பந்த்-ம் பாசிசமும்

இந்திய ஜனநாயகம் அவ்வப்பொழுது இப்படித்தான் 47-ல் அணிந்த தனது ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு அம்மணமாக பல்லிளிக்கும். தமிழக பந்தை உச்சநீதிமன்றம் தடைசெய்ததன்மூலம் இந்த அம்மண நாடகம் இப்பொழுது மீண்டும் அரங்கேறியுள்ளது. எம்ஜியார் ஆட்சியில் ஈழப்பிரச்சனைக்கு ஆதரவாக ஒருநாள் பந்தும் உண்ணாவிரதமும் அரசால் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்கட்சி திமுக அதனை ஆதரித்தது. ஆனால், இன்றைய அதிமுக உச்சநீதிமன்றத்தில் தடைகோரி பந்தை நிறுத்தி உள்ளது. இராமஜென்ம பூமி பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்காக கூட்டப்பட்ட முதல்வர்கள் மாநாட்டிற்கு காவி கட்டிச் சென்று "இராமருக்க இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது" என்று இருமாப்புடன் பேசி இராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா மீண்டும் தனது காவிப்பற்றை காட்ட தமிழக பந்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். காவிரிப் பிரச்சனைத்துவங்கி எல்லாவற்றிலும் இவிருகட்சிகளிடம் இந்த சக்களத்தி மணோபாவம் தொடர்ந்து தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சேதுக்கால்வாய் திட்டம் தமிழக மக்களின் அடித்தட்டு மக்களுக்கு என்ன பயன் விளைவிக்கப்போகிறது என்பதும் அது ஏற்படுத்தும் சூழலியல் பிரச்சனை (சில நிபுணர்கள் அப்படி ஒரு பிரச்சனையே அதில் இல்லை என்கிறார்கள்) என்பதும் இக்கால்வாய் நாளை அமேரிக்க கப்பல் வந்து கண்ணாகணிப்பதற்கான இராணுவ கேந்திரமாகக்கூட மாறலாம் என்பதும் ஒருபுறமிருக்க இது தமிழக மக்களுக்கான செல்வம் கொழிக்கும் திட்டம் போன்று ஒரு சித்திரம் காட்டப்படுகிறது. உண்மையில் 60-ஆண்டுகால பல வளர்ச்சித்திட்டங்கள் இந்திய மக்களை இன்னும் வறுமையிலும் பட்டினியிலும்தான் தள்ளியுள்ளது. ஏழைகள் பரம ஏழைகளாக மாறுவதும் மில்லியனர்கள் பில்லியனர்களாவதும்தான் இங்கு நடந்துவருகிறது. கூடங்குளம் அனுஉலைமுதல் ரிலையன்ஸ் பிரஷ்வரை பண்ணாட்டு மூலதனப்பிடியை இறுக்கும் எல்லா வளர்ச்சித்திட்டங்களும் மக்கள் நலன் என்கிற பெயரில்தான் முன்வைக்கப்படுகிறது. மக்கள் வாழ்க்கைத் தரமோ சொல்லவொண்ணாத்துயரில் மூழ்கிக் கொண்டிருப்பதுதான் யதார்த்தம்.

ஆக, சேதுக்கால்வாய்த் திட்டம் வழக்கமான பெருமுதலாளிய கட்டமைப்பிற்கும் பண்ணாட்டு மூலதனத்திற்குமே பல்லக்கு தூக்கப்போகும் ஒன்று என்றாலும், அதை தடை செய்ய முனையும் சக்திகள் எப்படிப்பட்டவை என்பது அவசியம் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

1. இத்திட்டத்திற்கு அடிகோல் நாட்டியது ப.ஜ.க மற்றும் செல்வியார் ஆட்சியில்தான். இதைச் சொல்லித்தான் கதறிக் கொண்டிருக்கிறார் கழகத் தலைவரும்.
2. இப்பொழுது ராமர் பாலத்தை கண்டெடுத்துள்ள சங்பரிவார்கள், இப்பிரச்சனையை ஒரு இந்துத்துவ மத வெறிப்பிரச்சனையாக மாற்ற முயல்கிறார்கள்.
3. இதனை வைத்த தாங்கள் இழந்த மக்கள் செல்வாக்கை பெற்றவிட முயல்கிறார்கள்.
4. இதற்கு தமிழக அதிமுக-வும் பல்லக்குத்தூக்குகிறது.

சரி, சேதுகால்வாய் திட்டத்தை நிறுத்திவிட்டு இந்த ராமர் பாலத்தை என்ன செய்யப் போகிறார்கள் இப்பரிவார்கள். கடலுக்குள் கரசேவை செய்து அதனை காக்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள். அத்திட்டத்திற்கு எந்த பண்ணாட்டு நிறவனமும் முதலீடு செய்யப் போவதில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதே கால்வாய்த்திட்டத்தை ராமர் கனவில் வந்து செய்யச் சொன்னதாக செய்தாலும் செய்வார்கள். ஆக, நிரூபிக்கப்படாத ராமர் பாலத்தைவிட குறைந்தபட்சம் தமிழக கடல் பரப்பை பரபரப்பான வியபார தளமாக்கப்போகும் சேதகால்வாய்த் திட்டம் மேலானது என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. ஒருகாலத்தில் கலாமின் கனவைப்போல இந்தியா வல்லரசாகி விட்டால் இலங்கையை நாட்டாமை செய்வதற்கான கடல் ஆதிக்கத்தளமாக இது மாறக்கூடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையும் அது அறிவித்துள்ள வாசகமும்தான் ரொம்பவும் அதிர்ச்சியூட்டக்கூடியது. இந்த தடையில் உச்சநீதிமன்றம் பொதுமக்கள் நலனுக்கு பந்து எதிரானது என்றும் தனிப்பட்ட அரசியல் கட்சிகளைவிட மக்கள் நலன் மேலானது என பந்தை தமிழ்நாடு இனி செய்யக்கூடாது அதுபோல பிற மாநிலங்களும் செய்யக்கூடாது என்கிறது. இது நமக்கு கீழ்கண்ட கேள்விகளை எழுப்புகிறது.

