நண்பர்களுக்கு, எனக்கு வந்த மின்-அஞ்சலை இங்கு பதிவர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன். ஞாநி தமிழ் எழுத்தலகத்திலும், பத்திரிக்கை, நவீன நாடகம் மற்றும் ஊடகத் துறைகளில் நன்கு அறிமுகமானவர். அவரது நிர்வாகத்தில் துவங்கப்படும் இந்த இயக்கத்திற்கு உங்கள் பங்களிப்பை செய்யுமாறு கெட்டுக் கொள்கிறென்.
வாய்ப்புள்ள சென்னை பதிவர்கள் நேரில் சென்று கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றி பதிவிட்டால் எங்களைப்போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாகும். கழித்துக் கட்டப்படவேண்டிய நுகர்வுப்பண்டமாக நசிந்து வரும் தமிழ் சினிமா என்கிற கனவுத்தொழிற்சாலையிலிருந்து காட்சிகாண் ஊடகத்தை, சினிமா என்கிற திரை இலக்கியத்தை உருவாக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியமானவை. தமிழர்கள் பலதுறைகளிலும் அடைந்துள்ள வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது இந்த சினிமா என்கிற திரைஊடகம் விற்பனை செய்த கனவுகள்தான். தமிழனின் ஆழ்மனதில் சினிமா புரிந்டதிருக்கும் அவலங்கள் சொல்லி மாளாதவை. சினிமாவின் ஒளிர்திரைக் கனவுகளை காசுகொடுத்து வாங்கி அது உருவாக்கிய நகல்போலி உலகில் வாழ்ந்து, வாழ்ந்து இன்று உண்மையான தமிழன் என்பவன் ஏதோ ஒரூ மூலப்பிரதியின் பெருகி் கொண்டிருக்கும் ஒரு நகலாக மாறி, இந்த நகலையே உண்மையாக நம்பி வாழ வைத்துக்கொண்டிருப்பது சினிமா. தமிழ் சினிமாவை கடைத்தேற்ற இதுபோன்ற முயற்சிகள் அவசியம். தோழர் ஞாநியின் இம்முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.
கோலம் - வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழாவுக்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 அன்று மாலை உங்களை எதிர்நோக்குகிறேன். அன்புடன் ஞாநி dear friend i look forward to you at the inauguration of kolam - direct to home cinema movement through DVD on august 13 evening. the tamil invite is attached herewith. gnani |
- ஜமாலன் ஆகஸ்ட் 11 2009
2 comments:
invitation இல்லாமல் போக முடியுமா???
இது பொது நிகழ்ச்சிதான். அனைவரும் கலந்தகொள்ளத்தான் அழைத்துள்ளனர்.
கருத்துரையிடுக