பின்நவீனத்தவ கதைகூறல் முறைகளில் ஒன்றான வரலாற்றை அழித்தெழுதுதல் (palimpsest) என்கிற பிரதியாக்க யுத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஹே ராம். வரலாற்றை அழித்தெழுதுதல் என்பது அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கான வரலாற்றை அழித்து அதன் உள்அமைப்பிற்குள் பதுக்கப்பட்டிருக்கும் வரலாற்றை எடுத்தெழுதுவது. தமிழில் இத்தன்மையை பயன்படுத்தி எழதப்பட்ட நாவல் தமிழவனின்"சரித்திரத்தில் படிந்த நிழல்கள்". அந்நாவல் குறித்து ஏற்கனவே காலக்குறியில் என்னால் எழுதப்பட்டுள்ளஒரு விமாசனத்தில் வரலாறு பற்றி கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.
"வரலாறு என்பது ஒவ்வொரு இனமும், அதற்கான உரைகூறும் முறைகளால், நினைவுகளில் இருந்து அழித்து எழுதப்படும் ஒரு கதையாடல். அழித்தெழுதப்பட்ட பிரதியி்ல் அழிக்கப்பட்டவற்றின் சுவடுகள் பதிவுற்று 'அரசபுரசலாய்' வெளித் தெரிவதும், அதனை மேல் உளள பிரதியை ஊடுறுவி வாசித்து, வெளிக்கொணர்வதன் மூலம், அக்கால வரலாற்றுக் கதையாடலில் உள் ஓடும் நினைவுகளின் சுவடுகளை கண்டடையலாம். அதே நேரத்தில் சமகால கதையாடலின் அர்த்தமாகும் அரசியலையும் புரிந்து கொள்ளலாம். இதுவே, பிரதிக்குள் ஒடக்கப்பட்ட வலராற்றுத்தன்னிலைகளை வெளியேற்றும் செயலாகும்." (ரப்பர்கள், பென்சிலால் மாஜிக் சிலேட்டில் வரையப்படும் சரித்திரத்தின் நிழல்கள் - காலக்குறி)
இக்கருத்தாக்கத்தை "ஹே ராம்" படம் மூலம் விளக்க முனைகிறது இப்பதிவு. பின்நவீனத்தவ சினிமாவின் பண்புகளான 1) ஆசிரிய முக்கியத்தவமின்மை (அதாவது இயக்குநர் பார்வையை முதனமைப்படுத்தாமை) 2. காட்சிகளின் பண்மைத்தவம் 3) கடந்த காலம் மற்றும் நிகழ்கால எல்லைகளை அழித்தல் 4) மீயதார்த்த காட்சிகள் 5) நிகழமுடியாதவற்றை நிகழ்த்துதல் 6) பழமை பற்றிய ஏக்கம் 7) மையமற்ற தொடர் காட்சிகள் மூலம் வெவ்வேறு உண்ர்வுநிலைகளை உருவாக்குதல் என்பதாக பல குணங்களைக் கொண்ட ஒரு பின்நவீனத்தவ படமாக இருக்கிறது. காந்தியின் கொலை மற்றும் அதன் அரசியலை படமாக்க முனைந்து இப்படம் பற்றி அப்படம் வெளிவந்தபோது நண்பர் ஒருவருக்கு எழுதப்பட்ட கடிதம் இது. இதில் காந்தி கொலைப் பற்றிய அரசியல் சார்ந்த சொல்லாடல்கள் அலசப்படுவதால் அதவாது அரசியல்அடிப்டையான வாசிப்பாக இங்கு பதியப்படுகிறது.
'ஹே ராம்'. நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல படம் மட்டும் அல்ல, நிறைய யோசிக்க வைத்த முற்றிலும் புதிய தரத்தில், கோணத்தில் சினிமாவை அனுகும் படம். அதில் கவர்ந்த அம்சம் வரலாறு பற்றிய பார்வைதான். அப்படம் பலருக்கு பிடிக்கவில்லை, சிலருக்கு புரியவில்லை. தமிழ்நாட்டு சினிமா ரசனை வழக்கம்போல், நிராகரித்துவிட்டு, பார்க்கவே முடியாத மலினமான செண்டிமெண்ட்களைக் கொண்ட 'அன்பு சகோதார்கள்' படத்தை 30-ஆண்டுகளுக்கு பிறகு எடுத்துள்ள விக்ரமனின் 'வானத்தைப்போல' ஓடுகிறது. ஹே ராம் ஓடாததில் வருத்தமில்லை, அப்படம் ஓடவும், ஓடாது, மீறி ஓடினால், தமழ்நாட்டிற்கு 'சனி'(?) பிடித்தது போலத்தான். ஆனால். 'வானத்தைப்போல' ஓடுவது அபாயத்தின் அறிகுறிதான். அல்லது கடலில் சிக்கிய கப்பலாக தத்தளிப்பு நீடிக்கிறது போலும்.
புரியவில்லை என்பதற்கும், பிடிக்கவில்லை என்பதற்கும் உள்ள வேறுபாடு தேரியாத சினிமா ரசனையாளர்கள். போதுவாக இப்படம் 'இஸ்லாமிய எதிர்ப்பு' படம் போன்று சித்தரிக்கப் படுகிறது. கல்கத்ததாவிலும், கேரளாவிலும் மார்க்சிய அரசுகள் பாராட்டி உள்ளன. காங்கிரஸ் கல்கத்தாவில் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. தமிழ் சூழலில் புறக்கணிப்பே ஒரு பேரிய போராட்டம்தான். ஆனால், கமலால் ஆணந்த விகடன் தலையங்கத்திற்கு மறுப்பாக எழுதிய கடிதத்தில் ஒரு விஷயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அது, 'இப்படம் வெளியானபிறகு, இதைப் பார்க்காமலே பேசுபவர்கள் தங்கள் பேச்சை நினைத்து உருவாக்கும் உணர்வலைகளை பார்த்து சிரிப்பதுதான் பாக்கி' என்று.
இப்படம் குறித்து நாதுராம் கோட்ஷேவின் சகோதரர் கோபால் கோட்ஷே-வின் கருத்துக்கள் இரண்டுவார ஜீனியர் விகடனில் வந்தது. அதில் கல்கத்தா சம்பவம் கோஞ்சம் மிகை படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். சாகேத ராம் டேல்லியில் தங்கியிருந்ததாக காட்டப்படும் விடுதி மற்றும் அந்த விடுதியின் அறை எண் உட்பட, சரியானவை என்றும், அந்த அறையில்தான் நாதுராம் கோட்ஷே, கோபால் கோட்ஷே மற்றும் ஒருவர் (பெயர் எனக்கு நினைவில் இல்லை) மூவரும் காந்தியை கோல்ல திட்டமிட்டதாகவும், அத்திட்டப்படி முதல் நாளே காந்தியை கோல்லும் திட்டத்தின்படி, காந்தியை பக்கத்தில் இருந்த கட்டிடம் ஒன்றின் சன்னல் (படத்தில் கமல் ஏறி குறிபார்க்கும் இடம்) வழியாக கொல்வதற்காக கோட்ஷே குறிபார்த்ததாகவும், காந்தி சுடப்படும் தருணத்தில் பிரச்சார சபைக்கு வேளியே குண்டை வேடிக்கச் செய்து மக்கள் கவனத்தை திசை திருப்புவதாகவும் திட்டமாம். அந்நேரத்தில் கட்டில் சரிந்ததால் சுட முடியாமல்போக திட்டமிட்டபடி குண்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. (படத்தில் குண்டு வெடிப்பும், கோட்ஷே நிகழ்வு ஒரு வசனமாக வருகிறது. 'இதற்கு முன்பு ஒருவர் வந்து 10ரூ கோடுத்தார்' என்பதாக.) இக்காட்சிகள் எல்லாம் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் கோபால் கோட்ஷே. மறுதினம்தான், நாதுராம் கோட்ஷேவால் காந்தி சுடப்படுகிறார். ஆனால், காந்தி கொல்லப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக சொல்லவில்லை என்கிறார் கோட்ஷே. காந்தியின் இஸ்லாமிய சார்பு நிலை படத்தில் சொல்லப்பட்டிருப்பதாக அவர் நோக்கிற்கு கதையை திருப்ப முயல்கிறார். குறிபார்த்தலுக்கும், சுடப்படுவதற்குமான இடைபட்ட நேரத்தில் படமானது ஒரு பேரிய பரப்பிற்குள், உள்நாட்டு கலகத்தைப்போன்று சண்டைக்காட்சி, விறுவிறுப்பு, விவாதம் என விரிந்து செல்கிறது.
காந்திக்கும், கோட்ஷேவிற்கும் இடையிலான போராட்டம் 'இந்துத்துவத்தின்' இரண்டு தன்னமைவுகளுக்கு (Ego Vs Alter-ego) இடையிலான போராட்டம் என சித்தரிப்பதாகப் படுகிறது. இருவருமே 'இந்து ராஜ்யம்' பற்றிய கனவுகளை கொண்டவர்கள். இதில் பண்புரீதியான வேறுபாடுகள் இருக்கலாம், அவ்வேறுபாடு குறிப்பாக இந்து உளவியலின் பெண்-ஆண் வேறுபாட்டை அடிப்படையாக கொண்டது. அவ்வகையில் காந்தி இந்து பெண் உளவியல் தளத்தில் செயல்பட்டவர் எனலாம். இருவரும் 'சனாதன தர்மம்' சரியான தர்மம் என்றவர்கள். பிராமண ஆதிக்கம் பற்றிய கேள்விகள் இருவருக்குமே இல்லை. காந்தி வைசிய வர்ணம், கோட்ஷே பிராமண வர்ணம் என்றபோதும். இருவரும் வைதீகமே இந்திய ஆன்மபலம் என்று நம்பியவர்கள். இருவருமே இந்திய புராணிக குறியீடுகளில் (இந்திய ஆன்மாவாக 'ராமனை' காந்தியும், இந்தியாவை 'தேவி'யாக அல்லது 'தாயாக' கோட்ஷேவும் குறிநிலைப்படுத்திக் கொண்டவர்கள்) நம்பிக்கை கோண்டவர்கள். இருவரும் விமர்சனமற்று 'இந்து' அடையாளத்தை நம்பி ஏற்றவர்கள். ஆக, காந்தி தன்னை ஒரு 'collective hindu ego' ஆக உணர்ந்தார் என்றால், கோட்ஷே 'collective hindu alter-ego' ஆக உணர்ந்தான் எனலாம். வரலாற்றுரீதியாக காந்தி என்கிற 'தானிற்கு' ஒரு மாற்றுதான் கோட்ஷே. வரலாறு சரியாக இந்த மாற்றீடைச் (replace) செய்துவிட்டது கோட்ஷே வழியாக அல்லது அவனது அரசியல் வழியாக. இன்று வாஜ்பேயை பீஷ்ம பிதாமகராக வர்ணிப்பது ;'நவீன புராண காலகட்டம்' எனத்தான் பார்க்க முடிகிறது. காந்தியை 'இந்துத்துவா' சக்திகள் கையில் எடுத்துக் கொண்டிருப்பதும்கூட ஒரு வரலாற்று அவலம்தான்.