1. பொதுமக்கள் என்கிற சொல்லை உச்ச நீதிமன்றம் எப்படி வரையறுக்கிறது? அல்லது பொதுமக்கள் என்கிற ஒரு சட்டரீதியான மக்கள் பிரிவு இருக்கிறதா? அதை தீர்மாணிக்கும் காரணி எது? பொதுவாக மக்களின் பெரும்பாண்மையை குறிக்கவே இச்சொல் வழக்கத்தில் உள்ளது. தவிர பொதுவான அதாவது தனக்கென்ற அடையாளமற்ற மக்கள் இருக்கிறார்களா? எல்லா மக்களுக்கும் ஒருகுறிப்பிட்ட அடையாளமோ அல்லது குறிப்பிட்ட நோக்கமோ இருக்கிறது.
2. அப்படியே பொதுமக்களக்கு பந்த் தீங்கு விளைவிக்கிறது அல்லது இடையூறு செய்கிறது என்று எந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முடிவிற்கு வந்தது? பொதுமக்கள் அல்லது இப்பிரச்சனையில் பொதுமக்களாக குறிக்கப்படும் தமிழக மக்களிடம் ஏதெனும் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு இந்த முடிவிற்கு வந்தார்களா?
3. பந்த் என்பது பொதுமக்கள் அல்லது பாதிப்பிற்குள்ளான ஒரு மக்கள் பிரிவு தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான ஜனநாயக அடிப்படையிலான ஒரு போராட்டவடிவம் அல்லது தனது எதிர்ப்பை முன்வைப்பதற்கான ஒரு வடிவம். இதனை தடை செய்வது மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக ஆகாதா?
4. சரி, பந்தை தடை செய்யும் உச்சநீதிமன்றம் பொதுமக்களையும் பொது சொத்துகளையும் நாசம் செய்யும் மதக்கலவரம் துவங்கி சாதி, இன, குழு மோதல்களை தடை செய்ய என்ன வழிமுறை வைத்துள்ளது? இதுவரை அரசியல் பந்த்-களைவிட அதிகமான அழிவை உருவாக்கியவை இத்தகைய கலவரங்களே. குறைந்தபட்சம் இதற்கு முன்பு நடந்த கோவை துவங்கி குஜராத், மும்பை, பஞ்சாப், பழங்கடி இனங்களை அங்கீகரிக் கோரி நிகழும் கலவரங்கள் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான அரசு பயங்கரவாதம் நக்ஸலைட்டுகளை ஒழிப்பதாக சொல்லி பல கிராமங்களை அழிக்கும் காவல்துறை அராஜகங்கள் என நிகழ்ந்த பல மனிதப்படுகொலைகள் குறித்து எத்தனை விசாரணைகள் முடிவடைந்து குறிறவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையாவது உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்துமா?
5. மதங்களை காக்கிறோம் என்கிற பெயரில் நிகழும் வன்முறைகளை மதச்சார்பற்ற இந்திய குடியரசு எப்படி அனுமதித்து வருகிறது? மத, சாதிகள், இனப் பெயரால் உள்ள கட்சிகளை அரசியல் சட்ட விதிமுறைப்படி ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்வதில்லை?
6. சரி சேதுகால்வாய் திட்டம்குறித்து நாடளவில் நடந்துவரும் விவாதத்தை முடிவிற்கு கொண்டுவர ஜனநாயக முறைப்படி சம்பந்தப்பட்ட தமிழக மக்களிடம் ஏன் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அடிப்படையில் இத்திட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க உத்திரவிடவில்லை?
7. அல்லது ராமர் பாலம் இருக்கிறது என்று கூறி இத்திட்டத்தை கைவிடக்கோரும் அமைப்புகளிடம் அதற்கான ஆதாரங்களையாவது சமர்பிக்கும்படி ஏன் உத்திரவிடவில்லை?

இப்படி தெளிவற்ற ஒரு பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை எந்த நொக்கில் வழங்கியுள்ளது? பிரச்சனையை ஜனநாயகமுறைப்படி தீர்ப்பதற்கு பதிலாக, தடை என்கிற அடக்குமுறையை அனுமதிப்பது இந்திய அரசு எந்திரம் பாசிசமயமாகிவரும் போக்கையே காட்டுகிறது.

"பந்த் செய்வது மக்கள் உரிமை - அதை
தடை செய்வது பாசிசக் கொடுமை!"

-ஜமாலன்
01-10-2007 இரவு 02:53

36 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

பொதுமக்கள் வேறு,

பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் வேறா ?

