அஞ்சுரூவா மருத்துவரும் அமேரிக்க ஏகாதிபத்தியமும்

சீனப்புரட்சியின்போது செயல்பட்ட வெறுங்கால் வைத்தியர்கள் போல மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட மருத்துவர் புகழேந்தி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம். மதுரை மருத்துவக் கல்லூரியில் 'கோல்ட் மெடல்' பெற்றவர். தகுதியும் திறமையும் நிறைந்தவர். நிறைய பணம் பண்ணக்கூடிய தொழில் வாய்ப்பு இருந்தும் அணு உலையால் பாதிக்கப்படும் கல்பாக்க மக்களுக்கு சேவை செய்வதை தனது முதல் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருபவர் வெறும் 5 ரூ கட்டணத்தில். அவரது பெயரே அஞ்சுரூவா டாக்டர்தான். ஒரு சாதாரண அறையில் தங்கிக் கொண்டு தொலைபேசி வசதிகூட இல்லாமல். சென்ற வருடம் எனக்கு ஒரு மருத்துவப் பிரச்சனைக்காக அவரை பார்ப்பதற்காக தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தெரியும் அவர் அந்த வசதியைக்கூட வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார் என்று. அவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு தொடர்பு கொண்டுதான் அவரைப் பிடிக்க முடியும். தற்சமயம் அலைபேசி ஏதேனும் வைத்துள்ளாரா? என்ற தெரியவில்லை. மக்கள் பணி என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் அவர். இதை எழுதும்போது குற்றஉணர்ச்சிதான் மிஞ்சுகிறது எனக்கு.

ஒருமுறை நண்பர் ஒருவரின் மகளுக்கு விஷ ஜுரம் வந்தபோது வடபழனியில் ஒரு மருத்துவமணையில் பல டெஸ்டுகள் எடுத்து கனிசமான பணத்தை பிடிங்கிவிட்டு இறதியில் இது வைரஸ் பீவர் என சில மாத்திரைகளை தந்து ஆஃப்ஷர்வேஷனில் வைத்துப் பார்க்கலாம் (மீட்டர் ஓடனும்ல) என்று ஸ்டைலாகக் கூறி பெட்டில் தங்க வைத்துள்ளனர். மருநாள்தான் மருத்தவர் புகழேந்தியை தொடர்புகொண்டு இதைக் கூறமுடிந்தது. கல்பாக்கத்திலிருந்து அவர் வந்து பார்த்துவிட்டு கூறிய செய்தி ஆச்சர்யமாக இருந்தது. "முதலில் இது வைரஸ் பீவர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரியும். அப்படி இருக்கையில் பிளட் டெஸ்ட் எடுத்து என்ன தீர்மாணிக்க போகிறார்கள். நேரடியாக சிகச்சை அளிக்காமல். இப்படித்தான் மருத்தவமணையும் ஆய்வுக்கூடமும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள்" என்று கூறினார். உடனே பெட்டை காலி செய்துவிட்டு அவர் தந்த மாத்திரைகளில் 2 நாட்களில் குணமாகிவிட்டது. டாக்டரிடம் காட்டினால் 1 வாரத்தில் குணமாகிவிடும். காட்டாவிட்டால் ஏழு நாட்களில் குணமாகிவிடும் என்பதைப்போல இருக்கிறது இது.

எனது ஒன்றுவி்ட்ட சகோதரன் ஒருவன் 10-ஆண்டுகளுக்கு முன்பு மருந்துக்கடை வைத்திருந்தான். அவன் கடைக்கு அருகே கிளினிக் வைத்துள்ள ஒரு மருத்துவருக்கும் இவனுக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாம். எந்த நோயாளி சளி, ஜீரம் என சாதரணமாக வந்தாலும் 'என்ன இவ்வளவு வீக்கா ஆயிட்டீங்க ஒரு குளுகோஸ் போட்டுருவோம்' என உடனே டிரிப்ஸ் 2 அல்லது 3 எழுதிவிடுவாராம். ஒரு டிரிப்ஸ்க்கு 20 ரூ கமிஷனாக மருத்தவருக்கு பொய்விடுமாம். சிலவேளை அறுவை சிகிச்சைக்கான துணைப்பொருள்கள் துவங்கி டிரிப்ஸ் வரை திரும்ப பாதிவிலைக்கு இவன் கடைக்கே வந்துவிடுமாம். மருத்துவ துறையும் மருத்தவ தொழில் நுட்பமும் மர்மப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களிடம் கூட்டுக் கொள்ளை என்பது எழுதாக்கிளவியாய் நடந்து வருகிறது. இந்தவாரம் ஊடகங்களை கலக்கடித்துக் கொண்டிருக்கும் சீருநீரக மோசடி செய்து தொடர் மருத்தவர்கள் கைது... என்கிற பணத்திற்காக பிணம் தின்னும் மருத்துவர்கள் மத்தியில் மருத்தவர் புகழேந்தியின் பணி ஒப்பிட முடியாது உயர்ந்து நிற்கிறது.