காந்தி விரும்பியிருக்காவிட்டாலும்கூட, அவர் ஒரு 'இந்துத்துவா' சக்தியாகத்தான் வரலாற்றில் கட்டமைக்கப்பட்டார். காந்தி விரும்பிய இந்தியன் சரியாகச் சோன்னால் விவேகாநந்தர் விரும்பிய இந்து ஆன்மாவும் (மூளையும்), முஸ்லிம் உடலும் (வீரமும்) கொண்ட ஒரு 'தேசிய இந்தியன்' தான் காந்தி விரும்பிய இந்தியன். இந்த இரண்டு இந்தியனும் கதையாடல் வழியாக இரண்டு பாத்திரங்களாக்கப்பட்டு, எதிர் மறையாக 'இந்து உடலை'க் கோண்டதாக அதாவது சாகதே ராமன் உடல், அஜ்மல்கான் ஆண்மா என்பதாக கதை நகர்கிறது. சாகதே ராம் தனது வீர வாள், குதிரை, துப்பாக்கி பயிற்சியின் மூலம் இதனை நிரூபிக்கிறான். அஜ்மல்கான் தான் சார்ந்த பெண்களை காப்பாற்ற என நிராயுதபாணியாக நிற்கிறான். சாகும் தருவாயிலும்கூட, தனது நண்பன் 'ராம்' எனக் கூறி அவனை காட்டிக் கொடுக்காமல் சாகிறான். தியாகம் புரிவதை, அன்பை தாத்பர்யமாகக் கொண்ட ஒரு இந்திய ஆண்மாவாக இருக்கிறான்.
இந்துக்கள் என்கிற பிரிவிற்குள் ஒரு உட்செறிக்கப்பட்ட 'தன்னிலையாக' முஸ்லிம்களை கட்டமைப்பதே காந்தியின் நோக்கம். அதில் காந்தி முஸ்லிம்கள் உளப்பூர்வமாக 'இந்து' மத நம்பிக்கைகளை தேர்வு கொள்ளும்படி செய்ய விழைந்தார் எனலாம். இதனை முஸ்லிம்கள் தங்கள் கடவுளாக இராமனை ஏற்றுக் கோள்ள வேண்டும் என்று அறிவித்த அசோக் சிங்காலுடன் இணைத்து பார்க்க முடியாது என்ற போதிலும். கோட்ஷே இதனை வன்முறையில் சாதிக்க முயன்றான். நவீன இந்தியாவிற்கு, அதாவது நேரு விரும்பியதைப்போல மேற்கத்தியமயமான இந்தியாவுக்கு காந்தி ஒரு தடைக்கல் என கோட்ஷே பார்த்தான், அதனால் காந்தி இல்லாத இந்தியாவே உலக தரத்தில் முன்னேறக்கூடியதாக இருக்கும் என்றும் பார்த்தான் என்கிறார் அஷிஸ் நந்தி தனது ஆய்வில். அதன் ஒரு அதிக பட்ச விளைவுதான் 'பொக்ரான் 2' மற்றும் இன்றைய உலகமயமாக்கலுக்கு முகம் கொடுத்து, உலக சவால்களை சமாளிக்கவென இந்தியாவை தயார் செய்ய அதன் அரசியல் சட்ட அமைப்பை திருத்தும் முயற்சி எனலாம். ஆக, கோட்ஷே வெற்றிக்கொண்ட ஒரு சமூகத்திற்குள்தான், இப்படம் காந்தி கொலையை கதையாடலாக முன்வைக்க முனைகிறது. கதையின் நிகழ்த்துதலின் அரசியல் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறது.
படத்தில் சாகதே ராம் கோட்ஷேவாக இயங்கி காந்தியாக மாறுகிறான். முதலில் காட்டப்படும் தாத்தா காந்தியின் உருவத் தோற்றத்தை நினைவூட்டும்படி இருப்பது இதனால்தான் போலும். ஆக, படம் உளவியல் தளத்தில், காந்தயின் மீது மதிப்புகொண்ட ஒரு ஜனநாயக உணர்வுள்ள இந்துவின், உள்மன போராட்டமாக தனது தளத்தை விரிக்கிறது. கோட்ஷேவைவிட துல்லியமாக காந்தியை வேறுயாராலும் புரிந்து கொண்டிருக்க முடியாது என்பது கதையாடலின் மையமான விஷயமாக இருப்பதுபோல் படுகிறது. அஜ்மலாக வரும் ஷாருக் கானின் வசனங்கள் படத்தில் மிகவும் கவனப்படுத்த வேண்டிய கூடுதல் முக்கியத்துவமுடையவை என நினைக்கிறேன். குறிப்பாக 'குழந்தைகள் விளையாட பொம்மை வேனும்னு நினச்ச கலாச்சாரம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாமி வேனும்னு நினச்ச கலாச்சாரம் இல்ல' என்பது. 'இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் நாம் ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொள்வோம்' என்கிறான். மன்னித்துக் கொள்வதன் மூலம் வரலாற்றை முற்றாக நிராகரித்துவிட்டு, இக்கணம் முதல் பரஸ்பர அன்பாக உறவை தொடர துடிக்கிறான் அஜ்மல். இது இன்றைய இஸ்லாமியர்களின் உணர்வை உணர்த்துவதாக உள்ளது. அடிப்படையில் படம் நட்பெனும் சகோதரத்துவத்தின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது.
படம் சிந்துவெளி அகழ்வாய்விலிருந்து துவக்குவது, வரலாறு பற்றிய பிரக்ஞையின் துல்லியத்தையும், இந்திய வரலாற்றில் வந்தேறிகளான முகலாயர்கள், ஆரியர்கள், வெள்ளையர்கள் அவர்களது மதம், பண்பாடு அனைத்திற்கும் முந்தைய இந்தியா பற்றிய கனவுடன் துவங்குவதாக தோன்றுகிறது. யார் முதலில் வந்தவர்கள் என்பதற்கான விடையை அறிவதன் அல்லது அறிவிப்பதன் மூலம், வரலாறும், அதனை கண்டடையும் விஞ்ஞானமும் வன்முறையைத்தான் விதைக்கும் என்கிறது. நாடு என்ற ஒன்று உருவாகும் வரையில் எல்லோரும் நாடோடிகள்தான். இதில் எந்த நாடோடி முன்னே வந்தவன் என்பதன் மூலம் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை ஒழிக்கவும், துரத்தவும் முயலும் நாம்-பிறர் (Same X Others) என்கிற முரணே வரலாற்றின் சக்கரம் எனலாம். இதுதான் இந்து-முஸ்லிம் பிரச்சனையிலும் மையமதானதாக இருக்கிறது. இதில் ஒருவரை பழிப்பதும்-அவமதித்துக் கொள்வதும் 'வரலாற்று நேர்மையை' காப்பாற்றுமே ஒழிய, மனித தன்மையை இழந்து விடுகிறது. இத்தன்மை இழப்புதான் சாகேத ராமின் வாழ்வை கேள்விக்குரியதாக மாற்றி விடுகிறது. அதனால்தான் அஜ்மலை எதிர்கொள்ளும்போது அவனுக்கு அவர்கள் எல்லாம் அந்நியர்கள் என்பது நினைவிற்கு வருகிறது. இந்நினைவிற்கு அபயங்கர் அவனுக்கு அளிக்கும் அட்டையிடப்பட்ட (தடைசெய்யப்பட்டதின் குறியீடு போலும், அதனால்தான் அவனது மனைவி விமானத்தில் 'இது கெட்ட பேச்சு புத்தகமா? என் அட்டை போட்டு மறைச்சிறிக்கீங்க?' என்றும் 'காந்தி எதையும் மறைக்ககூடாது' என்று கூறுகிறார் என்கிறாள் உடனே ராம் கூறுகிறான் 'ஜாக்கேட்டை போட்டு நீயேன் மறைக்கிறாய்' என்று) புத்தகம் (சாவர்க்கரின் 'Bunch of Thoughts' –ஐ உணர்த்துவதாக இருக்கலாம்) காரணமாக இருக்கலாம்.
படத்தில் நினைவில் நிற்ககூடிய ஒரு பாத்திரம் சிறி.ராம் அபயங்கர். இவன் ஒரு கட்டத்தில் சாகேத ராமிற்குள் நுழைந்து விடுகிறான், அவன் தரும் துப்பாக்கி வழியாக. குறிப்பாக, கல்கத்தாவில் 'இதற்கெல்லாம் காரணம் மிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. சின்ன பயிரா இருந்த கிலாபத் இயக்கம், அது, இதுன்னு தண்ணி ஊற்றி மரமா வளர்த்துட்டாரு' என்று சாகேத ராமை அரசியல் படுத்த முனையும்போது சொல்லும் அவனின் காந்தி பெயர் உச்சரிப்பு, அதே விசை, வேகம் ஸ்டைலுடன் சாகேத ராமால் அஜ்மல் கானிடம் உச்சரிக்கப்படும்போது, இந்த கூடுபாய்ந்துவிட்ட அபயங்கரின் ஆவி கண்முன் வருகிறது.