மக்கள் சக்தியை விட நீதிமன்றத்தின் சக்தி அதிகம் என்று இதன் மூலம் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்க்கள்.

பந்த்க்கு முன்பு அனுமதி அளித்த கீழ் கோர்டுகளுக்கு உச்ச நீதிமன்றம் என்ன தண்டனை தரப்போகிறது ?
:)))

பெயரில்லா சொன்னது…

பந்த் செய்வது மக்கள் உரிமை - அதை
தடை செய்வது பாசிசக் கொடுமை

No it should be
பந்த் செய்வது பாசிசக் கொடுமை
-அதை தடை செய்வது மக்கள் உரிமை

You have every right to protest
without affecting lives of others.
Why should buses be off the road,
and shope be forced to closed.
Sheer fear and thrat of force was
used to claim bandh was a success.
Now that is not possible. Three
cheers for reminding the 'fasicist'
MK and Co that they are not above
law.

ஜமாலன் சொன்னது…

கோவி. கண்ணன் கூறியுள்ளத சரியே..

அணாணிக்கு.. கருத்துக்கு நன்றி.. அரசு எந்திரத்தை பயன்படுத்தாமல் பந்த் வெற்றியடைவதே சரியான நடைமுறை.

முத்துகுமரன் சொன்னது…

நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் எந்த எதிர்ப்புப் போராட்டங்களும் பொதுமக்களுக்கு அசவுகரியம் என்ற சட்டகத்தின் மூலமாக ஒடுக்கி விடலாம். சமீப காலமாக, பாராளுமன்ற, சட்டமன்ற ஜனநாயகங்களின் மீது அதிகரித்து வரும் நீதிமன்றங்களின் அதிகாரத்தன போக்கினைத்தான் இத்தீர்ப்பில் காண முடிகிறது.

எய்ம்ஸ் மருத்துவர்களின் வேலைநிறூத்தத்தின் போது வேலை நிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கான மருத்துவர்கள் ஊதியத்திற்காக ''தரகு வேலை'' பார்த்த உச்ச நீதிமன்றத்திற்கு அன்று அவதிப்பட்டவன் எல்லாம் பொதுமக்களாக தெரியவில்லையா?? இன்று ஆட்சியை கலைக்க தயங்ககூடாது என்று சீறும் நீதிபதிகளின் அறம் அன்றைக்கு எங்கு போயிருந்தது. போராடிய மருத்துவ மாணவர்களின் கோவணத்திற்குள்ளா??

ஜமாலன் சொன்னது…

முத்துக்குமரன் பின்னோட்டத்திற்கு நன்றி. உச்ச நீத மன்ற தீர்ப்பு துரதிஷ்டவசமானதுதான். இது ஒரு மோசமான முன்னுதாரணமாகி நாளை எந்த மக்கள் இயக்கத்தையும் எந்த உரிமைகளையும் கெட்கமுடியாத நிலை உருவாகிவிடும். இதுவரை நடந்த எத்தனையோ பிரச்சனைகளில் காட்டப்படாத அக்கறை இப்பிரச்சனையில் காட்டப்படுவது வருத்தத்திற்குரியதுதான்.

அருண்மொழி சொன்னது…

ஆட்சி கலைப்பு மிரட்டல் என்பது தமிழகத்திற்கு மட்டும்தான். கேரளா, கர்நாடகா எல்லாம் வேற தேசத்தில் இருப்பதால் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஜமாலன் சொன்னது…

அருண்மொழி... பின்னோட்டத்திற்கு நன்றி. தமிழகம் எப்பொழுதுதும் மாற்றாந்தாய் பிள்ளைதானே. தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையின்மையே இதற்கு காரணம். தவிரவும் எயம்ஸ் மற்றம் இட ஒதுக்கீடு பிரச்சனையில் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளும் இப்பிரச்சனையில் அதன் அதிவேக அக்கறையும்.. கவனிக்க வேண்டியவை. நீதித்துறை சமீப காலங்களில் அல்லது காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு தலையிடும் விஷயங்கள் கவலை அளிக்க கூடியவை. காரணம்.. எல்லா அரசாங்க துறைகளும் 5-ஆண்டுகால முந்தைய ஆட்சியில் முற்றிலும் மதச்சார்பு நிலையில் கட்டடைமக்கப் பட்டிருக்கலாமோ என சந்தேகத்தை தருகின்றன. மக்களே பெரிய சக்தி. அதற்கு அவர்கள் 5-ஆண்டுகள் காத்திருப்பதுதான் அவலம். 369-என்கிற சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதை எல்லா மாநில கட்சிகளும் உணரவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்களேதான் திரும்ப பெற வேண்டும். இதைதான் நமது மரியாதைக்குரிய சோம்நாத் சட்டர்ஜி அவர்கள் அறிவித்தார். அது இந்த சூறைக்காற்றில் காணாமல் போய்விட்டது என்பதுதான் அவலம்.

பெயரில்லா சொன்னது…

மற்றபடி, எதிர்கட்சியே பந்த் வெற்றி... பஸ் ஒடவில்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்த முதல் பந்த் இது வாகத்தான் இருக்கும்... ஹா ஹா ஹா...

