கருந்துளையாகும் நட்சத்திரம் - சுயதம்பட்டம்

'உண்ண உண்ண தெவிட்டாது அம்மே! உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்' என்றான் பாரதி. வாசிப்பையும் எழுத்தையும் இப்படித்தான் கூறமுடியும். உண்ண உண்ண தெவிட்டாதது மட்டுமல்ல, இப் படிமம் முன்வைககும் உயிருடன் முட்டி உணர்வை அறியும் ஒரு நிகழ்வும்தான் எழுத்து. இவ்வரிகள் வார்த்தைகளை தாண்டி தரும் உணர்வுகள்தான் இலக்கியமும் எழுத்தும். இதனை பதிவுலகில் எழுத வந்தபின்.. அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

பதிவுலகில் ஒரு மேடை என்பதால் தமிழ்மண நட்சத்திரம் ஒரு வாய்ப்பு. வாசிப்பாளரை விரிவுபடுத்துவதுடன், பல அறிமுகங்களையும் உருவாக்கும். எழுத்து சிறுவயது முதல் ஒரு தீவிர ஆர்வமாக இருப்பதால்.. இவ்வாய்ப்பு மகிழ்ச்சியான ஒன்றுதான். இந்த 3-மாதங்களில்.. குறிப்பான சில நண்பர்கள் அறிமுகம். எனது எழுத்துக்களை காலக்குறியில் படித்த சில வாசகர்கள், எனது நூலைப்படித்த சில வாசகர்கள் என சிலரை இதன் மூலம் அறிய முடிந்தது. இவர்களை நான் தேடி அடைவது அத்துனை சாதாரணமான காரியம் இல்லை. அதற்கு முதலில் பதிவுலகிற்கு நன்றியைக கூறிக்கொள்கிறேன்.

பதிவில் எழுத வந்தபின், இது ஒரு ஆறாவது திணைதான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இத்திணைக்கென விசேடமான முதல், கரு, உரிப்பொருள்களும், சிறு மற்றம் பெரும் பொழுதுகளும் இருப்பதை உணர முடிந்தது. தமிழ்ச்சமூகம் உலகம் என்கிற பெருவெளியில் இருந்து இந்த வலைப்பதிவின்வழியாக ஒரு நுண்மின்னியல் வெளிக்குள் அலையும் ஒரு தனி இனமாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. இந்த இனத்தில் ஒருவனாக என்னை அடையாளப்டுத்திக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு வந்தபின் படிப்பது என்பதை இது தீவிரப்படுத்தியருப்பதுடன், இது படிப்பதையெல்லாம் எப்படி எழுத்தாக மாற்றுவது என்கிற தொழில்முறை சிந்தனைபோன்ற ஒரு எழுத்து தொழிற்சாலையாக நம்மை மாற்றிவிடுகிறது. மனிதன் தன் மையமிழந்த சமூகத்தில் வாழ்வதற்கான ஒரு வெளியாக அல்லது நாடோடிகளின் வெளியாக (nomadic space) இப்பதிவுலகம் இருப்பது, அதிகாரத்திலிருந்து விலகிய ஒரு பரவசத்தை (joyousness என்கிற ஒன்று) தருவதாக உள்ளது.

பதிவுலக எழுத்துக்களை எல்லோரும் நாட்குறிப்புபோலத்தான் துவங்குகிறர்கள். நாளடைவில், அவர்களை அறியாமல் பதிவுலகிற்கும் எழுத்திற்கும் அடிமையாதல் என்பது நிகழ்கிறது. ஒருகட்டத்தில் அவர்களது எழுத்து நாட்குறிப்பிலிருந்து நகர்ந்து பொதுக்குறிப்புகளாக மாறி... பின் அது சமூக அக்கறைக் கொண்ட எழுத்தாக மாகிறது. பிறகு எழுத்தின் ஜனநாயகப் பண்பை புரிந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகுகிறார்கள். இது பதிவுகளின் ஒரு முக்கிய விளைவாகும். ஒரு சில பிரச்சனைகள் வம்படிக்ள இருந்தாலும், விவாதத்தின் சகிப்புத் தன்மையையும், பொறுமையையும், தான் மட்டுமே அதிகம் தெரிந்த அறிவாளி என்கிற மாயையும் இது உடைத்திருக்கிறது. இது ஒரு மாற்ற ஊடகமாக மாறிவிட்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்களை சென்றடைவதற்கான ஒரு வழியாக மாறிக் கொண்டிருப்பதை வரவேற்பதா? நிராகரிப்பதா? என்று புரியவி்ல்லை.