படத்தில் துப்பாக்கி வகிக்கும் நிலை பற்றிய சித்தரிப்பு, அசத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தனது புதிய மனைவியை சாகேத ராம் படுக்கையில் கிடக்கும் துப்பாக்கியாக உறவு கொள்வது என்பது, இந்தவகை மதவேறி அரசியலுக்குள் உள்ளான உடல்களின், இயந்திர கட்டமைப்பை, பாலியலின் ராணுவ மிடுக்கையும், அதன் வெறிச்செயல்களையும் மிகவும் நுனுக்கமாக சொல்லி விடுகிறது. இந்த ஒரு காட்சியில் மொத்த படத்தின் கதையாடலையும், சாகேத ராம் என்பவனின் உடல் சார்ந்த வாழ்வின் பொய்மையையும் போட்டுடைத்து விடுகிறது படம். மதவேறி ஒருவனது அடிப்படையான இருத்தலையும் அவனது வாழ்தலின் முக்கியத்துவமான பாலிண்பத்தையும்கூட சாகடித்து விடுகிறது. அல்லது அதன் நுட்பங்களை வெறிச் செயல்களாக கட்டமைக்கிறது எனலாம். இதன் ஒரு விளைவுதான மதக்கலவரங்களில் பிற மதப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது என்பது ஒரு அவசிய நிகழ்வாக இருக்கிறது. நிலமும் பெண் உடலும் மதப்பிரதிகள் துவங்கி இலக்கியப்பிரதிகள் வரை ஒரே குறியீட்டு மொழியில்தான் கட்டமைக்ப்பட்டிருக்கிறது. பெண் உடல் வெற்றிக் கொள்ளப்பட வேண்டிய களம் (site) என்பதுதான் அது.
இந்த காட்சிக்கு சற்றுமுன்தான் மனைவியின் அன்பு கட்டளையை மீறி சாகேத ராமால், பம்பாய் விஜயதஷமியில் 'பங்கா' எனப்படும் ஒருவகை 'கள்' (மெட்ராஸில் சுண்டிச்சோறு என்பதைப்போல) சடங்காக அடிக்கப்படும். அப்படி அவன் அடிக்க காரணம், அவனுக்குள் வரும் கல்கத்தாவில் சுட்டு வீழ்த்திய அப்பாவியான ஒரு முஸ்லிம் கிழவனும் அவனது கண் தெரியாத பேத்தியின் பிம்பமும். அச்சிறுமி கண் தெரியாதவளாக இருப்பதும், அவள் நடந்து கொண்டே துணை தேடிவரும் காட்சியும், அதன் பிண்ணனி இசையும் படத்தில் சாகேத ராமின் உள்மனப் போராட்டத்திற்கு ஒரு அதீத அழுத்தம் தருகிறது. இக்காட்சி ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாகேத ராமை அவனது லட்சியத்திலிருந்து அல்லது வெறியிலிருந்து கீழிறக்குவதாக உள்ளது. அப்பிம்பத்தை கண்டு அவன் பதறுகிறான். இப்பதற்றம் அவனது லட்சியத்தை சாகடித்துவிடும் பயம், அதிலிருந்து தப்பி ஒடும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
அதேபோல் முதலிரவில் அவன் புது மணைவி கரப்பான் பூச்சிக்கு அறுவறுத்து கத்துவதை, அவள் கத்தினாளா? இல்லை அவனது முதல் மணைவி கொலை செய்யப்பட்ட சப்த பிரமையா? என காட்சியே மங்கலாக நழுவிச் செல்வதாக எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் அவனுக்குள் வரும் பிம்பம், மையத்தில் ஒரு பெண் உடலும் அதைச் சுற்றி முஸ்லிம்கள் அமர்ந்திருப்பதுமான, (இது கோட்ஷேவிற்கு அடிக்கடி கனவாக அல்லது உருவேளித் தோற்றமாக வரும் என்று அவரைப்பற்றிய ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது), அவனது தாயை இஸ்லாமியர்கள் புணர்வதுபோன்ற காட்சியுடன் ஒப்பிடும் வண்ணம் படமாக்கப்படடிருப்பது, படத்தில் உள்ளார்ந்து செல்லும் பிரக்ஞையின் துல்லியத்தை காட்டுகிறது.
கல்கத்தாவில் அபயங்கர் சாகேத ராமிடம் 'இன்னிக்கு நல்ல வேட்டயா?' என்று கூறும்போது. சாகேத ராம் தனது கொலைக்கு எந்த நியாயமும் இல்லை என்பதை சொல்லும் இடத்தில், அவனை தனியே அழைத்துபோய், கொலை வெறித்தாக்குதல்களை போராட்டமாக நியாயப்படுத்தும்போது, அருகே ஒரு யாணை கட்டப்பட்டிருப்பதும், அதே யாணையுடன் மண்னார்குடி கோவில் யாணை ஒன்றுடன் ஒன்று மேற்போருத்தப்படுவதும், அதன் பின்னனியாக அங்குசம், யாணை உறவை (அப்படித்தான் இருக்கும் அந்த சுலோகத்தின் அர்த்தம் என நினைக்கிறேன்) பற்றிய சுலோகம் பாடப்படுவதும். காட்சியை பற்றி வேறு சிந்தனையை தூண்ட முயல்கிறது. ஒருவேளை மத உணர்வை யாணையாக குறிநிலைப் படுத்துகிறதா? அல்லது யாணை இரு நினைவுகளை ஒருங்கிணைக்கிறதா? யாணைக்கு ஏற்படும் வெறி 'மதம்' எனப்படுவதால் வந்த சப்த ஒருங்கிணைப்பா? தெரியவில்லை.
வேட்டையாடுவது பற்றி படத்தில் வரும் ஒரு உரையாடல். 'மிருகங்களெல்லாம் நம் பாதுகாப்பில் இருப்பவை அவற்றை கொல்வது பாபமில்லையா? ஆட்டை பாதுகாக்கிற ஓநாயே ஆட்டை கொல்ல வர்ரது நியாயமா?' என்கிறான் ராம். இதற்கு அபயங்கர் தரும் பதில், 'ஓநாயோட பார்வையிலிருந்த பார்த்த, அந்த நியாயம் புரியும்'. இந்த ஓநாய் Vs ஆடு என்பது இந்து Vs முஸ்லிம் என்பதாக வாசிக்கப்படும்போது படம் எதை சார்கிறது என்பதும், படம் காந்தி கொலையின் அரசியல் காரணங்களைவிட அதன் வேட்டைத் தன்மையின்மீது கொண்ட வேட்கையையும் சொல்வதாகிறது. பாதுகாக்க வேண்டியவர்களே பலி தருபவர்களாக மாறுவதை சொல்கிறதா? அல்லது பலியிடுவதற்கு அவனளவில் நியாயம் இருப்பதை அதன் தர்க்க எல்லைக்கு போய் பார்க்க சோல்கிறதா?
இன்னும் பதில் காண வேண்டிய கேள்விகள் 1. தனது மணைவி கொலைக்கு பலிவாங்க விரும்பிய சாகேத ராம், மீண்டும் திருமணம் செய்து கொண்டதும், அப்பெண்ணிடம் தனது வாரிசை உருவாக்க விட்டதும் ஏன்? 2. சாகதே ராமின் லட்சியம் காந்தியை கொல்வதா? அல்லது காந்தியை கொல்வதற்கான அரசியலின் அடையாளத்தை பெற முயல்வதா? 3. அரசியல் என்பது தனிமனித தன்னிலை உருவாக்கத்தின் விளைவா? அல்லது சமூக யதார்த்தத்தின் விளைவா? 4. சாகேத ராம் ஏன் வைணவனாக படைக்கப்பட்டுள்ளான்? 5. சாகேத ராம் காசியில் கங்கையில் தனது முடியை அறுத்து தனது குடும்ப வாழ்வை துறப்பதன் மூலம், தனது வைணவ அடையாளத்தை விட முயல்கிறானா? அல்லது பிரம்மச்சரியத்தை மேற்கோள்ள முயல்கிறானா? அச்சடங்கின் அர்த்தம் என்ன? இப்படி...
படத்தில் என்னை கவர்ந்த விஷயம், பொதுவாக நாவல்கள்தான் சினிமாவாக எடுக்கப்படும். இப்படத்தில் சினிமா நாவலைப்போல எடுக்கப்பட்டுள்ளது. பின்நவீனத்தவம் கூறும் மொழி போன்ற வாசிப்பை இது சாத்தியப்படுத்துகிறது. படத்தில் கதையாடல் பல இடைவெளிகளாக அத்தியாயங்களைப்போல சிதைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோரு இடைவெளிக்கும் பிறகும் கமல் வவ்வேறு கெட்டப்பில் வருவது, ஒரே நபரா? பல நபரா? என்கிற குழப்பத்தை தருகிறது. நான் இப்படத்தை இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். ஒரு வரலாற்று கதையாடலானது Action Thriller-ஐப்போல வாசிக்கப்படுகிறது. வாசிப்பாளன், தனது வாசிப்பினூடாக தானே கதைக்குள் நுழைந்து பாத்திரமாக மாறுகிறான். அப்படி மாறும்போது, தனது சூழலுக்குள் அந்த கதையை தன்னை மையமாக வைத்து எழுதிப் பார்க்கிறான் ஒரு நாவலாக. அந்த நாவல்தான் 'ஹே ராம்'.
காந்தி கோலை என்பது, தாங்கள் கற்பித்துக் கொண்ட ஒரு உன்னத இலட்சியத்தை அடைய பலியிடப்படும் சடங்குபோல நிகழ்த்தப்படுகிறது. இதனை வாசிக்கும் ஒரு நவீன தலைமுறையைச் சேர்ந்தவன், தன்னை அடையாளப்படுத்தி, தனது கதையாடலாக இதனை மாற்றி எழுதுகிறான். இதற்கான குறிப்புதான் படத்தில் நடக்கும் முதல் விவாதம். கிட்டத்தட்ட அவன் எழுத விரும்பிய நாவலின் முன்னுரைதான் அது. அதாவது, 'தாத்தா நிறைய கதை சொல்வார். ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான் என்று ஆரம்பிக்கமாட்டார். நான் இருந்த ஊரில் ஒரு ராஜா இருந்தான் என்பார். அவர் சொல்லும் கதைகளில் எது நிஜம் எது புனைவு என்று தெரியாது.' என்கிறான். தாத்தாவின் கதையை நமக்கு சொல்லும் அவரது நாவல் எழுத்தாளனான பேரன். தான் தனது தாத்தா சொன்ன கதையை வைத்து ஒரு நாவல் எழுதப்போவதாக கூறுகிறான். அக்கதை Biography-ம் Fiction-ம் கலந்த ஒன்று, ஒரு Thirller மாதிரி என்கிறான். கதை துவங்குவதே டிசம்பர்-6, 1999-ல். பாபர் மசூதி இடிப்பின் நினைவு நாளில் நிலவும் பதற்றத்தில். அந்த தாத்தாவை காப்பாற்றும் ஒரு பாதுகாப்பு படையைச் சேர்ந்தவன் முஸ்லிம். அவன் பெயரை தனது நாவலில் எழுத வேண்டும் என சொல்கிறான் பேரன். இப்படியாக நாவலுக்கான தயாரிப்பாகவும், எழுதப்படும் நாவலுக்கான குறிப்புகள் சேர்க்கையாகவும் ஒரு metafiction-ஆக விரிகிறது படம்.