எய்ம்ஸ் மருத்துவர்களின் வேலைநிறூத்தத்தின் போது வேலை நிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கான மருத்துவர்கள் ஊதியத்திற்காக ''தரகு வேலை'' பார்த்த உச்ச நீதிமன்றத்திற்கு அன்று அவதிப்பட்டவன் எல்லாம் பொதுமக்களாக தெரியவில்லையா??

நெத்தியடி....

இன்று ஆட்சியை கலைக்க தயங்ககூடாது என்று சீறும் நீதிபதிகளின் அறம் அன்றைக்கு எங்கு போயிருந்தது. போராடிய மருத்துவ மாணவர்களின் கோவணத்திற்குள்ளா??..... கொண்டைக்குள்

ஜமாலன் சொன்னது…

அனானிக்கு..

//மற்றபடி, எதிர்கட்சியே பந்த் வெற்றி... பஸ் ஒடவில்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்த முதல் பந்த் இது வாகத்தான் இருக்கும்... ஹா ஹா ஹா...//

ஹா.. ஹா.. ஹா.. ரிப்பீட்...

வரவனையான் சொன்னது…

சிந்திக்க வைக்கும் கேள்விகள் !

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

அரசை மக்களேதான் திரும்ப பெற வேண்டும்.

If so why there were demands for dismissal of Modi's govt. Did not the left make such a demand.
369-என்கிற சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதை எல்லா மாநில கட்சிகளும் உணரவேண்டும்.
It is 356. BJP state govts were
dismissed after demolition of
Babri Masjid. Are you willing
to argue that it was bad.

You should understand one thing.
Just as this govt was elected by people of Tamilnadu, other state
govts were elected by the people
of the respective people. So going by your own logic you should never
demand dismissal of any state government ruled by BJP irrespective of what they do.
Do you get it.

பெயரில்லா சொன்னது…

மற்றபடி, எதிர்கட்சியே பந்த் வெற்றி... பஸ் ஒடவில்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்த முதல் பந்த் இது வாகத்தான் இருக்கும்... ஹா ஹா ஹா

Hello fools, the opposition claimed
that the government was violating
the orders of SC and demanded action. They never claimed that
Bandh was successful. There is mud
in your face as well as in the face
of DMK govt. This fellow announces Bandh and then fast and then gives
up fast and goes to work. He has
becoming the laughing stock of the
world.

தறுதலை சொன்னது…

மக்களுக்கும் மக்கள் நலனுக்காவும் தான் சட்டம். அதுதான் மக்களாட்சி
சட்டத்திற்காக மக்கள் என்றல் அது மனு ஆட்சி.

சமீபத்திய உலுத்துப்போன ஒரு தூணின் நடவடிக்கைகள் மனுநீதி மன்றமே என்று சொல்லவைக்கின்றன.சோமாறிகள் எந்தப் பதவியில் இருந்தாலும் சோமாறிகளே. மனு நீதி மன்றத்தில் காம கேடியின் பீயை நக்கும் சோமாறிகளை தோலுரிக்க வேண்டும்.


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

ஜமாலன் சொன்னது…

வரவனையானுக்க நன்றி.

அனானி நண்பர்களுக்கு..

356-என்பதுதான் சரி. நன்றி. இச்சட்டம் மாநில உரிமைகளுக்கும் மக்கள் தீர்ப்பபிற்கும் எதிரானது என்பதுதான் எமது நிலைபாடு. பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது பி.ஜே.பி. ஆட்சியை கலைத்ததும் தவறுதான். உரிமை என்பது எல்லோருக்கும் பொதுதான். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. பி.ஜே.பி- ஆட்சியில் இல்லை என்பதால் அதன் நோக்கங்கள் எவை நிறைவேறாமல் இல்லை. ஆட்சி என்பது வேறு அதிகாரம் என்பது வேறு. ஆட்சிதான் மாறி உள்ளது. அதிகாரம் மாறவில்லை. அரசாங்கம் மாறி உள்ளது அரசு மாறவில்லை. 356-சட்டம் எந்த ஆட்சிக்கு எதிராகவும் பயன்படுத்தக் கூடாது. மக்கள் திரும்ப பெறவதற்கான கோரிக்கை வைப்பதற்கும் வாக்களித்து அரசை நீக்குவதற்குமான ஒரு முறை, பாதகாப்பு, உத்திரவாதம் அரசால் செய்யப்படவேண்டும். அது இவ்வரசுசுகள் செய்யாது என்பது வேறு? தேர்தலையே கள்ள ஓட்டுகளில் நடத்தும் நமது கட்சிகளின் பண்பாடு இதைமட்டும் விட்டுவிடுமா என்ன?

பந்த் வெற்றியடைந்ததா?? இல்லையா? என்பது பிரச்சனை இல்லை. மக்களின் குரலை அறிவதற்கான அல்லது பிரதிநிதித்துவம்படுத்துவதற்கான வாய்ப்புகளை பல முனைகளிலும் முடக்கியிருக்கின்றன அரசு முதல் ஊடகங்கள் மற்றும் கட்சிகள்வரை. இதுதான் நமது பலவீனம். உண்மையில் பந்த்- அல்லது இப்பிரச்சனைகள் குறித்து மக்களின் நிலை என்ன? என்பதை அறிவதற்கான வாய்ப்பே இல்லை. இதில் அவரவருக்கு பிடித்தமான கருத்தை அவரவர் உருவாக்கி வளர்த்துக் கொள்கிறார்கள். இதுதான் அரசியல்.
முட்டாள்கள் என்று அழைப்பது ஆரோக்கிமற்ற செயல். அதனை தவிர்த்து விடுங்கள். பின்னோட்டத்திற்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

நண்பர் தறுதலைக்கு

நன்றி..