அவர் மருத்தவ பணியோடு மட்டுமின்றி மருத்தவம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார். அத்துறையில் நடைபெறும் எகாதிபத்திய சுரண்டலை அம்பலப்படுத்தவென இதுபோன்ற நூல்களை கடுமையான ஆய்விற்கு பின்பு வெளியிட்டு வருகிறார். இவரது எய்ட்ஸ் குறித்த சிறு நூல் பற்றிய அறிமுகத்தை எனது இவ்வார நட்சத்திரப் பதிவில் (பளிச்சென பத்துபேர் பார்க்க முடியும் என்பதால்) இடலாம் என்று எழுதினேன். அதற்குள் தியாகு பதிவில் அதனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. எனது பதிவைவிட அப்பதிவு முழு நூலின் சுருக்கத்தையும் தந்துள்ளது. அதனால் நூல்குறித்த கருத்தை விட்டுவிட்டேன். பதிவுலகின் வழியாக பல இடங்களுக்கும் பரப்பப்பட வேண்டிய கருத்து இந்நூலில் உள்ளது என்பதால் இப்பதிவின் சுட்டியை அறிமுகப்படுத்தவே இப்பதிவு. சுட்டி கீழே...http://thiagu1973.blogspot.com/2007/10/hiv.html


பதிவலக வாசகர்கள் அதுவும் அமேரிக்க ஐரோப்பியாவில் உள்ள நண்பர்கள் இதில் குறிப்பிட்ட நூல்களையும் அதனை ஒட்டிய ஆய்வுகளையும் பதிவிட்டால் அணு ஆயுதத்தைவிட பன் மடங்கு அழிவுத்தரக்கூடிய உயிரியல் ஆயுதங்களை அம்பலப்படுத்தலாம். இது இன்றைக்கான அவசியமான சமூகப்பணியாகும்.

மருத்துவதுறையில் நிலவும் நவீன மாயைகளில் ஒன்று. மருத்தவர் தொழிலுக்கு நேர்மையானவர் என்பது. பிற தொழில் செய்பவர்களை அவ்வளவு எளிதாக நம்ப மாட்டோம். ஆணால், மருத்துவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். அவர்கள் நேர்மையுடன்தான் நடந்துகொள்வார்கள் என்கிற கருத்து பொதுபுத்தியில் பதிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்தவர் என்பவர்கள் மனிதரிலும் மேம்பட்டவர் என்பதான ஒரு பிம்பமும் நிலவிவருகிறது. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் நிலவும் உறவிலும் ஒரு மேல்-கீழான படிமுறை அமைப்பு நிலவிவருகிறது. ஒருவர் மருத்தவர் ஆவதற்கான செலவினங்கள் மக்களிடமிருந்து பெறப்படுகிறது என்பது வேறு. ஒரு உடலை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான முழுசுதந்திரமம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தனது உடலை அதீத நம்பிக்கையின் விளைவாக ஒருவர் மருத்துவரிடம் ஒப்படைக்கிறார். மருத்தவமுறையும் சிகிச்சையும் மிகவும் மர்மமான ஒரு சடங்குபோல நடை பெறுகிறது. அது குறித்து யாரும் கேள்விகள் கேட்பதில்லை. அவ்வப்போது வெளிப்படும் ஒன்றிரண்டு பிரச்சனைகள் மட்டுமே பிரச்சனைக்குரியதாக உள்ளது. மருத்துவர் சொன்னார் என்றால் அதை முழுமையாக நம்பும் நிலையில்தான் இருக்கிறார்கள் மக்கள். மக்களின் அறியாமை அவர்களக்கு சாதகமாகிவிடுகிறது. இந்நிலையில் மருத்தவர்களிடமிருந்து ஒரு குரல் மக்களுக்கு சார்பாக வெளிப்பட்டிருப்பதுதான் மருத்துவர் புகழேந்தியின் தனிச்சிறப்பாகும். இவர்போன்று இருக்கும் உங்களுக்கு தெரிந்த மக்கள்நல தொண்டர்களை பதிவின்மூலம் வெளிப்டுத்துவது. நடிகை நடிகர்களின் பின்னால் வாலாட்டித் திரியும் ஊடகங்களுக்கு ஒரு மாற்றாக அமையும்.

மருத்துவர்கள் குறித்து இத்தனை மதிப்பு சமூகத்தில் இருந்தும் அவர்களது சமூக பொறுப்பும், தனிமனிதர் என்றவகையில் நிலவும் அறமும் கேள்விக்கரியதாக உள்ளது. பெண்களை வைத்து நீலப்படம் எடுக்கும் ஒரு மருத்துவர். சிறநீரகம் திருடும் மற்றொரு மருத்தவர். பிணத்தை 2 நாட்களுக்கு அவசரச் சிகிச்கைப் பிரிவில் வைத்து காசு பண்ணும் மருத்தவ மணைகள். சுகப் பிரசவங்களைக்கூட அறவை சிகிச்சையாக மாற்றி பணம் பண்ணும் மகப்பேரு மருத்துவ மணைகள். இப்படி இதனை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றின் பிண்ணனி வசதியாக வாழ்தல் பணம் சேகரித்தல் மட்டுமே ஒரே குறிக்கோள் என்பதுதான். வசதியாக வாழ்தல் என்றால் என்ன? என்பது இதன் அடிப்படையாக எழும் அடுத்தக் கேள்வி. ஆக, மருதத்துவர் என்பவர் சராசரி மனிதனின் அறிவுத் திறனிற்கும் மேம்பட்ட அறிவோ, அந்தஸ்தோ கொண்டவர் அல்ல என்பதை பொதுப்புத்தியில் பதிவுறுத்தவது அவசியம்.

