எட்டுதிக்கும் - மொழிபெயர்ப்புகளுக்கான புதிய தளம்.

பலவிதமான தமிழ் வலைப்பதிவுகளுக்கிடையில் மொழிபெயர்ப்புகளை மட்டுமே குறியாகக் கொண்டு ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எட்டுதிக்கும் என்கிற பெயரில் இயங்கும் இத்தளத்தில் மொழிபெயர்ப்பு முன்னொடியான ஏ.கே. ராமானுஜன் அறிமுகத்துடன் இரண்டு சங்கப்பாடல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

8tikkum

ஆர்வமுள்ள நண்பர்கள் இதில் பங்களிக்குமாறு கீழ்கண்ட அறிமுகக் குறிப்பு தரப்பட்டுள்ளது.

அறிமுகம்

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், பாரம்பரீயமும் பேசி தனது மொழியை தானே உயர்த்திக்கொண்டு வாழும் "கிணற்றுத்தவளை" வாழ்வைவிட்டு வெளியேறி உலகின் எட்டுத்திக்கும் சுழற்றியடிக்கும் காற்றை, தென்றலை சுவாசிக்க வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியையும் புரிந்துகொண்டு அதனை நமது மொழிக்குள் கொண்டுவருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமே மொழிபெயர்ப்பு.

இவ்வலைப்பதிவு மொழிபெயர்ப்பிற்காகவென தனிக்கவனம் செலுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. நண்பர்கள் இப்பணியில் இணைந்து செயல்பட ettuththikkum@gmail.com மின்அஞ்சலில் தொடர்புகொண்டு தங்களது மொழி பெயர்ப்புகளை வலை ஏற்றலாம். விதிமுறை என்று எதுவும் இல்லை. அதிகபட்சம் இலக்கியம், கலை படைப்புகள் மற்றும் அவை சார்ந்த கோட்பாடுகள், உரையாடல்கள் மற்றும் விவாதங்களை மொழிபெயர்த்து வெளியிடலாம்.

  1. நீங்கள் மொழிபெயர்க்கும் படைப்பை அல்லது கட்டுரையை மூல மொழியுடன் அனுப்பினால் அதனை மொழிபெயர்ப்பில் திறமை உள்ள நண்பர்களிடம் தந்து சரிபார்த்து வெளியிடப்படும்.

  2. அரசியல் சார்ந்த மொழிபெயர்ப்புகளை தவிர்ப்பது நலம். கலை, இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்துதல் நலம்.

  3. கூடுமானவரை ஆங்கிலம்-தமிழ் அல்லது தமிழ்–ஆங்கிலம் என இருந்தால் சிறப்பு. பிறமொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படுபவை அம்மொழிதெரிந்த நண்பர்களிடம் தந்து சரிபார்க்கப்பட்டே வெளியிடப்படும். அதற்கு சற்று தாமதமாகலாம்.

  4. வருட இறுதியில் சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து நூலக வெளியிடும் எண்ணமும் உள்ளது. அதனால் கூடுமானவரை காப்பிரைட் பிரச்சனைகள் இல்லாமல் மொழிபெயர்ப்பது நல்லது. அப்படி மொழிபெயர்த்துவிட்டாலும், அதற்கான காப்பிரைட் பெற சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நாம் முயற்சிப்போம்.

மொழிபெயர்ப்பிற்கான ஒரு வலைப்பதிவாக இதனை துவக்கியுள்ளோம். துவக்கமாக எங்களால் இயன்ற மொழிபெயர்ப்புகளை இதில் வெளியிடுகிறோம். நண்பர்கள் தங்களது மொழிபெயர்ப்புகளை அனுப்பலாம். அல்லது இதில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளையும் திருத்தலாம். இந்த கூட்டமுயற்சியால் "பலநாட்ட நல்லறிஞர் சாத்திரங்களை" தமிழில் கொண்டுவருவது நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் பயனுடையதாக அமையும்.