சிறுபத்திரிக்கையிலிருந்து வந்தவன் என்பதால், முதலில் பதிவுகளில் எழுதுவதில் நிறைய தடுமாற்றம் இருந்தது. காரணம், தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்து என்பது சில தனிச்சிறப்பாக குணாதிசயங்களைக் கொண்டு எழுதப்படுவது. அதாவது, எழுத்து, பேச்சு அல்லது பொதுவாக மொழி என்பது தொல்காப்பியம் முன்வைக்கும் ஒரு கூற்றுதான். கூற்று என்பது சொல்பவன் கேட்பவன் இருவருக்கிடையி்ல் நிகழ்கிறது. அதாவது, இரு தன்னிலைகளுக்கு (subjects) இடையிலான ஒரு நிகழ்வு. இக்கூற்றின் மூலம் ஒரு தன்னிலை மற்றொரு தன்னிலைக்குள் ஊடுறுவிச் செல்கிறது. இதையே மொழிதல் (dialogues) என்கிறார்கள்.

எளிமையாகச் சொன்னால், கேட்பவன் பற்றிய அல்லது வாசகன் பற்றிய முன் அனுமானத்தை கொண்டே எழுத்து அமைகிறது. சிறுபத்திரிக்கை என்பது ஒரு சிறிய வட்டம். அதில் வாசகன் என்பவன் பிறிதொரு சக எழுத்தாளன் என்பதால், எழுதுபவன் தனது எழுத்தினை பிறருக்கு புரியவைத்தல் என்கிற பெரும்பாரத்தை சுமப்பதில்லை. ஏனென்றால் இங்கே எழுதுபவனும், வாசிப்பவனும் ஒரே அலைவரிசைக்குள் இருப்பதான ஒரு ஒத்ததிர்வு இருக்கிறது. ஆணால், பதிவுலகம் பலதரப்பட்ட அலைவரிசைகளைக் கொண்டது. இங்கே சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அதன் அலைவரிசையின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய புரிதல் அவசியப்படுகிறது. ஒத்ததிராத அலைவரிசை புரியாமையை உருவாக்கும். இந்த சிக்கலிலிருந்து இன்னும் விடுபடாத எழுத்தியக்கமாக எனது எழுத்துக்கள் இருப்பதால், நான் பழகவேண்டிய எழுத்துநடை பதிவுலகில் அதிகமாகவே இருக்கிறது.

ஆகவே, இந்த ஒருவாரம் இம்மேடையில் நான் என்ன வாசிக்கப்போகிறேன் என்பது குறித்து ஏகதேசமாக ஒரு கருத்திற்கு வரமுடியாததால், இது ஒரு ஜீகல்-பந்திபோலத்தான், இசை ஞானிகள் இதனை பெரிய வார்த்தையாக கருதினால், கதம்பமாக எல்லாம் கலந்ததாக இருக்கும் எனத் தோன்றுகிறது. எனவே, புரிந்தவர்களுக்கும், புரியமுயல்பவர்களுக்கும், புரியாதவர்களுக்கும், எதிர்கருத்துடன் சண்டையிட வருபவர்களுக்கும், எனது தவறான கருத்துக்களை சுட்டிக்காட்டி கடைத்தேற்ற முனைபவர்களுக்கும், வாழக்கையை நகைச்சுவையாக நையாண்டியாக எடுத்துக்கொள்ளும் பதிவுலக பெரும்பாண்மையான கும்மி நண்பர்களுக்கும், மொக்கையோ, சக்கையோ என எழுதுவதில் ஆர்வம்கொண்டு எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து ஆரம்பம் செய்கிறேன்.

பதிவுலக கலைச்சொற்களில் எனக்கு புரியாத சில சொற்களுக்கு பதிவுலக அனுபவசாலிகள் தெரியப்படுத்தி உதவினால் நன்றிக்குரியவர்களாவீர்கள்.

1. டிஸ்கி 2. மொக்கை பதிவு 3. சூடான இடுகைகள் 4. உள்குத்து 5. அ.மு.க. (கழகத்தின் manifesto) 6. ப.பா.ச. (சங்கத்தின் manifesto)
தற்சமயம் நினைவில் உள்ளவை இவைதான்...