நூல் பெயர்:
எய்ட்ஸ்- ஓர் உயிரியல் போர் ஆயுதம்? - மருத்துவ வீ.புகழேந்தி.

நூல் கிடைக்குமிடம்:
சூழல் பாதுகாப்பிற்கான மருத்தவர் குழு
Docters of Safer Environment
225-A, நேருர தெரு, ஜீவா நகர்
புதுப்பட்டினம், காஞ்சிபுரம் - 603102


மருத்துவத்தின் ஆய்வு தர்க்க அடிப்படைகள் குறித்து நம்ம ஸ்டைலில் அடுத்த பதிவில் பார்க்கலாம்.


46 comments:

மு.மயூரன் சொன்னது…

//மருத்துவ துறையும் மருத்தவ தொழில் நுட்பமும் மர்மப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களிடம் கூட்டுக் கொள்ளை என்பது எழுதாக்கிளவியாய் நடந்து வருகிறது//

மிகப்பெறுமதியான கருத்து.

நூல் அறிமுகத்துக்கு நன்றி

மருத்துவத்துறை மோசடிகள் பற்றிய இன்னொரு கண்ணோட்டத்தினை மைக்கல் மூர் தன்னிடைய சிக்கோ படம் மூலம் தந்திருக்கிறார்.

அதுபற்றிய பதிவு

லக்ஷ்மி சொன்னது…

ஒரு நல்ல மனிதரைப் பற்றி உயர்வான நோக்கங்களுடன் வாழும் ஒருவரைப் பற்றி அறியத்தந்திருக்கிறீர்கள். நன்றி ஜமாலன்.

மாயன் சொன்னது…

அய்யா,

இப்ப தான் எங்க தளத்துக்கு வந்திருக்கீங்க...

ஏதோ ஆங்கில படத்தில் பார்த்ததாக ஞாபகம். மருந்துகள் விற்று பணம் பண்ண வேண்டும் என்பதற்காக.. அவர்களே ஒரு எக்ஸ்பர்ட் குழு அமைத்து கிருமிகளை உண்டு பண்ணுவார்கள்... GளோBஆளீZஆTஈஓந் தரும் ச்பெகிஅல் எஃப்ஃபெக்ட் இவை எல்லாம்....

கம்ப்யூட்டரில் வரும் வைரஸ்களும் அப்படியே... ஆன்டி வைரஸ் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களே வைரஸ்களை தயாரிக்கிறது... வைரஸ் புரோகிராம் எழுத திறமை வாய்ந்த மென்பொருள் நிரலமைப்பாளர்கள் தேவை என்ற விளம்பரங்களை கூட நான் பார்த்திருக்கிறேன்...

மாயன் சொன்னது…

அய்யா,

இப்ப தான் எங்க தளத்துக்கு வந்திருக்கீங்க...

ஏதோ ஆங்கில படத்தில் பார்த்ததாக ஞாபகம். மருந்துகள் விற்று பணம் பண்ண வேண்டும் என்பதற்காக.. அவர்களே ஒரு எக்ஸ்பர்ட் குழு அமைத்து கிருமிகளை உண்டு பண்ணுவார்கள்... GLOBALIZATION தரும் special effect இவை எல்லாம்....

கம்ப்யூட்டரில் வரும் வைரஸ்களும் அப்படியே... ஆன்டி வைரஸ் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களே வைரஸ்களை தயாரிக்கிறது... வைரஸ் புரோகிராம் எழுத திறமை வாய்ந்த மென்பொருள் நிரலமைப்பாளர்கள் தேவை என்ற விளம்பரங்களை கூட நான் பார்த்திருக்கிறேன்...

மாயன் சொன்னது…

மருத்துவத்துறையின் சாதனைகளை சொல்வதானால் ஒரு பதிவு பத்தாது... எல்லா மருத்துவர்களும் அப்படியா என்று யாரவது சண்டைக்கு வந்து விட போகிறார்கள்... இல்லை.. உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட அஞ்சு ரூபா வைத்தியர்.. மயிலாடுதுறையில் இதே போல் ஒரு மருத்துவர் இருப்பதாக வலைப்பதிவு ஒன்றில் படித்ததாக ஞாபகம்..

எனக்கு தெரிந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் ராஜாராம் என்று ஒரு மருத்துவர் இருந்தார்.. அநாவசியமாக எந்த டெஸ்ட்டுக்கும் எழுதி தர மாட்டார்... மருத்துவ தொழிலில் பற்றும் மனித நேயமும் இருந்தால் அடுத்தவர் உயிருடன் விளையாட மாட்டார்கள்...

ramachandranusha(உஷா) சொன்னது…

தொலைக்காட்சிகளில் விதவிதமான மருத்துவர்கள் சர்வரோக நிவாரணியாய் காட்சியளிக்கிறார்கள். நம் பத்திரிக்கைகள்
அனைத்திலும் ஏதாவது ஒரு ஆனந்தாவும், ஒரு மருத்துவரும் ஒரு தொடர் எழுத தொடங்கிவிடுகிறார்கள், மருத்துவமனைக்கும் ஆஸ்ரமத்துக்கு விளம்பரமும் ஆயிற்று நன்கு திட்டமிட்டு இவ்விரண்டு ஊடகங்கள் மூலமாய் மக்களை மூளை சலவை செய்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அலோபதிக்கு மாற்று என்று, ஆங்கில மருந்துகளின் விலையை விட அதிக விலையில் மாற்று
மருத்துவத்தில் பணத்தை தொலைக்கிறார்கள்.மருத்துவம் என்பது சேவை என்பதில் இருந்து வியாபாரம் என்று ஆகிவிட்டதால்,வியாபாரத்தில் மனசாட்சிக்கு இடமில்லை :-)

கையேடு சொன்னது…

போற்றப்படாத தகுதியுடைய புகழேந்திகள் பலருல் ஒருவரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

அந்த நூலை அவரது அனுமதியுடன் மின்னூலாக இணையத்தில் வெளியிட்டால் அனைவருக்கும் பயன்படுவதாக இருக்குமே.....