சோமாறிகள் மற்றும் பீ போன்ற சொற்களை தவிர்ப்பது தாங்கள் கூற விரும்பும் கருத்தை நல்லவிதமாக கொண்டு சேர்க்க உதவும். அத்தகைய அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அது ஆரொக்கியமானது அல்ல.

பாரதி தம்பி சொன்னது…

'தமிழகத்தில் எந்த நேரத்திலும் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் என்றழைக்கப்படும் மனு நீதிமன்றம்(நன்றி: லக்கிலுக்) இன்று கூறியிருக்கிறது. இதே நீதிமன்றம்தான், ஜெயலலிதாவின் டான்ஸி வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது, 'ஒரு முதல்வராக இருப்பவர் அரசு நிலத்தை வாங்கக் கூடாது என்ற தார்மீக விதியை மீறிய குற்றத்தை செய்தமைக்காக ஜெயலலிதா மனதளவில் பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும்' என்று அசல் மனுவாதியின் குரலால் தீர்ப்பளித்தது.

நூல்பாசத்தால் ஜெ.வை பிராயச்சித்தம் தேடச்சொன்ன கோர்ட், இன்று சூத்திரனொருவனின் ஆட்சியை கலைக்க தயார் நிலையிலிருக்குமாறு ஏற்பாடு செய்கிறது. இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் என்று அனைத்து முற்போக்கு திட்டங்களுக்கும் முட்டுக்கடை போடும் உச்சநீதிமன்றம் முழுக்க, ஆரிய வெறிப்பிடித்தக் கூட்டமே நிறம்பியிருக்கிறது.

தறுதலை சொன்னது…

விவாதம் வேறு திசைக்கு செல்வதை விரும்பவில்லை. இருப்பினும், பீ, மூத்திரம் போன்ற சொற்கள் கெட்டவையாகவும், ஸாஸ்திரம், ஸ்ம்ரதாயம் போன்ற சொற்கள் நல்லவையாகவும் கட்டமைக்கப்படுதை கண்டிப்பாக எதிர்க்கிறேன்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

ஜமாலன் சொன்னது…

வாங்க ஆழியூரான் நன்றி.

சரியாக கருத்தை சரியான நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

நண்பர் தறதலைக்கு.

பீ சோமாறி போன்ற சொற்களை அநாகரீகமானதாக கருதவில்லை. அது நாம் சொல்ல வந்த கருத்தை திசைதிருப்பிவிடும் என்பதுதான். மற்றபடி மொழிக்குள் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் மதிப்பு ஒன்றுதான் அதில் உயர்வு தாழ்வோ நாகரீகம் அநாகரீகமோ இல்லை. அவ்வாறு கற்பிக்கப்ட்டிருப்பதால்தான் தமிழை பெரியார் கறைபடிந்த மொழி என்றார். நிற்க, இது தாங்கள் கூறியதுபோல விவாதத்தை திசைதிருப்பும். நன்றி.

பெயரில்லா சொன்னது…

//Hello fools, the opposition claimed
that the government was violating
the orders of SC and demanded action. They never claimed that
Bandh was successful. //

ஐயா பெரியவரே... இரண்டு விடயங்கள்

1. பந்த் நடத்தவேண்டுமா, கூடாதா.....
திமுக - நடத்த வேண்டும்
அதிமுக - நடத்த கூடாது.
இதில் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்த்த (நிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கான மருத்துவர்கள் ஊதியத்திற்காக ''தரகு வேலை'' பார்த்த) உச்சா நீதிமன்றம் "கூடாது"
என்று கூரியது
இது வேண்டுமானல் அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி.

ஆனால் பந்த் நடந்ததா, இல்லையா
பஸ் ஒடியதா இல்லையா
என்று பார்த்தால், அதிமுகவே எழுத்துபூர்வமாக பஸ் ஓடவில்லை என்று கூறியிருக்கிறார்களே...

யார் முகத்தில் ஐயா சேறு

பெயரில்லா சொன்னது…

//the opposition claimed
that the government was violating
the orders of SC and demanded action. //
அது தான் பந்த் கிடையாது என்று கூறிவிட்டார்களே... பின் என்னவாம்....

பெயரில்லா சொன்னது…

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்

உச்சா நீதிமன்றத்தில் அதிமுகவிற்கு வெற்றி

மக்கள் மன்றத்தில் திமுகவிற்கு வெற்றி என்று அதிமுகவே எழுத்துபூர்வமாக கூறிவிட்டார்களே.....

பெயரில்லா சொன்னது…

No bandh was announced on Sep 12 and nothing prevented the govts
from taking action against VHP.
I am not justifying what happened
on Sep 12. The affected parties
could have approached the court.
DPA announced bandh on October 1st
and hence the court was approached.
Had they announced that there would be peaceful protests without
calling for Bandh court would not
have intervened. Problem arises when the state instead of safeguarding peoples' right to
travel and do business, cancels
buses etc.
Mumbai High Court fined Rs 20 lakhs each on BJP, Shiva Sena for
affecting daily life by calling for
Bandh. The 1998 order by SC bans
bandh or hartal. So the court went
by it. Dont see this as a measure against DPA. See this as a measure against bandhs forced on the people.