ஜமாலன். (20-04-2000).
ரியாத்.
பின்குறிப்பு: வேற்று மொழிப்படம் ஒன்றை எடுத்து விமர்சித்து இருந்தால், அதில் பழசு புதுசு பார்க்க மாட்டோம். தமிழ்படம் என்பதால் இதனை பழசாக கருதுவது இயல்புதான்.
ஒளிரும் பாரதத்திற்காக பலியிடப்பட்ட மகாத்மா - ஹே ராம் எனும் அழித்தெழுதப்பட்ட பிரதி
Labels: சினிமா, நட்சத்திரவாரம், பின்நவீனத்தவம்
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)








50 Comments:
அருமையான கட்டுரை. ரொம்ப நாள் கழித்து தமிழில் கருத்து செறிவு மிக்க அதே சமயத்தில் ரிச் ப்ரோஸ் படிக்க முடிந்தது. போஸ்ட் மொதேர்நிசம், சோசியல் psychology, etc. போன்ற discipline களில் உள்ள தியரிகளை கருத்தாய்வுகளில் apply செய்வது நமது தமிழ் இணைய பதிவுகளில் அவசியமான ஒன்றாகும். Its high time our tamil bloggers started to argue intelligently. சும்மா வாயில வந்ததை பேசுவதை விடுத்து அறிவுப்பூர்வமாக நமது events களை ஆராயும் தன்மைக்கு உங்கள் கட்டுரைகள் முன்னோடியாக அமையும் என்று நம்புகிறேன். (இரு இரு, இந்த பிரச்சினைக்குறித்து tamil bloggers என்ன சொல்லிஇருக்கிறார்கள் என்று சமூகவியளார்கள் வந்து நமது blogs ஐ படிக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்.)
ஒரு விஷயம் - கொவித்துக்கொள்ள வேண்டாம். அனேகமாக (இப்போது தமிழ் இணையம் இருக்கும் நிலமையில்) உங்கள் கட்டுரைகளுக்கு அதிகம் பின்னூட்டங்கள் எதிர்ப்பார்க்கவேண்டாம். (பின்னூட்டங்கள் வேண்டுமென்றால் சிவாஜி, ஞாநி, ... என்று எழுதவும்.)
அருமையான கட்டுரை. ரொம்ப நாள் கழித்து தமிழில் கருத்து செறிவு மிக்க அதே சமயத்தில் ரிச் ப்ரோஸ் படிக்க முடிந்தது. போஸ்ட் மொதேர்நிசம், சோசியல் psychology, etc. போன்ற discipline களில் உள்ள தியரிகளை கருத்தாய்வுகளில் apply செய்வது நமது தமிழ் இணைய பதிவுகளில் அவசியமான ஒன்றாகும். Its high time our tamil bloggers started to argue intelligently. சும்மா வாயில வந்ததை பேசுவதை விடுத்து அறிவுப்பூர்வமாக நமது events களை ஆராயும் தன்மைக்கு உங்கள் கட்டுரைகள் முன்னோடியாக அமையும் என்று நம்புகிறேன். (இரு இரு, இந்த பிரச்சினைக்குறித்து tamil bloggers என்ன சொல்லிஇருக்கிறார்கள் என்று சமூகவியளார்கள் வந்து நமது blogs ஐ படிக்கும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்.)
ஒரு விஷயம் - கொவித்துக்கொள்ள வேண்டாம். அனேகமாக (இப்போது தமிழ் இணையம் இருக்கும் நிலமையில்) உங்கள் கட்டுரைகளுக்கு அதிகம் பின்னூட்டங்கள் எதிர்ப்பார்க்கவேண்டாம். (பின்னூட்டங்கள் வேண்டுமென்றால் சிவாஜி, ஞாநி, ... என்று எழுதவும்.)
reply எழுதுவதில் தவறு இருப்பின் மன்னிக்கவும். முதன் முதலில் நான் இணையத்தில் எழுதுவது இதுவே முதல் முறை. என்னவோ உங்கள் கட்டுரையைப் படித்த பின்பு எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றியது. உடனே கூகிள் transliterate பேஜுக்கு சென்று அடித்துவிட்டேன்.
i just watch the movie as a kamal fan. after reading your post i think i should watch it again to get the real feel. thank you
//தமிழ்படம் என்பதால் இதனை பழசாக கருதுவது இயல்புதான்//
இல்லை. இந்த அளவுக்கு ஆழமான விமர்சனத்துக்குத் தகுதியான தமிழ்ப்படங்கள் மிகவும் குறைவு. நான் மிகவும் ஆழ்ந்து பார்த்த திரைப்படங்களில் ஒன்று ஹேராம். பொதுவாகக் கமல் படங்களில் ஒரு CLINICAL PRECISION இருக்கும். தேவர் மகன் படத்தில் சிவாஜி மாரடைப்பில் மரணமடையும் முன் தோள்வலி என்று சொல்வது மாதிரியான காட்சிகளை உதாரணம் சொல்லலாம். ஹேராம் அவருடைய இயக்கத்திலும் வந்ததால் இன்னும் அதிக மெனக்கெடல் தெரிந்தது. தாங்களே சொல்லி இருப்பது போல் இது திரையில் வந்த ஒரு பின்நவீனத்துவ நாவல். "என்ன மாப்ள, கமல் நல்லா கிஸ் அடிக்கறான்ங்கறதுக்காக்ப் போனா படம் ஒண்ணுமே புரியலையேடா" என்கிற விமர்சனங்களைத் தாண்டி படம் எப்படி ஓடும்? அந்தந்த மொழிக்காரர்களை அப்படி அப்படியே சொந்தக் குரல்களில் தமிழ் பேச வைத்ததும், படத்தில் பல்வேறு மொழிகளின் கலவை இருந்ததும் ஓடாததற்குக் காரணம். கதாநாயகன் லட்சியத்தில் தோற்பதை மக்கள் ஏற்பதில்லை. கமல் ஒருவேளை கோட்சே ரோல் ஏற்றிருந்தால் படம் ஓடி இருக்கலாம்.
உங்கள் கேள்விகளுக்கு எனக்குத் தோன்றும் பதில்கள்: 1. தனது மணைவி கொலைக்கு பலிவாங்க விரும்பிய சாகேத ராம், மீண்டும் திருமணம் செய்து கொண்டதும், அப்பெண்ணிடம் தனது வாரிசை உருவாக்க விட்டதும் ஏன்? முதல்மனைவி குறித்த அனுபவத்தை மறக்க முயலும் முஸ்தீபு மற்றும் குடும்ப நெருக்கடி. தாமதமாகத் திருமணம் செய்பவரும், இரண்டாம் திருமணம் செய்பவரும் வாரிசு உருவாக்க விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டார்கள். உளவியல் பிரச்னை.
2. சாகதே ராமின் லட்சியம் காந்தியை கொல்வதா? அல்லது காந்தியை கொல்வதற்கான அரசியலின் அடையாளத்தை பெற முயல்வதா? அவனுடைய பாத்திரமே ஒரு குழப்பமானவனாகத் தான் இருக்கிறது முழுப்படத்திலும்.
3. அரசியல் என்பது தனிமனித தன்னிலை உருவாக்கத்தின் விளைவா? அல்லது சமூக யதார்த்தத்தின் விளைவா? ஆழமான கேள்வி.சாய்ஸ்.
4. சாகேத ராம் ஏன் வைணவனாக படைக்கப்பட்டுள்ளான்? யானை, சுலோகம் போன்ற கூடுதல் சௌகரியங்களுக்காக.
5. சாகேத ராம் காசியில் கங்கையில் தனது முடியை அறுத்து தனது குடும்ப வாழ்வை துறப்பதன் மூலம், தனது வைணவ அடையாளத்தை விட முயல்கிறானா? அல்லது பிரம்மச்சரியத்தை மேற்கோள்ள முயல்கிறானா? அச்சடங்கின் அர்த்தம் என்ன? அவன் மாறுகிறான் எனப்தை அழுத்தம் திருத்தமாகக் காட்ட அந்த உத்தி. மயிர் துறப்பது என்பது இந்து மத வாழ்வியலில் பல்வேறு கட்டங்களில் அடையாளப்படுத்தப் படுகிறது. குழந்தைக்கு இறக்குதல் (அப்போது தான் தலையில் முடி ஒழுங்காக சீராக வளரும்), அவ்வப்போது வேண்டுதல்களில் இறக்குதல் (தன்னைக் கோரப்படுத்திக் கொள்ளத் தயாராவதன் மூலம் ஆணவம் அறுப்பதாக இறைவனிடம் பம்மாத்து காட்ட), துறவறம் போனால், பெர்றோர் இறந்தால் என்று உறவு விலகலின் அடையாளமாக. இவற்றோடு சாக்கேத் ராமின் முடிவினை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
மொத்தத்தில் முழுமையான விமர்சனம். படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை மீண்டும் பெற வைத்தது. நன்றி.
படத்தை இன்னும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள், அதுவும் உங்கள் பார்வையில் :-)
நல்ல பதிவு ஜமாலன்.
எனது எல்லா பின்னூட்டமும் இந்த வார்த்தைகளிலிருந்தே ஆரம்பிக்கிறது. காரணம் உங்கள் பதிவு தரும் அதிர்வுகள்தான். பதிவை படித்து முடித்ததும் சிகரெட் பிடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. பற்ற வைத்ததும் புகை மட்டுமல்ல, பதிவு சொல்லும் செய்திகளும் என்னை சூழ ஆரம்பிக்கிறது. அருகிலிருப்பவர் நெடி தாங்காமல் இருமுவது புகையால் அல்ல. கிழித்து தொங்கவிடப்படும் உண்மைகளால். அதன்பின் ஆழ்ந்து உள்ளிழுப்பது வெறும் நிகோடினை அல்ல... பதிவை. அதனால்தான் கீ போர்டில் விரல்கள் அழுத்தும் முதல் எழுத்துக்கள் 'நல்ல பதிவு ஜமாலன்' என்று ஆரம்பிக்கிறது.
நிற்க. இப்போது இந்த 'ஹேராம்' தொடர்பான பதிவுக்கு வருகிறேன். நீங்கள் எழுதிய அனைத்து விஷயங்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு. எனவே இது தொடர்பான உரையாடல், 'ஆமாம்ல... கரெக்ட்... அதோட இதையும் சேர்க்கலாம்...' என்றுத்தான் விரியும்.