FloraiPuyal சொன்னது…

சென்னை வில்லிவாக்கத்திலும் இப்படி ஒரு மருத்துவர் இருந்தார். பிரபாகரன் என்று பெயர். அவரை நாங்கள் அஞ்சு ரூவா மருத்துவர் என்று தான் அழைப்போம். இப்படிப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜீவி சொன்னது…

நல்ல பதிவு, ஜமாலன்.

சமூக உணர்வுள்ள நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

இருப்பினும் அவர்கள் பெயர்களைக் கெடுக்கிற மாதிரி,சில மருத்துவர்கள்-மருந்துக்கடைகள்-் மருத்துவ பரிசோதனை ந்ிலையங்கள்-மெடிகல் ரெப்கள்- 'கூட்டுறவுகள்' இருக்கத்தான் செய்கின்றன. மருத்துவர்-மருத்துவ லேப் 'உறவு'வை வெளிப்படுத்துகிற செயலாய், "சங்கிலி" என்னும் தலைப்பில் ஆனந்தவிகடனில் நான் எழுதிய சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

அப்புறம்--
அந்த புத்தகம் கிடைக்கும் முகவரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்கோட் சரிதானா?..காஞ்சீபுரம் பின்கோட்: 631...என்று ஆரம்பிக்கும் என்பதால் இந்த சந்தேகம். இல்லை, கல்பாக்கமா?்

ஜமாலன் சொன்னது…

வாங்க மயூரன் நன்றி...

இணைப்பை பார்த்துவிட்டு எழுதுகிறேன். மைக்கல் மூரின் பாரண்ஹீட் பார்த்துள்ளேன்.

ஜமாலன் சொன்னது…

வாங்க லஷ்மி நன்றி...

அவரது நூல் சுருக்கம் தியாகுவின் பதிவில் உள்ளது சுட்டி எனது பதிவில் உள்ளது.

ஜமாலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜமாலன் சொன்னது…

//மருத்துவம் என்பது சேவை என்பதில் இருந்து வியாபாரம் என்று ஆகிவிட்டதால்,வியாபாரத்தில் மனசாட்சிக்கு இடமில்லை :-)//

உண்மைதான் உஷா அவர்களே...

ஜமாலன் சொன்னது…

வாங்க கையெடு...

பின்னோட்டத்திற்கு நன்றி..

ஜமாலன் சொன்னது…

Anonymous said...

//அந்த நூலை அவரது அனுமதியுடன் மின்னூலாக இணையத்தில் வெளியிட்டால் அனைவருக்கும் பயன்படுவதாக இருக்குமே.....//

நூல் சிறிய பிரசுரம் அளவுதான் விலை 10ரூ. மட்டுமே. தியாகுவின் பதிவில் அந்நூல் சுருக்கம் உள்ளது. அது பயனுள்ள சுருக்கம்தான்.

நன்றி

ஜமாலன் சொன்னது…

FloraiPuyal said...

வாங்க.. தகவலுக்கு நன்றி.

ஜீவி.

பின்கோடு சாரிபார்த்துவிட்டேன். நூலில் உள்ளது அந்த எண் சரியானதுதான். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

பத்மா அர்விந்த் சொன்னது…

மிக பெரும் நிறுவனங்கள் தங்க்களுடைய செயற்கை இடுப்பு எலும்பை hip replacement)விற்க சில மருத்துவர்களுக்கு சில மில்லியன் டாலர் கணக்கில் இலஞ்சம் கொடுத்து, ஹிப் மாற்று அறுவை சிகிச்சை தேவை இல்லாதோருக்கும் பரிந்துரை செய்து, பில்லியன் கணக்கில் பொருள் ஈட்டினார்கள். இது தெரியவர நடந்த வழக்கில், மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கு பதில், நிறுவங்கள் ஒரு பேர ஒப்புதல் படி (plea bargain)11 மில்லியன் கப்பம் கட்டியதோடு வழக்கு முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் நேர்மையாக செயல்படும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

பைத்தியக்காரன் சொன்னது…

மிக, மிக நல்ல பதிவு ஜமாலன்.

தத்துவம், விசாரணை, சமூகவியல், வரலாறு குறித்த ஆய்வுகள்... இவை அனைத்தையும் தாண்டி சக மனிதனின் செயல்களை போற்றுவதும், நான்கு பேருக்காவது அறிமுகப்படுத்துவதும்தான் மிகப்பெரிய சமூகக் கடமை என நினைக்கிறேன்.

மாற்றங்களை ஒருபோதும் தத்துவங்கள் கொண்டுவராது. தத்துவங்களை உள்வாங்கி 'அது'வாக வாழும் வாழ்க்கையே மாற்றங்களை கொண்டு வரும். மருத்துவர் புகழேந்தி போன்றவர்களாலேயே மருத்துவத்துறையும் மக்களுக்கானதாக மாறும்.