பெயரில்லா சொன்னது…

பொதுமக்கள் வேறு,

பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் வேறா ?

Yes. The state is different from the people. State is for the people and not vice versa.state has no business to deny people their fundamental rights.
These are given by the Constitution to the people of India.Get some basic knowledge
about constitution and fundamental rights and courts.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நன்றி ஜமாலன் இந்த கேள்விகள் நிச்சயம் சிந்திக்க வைக்கும் சில எச்சில் இலை நக்கும் நாய்களாக ஆகி போன துரோகிகளை!

அதிகாரம் இன்னும் எங்கே தேங்கிக்கிடக்கிறது...என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறீர்கள்.

ஜமாலன் சொன்னது…

பாரி. அரசு மற்றம் அனானிகளின் பின்னோட்டத்திற்கு நன்றி.

அனானிக்கு..
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை அரசு காக்க வேண்டும். பந்த் என்பதும் ஒரு அடிப்படை உரிமைதான் இதனை உச்சநீதிமன்றம்கூட மறுத்ததில்லை. மக்கள் நலனை காக்காத அரசு மக்களால் பாடம் புகட்டப்பட்டிருப்பதுதான் வரலாறு.

பாரி. அரசுக்கு..

அதிகாரம் என்பது ஓரிடத்தில் குவியும்போதுதான் அரசு பாசிசமாக மாறுகிறது.. நீதித்துறை அரசை இப்போக்கிலிருந்து தடுப்பதற்கான ஒரு ஜனநாயக நிறுவனமாக செயல்பட வேண்டும். அது அப்படி செயல்படாது ஏனென்றால் அரசு என்பது நீதிமன்றம், காவலதுறை, இராணுவம் மற்றும் சிறைச்சாலைதான் என்கிறார் லெனின். அரசு அதிகாரம் என்பது இவை யார் கையில் அல்லது எந்த வர்க்கத்தின் கையில் இருக்கிறது என்பதை பொறத்துதான் அமைகிறது. ஆள்வது மன்மோகன்சிங்கா? வாஜ்பாயா? என்பதல்ல.

சக்திவேல் சொன்னது…

அற வழியில் போராடிய தமிழ் தலைமையின் முனைப்பினை தடை செய்திட, அவசர அவசரமாக, விடுமுறைநாளான போதிலும் நீதிபதிகள் வீட்டில் ஒன்றுகூடி தடைவிதித்தது எதேச்சாதிகாரம், சரி என்று உண்ணாவிரதம்ம் இருந்தாலும் அதுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து ஆட்சியை கலைத்துவிடுவேன் என்று மிரட்டுவது சர்வாதிகாரத்தின் உச்சம். இது இந்தியாவா என்று சந்தேகமாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கம்போல தமிழர்களை வஞ்சித்துவிட்டது. சர்வாதிகாரத்தின் போக்கு எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அதன் முடிவு ஒன்றுதான்.

பெயரில்லா சொன்னது…

No bandh was announced on Sep 12
இது பேர் தான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது.. அது எப்படி இப்படி கூசாமல் பொய் சொல்றிங்க

http://naknews.co.in/newsdet.aspx?9685
Normal life was thrown out of gear in Jammu and some other parts of the region on a nation-wide three-hour `Rasta Roko’ call given by RSS and VHP urging the government to `desists destroying Ram Setu’ (Adam’s Bridge)

//and nothing prevented the govts
from taking action against VHP.//
நத்தீங்... அது தான் உச்சா மன்றம் இருக்கே...

ஒரு வன்முறை கூட இல்லாமல் (ஒரு சில இடங்களில் சங் பரிவார்கள் நடத்திய தாக்குதல்கள் தவிர) நடந்த இந்த கடைஅடைப்பை குறித்து கவலைப்படும் ட்ராபிக் ராமசாமிகளும் அகர்வால்களும் செப்டம்பர் 12 என்ன செய்து கொண்டிருந்தார்கள்....

//The affected parties
could have approached the court.//

ஒ... அப்படின்னா VHP பந்த் நடத்தினா நீங்க (இப்ப கூச்சல் போடுறீங்களே) not affected... DMK பந்த் நடத்தினா நீங்க affected... ஹா ஹா ஹா

//Dont see this as a measure against DPA. See this as a measure against bandhs forced on the people.//
அது சரி உண்ணாவிரத்ததை கூட கண்டனம் தெரிக்கும் உச்சா மன்றம் தானே மேல் சாதி மருத்துவர்கள் (மண்ணிக்கவும் - சாதி வெறியர்களுக்கு) சம்பளம் அளிக்க உத்தரவு வழங்கியது....

அப்ப மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படவில்லையா

ஜமாலன் சொன்னது…

சக்திவேல் பின்னோட்டத்திற்கு நன்றி.

