புத்தக கண்காட்சி 2013 ல் நான்


cover-front-01
புத்தக கண்காட்சி 2013 ல் வழக்கம்போல் கலந்துகொள்ளமுடியாத நிலைதான். இந்த ஆண்டோடு இந்நிலை முடிந்தது. அடுத்த ஆண்டுமுதல் கலந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். காரணம் 20 ஆண்டுகள் சவுதி வாழ்விற்கு வரும் பிப்பரவரி-13உடன் முற்றுப்புள்ளி. இனி தமிழக இந்திய சூழலுடன் ஒத்துப்போகும் ஒரு மனநிலை உடல்நிலைக்கு என்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். நண்பர் ஒருவர் கூறியதைப்போல ஒரு பிரச்சனையிலிருந்து மற்றொரு பிரச்சனைக்கு தாவுகிறேன் என்று. இருந்தாலும் புத்தகங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சந்தோஷங்கள் தமிழகத்தில்தான் கிடைக்கும். அந்த 20 ஆண்டுகால கனவுகள் இனி...



இந்த புத்தக கண்காட்சியில் எனது இரண்டாவது நூலான ”நவீனத் தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள்” புலம் கடை எண் 177 மற்றும் 178-ல் கிடைக்கும். என்னிடம் விசாரித்த நண்பர்களுக்காக இத்தகவல்.

நூல் பற்றிய குறிப்பை இங்கு படிக்கலாம் 

1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்.


MANTRACHIMIZH ,Alejandro gonzaez inarritu, TAMIL, MAGAZINE, MANTRACHIMIZH, TAMILNADU,HARUKIMURAGAMI.jpg
ஹராகி முராகாமியின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இந்த இதழ் மந்திரச்சிமிழில் எனது ”கார்டீசிய மனங்களும் கார்டுனாகிய உடல்களும்” பகுதி-3 ”இந்திய இடிபலாக்கம் - தலைகீழாக்கப்பட்ட பிராய்ட்” வெளிவந்து உள்ளது. ஆர்வம் உள்ள நண்பர்கள் அதில் வாசிக்கலாம்.


உள்ளடக்கம்


http://issuu.com/jamalan/docs/manthirachimil_dec_2012_contents?mode=window&viewMode=singlePage

அன்புடன்
ஜமாலன் 16-01-2013

2 comments:

வவ்வால் சொன்னது…

ஜமாலன்,

புதிய நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!

நீங்க ஒரு இலக்கிய தீவிரவாதி என்பதால் ,உங்கள் பதிவுகளை படிச்சிட்டு அப்படியே ஓடிவிடுவது வழக்கம் :-))

ஹி..ஹி உங்க நூல் படிச்சா எனக்கு புரியுற அளவுக்கு இருக்குமா, குறியீடுகளை தேடி புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு இன்னும் மூளை வளரவில்லை அதான், புரியும் என்றால் துணிந்து வாங்குவேன் :-))

ஜமாலன் சொன்னது…

நண்பர் வௌவால் நலமா? பதிவுகளில் பலமுறை உரையாடி உள்ளோம். நீண்ட நாயாய் காணவில்லை. எனது அனுபவத்தில் நீங்கள் ஒரு தீவிர வாசகர்தான் என்பதில் சந்தேகமில்லை. தவிரவும், ஒரு எழுத்தாளனாக புரிந்துவிடும் போன்ற உத்தரவாதங்களை எல்லாம் தரமுடியுமா என்ன? ஹா ஹா.. இருந்தாலும், புரியாத பலவும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சட்டென புரிந்துவிடும். வாசிப்பு என்பது தருணம் சார்ந்ததும் அனுபவம் சார்ந்ததும் என்பது எனது திண்ணமான எண்ணம். எனக்கு புரியவில்லை என்பதற்காக அந்த நூல்களை நான் வாசிக்காமல் விட்டதில்லை. அவை புரியும் தருணத்திற்காக காத்திருப்பேன் அவ்வளவே? முயற்சித்து பாருங்கள். ஒரு உத்திரவாதம் தரலாம். புரியாததை நீங்கள் என்னிடம் அஞ்சலில் கேட்டால் அல்லது உரைாயடல் வாய்க்கப்பெற்றால் அதில் விவரிக்க முயல்வேன். அதில் இருவருக்குமே புரிதல் கூடுதலாக வாய்ப்புண்டு. நன்றி உங்கள் கருத்திற்கு :) :) :)

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.