உரையாடிகள்

the kiss-1

புழுக்கம் தாங்கவில்லை என
சன்னல்களை திறக்க திறக்க
திரைகளில் அடர்கிறது
பல மூச்சுக் காற்றுகள்..

காற்றின் வாசனைகளால்
காதலிகளை அறிவதற்கு
கற்க வேண்டியுள்ளது நிறைய..

நெற்றிவகிடிலிருந்து உன்னை
இரண்டாக கிழிக்கத் துவங்கிய
எலிப்பல்லின் கூர் முனைப்பட்டு
கதறுகிறது உனது உதடுகள்.

உறவுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல என்றேன்
உணர்வுக்கு அது அவசியமில்லை என்றாய்
விரைப்புடனும்
வியர்வையுடனும்
எத்தனை நாளைக்கு?

பேச்சில் மைதூனம் என்றாலும்
அதுவும்
பேரின்பம்தானே என்றான்
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.

-19-06-2008

image curtsey: THE KISS - art by Gustav Klimt (1907-08)

33 comments:

Ayyanar Viswanath சொன்னது…

இந்தக் கணினி சித்தர்களின் தொல்லை தாங்க முடியாததாய் இருக்கிறதல்லவா :)

கே.என்.சிவராமன் சொன்னது…

ஜமாலன்,

எனக்கு தெரிந்து வலைப்பூவில் இதுதான் உங்கள் முதல் கவிதை என நினைக்கிறேன்...

நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

டிஸ்கி: நீங்கள், சுந்தர், நாகார்ஜுனன்... ஆகியோர் சொல்லி வைத்ததுபோல் காமம் சார்ந்து இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்... சூடு பறக்கிறது!

ஜமாலன் சொன்னது…

நன்றி அய்யனார்.

கணினி சித்தனிடம் மற்றொரு கணினி சித்தனே தொல்லை என்று சொன்னால் எப்படி? :)

கே.என்.சிவராமன் சொன்னது…

//இந்தக் கணினி சித்தர்களின் தொல்லை தாங்க முடியாததாய் இருக்கிறதல்லவா :)//

இதை அய்யனார் சொல்லக் கூடாது :)

ஜமாலன் சொன்னது…

நன்றி பைத்தியக்காரரே..

இதற்கு முன்பு சில கவிதைகள் வெளிட்டுள்ளேன் பதிவில் அவை எல்லாம் 90-களில் எழதியவை. இது புதிது.

என்ன இது காமம் பற்றிய கதையல்ல இது. அதுவேறு? இதுவேறு?

ஜமாலன் சொன்னது…

//இதை அய்யனார் சொல்லக் கூடாது :)//

அது...

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்லா இருக்குங்க கவிதை.

என்னதான் இருந்தாலும் ரத்தமும் சதையும் போலாகுமா :)

கே.என்.சிவராமன் சொன்னது…

//என்ன இது காமம் பற்றிய கதையல்ல இது. அதுவேறு? இதுவேறு?//

ஜமாலன், காமம் பற்றிய கதை என்று சொல்லவில்லை. காமம் சார்ந்து என்றுதான் சொன்னேன்.

அதுவேறு... இது வேறு என்றாலும் எதுவும் வேறு வேறு அல்லவே?!

கே.என்.சிவராமன் சொன்னது…

//என்னதான் இருந்தாலும் ரத்தமும் சதையும் போலாகுமா :)//

அதானே... இன்னும் 40 இருக்கிறதே :)

ஜமாலன் சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

//என்னதான் இருந்தாலும் ரத்தமும் சதையும் போலாகுமா :)//

அதே அதே அதேதான்... (சிநேக குரலில் பாடிக்கொள்ளுங்கள்) :)

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரன் said...

//ஜமாலன், காமம் பற்றிய கதை என்று சொல்லவில்லை. காமம் சார்ந்து என்றுதான் சொன்னேன்.

அதுவேறு... இது வேறு என்றாலும் எதுவும் வேறு வேறு அல்லவே?!//

எங்கோயோ போய்ட்டீங்க... :)

ஜமாலன் சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

//நல்லா இருக்குங்க கவிதை.//

நன்றி சுந்தர்.

farzan abdul razeek சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
farzan abdul razeek சொன்னது…

அண்மையில் வாசிக்கக் கிடைத்த வித்தியாசமான பதிவு என்று நினைக்கிறேன். நான் வாசித்துக் கொண்ட உங்களின் முதற்கவிதை இதுதான். பல்வேறு பத்திகளிற்கூடான ஜமாலன் பற்றிய வாசிப்பினை இக்கவிதை இன்னுமொரு திசை நோக்கி திருப்பி விட்டது.