டி.அருள் எழிலன் சொன்னது…

நன்றி ஜமாலன் நல்ல பதிவு.....நானும் சேது கால்வாய் திட்டத்தை எதிர்க்கிறேன்.முழுக்க முழுக்க சூழலியல் காரணங்கள்...எனது வலைப்பூவில் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் இது பற்றி.....ஆனால் இப்போது இது திராவிடர் ஆரியர் அல்லது தமிழர் தமிழர் அல்லாதோர் பிரச்ச்னையாக மாற்றம் பெரும் தொனி ஏற்பட்டிருக்கிறது...இந்த தமிழரல்லாதோர் பார்ப்பனர் என்கிற வாதமெல்லாம் இந்து பாசிஸ்டுகளுக்கு ஆதாயமாக போய் முடியும் என்பதால்...சேது கால்வாய் பிரச்சனையை ஈகோ பிரச்ச்னையாக நான் இப்போது உணருகிறேன்.....

இது பற்றி மீண்டும் விரிவாக பேசுவோம்...

ஜமாலன் சொன்னது…

நன்றி அந்நியன்,

தங்களது விரிவான பதிவிற்க காத்திருக்கிறேன். தங்கள் பதிவை படித்தபின்.. என்து கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

K.R.அதியமான். 13230870032840655763 said

உங்களது இப் பின்னோட்டம் இப்பிரச்சனைக் குறித்த எல்லா விவாதங்களிலும் கட் அண்ட் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. எனது விவாதம் சேது சமுத்திரம் திட்டம் குறித்தது அல்ல. பந்த குறித்த ஜனநாயகம் பற்றியது. இருப்பினும்.. சேது சமுத்திரம் குறித்து இம்மாற்றுக் கருத்து பின்னாளில் படிப்பவர்களுக்கு உதவலாம் என்பதற்காக வெளியடப்பட்டுள்ளது.

நன்றி.

K.R.அதியமான் சொன்னது…

thanks Jamalan.

Bandth was a farce and no one really, sincerely participated. only the public were afraid of DMK cadres' violence. and as Bandhas were declared unconstituntional and banned some years ago by Supreme court, it applies to TN too. that's all.

a general strike by a particular section of public or group against a particular company organisation or institution is not illegal nor can be banned by courts.

but a genral bandth, where all are 'forced' or 'compelled' to participate is neither legal nor fair. Kerala and W.Bengal are paying a terrible price for their culture of frequent bandths as no industries are now being set up there due to various similar reasons. Keralites have to migrate all over the world for jobs as a result of their 'enlightenment' and awarness of their 'rights' (but not duties).

Pls see :
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp

and the following is my comment in Stalin's blog about violence by DMK cadres against BJP offices :

வன்முறையய் நியாப்படுத்துவது தவறு, ஆபத்தானது. யாரோ ஒரு மூடன் அயோதியில் கூறியதற்காக, இங்கு தி.மு.க தொண்டர்களின் வன்முறையய் பாரட்டுவது பாரப்ட்சமானது. இதே தி.மு.க தொண்டர்களின் வன்முறைதான் மதுரையில் தினகரன் அலுவலக தாக்குதலில் மூன்று அப்பாவிகள் எரித்து கொல்லப்பட்டதிற்கும், தா.கிருஷ்ணன் கொலைய்ன்டதிற்க்கும் காரணம் என்பதை மறக்க வேண்டாம். கொள்கையும் இல்லை, ஒரு புடலங்காயும் இல்லை...

இதே போல், அனைத்து கும்பல்களும் தங்களின் வன்முறைக்கு நியாயம் கற்பித்தால் ? ...
ஜாதி, மத, மொழி வெறியர்களின் வன்முறைகளுக்கும் ஒரு நியாயம் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

அமைதியான முறையில் தி.மு.கா வினர் தங்கள் எதிரிப்பை தெரிவித்திருக்கலாம்.

/////

//பி.ஜே.பிகாரர்கள். அவர்களுக்காக நீங்கள் ஏன் வரிந்துக்கட்டிக் கொண்டு வருகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?///

i do not support BJP or any other politcal party. all are the same corrupt, only labels and shell is different. how do do assume i support BJP, just because i oppose DMK violence against BJP offices ?

i was talking about justifying violence in any name. then what if those who attack tamilians justfiy their violence in Karnataka ? try to talk with such guys (like Vattal Nagaraj) and they will give you similar reasons for their violence and fasicism. same with VHP, Shiv Sena, Al Ume, etc. in the end it will end in the muscle power beating the weak and illuchavaayangal. fascisim..

thani manitha thuthi of DMK, ADMK is confused with ideology. all this anger should have been there when two innocent persons from TN (or who-ever it may be) were burnt alive recently in Bangalaore, when their TNSRTC bus was torched. no big reaction from TN or politicicans. human life has become cheap in India. that is lives of common people, not of politicians...

Saturday, September 29, 2007

சீனு சொன்னது…

பந்த் என்பது பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்படவேண்டியது. பொதுமக்கள் எங்கள் கருத்துக்கு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் பாருங்கள் என்று உணர்த்துவதற்கே பந்த்களும் அவற்றின் வெற்றியும். ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? ஆளுங்கட்சி பந்த் அறிவித்தால் 'கட்டாயம்' கலந்து கொள்ள வேண்டும் என்பது விதி. இல்லையென்றால் கல் விழும். இதில் ஆளுங்கட்சியினர் உடன்பிறப்புகளா / ர.ர.க்களா என்பதில் பேதமில்லை. ஒரு வகையில் பந்த் தமிழக மக்களிடையே திராவிட கட்சிகளால் நிர்பந்தப்படுத்தப்படுகின்றன என்பதே உண்மை. ஆளுங்கட்சி நடத்தும் பந்த்ல் உங்களுக்கு இஷ்டமில்லை என்று கடையை திறந்து வைத்து பாருங்கள்? தைரியம் இருக்கிறதா? ம்ஹூம்...எதற்கு வம்பு என்று டி.வி.யில் சிம்பு / பப்லு சண்டையை பார்க்கலாம்.