எளிமையாக எழுதப்பட்ட சரியான பதிவு.

இதன் தொடர்ச்சியாக மருத்துவத்துறை தொடர்பான உடல் அரசியலை குறித்த ஒரு அறிமுகத்தை எதிர்பார்க்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டாக்டரிடம் காட்டினால் 1 வாரத்தில் குணமாகிவிடும். காட்டாவிட்டால் ஏழு நாட்களில் குணமாகிவிடும் என்பதைப்போல இருக்கிறது இது.//

:))

மருத்துவர் புகழேந்தி - க்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் !

மருத்துவர், நீதிபதி, ஆசிரியர் எவரும் புனிதர்கள் அல்ல. எல்லோருமே காசுக்கு வேலை செய்பவர்களாக மாறிவிட்டார்கள்.
இவர்களின் சேவையை வைத்து புனிதராக போற்றப் பெற்றதெல்லாம் போய்விட்டது. தம்மீது உள்ள மதிப்பை தவறாக பயன்படுத்திக் கொள்வதால் இவர்களால் உண்மையிலேயே அந்த தொழிலை நேசிப்பவர்களுக்கும் கெட்டப் பெயர். பெரும்பாண்மையினர் அதிகம் சுரண்டுபவர்களாக இருப்பதால்... கூலிக்கு மாரடிக்கும் லிஸ்டில் இவர்களை தாரளமாக நினைக்கலாம்.

ஜமாலன் சொன்னது…

பத்மா அர்விந்த் said...

வாங்க... நன்றி. நல்லதொரு கருத்தை தந்துள்ளீர்கள்.

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரன் said...

//மாற்றங்களை ஒருபோதும் தத்துவங்கள் கொண்டுவராது. தத்துவங்களை உள்வாங்கி 'அது'வாக வாழும் வாழ்க்கையே மாற்றங்களை கொண்டு வரும். //

ஏற்புடைய கருத்து. நன்றி.

//இதன் தொடர்ச்சியாக மருத்துவத்துறை தொடர்பான உடல் அரசியலை குறித்த ஒரு அறிமுகத்தை எதிர்பார்க்கிறேன்.//

அது பெரிய திட்டம்... நிறைய ஆய்வுகள் அப்படையில் செய்யப்பட வேண்டியவை. முடிந்தவரை முயற்சிப்போம்..

ஜமாலன் சொன்னது…

கோவி.கண்ணன் said...

//மருத்துவர், நீதிபதி, ஆசிரியர் எவரும் புனிதர்கள் அல்ல. எல்லோருமே காசுக்கு வேலை செய்பவர்களாக மாறிவிட்டார்கள்.//

உண்மைதான் கோவி...

//பெரும்பாண்மையினர் அதிகம் சுரண்டுபவர்களாக இருப்பதால்... கூலிக்கு மாரடிக்கும் லிஸ்டில் இவர்களை தாரளமாக நினைக்கலாம்.//

உங்களது புரிதலுக்கும் உணர்வகளை பபகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

Bruno சொன்னது…

Some time ago, an american university wanted to test the "integrity of reflex arc" in leprosy patient....

They also wanted to compare that with those of normal persons.

They wanted to do in India and applied for ethical clearence

( I think it will be better if I give the rest of the details in Tamil without any hi-fi terms.... will continue from a computer where tamil can be typed)

ஜமாலன் சொன்னது…

Bruno said...

//( I think it will be better if I give the rest of the details in Tamil without any hi-fi terms.... will continue from a computer where tamil can be typed)//

thanks Bruno...

Expect from you good details about this and also thanks once again for your committment.

RATHNESH சொன்னது…

அநாவசியமாக ஊசி போடாத, 'குழந்தைக்கு மூக்கு ஒழுகினால் பரவாயில்லை; தானாக நின்று விடும்; மருந்து கொடுக்க வேண்டாம்; குழந்தையின் இயற்கையான இம்யூனிட்டி, உணவுகளால் பெருகட்டும்' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு குழந்தைநல மருத்துவர் நாமக்கல்லில் இருக்கிறார். பெயர் டாக்டர் எழிலரசு.

"குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்கலாமா?" என்று கேட்கின்ற பெற்றோர்களிடம், "தேவையில்லை; சத்து மா கஞ்சி கொடுங்கள்" என்று கூட்டுப் பக்குவம் வரை நான் சொன்னால் நம்மை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்; தினம் ஒரு முட்டை கொடுங்கள், விளம்பரங்களில் காட்டுகின்ற போஷாக்கு பானங்கள் தேவையற்றவை என்று சொல்லும் போதும், என்னைப் போலி டாக்டர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று தோன்றும். கிராமத்து ஏழை பாழைகளும் கூட தொலைக்காட்சி விளம்பரங்களால் மிகவும் தவறான எண்ணங்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்" என்று வருந்துவார்.

எப்படியோ ஆக வேண்டிய திறமையும், முகராசியும், கோபமே படாத புன்னகையும், அறிவும் இருந்தும் எளிமையாக மட்டுமே இன்னும் ஒரு சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வாடகை இடத்தில் கிளினிக் நடத்தி வருகிறார்.