ஓவ்வொரு குறியீடுகளின் பின்னாலும் ஒரு நீண்ட கதையினை தேடிச்செல்லும் மனதினை இக்கவிதைக்குள் காண முடிவது உங்கள் பிரதிக்கு கிடைத்திருக்கும் வெற்றியெனக் கொள்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

farzan abdul razeek said...

வாங்க பர்சான். நன்றி.

//அண்மையில் வாசிக்கக் கிடைத்த வித்தியாசமான பதிவு என்று நினைக்கிறேன். நான் வாசித்துக் கொண்ட உங்களின் முதற்கவிதை இதுதான். பல்வேறு பத்திகளிற்கூடான ஜமாலன் பற்றிய வாசிப்பினை இக்கவிதை இன்னுமொரு திசை நோக்கி திருப்பி விட்டது.//

விதை அவவ்ப்போது எழுதுவதும் உண்டு. சிறகதைகளும்.. அதிகம் இல்லை என்றாலும். கவிதைகளில்தான் எனது எழுத்தும் துவங்கியதால் அதை மட்டும் விடுவதில்லை. :)

//ஓவ்வொரு குறியீடுகளின் பின்னாலும் ஒரு நீண்ட கதையினை தேடிச்செல்லும் மனதினை இக்கவிதைக்குள் காண முடிவது உங்கள் பிரதிக்கு கிடைத்திருக்கும் வெற்றியெனக் கொள்கிறேன்.//

உங்களது விரிவான கருத்திற்கு நன்றி. நான் என்ன எழுதினேன் என்பதல்ல நீங்க்ள என்ன வாசிக்கிறீர்கள் என்பதுதான் கவிதை.

saki சொன்னது…

Gustav Klimtரின்பிரபல ஓவியம் THE KISS ,எனக்குபிடித்த ஓவியர் ,THE KISS சும் ., கணனியில் யாருக்கோ பதில் கவிதை எழுதவில்லையே , கணனியில் உயிர்பிழைக்கும் சித்தர்களுக்கு சித்தப்பிரமை பிடிக்காமல் இருந்தால் சரி . உங்கள் கவிதையில் சின்ன எழுத்துப்பிழைகள் அது கவிதையின் அர்த்தத்தை சிலவேளை பிழையாக்ககூடும் ,தனிமையின் ஆவேசத்தில் கணனியில் வரும் காதலிகளின் உதடுகளைக் கிளிப்பதாக எண்ணி உங்களை நீங்களே ..பர்ர்த்துக்கொள்ளுங்கள் பைத்தியம்பிடிக்காமல்..

நல்ல கவிதை தொடருங்கள்.

அன்பு
சகி

ஜமாலன் சொன்னது…

saki said...

வாங்க சகி

//Gustav Klimtரின்பிரபல ஓவியம் THE KISS ,எனக்குபிடித்த ஓவியர் ,THE KISS சும் .,//

ஓவியத்தில்தானே..

//கணனியில் யாருக்கோ பதில் கவிதை எழுதவில்லையே , கணனியில் உயிர்பிழைக்கும் சித்தர்களுக்கு சித்தப்பிரமை பிடிக்காமல் இருந்தால் சரி.//

பதிவுகளை மடலாக பாவிக்கத் துவங்கவில்லை. உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்? பதில் கவிதை எழுதும் பாட்டுச்சித்தரல்ல நான். கணிணில் சித்தபிரமை பிடித்த சிலிக்கன் சித்தர்கள். :)

//உங்கள் கவிதையில் சின்ன எழுத்துப்பிழைகள் அது கவிதையின் அர்த்தத்தை சிலவேளை பிழையாக்ககூடும் //

எது என்று சுட்டியிருக்கலாம். இருப்பினும் திரும்ப ஒருதடவை சரிப் பார்க்கிறேன்.