எனவே இந்தப் பதிவுக்கு தொடர்பில்லாத, ஆனால் தொடர்பிருக்கும் ஒரு செய்தியை மட்டும் இங்கு பின்னூட்டமிடலாம் என தோன்றுகிறது.
பலரும் அறியாத, வெகுஜன தளத்தில் பிரபலமாகாத, காந்திய எழுத்தாளரான ரா. சு. நல்லபெருமாள் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' நாவலின் அப்பட்டமான காப்பியே கமலின் 'ஹேராம்'. ரைட்ஸ் வாங்காமல் அதிலுள்ள அனைத்து விஷயங்களையும் அப்படியே கமல் திருடியிருக்கிறார். பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை, திரைக்கதை என தன் பெயரை போட்டுக் கொண்டுள்ளார். நல்லபெருமாளின் வாரிசுகள் இதை சுட்டிக் காட்டியபோது, கமல் சொன்ன பதில் 'ஜஸ்ட் கோ இன்சிடன்ஸ்!'
இந்தத் தகவல் கமல் என்னும் திருடனை சுட்டிக் காட்டத்தானே தவிர, 'ஹேராம்' தொடர்பான பிரதியை மறுக்கும் செயலல்ல.
நல்ல பதிவு...
நானும் படம் வந்த நாட்களில் புரியாதவர்ககுக்கு புரியவைக்க முயன்று...
சில பேர மாத்திறது கஸ்டம்..
அபாரமான அலசல். சத்தியமாக நான் அந்தப் படத்தைப் பார்த்த போது இது போலவெல்லாம் யோசிக்கவேயில்லை :) படத்தை மீண்டும் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டுகிறது இப்பதிவு.
babu said....
வாங்க பாபு நன்றி.
//ஒரு விஷயம் - கொவித்துக்கொள்ள வேண்டாம். அனேகமாக (இப்போது தமிழ் இணையம் இருக்கும் நிலமையில்) உங்கள் கட்டுரைகளுக்கு அதிகம் பின்னூட்டங்கள் எதிர்ப்பார்க்கவேண்டாம். (பின்னூட்டங்கள் வேண்டுமென்றால் சிவாஜி, ஞாநி, ... என்று எழுதவும்.)//
உண்மைதான் பாபு. சிவாஜயை படுத்திய பாடும் அது நம்மை படுத்தீய பாடும் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்படம் வெளிவந்துபோது எழுதியது. அப்போதைய எனது புரிதலைவிட உணாச்சிகளின் ஆளுகை அதிகம். மீண்டும் இதை வெளியிடும் முன் பார்க்க நினைத்து.. அந்த படம் கேஸட், டிவிடி எதுவும் இங்கு கிடைக்கவில்லை. அப்படியே அந்த கடிதப்பகுதியை சுருக்கி வெளியிட்டுவிட்டேன். மிகவும் தயக்கத்திற்கு பிறகே வெளியிட்டேன். நண்பர்களின் பின்னோட்டம் ஆறுதலாக உள்ளது.
நன்றி.
முரளி கண்ணன் said...
வாங்க.. நன்றி.
RATHNESH said...
நன்றி ரத்ணெஷ் கெள்விகளக்கு பதில் சொன்னதற்கு..
1. உளவியல் பிரச்னை. ஓ.கே.
2. அவனுடைய பாத்திரமே ஒரு குழப்பமானவனாகத் தான் இருக்கிறது முழுப்படத்திலும்.
-இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய பிரச்சனை.
3. சாய்ஸ். - சமூக யதார்த்ததின் விளைவு என்பது எனது பதில்.
4. யானை, சுலோகம் போன்ற கூடுதல் சௌகரியங்களுக்காக. - இதுவும் சரிதான். வைணவம் அடிப்படையில் அன்பை போதிக்கிறது என்பதாலும் அவனது மனமாற்றத்திற்க மதத்தை பின்பலமாககுவதும் ஒரு சென்ஷார் சமரச காரணமாக இருக்கலாம்.
5. அருமையான விளக்கம்.
பதில்களுக்கு மீண்டும் நன்றி.
ramachandranusha(உஷா) said...
//படத்தை இன்னும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள், அதுவும் உங்கள் பார்வையில் :-)//
நன்றி. இதபோன்ற படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
பைத்தியக்காரன் said...
//பதிவை படித்து முடித்ததும் சிகரெட் பிடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. பற்ற வைத்ததும் புகை மட்டுமல்ல, பதிவு சொல்லும் செய்திகளும் என்னை சூழ ஆரம்பிக்கிறது.//
ஏதேது இதெல்லாம் உண்டா? நான் விட்டுவிட்டேன். ஆணால், பாரில் மட்டும்...
//பலரும் அறியாத, வெகுஜன தளத்தில் பிரபலமாகாத, காந்திய எழுத்தாளரான ரா. சு. நல்லபெருமாள் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' நாவலின் அப்பட்டமான காப்பியே கமலின் 'ஹேராம்'. ரைட்ஸ் வாங்காமல் அதிலுள்ள அனைத்து விஷயங்களையும் அப்படியே கமல் திருடியிருக்கிறார். பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை, திரைக்கதை என தன் பெயரை போட்டுக் கொண்டுள்ளார். நல்லபெருமாளின் வாரிசுகள் இதை சுட்டிக் காட்டியபோது, கமல் சொன்ன பதில் 'ஜஸ்ட் கோ இன்சிடன்ஸ்!'//
இது கமலின் பெரும்பாலான தசாவதாரம் உட்பட... படங்களில் ஏற்படும் பிரச்சனை. இப்படம் வந்த போது இது குறித்து விவாதமும் வந்தது. அது சு.சமுத்திரம் நாவல் என்பதாக ஒரு நினைவு. அது ரா.ச. நலல்பெருமாளா. அந்த நாவலையும் நாம் படித்தால் இந்த 'கோ இன்ஷிடன்ஸின்' அரசியல் பற்றி புரிந்து கொள்ளலாம். இருந்தாலும், சினிமா எனும் ஊடகத்தில் இது கமலின் முக்கிமான ஒரு மைல்கல்தான்... கதையை எடுத்திருந்தால் அதனை ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை. மகாநதி (ஏற்கனவே குதிரைவீரன் பயணத்தில் இது குறித்த சிறைச்சாலை என்கின்ற நுண் அரசியலுடன் இணைத்து எழுதி உள்ளேன்).. ஆளவந்தான் (புரிந்தகொள்ள முடியாமல்போன மற்றொரு படம். இது பிராய்டியன் உளவியலின் அடிப்படையில் விமர்சிக்கத் தகுந்த படம்.)... குணா, தேவர்மகன் பற்றி எனது கையெழுத்துப் பத்திரிக்கை 'அறிவின் தொர்பொருளியலில்' எழுதி நான்கைந்த பேர் படித்தவிட்டு பத்திரமாக வைத்துவிட்டேன்.
குறிப்பாக 'இந்திய பிரிவினை' என சொல்லப்படும் வரலாற்றுச் சொல்லாடல் பற்றி எழுதுவதுதான் எனது நோக்கம். நேரமின்மை ஒரு காரணம் இதை வெளியிட.
//இந்தத் தகவல் கமல் என்னும் திருடனை சுட்டிக் காட்டத்தானே தவிர, 'ஹேராம்' தொடர்பான பிரதியை மறுக்கும் செயலல்ல.//
உங்களது தகவல் இத்தகைய சந்தர்பங்களில் அவசியமானது.
நன்றி...
இந்தப் படம் வந்த புதிதில் சாருவின் விமர்சனம் படித்தீர்களா.? அது நறுக்கென்று இருக்கும்.
/கடந்த காலம் மற்றும் நிகழ்கால எல்லைகளை அழித்தல், நிகழமுடியாதவற்றை நிகழ்த்துதல், பழமை பற்றிய ஏக்கம் /
இது எல்லாம் பாட்ஷா படத்திற்கு இன்னும் நன்றாக பொருந்தும்.
இது ஹே ராம் படம் பற்றிய உங்கள் பார்வைக்கான எதிர்வினையே. மற்றபடி, வரலாற்றைத் திரும்ப எழுதுதல், மற்ற விஷயங்கள் + தமிழவன் நாவலைப் பற்றிய உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். (ஆனால் மிக தட்டையான நடையில் எழுதப் பட்ட நாவல் என்றே எனக்குத் தோன்றியது படித்தபோது).
NiMaL said...
வாங்க நிமல்.. நன்றி.
//நானும் படம் வந்த நாட்களில் புரியாதவர்ககுக்கு புரியவைக்க முயன்று...
சில பேர மாத்திறது கஸ்டம்..//
கஸ்டம்தான். எல்லாவற்றையும் எல்லோருக்கும் புரியவைக்கவும் முடியாதுதான்.
Jyovram said...
//இந்தப் படம் வந்த புதிதில் சாருவின் விமர்சனம் படித்தீர்களா.? அது நறுக்கென்று இருக்கும்.//
படித்ததில்லை.அது எதில் வந்தது என்றும் தெரியாது. எனது குரத்துக்க எதிர்மறையான விமர்சனம் காலக்குறியிலேயே வந்தது. அதைப்படித்திருக்கிறேன்.
//இது எல்லாம் பாட்ஷா படத்திற்கு இன்னும் நன்றாக பொருந்தும்.//
பொதுவாக இந்திய மற்றும் தமிழ்சினமாவின் குணங்களில் இவை ஒன்று. பாட்சாவைவிட சிவாஜிக்க அதிகம் பொறுந்தும். ஆணால் இறுதியில் அவை ஏற்படுத்தும் உணர்வுகள் வேறு.. இப்படம் ஏற்படுத்தும் உணர்வுகள் வேறு. எனது பார்வை அரசியல் சார்ந்தது.
//வரலாற்றைத் திரும்ப எழுதுதல், மற்ற விஷயங்கள் + தமிழவன் நாவலைப் பற்றிய உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். (ஆனால் மிக தட்டையான நடையில் எழுதப் பட்ட நாவல் என்றே எனக்குத் தோன்றியது படித்தபோது).//
அது வாசிப்பனுபவத்தை பொறுத்தது. எனது விமர்சனம் அந்த யுத்தியின் வழியாக எப்படி வரலாற்று எழுதுதலை சாத்தியப்படுத்துகிறது அந்நாவல் என்பதுதான். அந்நாவல் குறித்து பல விமர்சனங்கள் உண்டு. அதில் எனது பார்வையும் ஒன்று. அழகியலைவிட அரசியலுக்கு அழுத்தம் கொடுப்பது எனது பார்வை. அழகியல் என்பது ஒழுங்கமைப்பு சார்ந்தது என்பதே எனது நிலைப்பாடு.
