அஞ்சு ரூவா மருத்துவர்.... பகுதி-2

எனது முந்தைய பதிவிற்கு வந்த பின்னோட்டங்களில் டாக்டா புருணோ அவர்கள் ஒரு நீண்ட பின்னோட்டம் இட்டுள்ளார். இதில் அமேரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை எப்படி ஒரு சோதனைக்களமாக பயன்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு சாதகமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். மருத்தவ துறையை கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்ட ஒரு குழு "Ethical Commette" என்பது. அக்குழு அனுமதியின்றி பிற நாடுகள் எந்த சோதணைகளையும் செய்ய முடியாது. அப்படி ஒரு அறக்குழுவுடன் நடந்த விவாதத்தை இதில் சுட்டிக் காட்டியுள்ளார். அதனால் அதனை இங்கு அவரது அனுமதியுடன் மீள்பதிவு செய்கிறேன். அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகள் குறித்த விவாதம் ஒன்று நடந்தப்பட்டுள்ளது டாக்டர் புருணோவின் வலைத்தளத்தில். அதன் சுட்டிகள் இறுதியில் உள்ளன. மேலதிகமாக இது குறித்து தேடல் உள்ளவர்களுக்காக..

இனி புருணோவின் கருத்துக்கள்....

தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் கை நரம்புகளின் திறனை சோதிக்க ஒரு பரிசோதனை செய்யஅமேரிக்க மருத்துவர்கள் எண்ணினார்கள்


இதில் தப்பு ஓன்றும் இல்லை தான்

ஆனால் சோதனை என்னவென்றால் கையில் சிறு அறுவை சிகிச்சை செய்து(!!!) சில எலக்ட்ரோடுகளை பொறுத்தவேண்டுமாம் (??) அப்படி அறுவை சிகிச்சை செய்தபின் கை விரல்கள் முன்னைவிட மோசமாகவும் வாய்ப்புள்ளது.... (இதுஎப்படிஇருக்கு) முன்னேற்றமடையவும்வாய்ப்புண்டு... ஆனால்அதற்கு வாய்ப்பு கம்மி..... சுமார் 1 சதவிதம்..... அதாவது ஆயிரம் நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10 நோயாளிகளுக்கு கை சிறிது குணமாகும், 10 நோயாளிகளுக்கு கை அப்படியே இருக்கும்.... 980 நோயாளிகளுக்கு மோசமாகும் :( :(

இதை விட கொடுமை ஒன்று உண்டு...... ஒப்பிட்டு பார்ப்பதற்கு (to compare with a physiological reflex arc) இந்த அறுவை சிகிச்சை செய்ய தொழுநோய் (மற்றும் எந்த நோயும் இல்லாத) 5 volunteers வேறு வேண்டுமாம்....... (சோதனை முடிந்தபின் கை ஹோகயா )
யார்செய்த புண்ணியமோ இது ethics committee முன் வந்தபோது நமது மருத்துவர்களில் ஒருவர் தூங்காமல் இருந்தார்....

கேட்ட கேள்விகளும், அதற்கு ஆராய்ச்சியாளர்கள் அளித்த பதில்களும்

Q கேள்வி: Why do you want to do this research in India . Why can't you do it in AmericaA பதில்: Leprosy is more prevalent in India. Leprosy is almost eradicated in Our country. So we want to do that here (சரி)

Q : Why do you want to choose the Volunteers from India. You have a lot of healthy people in your country. Isn't it ??A : Since we want to compare the results, we need to choose both the cases (தொழுநோயாளிகள்) and controls (ஆரோக்கியமானவர்கள்) from the same locality (ஆஹா !!)

Q: what will happen if a volunteer (ஆரோக்கியமானவர்) is not able to use his / her hand after your procedure (A : we are fully qualified surgeons and we have full confidence in our capability that our surgery will be a success. (எங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு)

Q: The committee clears the proposed clinical trial, but at least two of the volunteers should be from the Test Team.அதாவது ஆராய்ச்சி குழுவில் (அமேரிக்கர்களில்) இருவரிடம் அறுவை சிகிச்சை செய்தபின்னர் இந்தியர்களிடம் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது......

-----அனுமதி பெறவந்தவர் அடுத்த விமானத்தில் திரும்பி சென்றுவிட்டார் என்பதை நான் சொல்லவேண்டுமா....

Why I have written this long story is to highlight the fact
1.That there is something called as Ethical Committee
2.Clearance has to be got from that committee for Any Clinical Trial
3.The Ethical Committee was a very low key affair in those days (and they had full libertry)
4.But now, every clinical trial starts as a very high profile function, with two or three ministers or Collector / SP as the chief guest
5.They apply for clearance AFTER this grand function
6.This puts a lot of pressure on the doctor, who is potrayed as ANTI - DEVELOPMENTAL.

http://bruno.penandscale.com/2006/01/misuse-of-ayurveda.html

http://bruno.penandscale.com/2005/05/ayurvedic-side-effect.html


- டாக்டர் புருணோ.