//தனிமையின் ஆவேசத்தில் கணனியில் வரும் காதலிகளின் உதடுகளைக் கிளிப்பதாக எண்ணி உங்களை நீங்களே ..பர்ர்த்துக்கொள்ளுங்கள் பைத்தியம்பிடிக்காமல்..//

உதடுகளை கிழிப்பது நானல்லங்க எலிப்பல் (மௌஸ்). உரையாடி உள்ளவர்கள் பைத்தியமாகமல் இருக்க 19 வது சித்தர்தான் காப்பாற்ற வேண்டும். :)

//நல்ல கவிதை தொடருங்கள்.//

நன்றி.

saki சொன்னது…

ஜமாலன் எனக்கு ஓவியர் Klim ரின் முத்த ஓவியம் மட்டுமல்ல முத்தமும் பிடிக்கும் ;),எழுத்துப்பிழையாக நான் கருதிய வசனங்கள் : // மைதூனும் //பேரிண்பம்தானே//
இவைதான் அது பெரிய பிழையும் இல்லைத்தான்.
பாவம் 19வ்து சித்தர் உங்கள்.....அவரைக்காப்பாற்றச்சொல்ல அவரை யார் காப்பாற்றுவாரோ ..

அன்பு
சகி

ஜமாலன் சொன்னது…

திருத்தியாச்சு திருத்தியாச்சு :)

நன்றி சகி.

ranji சொன்னது…

ஜமாலன் உங்கள் கட்டுரைகள் பார்த்திருக்கிறேன் கவிதையும் எழுதுவீர்கள் என்பது...
// உறவுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல என்றேன்
உணர்வுக்கு அது அவசியமில்லை என்றாய் //
நன்றாக இருக்கிறது கவிதை
தொடர்ந்து எழுதுங்கள் .கணனிஉலகின் சித்தவிளையாட்டுக்களில் எலிப்பல்லு முக்கிய பங்கு வகிக்கிறது உண்மை :) , கட்டுரைகளில் வரும் இறுக்கம் அல்லது சீரியஸ்சான பாங்கு கவிதைகளில் கரைந்து உணர்வுகளில் இருந்து எழும் வரிகள் ,கவிதையில்தான் ஒருவரை நிர்வாணமாக உணரமுடியும் என்பது எனது கருத்து .பத்தொன்பதாவது சித்தரே
கவிதையும் இடைக்கிடை எழுதுங்கள்
வாழ்த்துக்கள் ஜமாலன் றஞ்சினி

ஜமாலன் சொன்னது…

ranji said...

//கணனிஉலகின் சித்தவிளையாட்டுக்களில் எலிப்பல்லு முக்கிய பங்கு வகிக்கிறது உண்மை :) ,//

அனுபவமோ? :)

//கட்டுரைகளில் வரும் இறுக்கம் அல்லது சீரியஸ்சான பாங்கு கவிதைகளில் கரைந்து உணர்வுகளில் இருந்து எழும் வரிகள்//

ஏங்க கவிதை எழுதினா கட்டுரை இறுக்கம் என்று அதை விமர்சிக்கிறீர்கள். இனி லூஸாக எழுதலாம். ஏற்கனவே அப்படித்தான் என்கிறீர்களா? :)

//கவிதையில்தான் ஒருவரை நிர்வாணமாக உணரமுடியும் என்பது எனது கருத்து.//

அப்படியா சொல்லவேயில்ல..

//பத்தொன்பதாவது சித்தரே
கவிதையும் இடைக்கிடை எழுதுங்கள்
வாழ்த்துக்கள்//

சித்தரிடம் கேட்டு சொல்கிறேன்.

நன்றி.

சென்ஷி சொன்னது…

:))

ஏதோ என் சிற்றறிவுக்கும் ஏதோ புரிகிறது போல் தெரிகிறது. எதற்கும் அய்யனாரிடம் சரியான விளக்கம் கேட்டுவிட்டு சொல்கிறேன்..

ஜமாலன் சொன்னது…

சென்ஷி said...
:))

//ஏதோ என் சிற்றறிவுக்கும் ஏதோ புரிகிறது போல் தெரிகிறது. எதற்கும் அய்யனாரிடம் சரியான விளக்கம் கேட்டுவிட்டு சொல்கிறேன்.//

நல்ல ஆளிடம்தான் விளக்கம் கேட்கப் போகிறீர்கள். ம்.. )))

எத்தனை நாளா இந்த தனிப்பயிற்சி...
)))

நன்றி

சென்ஷி சொன்னது…

//ஜமாலன் said...
சென்ஷி said...
:))

//ஏதோ என் சிற்றறிவுக்கும் ஏதோ புரிகிறது போல் தெரிகிறது. எதற்கும் அய்யனாரிடம் சரியான விளக்கம் கேட்டுவிட்டு சொல்கிறேன்.//