சிற துளிகள்தான் பெருவெள்ளத்திற்கு காரணம் என்பது நமது மூதாதைகள் கண்ட முதுமொழித்தானே….

அன்புடன்

எட்டுத்திக்கும்

 

 

ஏ. கே. ராமானுஜன் – தமிழின் “அகநிலப்பரப்பை” புறத்திற்கு எடுத்துச் சென்றவர்.

அகம் மற்றும் புறப்பாடல்கள் ஆங்கிலத்தில்..

 

பின் குறிப்பு -நானும் நணபர் நதியலை அவர்களும் தளமேலாண்மை பொறுப்பை எற்றுக் கொண்டிருந்தாலும், அதை சிறப்பற நடத்திச் செல்வது பதிவர்களான உங்கள் கைகளில்தான்.

-ஜமாலன் –28-07-2009

7 comments:

vasu சொன்னது…

ஜமாலன்,
மிக முக்கியமான பணியை இணையதளத்தில் செய்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..

மேலும், oxford university press போனவாரத்தில் ஆங்கிலம்‍/தமிழ் புது அகராதியை வெளியிட்டிருக்கிறார்கள். மிக விரிவான வெளியீடு..ஆனால் பல நவீன/பின் நவீனத்துவ‌ இலக்கிய சொற்கள் இல்லை என்பது குறையே..இருப்பினும் க்ரியாவுக்கு பிறகு ஒரு அகராதி வந்திருப்பது வரவேற்க்கத்தக்க விஷயம்..

வாசு.

ஜமாலன் சொன்னது…

நன்றி வாசு... கண்டிப்பாக கிரியாவின் அகராதி ஒரு முக்கிய பங்களிப்புதான். இந்த பதிய அகராதியையும் வாங்கிவிட வேண்டும். தொடர்ந்து உங்களைப் பின்னோட்டங்களில் வாசித்து வருகிறேன். உங்களுக்கு பிளாக் உண்டா? மறைந்து வாழ்கிறீர்களோ..))) பின்நவீனத்தம் என்ற பெயரில் எங்களைப் போன்றவர்கள் அடிக்கும் ஜல்லிகளுக்கு மத்தியில் அதுகுறித்து விரிவாகவும், விபரமாகவும் பேசக்கூடியவர் நீங்கள் என்பதை உங்கள் பின்னோட்டங்கள் காட்டுகிறது. எழுதுங்கள். மொழிபெயர்ப்புகள் இருந்தால் அனுப்பி வையுங்கள்.

நன்றி

அன்புடன்
ஜமாலன்.

vasu சொன்னது…

ஜமாலன்,
எனக்கென்று வலைப்பூ இல்லை. மறைந்தெல்லாம் வாழவில்லை.என் பெயரில்தான் பதிவு செய்கிறேன். படித்ததை என் அறிவுக்கு எட்டியதை பின்னூட்டங்களாக எழுதுகிறேன்/புரிந்து கொள்கிறேன்..அவ்வளவே..(80களில் உங்களை அ.மார்க்ஸ் தஞ்சாவூர் வீட்டில் பார்த்து பேசியிருக்கிறேன்)..

ஜமாலன் சொன்னது…

வாசுவிற்கு..

உங்கள் மின்-அஞ்சல் முகவரி இல்லாததால் இப்படி நாம் பேச வேண்டி உள்ளது. அ.மார்க்ஸ் வீட்டில் சந்தித்தோம் என்றால், நீங்கள் தஞ்சையா? வாய்ப்பிருந்தால் மின்-அஞ்சல் அனுப்புங்கள். அதில் பேசலாம்.

நன்றி
அன்புடன்
ஜமாலன்.

யுவன் பிரபாகரன் சொன்னது…

வாழ்த்துகள் தோழர்

ஜமாலன் சொன்னது…

நன்றி யுவன் பிரபாகரன்.

Vidhoosh சொன்னது…

புதிய அறிமுகத்திற்கு நன்றி. நல்ல பயன் தரும் வலைத்தளம் தான்.

ஜமாலன். Blogger இயக்குவது.