மும்பைத் தாக்குதலுக்கு அஞ்சலி

மும்பை தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது மிகவும் கவலையுடன் _45254492_candle_leopold_afp416   என்ன நடக்கிறது என்பதை உலக மக்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.  நானும் அலுவலகப் பணியால் வெளியில் சென்றிருந்ததால் இப்பதிவு தாமதமாக வந்துள்ளது.  பயணத்தினூடே கிடைக்கும் நேரங்களில் இதனை தொலைக்காட்சிகளில் பார்த்து வந்தேன்.

தொடர்ந்து தொலைக்காட்சிகள் ஒரு “ஹாலிவுட்“ படம்போல இதனை ஒலி“பெருக்கிக்“ கொண்டிருந்தன. மிகவும் மனத்துயரை ஏற்படுத்தும் இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருந்தது. வழக்கம்போல் ஊடகங்கள் இதனை பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுடன் ஒப்பிட்டன. இந்திய வரலாற்றில் இது ஒரு துயரமான நாள் என்பதை நிச்சயமாக நாம் குறித்துக் கொள்ளத்தான் வேண்டும்.  இறந்து போனவர்களுக்கு நமது அஞ்சலி. இங்கு எனது கண்டணத்தையும், அதிர்ச்சியின் விளிம்பில் நிறுத்திய பொதுத் தளங்களில் பாதுகாப்பற்ற நிலை நிலவும் துயர் நிறைந்த சூழலையும் பகிர்ந்து கொள்கிறேன்.

சத்ரபதி சிவாஜி எனப்படும் விக்டோரியா டெர்மினஸ் ரயில்நிலையத்தில் இருவர் மிகச்சாதரணமாக நடந்தபடி இலக்கற்று தொடர்ச்சியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.  “கேஃப்“-பில் போய் நிதானமாக பீர் குடித்துவிட்டு அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டு திட்டமிட்ட ஒழுங்குடன் எந்த தீர்மானமும் இல்லாமல் சுடத்துவங்கிய அந்த காட்சியை கற்பனை செய்தால் அவை சொல்லும் கொலை மற்றும் தற்கொலைகளின் “அழகியல் பயங்கரம்” எப்படி கருத்தியில் அடையாளங்களின் உச்சபச்ச வன்முறையாக மாறுகிறது என்பதை. 60-மணி நேரங்கள் இரண்டு நட்சத்திர ஓட்டல்களை மரண பயத்தில் வைத்துள்ளனர்.  இந்திய சிறுபாண்மையினர்களில் ஒருவர்களான யுதர்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.  மனதின் சாராம்சத்தில் இறுகும் அடையாளங்கள் மனிதனை எப்படி வழிநடத்துகிறது என்பதை இந்த தாக்குதல் புரியவைக்கிறது.  இவர்கள் யாரால் தூண்டப்பட்டு எந்த நோக்கத்திற்காக செய்திருந்தாலும் மனித உயிரின் மதிப்பற்றத்தனத்தை வெளிப்படுத்தும் கொடூரம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

- ஜமாலன் 01-12-2008.

image courtsey BBC- மும்பையில் இறந்தவர்களுக்க அஞ்சலி செலுத்தும் பெண். 

4 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஆம்.

கல்வெட்டு சொன்னது…

//மனதின் சாராம்சத்தில் இறுகும் அடையாளங்கள் மனிதனை எப்படி வழிநடத்துகிறது என்பதை இந்த தாக்குதல் புரியவைக்கிறது. //

well said !!

ஜமாலன் சொன்னது…

நன்றி சுந்தர் மற்றும் கல்வெட்டு.

அன்பரசு சொன்னது…

ஆம்! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. மும்பை சம்பவம் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம். இந்தியா-பாகிஸ்தான் போர் முகாந்திரங்களை பற்றியும் எழுதலாமே!

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.