//356-என்பதுதான் சரி. நன்றி. இச்சட்டம் மாநில உரிமைகளுக்கும் மக்கள் தீர்ப்பபிற்கும் எதிரானது என்பதுதான் எமது நிலைபாடு.//

இந்தியாவில் 356-ஐ அதிக அளவில் பயன்படுத்தியதே காங்கிரஸ் அரசாங்கம் தான் (70+). இந்தியாவில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்களும் அவர்களே. ஆனால் காங்கிரஸ் அல்லாத அரசுகள் 356-ஐ அதிகமாக பயன்படுத்தியது இல்லை. ஆனால், மோடி அரசை இன்னும் காங்கிரஸ் அரசு 'கை' வைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ஜமாலன் சொன்னது…

சீனு said...

வாங்க நன்றி..

//இந்தியாவில் 356-ஐ அதிக அளவில் பயன்படுத்தியதே காங்கிரஸ் அரசாங்கம் தான் (70+). இந்தியாவில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்களும் அவர்களே. ஆனால் காங்கிரஸ் அல்லாத அரசுகள் 356-ஐ அதிகமாக பயன்படுத்தியது இல்லை. ஆனால், மோடி அரசை இன்னும் காங்கிரஸ் அரசு 'கை' வைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?//

முடிந்த விவாதங்கள் என்றாலும்...
1. பந்த எப்படி நடத்தப்படுகிறது என்பதில் கருத்து முரணபாடுகள் இருக்கலாம். பந்த்-கூட எனறு போடப்படும் தடைகள் முன்னுதாரணமாக மாறிவிடக்கூடயாது என்பதுதான். பொதுவாக மக்களை மிரட்டுவதில் எந்த கட்சிகளும் சளைத்தது இல்லை. ஆளும் கட்சிகள் எதிர் கட்சசிகள் எல்லாம் ரவுடியிசம் கொணடுதான் ஆளுகின்றன.

2. 356- காங்கிரஸ் 70 சதவீதம் பயன்படுத்தியிருப்பதற்கு காரணம் நாட்டை 70-சதவீத காலம் ஆண்டவர்கள் அவர்கள்தான் அதிகபட்சம் 10-ஆண்டுகள் பிற கட்சிகள் ஆண்டிருக்கும்.

3. மோடிக்கு எதிராக 356-ஐ பயன்படுத்தினாலும் ஜனநாயக விரோதமானதுதான். மக்களே திரும்பப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம் இல்லாத நிலையில்... மாநில அரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை. இது.

4. இப்பிரச்சனைகளை சமபந்தப்பட்டவர்களே மறந்துவிட்டார்கள் சீனு நாமம் எதாவது மற்றதை பார்க்கலாமே.

5. ஸ்டீபன் ஹாவ்கிங் பற்றி பேசலாம்.. அது இதைவிடவும் பயனுள்ளதாக இருக்கும்..

தங்கள் விவாதத்திற்கு நன்றி.

K.R.அதியமான் சொன்னது…

Article 356 can never be invoked again since 1994 due to the SC judgement on S.R.Bommai govt. without 2/3 rd majority aproval of parliament, and president's aprroval, it can not be invoked. also the dismissised govt can appeal with SC if the reasons are deemed malafide and the SC can re-install the dismissied govt. until the case is disposed, the legislature can only be kept in suspended animation. hence the old days of tyranny of centre are over.
all this talk about 356 is mere talk..

Reg Stefan Hawking : His book about baby universes in wides quoted by Sujatha. i have read or tried to read) his 'a breif hsitory of time'.

i recommend sujatha's excellent booklet 'oru vingaga paarvayilirinthu' (1984) based on 'tao of physics' by fritjof capra (1977) ; it is about the parallels between eastern mystesism and particle physics. avery important book. Sujatha's booklet is now complied by Uyimmai in the collected work named "kadavul" ; this booklet is added as a final chapter. pls try.

here is my old mail to sujatha :

Dear Sir,

The booklet "Oru Vingana Parvayilirundhu" (1984) is
important and lucidly written. I consider it as one of your best works.

Only one matter has not been mentioned. Dual nature of particles (uncertainity principle) which tells about wave/matter state or nature of particles ;
can be co-related to our Siva Sakthi (and ardhanareeshwarar) ; matter becomes energy and vice
versa ; sakthi (energy) becomes sivam (matter) ; and sivasakthi is the nature of universe. (..movie :
Thiruvilayadal and the famous dual between sivam and sakthi)

All things and actions in this universe are co-related in distance and time. Saravam Brahma mayam. For e.g a
wave in a beach is the net result of all forces and
parameters of ocean and land ,wind and time.

Astrological perspective too can be fit into this view.
The postions and movements of planets affect and
control life events.

Thanks & regards
Athiyaman

P.S : on a ligther vein
Samuel Johnson about fornication act :
"....the postion being ridiculous and
pleasure momentary..."

பெயரில்லா சொன்னது…

Idea excellent, it agree with you.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.