மேலும் விருது 2014

நண்பர்களுக்கு எனக்கு "மேலும்" சிறந்த இலக்கிய விமர்சகருக்கான 2014 விருது அறிவிக்கப்பட்டிருப்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நண்பர் சண்முகத்தின் இந்த அறிமுகம் மிகவும் மனநிறைவையும், எழுத்திற்கான சாதனை உந்துதல்களையும் தருகிறது. தொடர்ந்துவரும் அவரது நட்பும் உரையாடலும் என்னை செழுமைப்படுத்தயவை என்பதை பதிவதில் உவகை கொள்கிறேன். வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

(மேலும் சிறந்த இலக்கிய விமர்சகருக்கான 2014 விருது
விமர்சகர் ஜமாலனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.)

வலதுசாரி கருத்தாடல்களின் மறைசூழ்ச்சியை 
அனாசயமாகக் கீழறுப்பு செய்பவை.....
ஜமாலனின் எழுத்துக்கள்...............

தமிழ் இலக்கிய விமர்சன உலகில் உடலரசியல் / உடல்மொழி பற்றிய சொல்லாடல்களை முன்வைத்து பங்களித்தவர்களில் ஜமாலனும் முதன்மையானவர். தீவிர இடதுசாரியாக துவக்க நாட்களில் அறியப்பட்டவர் ஜமாலன். அமைப்பியல் கோட்பாடுகளுடன் கொண்ட உரையாடலின் நீட்சியாக தன்னை ஒரு தனி- அடையாளத்துடன் கட்டமைத்துக் கொண்டவர். இந்த பண்புமாற்றம் அவரை தொடர்ந்து பின் - அமைப்பியல் ; பின் - நவினத்துவம் ; பின் - காலனியம் , பெண்ணியம் ஆகிய கருத்தாங்களுடன் தன் எழுத்து முறைமையை பிணைத்துக் கொண்டு அயர்விலாது இயங்கி வருபவர். 

இலக்கியப் பிரதிகளை சமூகச் சொல்லாடல்களின் வலைப்பின்னலின் முகிழ்வாக காணும் திறன் இவருடைய பிரத்யேக குணாம்சம். மற்றும்  GillesDeleuze Felix Guattari அகியோரது Anti-Oedipus / Thousand Plateaus / Minor Literature நூற்களில் பயின்றுவரும் நுண்-அறிவாக்க அலகுகளை தனது விமர்சன அறிதல்முறைக்கான புலமாக தேர்ந்துகொண்டவர். வலதுசாரி கருத்தாடல்களின் மறைசூழ்ச்சியை அனாசயமான தனது அணுகுமுறையால் கீழறுப்பு செயபவை இவரது எழுத்துக்கள். ”மொழியும் நிலமும்” மற்றும் ”நாடோடிக் குறிப்புகள் ” ஆகிய இரு புத்தகங்களும் தமிழ் வாசகச் சமூகம் நன்கறிந்தவை. தற்போது மெளனியின் எழுத்துக்களைப் பற்றிய் தன் பார்வையை ஒரு தனிப்புத்தகமாக எழுதி வருகிறார். வ்லைத்தளத்திலும் ; முகநூலிலும் தொடர்ந்து தன் வளமான கருத்துக்களை தேவையான தருணங்களில் அழுத்தமாக பதிந்து வருபவர்.

இவரது விமர்சனப் பங்களிப்பைக் குறிக்கும் என் கட்டுரையைத் தனியொரு பதிவை வரும் நாட்களில் வெளியிடுகிறேன்.

இத்தகைய தகைமையாளருடன் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உரையாடும் விவாதிக்கும் உரிமைப் பெற்றிருக்கிறேன் என்பதில் எனக்கு அபரிதமான் மனநிறைவு உண்டு. திரைகடலோடியும் தவறாது இலக்கியம் தேடும் இவரது சோர்வில்லா ஆர்வம் நம்மைக் கவரக்கூடியதாக உள்ளது. 

இவரது எழுத்து பயணத்தின் ஒவ்வொரு தடத்திலும் உடன் பயணத்திருக்கிறேன். இவரது முதல் புத்தக வெளியீட்டிலும் , இரண்டாம் நூல் விமர்சன அரங்கிலும் ஜமாலனின் கோட்ப்பாட்டுக் கொடையைப் பற்றி பேசும் வாய்ப்பு எனக்கும் கிட்டியதில் நிறைவு காண்கிறேன். 

ஒவ்வொருமுறையும் ஜமாலன் சென்னைவரும்போதும் ;என் இல்லம் தங்கி இரவைக் கரைக்கும் விவாதங்கள் எங்களிடையே நிகழும். . எத்தனை கடுமையான உரையாடல்களிலும் நாக்குழைந்தாலும் தன்னிலை குலையாமல் நட்பு பிறழாது விவாதிக்கும் லாவகம் இவருக்க்கு உண்டு. 

என் நெருங்கிய நண்பரும் ; பெருமதிப்பிற்குரியவரான விமர்சகர் திரு: ஜமாலன் அவர்களுக்க்கு இந்த ஆண்டிற்கான மேலும் சிறந்த இலக்கிய விமர்சகருக்கான “மேலும் விருது” பேராசிரியர் சிவசு அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து ஈடில்லா உவகை கொள்கிறேன்.

ஜமாலனை இத்தருணத்தில்
 மனநெகிழ்வுடன் வாழ்துவதில் மகிழ்கிறேன்...
நண்பர்களும் இவரை வாழ்த்த அழைக்கிறேன்.

-எஸ்.சண்முகம்-

Jamalan Tamil /Carlos Sabarimuthu/ Khan Majeed / Thiru Arasu /

Shanmugam Subramaniam

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.