வார்த்தைகள்

bad boy

திரையின் நீர்மப் படிகப் பரப்பில்
சிதறிக்கிடப்பவை
உரையாடல்களல்ல.
கலைத்தலுக்கும் 
கலவிக்கும்..
எஞ்சிய..
வார்த்தைகளால் கீறப்பட்ட
வலிகளின் பிசுபிசுப்பு.

நகல் உடல்களில்..
காமம் -
காவித்திரியும்
மின்பரப்பில் கீறப்பட்ட
முற்றுப்பெறா தாகங்கள்.

படபடக்கும் வேதனைகள்
படமெடுக்கும் தருணத்திற்காக
சொற்களுக்குள் நாகமென
சுருண்டிருக்கிறது.

மின்னுணர் வெளியில் நடக்கும்
மின்னுடல்கள் ஆட்டத்தில்
உணரவோ? உரைக்கவோ? 
ஒன்றுமில்லை..

இந்த போதையின் எக்களிப்பு
தோல்வியின் இதம்தரும்..
தொல்மனதின் களிப்பிற்காக
என்றான்...
என்னருகில் கிசுகிசுத்தப்படி
கணிப்பொறியில் கருத்தரித்த
பத்தொன்பதாவது சித்தன்.

-(19-05-2008)

image curtsey: "Bad Boy" - art by Eric Fischl (1981).

15 comments:

Me சொன்னது…

இது என்ன சுயசரிதையை கவிதை வடிவில் தரும் புது முயற்சியா?

ஜமாலன் சொன்னது…

உறையூர்காரன் said...

//இது என்ன சுயசரிதையை கவிதை வடிவில் தரும் புது முயற்சியா?//

என்ன உறையூராரே சந்துமுனையில் சிந்துபாடும் முயற்சியா? அது என்ன சுயசரிதை? சுயசரிதை என்பது ஒருவர் தன்னைப்பற்றி தானே எழுதும் புனைவுதான். காரணம் ஒரு நிகழ்விற்கு பல கோணங்கள் உண்டு. அந்த பல கோணங்கள் தனது கோணத்தில் மட்டுமே ஒருவரால் முன்வைக்கப்படுவதால் எழுதப்படும் எல்லாமே ஒருவகையில் சயசுரிதைதானே. அதேநேரம் சுயசரிதை என்பது உண்மை நிகழ்வுகள் அல்ல, எழதுபவன் எதை உண்மையாக நம்பகிறானோ அதைப்பற்றியது.

சரி கவிதைய பத்தி சொல்லவே இல்ல... இது உரையாடிகளின் சாளரங்களில் நடக்கும் ஒருவகை virtual காமம் பற்றியது. சின்னப்புள்ளையாவே இருக்கீங்க??

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஆஹா, ஜமாலன்... தூள் கிளப்பறீங்க!!

நிகழ்வில் இல்லாதபோது நினைப்பில் என்பது மாதிரி, நிஜத்தில் இல்லாதபோது கணிணியிலா :)

கவிதை நல்லா வந்திருக்குங்க.

ஜமாலன் சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

//நிகழ்வில் இல்லாதபோது நினைப்பில் என்பது மாதிரி, நிஜத்தில் இல்லாதபோது கணிணியிலா :)//

உங்கள் வாக்கியம் அருமையாக உள்ளது. கவிஞரல்லவா அது. :)

//கவிதை நல்லா வந்திருக்குங்க.//

நன்றி சுந்தர்.

chandru / RVC சொன்னது…

//இந்த போதையின் எக்களிப்பு
தோல்வியின் இதம்தரும்..//

கவிதையில் பிடித்த வரிகள் ஜமாலன்.
கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்

Me சொன்னது…

//சரி கவிதைய பத்தி சொல்லவே இல்ல//

கவிதை அழகாக இருக்கிறது. குறிப்பாக கீழ்கண்ட வரிகள்


”மின்னுணர் வெளியில் நடக்கும்
மின்னுடல்கள் ஆட்டத்தில்
உணரவோ? உரைக்கவோ?
ஒன்றுமில்லை..”

இந்த மின்னுடல்களுக்கு இடையில் சில நேரம் ஊடல்கள் கூட உண்டு (சொந்த அனுபவமா என்றெல்லாம் கேட்க படாது)

ஜமாலன் சொன்னது…

RVC said...

//கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்//

நன்றி RVC.

ஜமாலன் சொன்னது…

உறையூர்காரன் said...

//இந்த மின்னுடல்களுக்கு இடையில் சில நேரம் ஊடல்கள் கூட உண்டு (சொந்த அனுபவமா என்றெல்லாம் கேட்க படாது)//

வாங்கண்ணா அதான பாத்தேன்.. the cat out of bag.. புனையை கட்டுங்கோ.. வெளியில எட்டிப்பாக்குது.

நான் உங்களைப்போல அப்படி எல்லாம் கேட்கலிங்கண்ணா..:)

நன்றி.

Perundevi சொன்னது…

"போதையின் எக்களிப்பு
தோல்வியின் இதம்தரும்"

நல்ல வரிகள். சொற்களுக்குள் சுருண்டிருக்கும் நாகம். இப்பிரயோகமும் கூட.
ஆனால், ஏன் இத்தனை புள்ளிகள் கவிதையில் ('புள்ளிக்கவிதையா' என்ன?)
வாசிக்கும் மனதில் புள்ளிகளும் கோலங்களும் தன்னாலே உருவாகும் ஜமாலன்.
கிசுகிசுத்தப்படியில் ப் வேண்டாம். அழுத்தமான கிசுகிசுப்போ ஒருவேளை?

ஜமாலன் சொன்னது…

Perundevi said...

//ஆனால், ஏன் இத்தனை புள்ளிகள் கவிதையில் ('புள்ளிக்கவிதையா' என்ன?)
வாசிக்கும் மனதில் புள்ளிகளும் கோலங்களும் தன்னாலே உருவாகும் ஜமாலன்.//

நீங்கள் சொல்வது சரிதான் பழக்கதோஷம்.

//கிசுகிசுத்தப்படியில் ப் வேண்டாம். அழுத்தமான கிசுகிசுப்போ ஒருவேளை?//

அப்படியா ”ப்”- பில் இத்தனை அழுத்தமும் அர்த்தமும் உள்ளதா? இருந்தாலும் உங்கள் கவிதையும் அதன் பின்னோட்டமும்தான் இப்படி ஒரு கவிதை கருவிற்கு காரணம்.

நன்றி.

King... சொன்னது…

தமிழ் இணையம் ஏறியிருக்கிறது...

சிவமணியன் சொன்னது…

//கலைத்தலுக்கும்
கலவிக்கும்..
எஞ்சிய..
வார்த்தைகளால் கீறப்பட்ட
வலிகளின் பிசுபிசுப்பு.
//

அருமையான வரிகள்

ஜமாலன் சொன்னது…

நன்றி சிவமணியன்

anujanya சொன்னது…

ஜமாலன்,

உண்மை சொல்லவேண்டுமென்றால் கவிதையின் களம் புரியவில்லை முதலில். உங்கள் விளக்கத்தைப் படித்த பின்னர் பிடிபட்டது. அருமையான கவிதை.

அனுஜன்யா

ஜமாலன் சொன்னது…

அனுஜன்யா said...
ஜமாலன்,

உண்மை சொல்லவேண்டுமென்றால் கவிதையின் களம் புரியவில்லை முதலில். உங்கள் விளக்கத்தைப் படித்த பின்னர் பிடிபட்டது. அருமையான கவிதை.

அனுஜன்யா
//

நன்றி..

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.