விவாதத்திற்கும் கருத்துகளுக்கும் நன்றி.
அருமையான செய்திகள் நிறைந்த செறிவான பதிவு.
//காந்தியை 'இந்துத்துவா' சக்திகள் கையில் எடுத்துக் கொண்டிருப்பதும்கூட ஒரு வரலாற்று அவலம்தான்.//
காந்தியின் இந்துமதம் அனைவரையும் மனிதர்களாகப் பார்த்தது.பிராமணர்களின் இந்துமதம் பிராமணனை மட்டும் மனிதனாகப் பார்த்தது.
காந்தியின் தேவை முடிந்தவுடன் பிராமண இந்துமதம் அவருடைய கணக்கை முடித்துவிட்டது.
பிராமண மதம் ஆட்டம் காணும் இன்றையநிலையில் இந்து மதத்தை நம்பிய காந்தி அவர்களுக்கு தேவைப்படுகிறார்.
இந்தப்பித்தலாட்டங்கள் இப்போது எடுபடாது.
ஹேராம் படம் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்.
வாங்க ஜாலிஜம்பர்...
பின்னொட்டத்திற்கு நன்றி..
ஒரு திரைப்படத்தை இவ்வளவு ரசிக்க முடியுமா என்ற வியப்பும் - இவ்வளவு ரசிக்கவைக்க அத்திரைப்படத்தின் பின் உள்ள உழைப்பு - திரு. பைத்தியக்காரன் அவர்களின் பின்னூட்டச் செய்தி என அனைத்தும் வெகுவாக ஆளுமைப்படுத்திவிட்டன. இப்போதைக்கு நான் விரும்புவது இப்பதிவின் ஆளுமையிலுருந்து வெகுவாக மீண்ட பின்னர் அத்திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்பதுதான்.
கையேடு said...
//இப்போதைக்கு நான் விரும்புவது இப்பதிவின் ஆளுமையிலுருந்து வெகுவாக மீண்ட பின்னர் அத்திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்பதுதான்.//
நன்றி.. கையேடு... பாருங்கள் பிறகு உங்களுக்கான பிரதியை உருவாக்கிக் கொள்ள முடியும்.
எத்தனை முறை பார்த்திங்க?
ஓய்வான நேரத்தில மறுபடியும் வாசித்துப் பார்க்கணும்.
நல்ல கட்டுரை.
தம்பி said...
வாங்க தம்பி..
//எத்தனை முறை பார்த்திங்க?//
2 தடவை. அதுவும் சவுதியின் திருட்டு VHS கெசட்டுல. அந்த கேசட்டையும் யாரோ வாங்கிட்டுபோயி.. போயே போயிந்தி...
//ஓய்வான நேரத்தில மறுபடியும் வாசித்துப் பார்க்கணும்.
நல்ல கட்டுரை.//
நல்லவேளை நல்ல பதிவு படிச்சிட்டு சொல்றேன்ன சொல்லாம போனீங்களே..
நன்றி
மிக அருமையான கட்டுரைக்கு நன்றி.
ஹே ராம் பற்றி நான் வலைப்பதிவுக்கு வராத காலத்தில் பார்த்தவுடனொரு பெரிய கட்டுரை எழுதினேன். காணாமல் போய்விட்டது. ஆனாலும், நினைவில் இருந்து - யானைக் காட்சி, துப்பாக்கி உருவகம், கோட்சேவாக ஆரம்பித்து காந்தியாக முடிதல் ஆகியவற்றில் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமை இருக்கிறது.
அதே சமயத்தில் என் கட்டுரை இவ்வளவு விஷயகனம் பொருந்தியதாக இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன்.
நிறைய யோசித்தல்களை என்னளவில் உருவாக்கிய இந்தப் படம் இன்னும் அதிக அளவில் சென்றடைந்திருந்தால் அதிக அளவில் யோசிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் வருத்தமே.
சாகேத்ராம் ஒரு குழப்பமான பாத்திரப்படைப்புதான் -- ஆனால் அவன் அடைந்த அனுபவங்களுக்கு அத்தனை குழப்பம் சாத்தியமே.
அருமையான படத்தைப்பற்றிய அருமையான கட்டுரை. மீண்டும் நன்றி.
Not seen the film, no comments on flim. Your understanding of Gandhi is pathetic. Gandhi for all his conservatism was a person who beleived in uniquness of each faith and mutual tolerance. He beleived that being a good hindu or good christian or good muslim
was fine as long as one beleived in the universal principle of tolerance and mutual recognition.
That is why he had lot of reservations about conversion.
Much has been written on him
Ericsson, Nandy, Anil Nauria and
Sudhir Kakkar. Try to read some of them. You seem to come to quick conclusion with very limited theoritical tools. That wont help
in the long run.
அணாணிக்கு...
தாங்கள் எங்கு கருத்து முரண்படுகிறீர்கள் என்றால் அதனை புரிந்தகொள்ள ஏதுவாகும். காந்தி பற்றி எனது பதிவில் எதிர்மறையான கருத்துகள் எதுவும் இல்லை. காந்தி புரிந்துகொள்வதற்கு சற்று சிக்கலான ஆளுமையைக் கொண்டவர்தான். இது படம் குறித்த கருத்துதானே ஒழிய.. காற்திபற்றி தனிப்பட்டரீதியில் கருத்துகள் இங்கு விவாதிக்கப்படவில்லை. இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான பார்வை.
வினையூக்கி said...
வாங்க வினையூக்கி சார். நன்றி.
சொந்தமா வாங்கிவச்சு, இந்தப் படத்தைப் பலமுறை பார்த்துவிட்டேன்.
ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஒவ்வொரு சிந்தனை.
உங்கள் பதிவைப் படித்தபின், இதோ இன்னொருமுறை பார்க்கணும்.
கமலின் படங்களில் அவரோட உழைப்புக் கண்கூடாகத்தெரியும். இதுக்கிடையில் கதை/கருத்துத் திருடுன்னு அப்பப்ப வருவதும் ஒரு குழப்பத்தைத் தந்துருது.
ஆனா............. கமல் ஒரு 'உண்மைக் கலைஞன்'
துளசி கோபால் said...
வாங்க துளசி கோபால்..
//கமலின் படங்களில் அவரோட உழைப்புக் கண்கூடாகத்தெரியும். இதுக்கிடையில் கதை/கருத்துத் திருடுன்னு அப்பப்ப வருவதும் ஒரு குழப்பத்தைத் தந்துருது.
ஆனா............. கமல் ஒரு 'உண்மைக் கலைஞன்'//
உண்மைதான் commited artist. சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றாலும் அவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லதானே.
பினாத்தல் சுரேஷ் said...
வாங்க சுரேஷ்
//யானைக் காட்சி, துப்பாக்கி உருவகம், கோட்சேவாக ஆரம்பித்து காந்தியாக முடிதல் ஆகியவற்றில் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமை இருக்கிறது.//
நன்றி.. ஒத்ததிர்விற்கு.
//நிறைய யோசித்தல்களை என்னளவில் உருவாக்கிய இந்தப் படம் இன்னும் அதிக அளவில் சென்றடைந்திருந்தால் அதிக அளவில் யோசிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் வருத்தமே.//
இத்தகைய படங்கள் எதிர்நோக்கிய அளவிற்கு ஓடாது என்பது தெரிந்ததுதான்.
//சாகேத்ராம் ஒரு குழப்பமான பாத்திரப்படைப்புதான் -- ஆனால் அவன் அடைந்த அனுபவங்களுக்கு அத்தனை குழப்பம் சாத்தியமே.//
அப்பாத்திரம் உளவியல் தளத்திலான பாத்திரமாக இருப்பதால் அத்தகைய குழப்பம் என்று நினைக்கிறேன்.
தாமதமான எதிர்வினைக்கு மன்னிக்கவும்.just oversight, sorry.
அன்புடன்
ஜமாலன்.
படத்தின் ஆழத்தையும், பின்புலத்தில் கமலின் உழைப்பையும் பார்த்து வியந்தது உண்டு.
மீண்டும் படத்தைப் பார்க்க -இதை வாசித்தவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட - ஆசை.
தருமி said...
வாங்க தருமி..
//மீண்டும் படத்தைப் பார்க்க -இதை வாசித்தவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட - ஆசை.//
நன்றி.. ஆழ்ந்த அர்த்தமுள்ள படங்களை எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்தானே.
ஜமாலன். காலம் தாழ்த்தி இன்று தான் இந்தக் கட்டுரையைப் படித்தேன். தலைப்பு முதலில் புரியவில்லை. கட்டுரையைப் படித்து முடித்த பின்பு தலைப்பு புரிவது போல் இருக்கிறது - இன்னும் சரியாகப் பிடிபடவில்லை. :-)
இந்தத் திரைப்படம் பார்த்து வந்த போது ஆழ்ந்த சிந்தனையுடன் வெளிவந்தது நினைவிருக்கிறது. இரண்டு முறை பார்த்திருக்கிறேன். பல நிலைகளில் பொருள் செல்லும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன - நீ சவுத் இண்டியன்; உனக்கு இது புரியாது - என்ற வசனம் முதன்முறை பார்க்கும் போது என்னைத் தாக்கிய வசனம். பின்னர் பல இடங்கள் சிந்திக்க வைத்தன. இன்று உங்கள் கட்டுரை படிக்கும் போது அன்று உணர்ந்த உணர்வுகளும் புதிய உணர்வுகளும் என்று மாறி மாறி வந்தன.
இந்தக் கட்டுரையைப் படித்த பின் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வார்த்தைகள் கிடைக்கவில்லை. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :-)
குமரன்..
//நீ சவுத் இண்டியன்; உனக்கு இது புரியாது - என்ற வசனம் முதன்முறை பார்க்கும் போது என்னைத் தாக்கிய வசனம்.//
படத்தில் இந்தியாவின் பெரும்பாலான மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சற்று சிரமமான ஒன்றுதான் படத்தை பின்பற்ற. அதிலும் தழிழ் மட்டும் தெரிந்த நமக்கு. அதற்காக அந்த திரைக்கதை வசனம் நூலையும் வாங்கி படித்தேன். அதிலும் வசனங்கள் அந்தந்த மொழியில் transliteration-ல் இருந்ததால் பயனற்றதாகிவிட்டது.