நல்ல ஆளிடம்தான் விளக்கம் கேட்கப் போகிறீர்கள். ம்.. )))

எத்தனை நாளா இந்த தனிப்பயிற்சி...
)))

நன்றி
//

இப்பத்தான் சார்ஜா வந்ததுக்கப்புறம் இந்த வேலையையும் எக்ஸ்ட்ராவா ஆரம்பிச்சுருக்கேன். உங்க பதிவையும் படிக்கறேன்னு எப்படி நம்ப வைக்கறது :))

அய்யனார் சரியில்லையா.. அப்ப வேற ஆள ரெக்கமண்ட் செய்யவும்..

நன்றிக்கு நன்றிகள் :)

ஜமாலன் சொன்னது…

சென்ஷி said...

//இப்பத்தான் சார்ஜா வந்ததுக்கப்புறம் இந்த வேலையையும் எக்ஸ்ட்ராவா ஆரம்பிச்சுருக்கேன். உங்க பதிவையும் படிக்கறேன்னு எப்படி நம்ப வைக்கறது :))//

அப்ப இது “உள்ளேன் ஐயாவா” பரவாயில்லை நீங்கள் படிப்பதை உறுதி செய்ததற்கு.

//அய்யனார் சரியில்லையா.. அப்ப வேற ஆள ரெக்கமண்ட் செய்யவும்..//

என்னாங்க? இப்படி வம்பல மாட்டுறீங்க. அய்யனார்தான் பின்னோட்டத்தை இந்த கவிதைக்கு (அப்படி சொல்லலாமா?) துவக்கி வைத்தவர். அவரைவிட இதனை உங்களுக்குத் தெளிவாக வேறு யார் சொல்ல முடியும்? போறபோக்குல எதையாவது கொழுத்திப் போடாதீங்க. எல்லாம் நல்லவிதமாக போய்க் கொண்டுள்ளது “ஊடால புந்து எதவும் செஞ்சிடாதீங்க”.

நன்றி

Me சொன்னது…

எல்லாம் சரி. நீங்கள் எப்போதும் (இணைய)சாளரங்களை திறந்து வைத்து காத்திருப்பதாக கேள்விப் பட்டேனே உண்மையா?

ஜமாலன் சொன்னது…

உறையூர்காரன் said...

//எல்லாம் சரி. நீங்கள் எப்போதும் (இணைய)சாளரங்களை திறந்து வைத்து காத்திருப்பதாக கேள்விப் பட்டேனே உண்மையா?//

உறையூராரே ஏன் இந்த கொலைவெறி?

நன்றி உங்களது மதிப்புமிக்க (?) இந்த பின்னொட்டத்திற்கு..:)

anujanya சொன்னது…

ஜமாலன்,

'வார்த்தைகள்' கற்றபின் 'உரையாட' வந்ததால் இலகுவாகி விட்டது இக்கவிதை. ரசித்தேன்.

அனுஜன்யா

ஜமாலன் சொன்னது…

அனுஜன்யா said...
ஜமாலன்,

'வார்த்தைகள்' கற்றபின் 'உரையாட' வந்ததால் இலகுவாகி விட்டது இக்கவிதை. ரசித்தேன்.

அனுஜன்யா
//

இந்த வாக்கியத்தை படித்தவுடன் நினைத்தேன் நீங்கள் கவிஞராக இருக்க வேண்டும் என்று..

நன்றி.

இராம.கி சொன்னது…

பொதுவாக வலைப்பதிவுகளில் காணும் நடைப்பிழைகளை அதன் உரியவர்களுக்கு நான் உறுத்திச் சொல்லுவதில்லை. படித்துவிட்டுப் போய்விடுவேன். உங்கள் ஆக்கத்தைப் படித்தபோது ஏதோ சொல்லத் தோன்றியது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

1. காற்றின் வாசனைகள் என்பது தவறான பயன்பாடு.

ஒரு காற்று மட்டுமே இருந்தால், பின் வாசனை என்பது எண்ணிக்கையைச் (number) சேர்ந்ததல்ல. அது ஒரு தொடர்ச்சியான பாங்கு. (continuous property). எனவே காற்றின் வாசனையால் என்றே சொல்லலாம். நேரத்திற்கு நேரம், பல்வேறு சூழ்நிலைகளால் வாசனை மாறலாம். அதைக் குறிக்கப் பன்மைச் சொல் தேவையில்லை.