அதே ஊரில், இன்னொரு மருத்துவர் குறித்து, 'எல்.ஐ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருத்துவர்' என்று ஒரு சுவர் விளம்பரம் பார்த்தேன். (அதிக பிரிமியம் கட்டாமலேயே பாலிஸி தொகை கிடைக்கப் பெறுமாறு சிகிச்சை அளிப்பவரோ என்று நினைத்துக் கொண்டேன்). சில ஊர்களின் லோக்கல் தொலைக்காட்சி அலைவரிசைகளில், 'உங்களுக்குக் காய்ச்சலா, நெஞ்சு வலியா, சிகிச்சைக்கு இன்ன டாக்டரை அணுகுங்கள்' என்று விளம்பரம் வரும் அளவுக்கு இறங்கி விட்டார்கள்.

டாக்டர் புகழேந்தி பற்றி எழுதி எல்லோரையும் அவரவர்க்குத் தெரிந்த நல்லவர்களைப் பற்றி எண்ண வைத்தீர்களே அதுவே ஒரு நல்ல சேவை.

அருமையான பதிவுக்கு நன்றி.

எனக்கு எப்போதும் தோன்றுகின்ற ஒரு என்ணம்: சிகிச்சையின் பொருட்டு தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் கூட மருத்துவரைப் பார்க்கப் போகிறோம். ஆனால் குணமடைந்த பிறகு ஒரு முறை அவரைப் போய்ப்பார்த்து ஒரு வார்த்தை நன்றி சொல்லும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது? (நான் கூடியவரை அதனைக் கடைப்பிடிக்கிறேன்). இந்த விஷயத்தில் நாம் டாக்டர்களைக் கடவுள் மாதிரி பாவிக்கிறோம் என்பது நிஜம்.

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...

நீண்ட பின்னொட்டத்திற்கம் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.நாமக்கல் டாக்டர் போன்று நிறைய பேர் உள்ளனர். அவர்களை பாராட்ட ஆளிருந்தால் அவர்களத பணியில் ஒரு ஊக்கமும் அவர்கள் செய்வதற்கு ஒரு அர்த்தமும் இருக்கும்.

//இந்த விஷயத்தில் நாம் டாக்டர்களைக் கடவுள் மாதிரி பாவிக்கிறோம் என்பது நிஜம்.//

யாரும் கடவுளுக்கும் நன்றி சொல்வதில்லை என்கிறீர்களா? டாக்டருடன் தொழில்ரீதியாக இல்லாமல் ஒரு உறவை வளர்த்துக்கொள்ள இந்த ஆஆலோசனை நன்றாகத்தான் இருருக்கிறது. நன்றி.

Bruno சொன்னது…

தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறனை சோதிக்கஒரு பரிசோதனை செய்யஅமேரிக்க மருத்துவர்கள் எண்ணினார்கள்

இதில் தப்புஓன்றும்இல்லை தான்

ஆனால்சோதனை என்னவென்றால் கையில் சிறு அறுவை சிகிச்சை செய்து(!!!) சில எலக்ட்ரோடுகளை பொறுத்தவேண்டுமாம் (??) அப்படி அறுவை சிகிச்சை செய்தபின் கை விரல்கள் முன்னைவிட மோசமாகவும் வாய்ப்புள்ளது.... (இதுஎப்படிஇருக்கு) முன்னேற்றமடையவும்வாய்ப்புண்டு... ஆனால்அதற்கு வாய்ப்பு கம்மி..... சுமார் 1 சதவிதம்..... அதாவது ஆயிரம் நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10 நோயாளிகளுக்கு கை சிறிது குணமாகும், 10 நோயாளிகளுக்கு கை அப்படியே இருக்கும்.... 980 நோயாளிகளுக்கு மோசமாகும் :( :(

இதை விட கொடுமை ஒன்று உண்டு...... ஒப்பிட்டு பார்ப்பதற்கு (to compare with a physiological reflex arc) இந்த அறுவை சிகிச்சை செய்ய தொழுநோய் (மற்றும் எந்த நோயும் இல்லாத) 5 volunteers வேறு வேண்டுமாம்....... (சோதனை முடிந்தபின் கை ஹோகயா )

யார்செய்த புண்ணியமோ இது ethics committee முன் வந்தபோது நமது மருத்துவர்களில் ஒருவர் தூங்காமல் இருந்தார்....

கேட்ட கேள்விகளும், அதற்கு ஆராய்ச்சியாளர்கள் அளித்த பதில்களும்

Q கேள்வி: Why do you want to do this research in India . Why can't you do it in America
A பதில்: Leprosy is more prevalent in India. Leprosy is almost eradicated in Our country. So we want to do that here (சரி)

Q : Why do you want to choose the Volunteers from India. You have a lot of healthy people in your country. Isn't it ??
A : Since we want to compare the results, we need to choose both the cases (தொழுநோயாளிகள்) and controls (ஆரோக்கியமானவர்கள்) from the same locality (ஆஹா !!)

Q: what will happen if a volunteer (ஆரோக்கியமானவர்) is not able to use his / her hand after your procedure (
A : we are fully qualified surgeons and we have full confidence in our capability that our surgery will be a success. (எங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு)

Q: The committee clears the proposed clinical trial, but at least two of the volunteers should be from the Test Team.

