கால அடுக்கு

வா
போ
வரலாம்
போகலாம்
வரபோகலாம்
போகவரலாம்
வந்துபோகாமல்
போனதுவராமல்
வராமலேபோகலாம்
போகாமலேவரலாம்

இருந்தும் இல்லாமலும்
இல்லாமல் இருந்தும்
வாழ்ந்தும் வாழாமலும்
வாழாமல் வாழ்ந்தும்
செத்தும் சாகாமலும்
சாகாமல் செத்தும்

இருளில் அடர்ந்து
வெளிச்சத்தில் படரலாம்
வெளிச்சத்தில் அடர்ந்து
இருளில் படலராம்
இருளில் படர்நது
வெளிச்சத்தில் அடரலாம்
வெளிச்சத்தில் படர்ந்து
இருளில் அடரலாம்

வரிசைமாத்தி வரிசைமாத்தி வாழ
நீயாக நான்
நானாக நீ
எண்களில் வெறுமையில்
தலைகுப்பற வீழ்ந்து
கலைந்தபடி விரிகிறது
கால அடுக்கு.

-ஜமாலன் 23-07-2011

5 comments:

சுகி சொன்னது…

வாந்தாய் வாராமல் சென்றாய் செல்லாமல் நின்றாய் நில்லாமல் கடந்தாய் கடக்காமல் தவித்தேன்
போ என்றாய் வந்தேன் வா என்றாலும் வந்தேன் நில் என்றாலும் நின்றேன்
விடாமல் நீயாய் விலகாமல் நானும்
நீ நானாக நான் நீயாக முடிவில்லாமல்
கரைந்தோம் ..

Rathnavel சொன்னது…

அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜமாலன் சொன்னது…

நன்றி சுகி மற்றும் ரத்னவேல்

manjoorraja சொன்னது…

இனிய வாழ்த்துகள்

நல்லா இருக்கு

ஜமாலன் சொன்னது…

@ manjoorraja நன்றி

ஜமாலன். Blogger இயக்குவது.