பல்வேறு முச்சுக் காற்றுக்களால் என்ற கருத்தைத் தொடர்ந்தால், "காற்றுக்களின் வாசனைகளால்" என்று வரவேண்டும்.

இதில் எதைப் பயன்படுத்துவது என்பது உங்கள் உகப்பு.

2. நெற்றி வகுடு /வகிடு என்பது "நெற்றி வகுட்டிலிருந்து/வகிட்டிலிருந்து" என்று வேற்றுமையெடுக்கும் போது டகரம் இரட்டித்தே வரும்.

3. இங்கே காட்சிப் புலத்தில் நான், நீ, அவன் என்ற மூவர் இருக்கிறார்களா? படிக்கும் போது அது சரியாய்ப் புலப்படவில்லை. நான், அவன் மட்டுமே இருப்பதாய் இருந்தால், உன்னை என்ற பயன்பாடும், என்றாய் என்ற முன்னிலை வினைமுடிப்பும் உள்ளே வருவது பொருந்தவில்லை. புரிதற் பிழை ஏற்படும் 3வது, 4வது, 5வது பத்திகளைச் சேர்ந்து படித்தபின் எனக்கு ஏற்பட்ட குழப்பத்தைச் சொன்னேன்.

4. தன்னைத் தானே முயங்கிக் கொள்ளுவது முயக்கனம் என்று தமிழில் சொல்லப் படும். முயங்குதல் = தழுவுதல், புணருதல். முயக்கனம் என்பதை நடந்து முடிந்த செயலாய்ச் சொல்லும் போது முயத்துனம் என்று சொல்லலாம். இதைப் பேச்சுவழக்கில் வடமொழியோ என்று மயங்கி, சிலர் மைதுனம் எனச் சொல்லுவார்கள். [முயங்கக் கூடிய இயலுமை உறவு கொண்டவர்களை முயத்துனன்/முயத்துனி என்பது திரிந்து மைத்துனன்/மைத்துனி என்று பாண்டிநாட்டில் சொல்லப் படும். முயத்துனன்/முயத்துனி மச்சினன்/மச்சினி என்றும் திரித்துப் பயன்படுத்துகிறார்கள்.)

ஆனால் மைதூனம் என்ற சொல் தமிழிலும் கிடையாது; வடமொழியிலும் கிடையாது. நல்ல தமிழில் முயக்கனம் அல்லது முயத்துனம் என்றே சொல்லலாம்.

ஊடே வந்ததற்கு மன்னியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

ஜமாலன் சொன்னது…

நன்றி இராம.கி. அய்யா

தவறுகளை சரி செய்ய முயல்கிறேன். கவிதை என்பதில் இலக்கணங்கள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. அது உணர்வோடு வெளிப்படுவதால். இருந்தாலும் திருத்தங்கள் திருத்திக் கொள்வதற்கு உதவும்.

மைதூனம் பற்றி மட்டும் அது வடமொழி என்கிற புரிதல் உண்டு பரவலாக. எனக்கும் அதில் அறுதியான கருத்து இல்லை. மைதூனா என்பது ஒருவகை வழிபாடு குறிப்பாக சிவ வழிப்பாட்டைச் செர்ந்த லிங்க வழிபாட்டுன் உறவு கொண்டதாக படித்த நினைவு இருக்கிறது. குறிப்பாக சிவன் என்கிற புராணிகத்தை (தொன்மம் எற்றும் இதனை சொல்லலாமா என்பது தெரியவில்லை)ஒரு தற்காதல் மனநிலையாகவும் அதற்கான படிமமாகவும் விளக்கும் சுதிர் காக்கரின் ஆய்வு ஒன்றில் இந்த மைதூனா என்ற வார்த்தை படித்தாக நினைவு. நூல் இல்லாததால் அறுதியட முடியவில்லை.

திருத்தங்களுக்கு மீண்டும் நன்றி.

sukan சொன்னது…

//புழுக்கம் தாங்கவில்லை என
சன்னல்களை திறக்க திறக்க
திரைகளில் அடர்கிறது
பல மூச்சுக் காற்றுகள்//

இந்த தொடக்க வரிகளின் ஆழமும் வெளிப்படுத்திய அழகும் அருமை.

ஜமாலன் சொன்னது…

நன்றி நர்மதா.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.