//இந்தக் கட்டுரையைப் படித்த பின் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வார்த்தைகள் கிடைக்கவில்லை. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். :-)//
உங்கள் உணர்வகளைப் பகிர்ந்த கொண்டமைக்கு நன்றி.
டிபிசிடி வலைச்சரம் மூலம் சுட்டி கொடுக்கவில்லை என்றால் இந்த இடுகையை பார்த்திருக்க மாட்டேன். அவருக்கும் நன்றிகள்.
உங்கள் அலசல் வியப்பூட்டுகிறது. அசத்தல்
எல்லாம் சரி ஜமாலன்,
இந்த பின்னூட்டங்களில் பின்னூட்டுபவரின் பெயர் வராமலிருப்பதற்கும் பின்னவீனத்துவத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? பின்னூட்டநவீனத்துவம் அப்பிடி என்ன்மும்? ;-) ;-))
ஜமாலன்,
வியப்பூட்டிய ஆழ்ந்த விமர்சனம். படத்தைப் பற்றிய உங்களின் உள்வாங்கல் அபாரமானதாக இருக்கிறது. நொடிநேரம் தோன்றி மறையும் காட்சியை உள்வாங்கியிருப்பார்களா என்பதே இன்றைய ரசிகச் சூழலில் சந்தேகமாக இருக்கின்றவேளையில் பல விஷயங்களை நன்றாக ஆழ்ந்து அலசி - நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் கமலைப் பற்றிக் குறிப்பிட்ட Clinical Precision-னோடு எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
நல்ல, அசல் பதிப்பில் படத்தை ஒருமுறை பாருங்கள். அரசியல், சமூகப் பார்வையோடு எழுதியுள்ள நீங்கள் அதன் தொழில்நுட்ப உச்சத்தைப்பற்றியும் அறிந்துகொள்ள ஏதுவாயிருக்கும்!
//குணா, தேவர்மகன் பற்றி எனது கையெழுத்துப் பத்திரிக்கை 'அறிவின் தொர்பொருளியலில்' எழுதி நான்கைந்த பேர் படித்தவிட்டு பத்திரமாக வைத்துவிட்டேன்.
//
ஓ, இவற்றை வலையில் பதிந்திருக்கிறீர்களா? ஆமென்றால் சுட்டி கொடுக்க இயலுமா? இல்லையென்றால் வலையேற்ற இயலுமா? படிக்க ஆவலாயுள்ளேன்.
படத்தின் இறுதிக்காட்சி முடிந்து அரங்கினுள் விளக்குகள் மறுபடி எரியத் தொடங்கும்போது பார்வையாளர்கள் இருக்கையைவிட்டு எழுந்து வெளிச்செல்லத் தலைப்படும்போது அவர்களது முகங்களை கவனிப்பது வழக்கம். 99% தமிழ்ப்படங்களது 'சுபம்' முடிவுகளின் காரணமாக ஒரு புன்னகையோ, சிறு அரட்டையோ, கலகல சிரிப்போ அவர்களது முகங்களில் தவழ்ந்துகொண்டிருக்கும். 'அப்பாடி' என்ற பெருமூச்செறிவார்கள். ஆனால் கமலின் சிறந்த படங்கள் என ஒரு பத்து படங்களைப் பட்டியலிட்டால் அதில் 99% படங்கள் மேற்கூறிய எந்த முகபாவங்களையும் பார்வையாளர்களுக்குத் தராது. பெரும்பாலும் கனத்த மெளனத்துடன், சிந்தனைவயப்பட்டு, ஒரு மந்தஹாஸப் புன்னகையுடன் ஒருவரையொருவர் அர்த்த புஷ்டியுடன் பார்த்துக்கொண்டு வெளியேறுவதாக எனக்குத் தோன்றியிருக்கிறது - அவர்கள் கண்களில் 'இவன் மனுஷனே இல்லை. ராட்சஸன்!' என்ற வியப்பு தேங்கியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
உங்கள் பதிவு பல புதிய பார்வைகளைக் காட்டியது.
நன்றி.
ஜமாலன்
//படம் சிந்துவெளி அகழ்வாய்விலிருந்து துவக்குவது, வரலாறு பற்றிய பிரக்ஞையின் துல்லியத்தையும், இந்திய வரலாற்றில் வந்தேறிகளான முகலாயர்கள், ஆரியர்கள், வெள்ளையர்கள் அவர்களது மதம், பண்பாடு அனைத்திற்கும் முந்தைய இந்தியா பற்றிய கனவுடன் துவங்குவதாக தோன்றுகிறது. யார் முதலில் வந்தவர்கள் என்பதற்கான விடையை அறிவதன் அல்லது அறிவிப்பதன் மூலம், வரலாறும், அதனை கண்டடையும் விஞ்ஞானமும் வன்முறையைத்தான் விதைக்கும் என்கிறது. நாடு என்ற ஒன்று உருவாகும் வரையில் எல்லோரும் நாடோடிகள்தான். இதில் எந்த நாடோடி முன்னே வந்தவன் என்பதன் மூலம் ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை ஒழிக்கவும், துரத்தவும் முயலும் நாம்-பிறர் (Same X Others) என்கிற முரணே வரலாற்றின் சக்கரம் எனலாம். இதுதான் இந்து-முஸ்லிம் பிரச்சனையிலும் மையமதானதாக இருக்கிறது. இதில் ஒருவரை பழிப்பதும்-அவமதித்துக் கொள்வதும் 'வரலாற்று நேர்மையை' காப்பாற்றுமே ஒழிய, மனித தன்மையை இழந்து விடுகிறது.//
அற்புதமான வரிகள். இரண்டு கண்ணாடி வீடுகளுக்குள்ளிருந்து ஒருவர் மீதொருவர் கல்லெறியும் சூழ்நிலையே வலைப்பதிவுகளில் பரவலாகப் பார்க்கிறேன். தமிழ்மணம் போன்ற திரட்டி, இணையங்களின் முகப்பில் பொறிக்கப்படவேண்டிய வைர வரிகள் நீங்கள் குறிப்பிட்டுள்ளவை.
நன்றி.
ஜாமாலன்,
கமலின் பரிட்ச்சார்த்த தைரியத்திற்காக வே அந்த படத்தை பார்த்தேன். நீங்கள் கூறிய அளவு ஆழ்ந்து பார்க்க வில்லை.
படத்தை ஒரு நாவலாகப் பார்த்ததோடு நிற்காமல் அழகாக எழுதியும் இருக்குறீர்கள்.
ராம் ஏன் வைணவனாக காட்டப் பட வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு,
எனக்கு என்ன தோன்றியதென்றா ல்
கோட்சே உம் ராமும் ஒருவரே. அதாவது கதாசிரியர் கோட்சே என்கிற அந்த நபரை ராம் என்ற கதாபாத்திரத்தின் வழியாக பார்த்து கடைசி நிமிடத்தில் கோட்சே பின் வாங்கி இருக்கக் கூடாதா என்ற தனது எண்ணத்தை முன் வைக்க உபயோகப் பட்ட கதா பத்திரம் என்று எனக்குப் படுகிறது.
அல்லது நேரடியாக கோட்சே பாத்திரத்தை வைத்தால் காந்தி கொலைய நியாயப் படுத்துவதாக அமைந்து விடும் என்பதாலும் இருக்கலாம்.
Mangai.
மயூரன் said...
//இந்த பின்னூட்டங்களில் பின்னூட்டுபவரின் பெயர் வராமலிருப்பதற்கும் பின்னவீனத்துவத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? பின்னூட்டநவீனத்துவம் அப்பிடி என்ன்மும்? ;-) ;-))//
உங்கள் நகைச்சுவை அருமை. இது பின் சார்ந்த விஷயமல்ல. தொழில்நுட்ப அறிவுப் பற்றாக்குறை. இதை சரிசெய்ய நண்பர் கோவி.கண்ணன் ஒரு ஆலொசனை தந்துள்ளார். அதை இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை. விரைவில் அதை சரி செய்ய முயல்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வற்றாயிருப்பு சுந்தர்.
உங்களது ஊக்கமூட்டும் கருத்துகளுக்கு நன்றி.
நிங்கள் கூறியிருப்பதுபோல அப்படத்தை நல்ல பதிப்பில் பார்க்க வேண்டும். இங்கு கிடைப்பதில்லை.
தேவர் மகன் குணா மகாநாதி பம்பாய் ரோஜா போன்ற படங்களுக்கான விமர்சனம் கையெழுத்தப்படியாக உள்ளது. பதிவில் எற்றவில்லை. தட்டச்சுக்கான அலுப்புதான். சீக்கிரத்தில் அவற்றை பதிவில் ஏற்றுகிறேன். ஆளவந்தான் குறித்தும்கூட பிராய்டியன் உளவியல் அடிப்படையில் விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.
//அற்புதமான வரிகள். இரண்டு கண்ணாடி வீடுகளுக்குள்ளிருந்து ஒருவர் மீதொருவர் கல்லெறியும் சூழ்நிலையே வலைப்பதிவுகளில் பரவலாகப் பார்க்கிறேன்.//
வலைப்பதிவில் சிலவேளை உரையாடல்கள் வருத்துமூட்டும் நிலைக்கு போய்விடுகிறது. உங்களது இந்த நுட்பமான புரிதலுக்கு நன்றி.
Mangai said...
வாங்க மங்கை.
//கமலின் பரிட்ச்சார்த்த தைரியத்திற்காக வே அந்த படத்தை பார்த்தேன். நீங்கள் கூறிய அளவு ஆழ்ந்து பார்க்க வில்லை.//
பொதுவாக கமலின் படங்களில் அந்த துணிச்சல் உண்டு. சிலவேளை அதனை அவர் பிறர் பணத்தில் செய்து தயாரிப்பாளரை கையை கடிக்க விட்டுவிடுகிறார் ஆளவந்தான் போல.