அதாவது ஆராய்ச்சி குழுவில் (அமேரிக்கர்களில்) இருவரிடம் அறுவை சிகிச்சை செய்தபின்னர் இந்தியர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது......
-----

அனுமதி பெறவந்தவர் அடுத்த விமானத்தில் திரும்பி சென்றுவிட்டார் என்பதை நான் சொல்லவேண்டுமா....


Why I have written this long story is to highlight the fact
1.That there is something called as Ethical Committee
2.Clearance has to be got from that committee for Any Clinical Trial
3.The Ethical Committee was a very low key affair in those days (and they had full libertry)
4.But now, every clinical trial starts as a very high profile function, with two or three ministers or Collector / SP as the chief guest
5.They apply for clearance AFTER this grand function
6.This puts a lot of pressure on the doctor, who is potrayed as ANTI - DEVELOPMENTAL.

Bruno சொன்னது…

//விளம்பரங்களில் காட்டுகின்ற போஷாக்கு பானங்கள் தேவையற்றவை என்று சொல்லும் போதும், என்னைப் போலி டாக்டர் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று தோன்றும்.//

என் மீது இந்த முத்திரைவிழுந்து ரொம்ப நாள் ஆச்சு

http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayurveda.html

RATHNESH சொன்னது…

டாக்டர் புரூனோ சார்,
அந்த ஆய்வாளர்கள் பார்க்க வேண்டியவர்க்ளைப் பார்த்து கவனிக்க வேண்டிய விதத்தில் சரிவர கவனிக்கவில்லை போலும், அதனால் தான் எதிகல் கமிட்டியில் சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் இருக்கிற மாதிரி கமிட்டி அமைக்கப் பட்டு விட்டதோ? ஏனென்றால் வெளித் தெரியாத குஷ்டரோக கைகளுடன் (வாங்குகிற கைகளைச் சொல்கிறேன்) நிறையப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்கள், என்னத்தை ஆராய்ச்சி செய்து . . . என்னத்தைக் கண்டுபிடிச்சு . . . .

ஜமாலன் சொன்னது…

Bruno said...

உங்கள் தொடர் பின்னோட்டம்.. அதன் விபரங்கள் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் வலைத்தளத்திறல் உள்ள விவாதங்களையும் படித்தேன்.

நேற்று மருத்து ஆய்வுமுறை குறித்து அதன் மேமற்கத்திய தத்துவ அடிப்படைகளுளும் கீழைத்தேய தத்தவ அடிப்படைகளையும் விளக்கி உடலை இரண்ட மருத்தவங்களும் அலோபதி மற்றும் சித்தா ஆகியவை உடல் குறித்து வைத்துள்ள கண்ணோட்டங்கள் குறித்து ஒரு நீண்ட பதிவு எழுதினேன். அதனை சரிபார்த்துவிட்டு இன்று வெளியிடலாம் என்று. அவசரத்தில் அதனை save செய்துவிட்டதாக நினைத்து கணிப்பொறியை அனணத்தவிட்டேன். அதை திரும்ப எழுதுவதும் அந்த உணர்வுநிலையை திரும்ப பெறுவதும் சிரமம் என்றாலும் திரும்ப அதனை எழுதுவதற்கு முன் உங்கள் விவாதம் அதை ஒட்டிய இணைப்புகள் என ஆய்வு தளம் வரிவடைகிறது. அதற்கு நன்றி.

அதாவது அலோபதி என்பது கார்டீசியவாதத்தின் அடிப்படையான Analytical Method-ல் உருவானது. சித்தா அடிப்படையில் Synthasize Method-ஐ கொண்டது. அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்கக்கிறது. சித்தா உடலை ஒரு முழு அமைப்பாக பர்க்கிறது. இந்நத வேறுபாடு அதன் எல்லாவித நடைமுறைகளிலும் வெளிப்படுகிறது.

எனவே, உங்கள் தொடர்பு மூலமாக இத்துறை குறித்த கூடுதல் ஆலோசனைகளைப் பெறமுடியும் என் நினைக்கிறேன். நன்றி... உங்கள் கருத்துக்களை ஒரு மீள்பதிவாக வெளியி்ட்டால் நிறைய பேர் பார்க்க படிக்க வாய்ப்ப இருக்கிறது. அனுமதித்தால் வெளியிடுகிறேன்.

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

ரத்ணேஷ்...

//வெளித் தெரியாத குஷ்டரோக கைகளுடன் (வாங்குகிற கைகளைச் சொல்கிறேன்) நிறையப் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்கள், என்னத்தை ஆராய்ச்சி செய்து . . . என்னத்தைக் கண்டுபிடிச்சு . . . .//

நுட்பமான நகைச்சவை உணர்ச்சியுடன் வெளிப்படும் உங்கள் எழுத்துகள் ஏற்ப்படுததும் ஆழ்ந்த மெளனம் அருமை. உங்களுக்க Black Humar நன்றாக வரும் போலிருக்கிறதே. அதை எழுத தமிழில் ஆள் இல்லை. excellant

Bruno சொன்னது…

சித்த வைத்திய முறை என்பது எந்த விதத்திலும் குறைந்த்தது அல்ல..... அலோபதியில் இல்லாத மருந்துகள் கூட சித்த வைத்தியத்தில் உள்ளன.... ஆனால் சித்த வைத்தியத்தை ஆதரிக்கிறேன் என்று அலோபதியை தாக்கும் போக்கே சித்த வைத்தியம் முன்னேற்றமடையாமல் உள்ளதிற்கு காரணம்.....

//அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்கக்கிறது. சித்தா உடலை ஒரு முழு அமைப்பாக பர்க்கிறது. //
I am not able to understand this....

If a doctor combines both Allopathy and Siddha, he can give better care to patient...

Bruno சொன்னது…

you are free to publish my posts... (just give a link to my blog)

Bruno சொன்னது…

http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayurveda.html

http://bruno.penandscale.com/2005/05/ayurvedic-side-effect.html

ஜமாலன் சொன்னது…

Bruno said...
//அதாவது உடலை அலோபதி பகுத்துப் பார்கக்கிறது. சித்தா உடலை ஒரு முழு அமைப்பாக பர்க்கிறது. //
I am not able to understand this....

If a doctor combines both Allopathy and Siddha, he can give better care to patient...//

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். எனது கண்ணோட்டம் அதன் தாக்கம் குறித்துதான். இரண்டையும் இணைத்து பார்ப்பது என்பது ஒரு சிறந்த முறைதான்.

//you are free to publish my posts... (just give a link to my blog)//

thanks.. I will post it today with your link...

முரளி கண்ணன் சொன்னது…

நட்சத்திர வாரத்தில் ஒரு உண்மை நட்சத்திரம் பற்றிய பதிவு. அவர் தம் சேவை தொடர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

I appreciate the work and concern shown by Dr.Pugazhendi. At the same time I disagree with the view on AIDS. This thesis was put forth in late 80s/early 90s and gained
popularity. But it has not been accepted by many.If my understanding is right even
left oriented science/health
movements do not buy this story.

தஞ்சாவூரான் சொன்னது…

திரு ஜமாலன், அருமையான பதிவு. திரு. புகழேந்தி அவர்களின் புத்தகத்தைப் படிக்க ஆவலாய் உள்ளேன். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! எய்ட்ஸ் பற்றி எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. அது உண்மையிலேயே ஒரு நோயா அல்லது அமெரிக்காவின் சதிகளில் ஒன்றா என்று!

மன்னார்குடியிலும் ஒரு 'அஞ்சு ரூவா' மருத்துவர் இருந்தார். பெயர்: தேவதாஸ். அதிகமாகப் பேசமாட்டார்.

ஃபாரன்ஹீட் பார்த்தேன். இன்னும் சிக்கோ பார்க்கவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்!!

ஜமாலன் சொன்னது…

முரளி கண்ணன் said...

//நட்சத்திர வாரத்தில் ஒரு உண்மை நட்சத்திரம் பற்றிய பதிவு. அவர் தம் சேவை தொடர வாழ்த்துக்கள்.//

நன்றி. முரளி கண்ணன். சரியாக சொன்னீர்கள்... உண்மையான நட்சத்திரம் அவர்தான்.

ஜமாலன் சொன்னது…

Anonymous said...

//I appreciate the work and concern shown by Dr.Pugazhendi.//

நன்றி.. உங்கள் பாராட்டுக்கு.

//If my understanding is right even
left oriented science/health
movements do not buy this story.//

நண்பர் அணாணிக்கு... எல்லாச் செய்திகளுக்கும் இதுபோன்ற ஒரு எதிர்ப்பு உண்டு. எதுவும் முடிந்த முடிவு அல்ல. அப்படிஒரு கருத்து இருந்தால் அதனை ஆதரங்களுடன் தந்தீர்கள் எனில் அதனையும் வெளியிட்டு இது குறித்து விவாதிக்கலாம். அந்த நூலில் பல ஆதாரங்கள் மறுக்க இயலாவண்ணம் அல்லது எங்கள் புரிதல் எல்லைக்குள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு முன் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவியுங்கள். இதனை தொடர் விவாதத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

ஜமாலன் சொன்னது…

தஞ்சாவூரான் said...

வாங்க தஞ்சாவூரான். நன்றி.

//எய்ட்ஸ் பற்றி எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. அது உண்மையிலேயே ஒரு நோயா அல்லது அமெரிக்காவின் சதிகளில் ஒன்றா என்று!//

எய்ட்ஸ் என்பது ஒரு நோய்தான். அமேரிக்க உயரியல் போர்க் கருவிகளுக்கான ஆய்வில் கண்டடைந்த ஒரு கிருமி. ஆணால், அது பாரம்பரியமாக வரும் புற்றுநோய் அல்லது வேறு ஒன்று போன்ற ஒரு நோய் அல்ல என்பதே அந்நூல் சொல்லும் கருத்து. அது தொற்று நோயும் அல்ல. அக்கிருமி இரத்ததில் கலந்தால் மட்டுமே வரும் நோய்.

//ஃபாரன்ஹீட் பார்த்தேன். இன்னும் சிக்கோ பார்க்கவில்லை.//

நானும் சிக்கோ பார்க்கவில்லை.

நன்றி.

ரவிசங்கர் சொன்னது…

இத்திரைப்படத்தை இங்கு பெறலாம்.

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

உங்களின் ஒவ்வொரு பதிவும் சேமித்து வைத்து தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கின்றேன். உங்கள் வலைதளத்தில் பெயரே மிகுந்த ஆச்சரியம் மற்றும் அற்புதம். நன்றி.

ஜமாலன் சொன்னது…

நன்றி Rathnavel
நன்றி ஜோதிஜி திருப்பூர்

ஜமாலன். Blogger இயக்குவது.