன்றி.. தொடர்வோம் நமது பகிர்தல்களை
அற்புதனுக்கு நன்றி.. தங்களுக்கு எழுதத் துவங்கிய பின்னோட்டம் ஒரு தனிப்பதிவாகிவிட்டது.
கருத்துரையிடுக