இந்த உயிர்கொல்லி ஆயுதங்கள் அரசு அனுமதியில்லாமல் ரகசிய உளவுத்துறை முகவர்கள் மூலம் பல மூண்றாம் உலக நாடுகளில் செய்யப்பட்டுவருவதை சொல்கிற ஒரு தமிழ் படம் ஈ. இயக்குநர் ஜெகந்நாதன் சமூகப் பொறுப்புணர்வுடன் அப்படத்தை எடுத்திருந்தார். படத்தின் பிற தமிழ் சினமாவின் வியாபார உத்திகளான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களால் படம் எதிர்பார்த்த அளவில் மக்களிடம் கருத்தரீதியாக சென்றடையவில்லை.

நண்பர்கள் இதுபோன்ற மருத்தவர்களை நினைவு கூறுகிறார்கள். அனைவருக்கும் நன்றி.


இதர மருத்துவர்களிலிருந்து மருத்தவர் புகழேந்தி வேறுபடும் தளம் அவர் எதிர்த்து நிற்கும் அரசியல்தான். அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பத்தை தனது அஞ்சு ரூவால் எதிர்த்து நிற்கிறார் என்பதுதான்.

"அதிகாரத்தின் முன் உண்மையை மட்டும் பேசினால் போதாது. உண்மையாகவும் இருக்க வேண்டும்" என்ற பூஃக்கோவின் வாசகத்திற்கான உதாரணமாக இருப்பவர் புகழேந்தி.

3 comments:

மாயன் சொன்னது…

இது போல இன்னொரு விடயம் இருக்கிறது ஜமாலன் சார்..

ஒரு குறிப்பிட்ட இனத்தின் மூலக்கூற்றை(எதினிகிட்ய் Dநா மூலக்கூறு) வைத்து அந்த இனத்துக்கு மட்டும் தாக்கக்கூடிய நோய்க்கிருமிகளை உண்டாக்க ஆராய்ச்சிகள் நடக்கிறதாம்...

எதிரி நாட்டில் தாற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் உடலளவு, உளவியல் அளவு பாதிப்பை உண்டாக்கும் கிருமிகளை ஏவி விட்டு நாட்டிலுள்ள பெரும்பாலான மனித சக்தி செயலற்று போனபின் அதை தாக்கி பிடிக்க செய்யும் முயற்சியாம் இது... BஈஓளோGஈCஆள் Wஆற்Fஆறே என்று சொல்கிறார்கள்...

உயிரி நுட்பங்களை வைத்து கணினி புராசஸர்கள் வடிவமைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்... மருத்துவ துறையில் நடக்க போகும் புரட்சி நேற்றைய தொழிற்புரட்சியை விழுங்கி ஏப்பம் விடுவதாய் இருக்க போகிறது...

மாயன் சொன்னது…

இது போல இன்னொரு விடயம் இருக்கிறது ஜமாலன் சார்..

ஒரு குறிப்பிட்ட இனத்தின் மூலக்கூற்றை(Ethinic DNA மூலக்கூறு) வைத்து அந்த இனத்துக்கு மட்டும் தாக்கக்கூடிய நோய்க்கிருமிகளை உண்டாக்க ஆராய்ச்சிகள் நடக்கிறதாம்...

எதிரி நாட்டில் தாற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் உடலளவு, உளவியல் அளவு பாதிப்பை உண்டாக்கும் கிருமிகளை ஏவி விட்டு நாட்டிலுள்ள பெரும்பாலான மனித சக்தி செயலற்று போனபின் அதை தாக்கி பிடிக்க செய்யும் முயற்சியாம் இது... Biological Warfareஎன்று சொல்கிறார்கள்...

உயிரி நுட்பங்களை வைத்து கணினி புராசஸர்கள் வடிவமைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்... மருத்துவ துறையில் நடக்க போகும் புரட்சி நேற்றைய தொழிற்புரட்சியை விழுங்கி ஏப்பம் விடுவதாய் இருக்க போகிறது...

ஜமாலன் சொன்னது…

மாயன் said...

//இது... Biological Warfareஎன்று சொல்கிறார்கள்... //

சொல்கிறார்கள் இல்லை. இதுதான் உரியில் போர்முறை. இது ஒரு தனி புராஜக்ட். இதில் தலைமை ஏற்று பலகோடி மில்லியன்பகளை ஒதுக்கி ஆய்வு செய்கிறது அமேரிக்கா. எய்ட்ஸ் அதற்காக கண்டுபிடிக்ககப்பட்ட ஒரு ஆயுதம்தான்.

//உயிரி நுட்பங்களை வைத்து கணினி புராசஸர்கள் வடிவமைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில்... மருத்துவ துறையில் நடக்க போகும் புரட்சி நேற்றைய தொழிற்புரட்சியை விழுங்கி ஏப்பம் விடுவதாய் இருக்க போகிறது...//

மருத்துவதுறையில்புரட்சி நடத்தி மக்களை காப்பதற்கு பதிலாக அழிப்பதற்கு திட்டமிடுகிறார்கள். இதுதான் ாகடுமை.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.