//ராம் ஏன் வைணவனாக காட்டப் பட வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு,
எனக்கு என்ன தோன்றியதென்றா ல்
கோட்சே உம் ராமும் ஒருவரே. அதாவது கதாசிரியர் கோட்சே என்கிற அந்த நபரை ராம் என்ற கதாபாத்திரத்தின் வழியாக பார்த்து கடைசி நிமிடத்தில் கோட்சே பின் வாங்கி இருக்கக் கூடாதா என்ற தனது எண்ணத்தை முன் வைக்க உபயோகப் பட்ட கதா பத்திரம் என்று எனக்குப் படுகிறது.//
இதற்கான பதில் ரத்ணேஷ் பின்னோட்டத்தில் விவாதித்துள்ளார். அதற்கான எனது கருத்தும் உள்ளது. இது சைவ - வைணவ மரண்பாட்டின் ஒரு கூறு. வைணவம் இறைவனுடன் ஆன புணிதக்காதலைச் சொன்ன மதம். தலித்துகளையும் கோவில் நுழைவிற்கு அழைத்துச் சென்ற மதம். அதனால் சாகதே ராமின் மனமாற்றத்தினை சொல்ல அதை அப்படி அமைத்திருக்கலாம்.
//அல்லது நேரடியாக கோட்சே பாத்திரத்தை வைத்தால் காந்தி கொலைய நியாயப் படுத்துவதாக அமைந்து விடும் என்பதாலும் இருக்கலாம்.//
படமே கொட்ஷேவின் வாழ்வைப் புனைவாக படிக்கும் ஒரு வாசிப்பாளன் தன்னையே அப்பாத்திரமாக மாற்றிக் கொள்வதை படமாக எடுக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். அதனால் இது வரலாற்றை வாசிப்பது பற்றிய படமும்கூட.
கருத்துகளுக்கு நன்றி.
//ராம் ஏன் வைணவனாக காட்டப் பட வேண்டும் என்ற உங்கள் கேள்விக்கு,
மற்றொரு கோணத்தில் எனக்கொரு விளக்கம் தோன்றுகிறது. சற்று வீக் reason தான்.
கதை இந்தியாவின் நான்கு திசைகளக்கும் சென்று வருகிறது, ஒவ்வொரு திசையிலும் ஒரு ஆழமை தெரிகிறது - culturally, religiously and geographically. தென் இந்தியாவின் பழமையும், புகழும் பறைசாற்ற சைவமோ, வைணவமோ மிகவும் பொருந்தி இருக்கும். பொதுவாகவே கமலின் பாத்திர படைப்பு அனைத்து பாத்திரங்களுக்கும் உள்ள nativityஐ உபயோக படுத்திக்கொள்ளும் (பஞ்சதந்திரம் உட்பட). ஷாருக் கான்ஐ முசில்மாகவும், ஸ்ரீராம் அப்யன்கரை மராடியாகவும், ராணி முகேர்ஜீஐ பெங்காலியாகவும் சித்தரித்த கமல் தன்னை வைணவனாக சித்தரிததில் ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது. மார்கழி மாதம் (ஜனவரியில் காந்தி சுடப்படும் முன்னர் வரும் காலம்), ஆண்டாள் திருப்பாவை, ஸ்ரீரங்கம்/ மன்னார்குடி, யானை என்று சேர்த்து பார்த்தல் அந்த மதத்தின் ஆழமும் கதையோடு ஒன்றி சென்று, சொல்லாமல் சொல்ல பட்டதாக தெரிகிறது.
கதையின் மற்றொரு கோணத்தை நோக்கும் போது, (சாகேத்) ராம் தன்னை ராமனாகவும் மைதிலிஐ சீதையாகவும் உருவக படுத்த முயற்சிக்கிறார். (அப்யங்கர் அனுமன், காந்தி ராவணன் - partially). ரமாயனத்துடன் parallelism ஏற்படுத்த முயற்சிப்பதினால் வைணவத்தை உபயோகம் செய்து இருக்கலாம் - may be !!
-ஸ்ரீனி
Srini said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Srini.
குணா தேவர் மகன் மற்றும் ஆளவந்தான் விமர்சனங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிரேன். விரைவில் வலையேற்றவும்
முரளி கண்ணன் said...
//குணா தேவர் மகன் மற்றும் ஆளவந்தான் விமர்சனங்களை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிரேன். விரைவில் வலையேற்றவும்//
அவை இன்னும் தட்டச்சு செய்யப்படவில்லை. வலையேற்ற முயல்கிறேன். நன்றி.
நல்லதொரு பதிவு ஜமாலன் ஐயா. வாழ்த்துகள்.
ஒரு சின்ன திருத்தம் - சாகேதராமின் நன்பன் அம்ஜத்கான். அஜ்மல்கான் அல்ல.
நான் விரும்பி தேடிப் பார்த்த ஒரு படம். இன்னமும் பலர் அதனை 'குப்பை' என்று ஒதுக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. உதாரணம் - சாரு நிவேதிதா. அவருடைய கோணல் பக்கங்களில் அப்படித்தான் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.
காந்தி ஒரு வழிநடத்துனர் மட்டுமல்லாமல் ஒரு manipulator அளவில் இந்தியர்களிடையே செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார். அவர் நம்பிக்கை வைத்திருப்பது ஒரு 'ராம்'. ஆனால் அவரைச் சுற்றி பல 'ராம்'கள் பாதிப்பு அடைகிறார்கள். நாதுராம், ஸ்ரீராம், சாகேத்ராம்.... இதை பெரிதாக்கிக் கொண்டே போகலாம்.
கதையின் நாயகனான சாகேதராமின் வாழ்க்கையில் நடக்கும் பயனங்களை நாமும் கூடவே சென்று பார்க்கிறோம். மொகஞ்சதரோவில் தொடங்கி, கல்கத்தாவில் கலகலப்பான இளைஞனாக இருக்கும் நாயகன், பின் கொலைவெறி பிடித்தவனாக மாறுகிறான். சுயபச்சாதாபத்தின் உச்சமாக காந்தியை கேள்வி கேட்கின்றான். அடுத்து அடுத்து அவன் மன ஓட்டத்திற்கு ஏற்ப நடக்கும் பல விசயங்களையும் தோற்ற மாறுதலிலே கோடிட்டு காமித்திருப்பார்கள். விரக்தி, காதல், குரோதம், முனைப்பு என்று பல வடிவங்கள் காணக் கிடைக்கின்றன.
பைத்தியக்காரன் ஐயா சொன்னது போல 'கல்லுக்குள் ஈரம்' பாதிப்பு நிறையவே இருக்கும். ஆனால் அப்பட்டமான காப்பி என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். ரங்கமணிக்கும் சாகேத ராமனுக்கும் தொடர்புகள் தெரிகின்றன. ஆனால் எல்லா பாத்திரங்களும் இங்கே வரவில்லை. தீக்ஷிதரைக் காணவில்லை. காந்தி அந்தக் கதையில் முக்கிய பாத்திரமாக இருக்கவில்லை. ஹேராம் சுதந்திரத்திற்கு பின்னர் உள்ள காலத்தை கதைக் களமாக கொண்டுள்ளது. மொத்தத்தில் கல்லுக்குள் ஈரம் படித்தவர்கள் சாகேதராமனில் ரங்கமணியின் சாயலை நிச்சயம் காணலாம். அது ஒன்று மட்டுமே கதைத் திருடல் ஆகாது என்றுதான் தோன்றுகிறது.
படத்தின் ஆரம்பத்தில் கல்கி. ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்திருப்பார்கள். இந்தத் தொடர் கல்கியில் வெளி வந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்தை தொடர்ந்து அன்பே சிவம் என்ற படம். தற்போது தசாவதாரம். இம்மூன்றிலும் சில புள்ளிகள் ஒன்றாக வருகின்றன.
திரைப்படங்களில் trilogy என்று சொல்வார்கள். ஒரு படைப்பாளியின் படைப்பு patternஐ ஒரு உருவகபபடுத்த மூன்று எல்லைகள் தேவையாக இருக்கின்றன. சிலர் வெளிப்படையாகவே அதை செய்கிறார்கள்.
அந்த அளவில் இம்மூன்று படைப்புகளும் கமல்ஹாசன் உள்ளிருக்கும் கதையாளனை இனம்கானக் கிடைக்கும் மூன்று புள்ளிகளாக கொள்ளலாம்.
இம்மூன்று படைப்புகளிலும் காணக் கிடைக்கும் சில ஒற்றுமைகள்.... கதை நாயகனின் பயணம். சித்தாந்தப் பற்று, அதைத் தொடர்பான கேள்விகள், விரிவான எல்லைக்குள் கதையை பரவவிடுவது, பல மொழிகளை, மதங்களை, வழக்கங்களை கதைப் போக்கில் இயல்பாக கொண்டு வருவது, வரலாற்றை தொட்டுச்செல்வது போன்று பல புள்ளிகள் இணைகின்றன.
உங்கள் கேள்விகளுக்கு படத்தில்தான் பதில் இருக்கும் என்று நினைக்கின்றேன். சாகேத ராமின் இரண்டாவது திருமணம் ஒரு இனிமையான விபத்து. வயதில் சிறிய பெண்ணான மைதிலி தனது கணவனை காதலிப்பதாக வெளிப்படுத்தும் காட்சியும் அதைத் தொடர்ந்து ஸ்ரீராம் அப்யங்கருக்கு அவன் செய்து கொடுக்கும் சத்தியமும் அவன் வாழ்வு எப்படி சம்பவங்களால் கொண்டு செல்லப்படுகின்றது என்பதற்கு சிறந்த உதாரணம்.
நல்லதொரு விமர்சனத்திற்கு நன்றி.
Sridhar Narayanan said...
//நல்லதொரு பதிவு ஜமாலன் ஐயா. வாழ்த்துகள்//
ஐயா என்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது. மற்றபடி உங்கள் விரிவான வாசிப்பும் விரிவான பகிர்தலும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
கல்லுக்குள் ஈரம் நான் படித்ததில்லை உங்கள் ஒப்பீடு கமல் மேல் வைக்கப்பட்ட இப்பிரச்சனைக்கு ஒரு பதிலாக உள்ளது. வாழ்த்துக்கள்.
என்ன ஒரு விவரமான விமரிசனம் பாருங்க.
இன்னிக்கு யதேச்சையா ஹேராம் (ஹிந்தி) படம் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நடுவில் ஒரு இடைவேளை விட்டுட்டுச் சாப்பிட வந்தேன். அப்படியே அஞ்சு நிமிஷம் தமிழ்மணம் பார்த்துக்கலாமுன்னு......
உங்க ஹேராம் விமரிசனம் கண்ணில் பட்டது.
ஹைய்யோ...... என்னன்னு சொல்வேன். படத்தை மறுபடி முதலில் இருந்து ஓடவிடப்போறேன்.
நன்றி ஜமாலன்.
கட்டுரை அருமை, மிகவும் அருமை.
Post a Comment