அப்புறம் தலைப்புக்கு வருவொம். எல்லாம் நட்சத்திரமும் ஒரு நாளைக்கு எரிந்து சாம்பலாகும் கருந்துளைதான் என்கிற 19-வது சித்தரின் பாடல் வரியிலிருந்து எடுக்கப்பட்டது. நட்சத்திர தலைப்பாக இருக்கட்டுமே என்றுதான்.. ஹி...ஹி...

உஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ண கட்டுதே.

-அன்புடன்
ஜமாலன்.

40 comments:

cheena (சீனா) சொன்னது…

///பதிவுலக கலைச்சொற்களில் எனக்கு புரியாத சில சொற்களுக்கு பதிவுலக அனுபவசாலிகள் தெரியப்படுத்தி உதவினால் நன்றிக்குரியவர்களாவீர்கள்.

1. டிஸ்கி 2. மொக்கை பதிவு 3. சூடான இடுகைகள் 4. உள்குத்து 5. அ.மு.க. (கழகத்தின் manifesto) 6. ப.பா.ச. (சங்கத்தின் manifesto)
தற்சமயம் நினைவில் உள்ளவை இவைதான்...///

உடன்படுகிறேன் கருத்துக்கு

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் ஜமாலன். தமிழ்மணத்திற்கு வந்த சிறிது நாட்களிலேயே தமிழ்மண விண்மீன் ஆகும் வாய்ப்பு பெற்றவர்கள் மிகச் சிலரே. அதே போல் அந்த விண்மீன் வாரத்தை மிக நன்றாகப் பயன்படுத்தியவர்களும் மிகச் சிலரே. நீங்கள் அந்த இருவகை மிகச்சிலரில் ஒருவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் வாழ்த்துகள்.

Thamiz Priyan சொன்னது…

நடசத்திர வாழ்த்துக்கள்
////1. டிஸ்கி 2. மொக்கை பதிவு 3. சூடான இடுகைகள் 4. உள்குத்து 5. அ.மு.க. (கழகத்தின் manifesto) 6. ப.பா.ச. (சங்கத்தின் manifesto)
தற்சமயம் நினைவில் உள்ளவை இவைதான்...///
நீங்க தயாரா இருந்தால் போதும். கற்றுக் கொடுக்க ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஜமாலன் சொன்னது…

வாங்க நண்பர்களுக்கு வணக்கம்.

தமிழ்மணத்தில் இன்னும் நட்சத்திர வெளயீடே நடக்கவில்லை. நேரம் இருக்கு இன்னும் அதற்குள் வாழ்த்திய நண்பர்கள் சீனா, குமரன், தமிழ்பிரியனுக்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

குமரனுக்கு,

//விண்மீன் வாரத்தை மிக நன்றாகப் பயன்படுத்தியவர்களும் மிகச் சிலரே. நீங்கள் அந்த இருவகை மிகச்சிலரில் ஒருவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் வாழ்த்துகள்.//

நம்பிக்கையை காப்பாற்ற முயல்கிறேன். நன்றி.

நெற்றிக்கண் சொன்னது…

நல்ல பதிவு.!

கே.என்.சிவராமன் சொன்னது…

வாழ்த்துக்கள் ஜமாலன். நட்சத்திர பதிவர்கள் அனைவருமே தங்கள் தனித் திறமையை காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் உங்கள் இயல்பை வெளிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்த பயணத்தில் நினைத்துப் பார்த்து புன்னகை பூக்கும் நாட்களாக இந்த 7 நாட்களும் விளங்கும். தொடருங்கள். தொடர்கிறோம்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் ஜமாலன்!
இன்னும் கொஞ்சம் நட்சத்திரம் எரியும் என்றே எதிர்பார்க்கலாம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

நண்பர் ஜமாலன்,

நீங்கள் இந்தவார நட்சத்திரமாக இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
:)

அடிச்சு தூள் கிளப்புங்க !

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள் ஜமாலன் அவர்களே!!!

கதிர் சொன்னது…

குறைவான பின்னூட்டம் வர்றதுனால யாரும் வாசிக்கறதில்லன்னு முடிவுக்கு வந்துடாதிங்க. அவரவர்க்கு பின்னூட்டமிட நேரமில்லாமலும், வசதியில்லாமலும் இருக்கலாம். அதுவுமில்லாம பின்னூட்டம்தான் உங்களை ஊக்கப்படுத்தும்னா எல்லாரும் பின்னூட்டம் போடணும்னு சொல்ற மாதிரி. அதனால பின்னூட்டத்த பத்தி கவலபடாம கலக்குங்க.

வாழ்த்துக்கள்.

ramachandranusha(உஷா) சொன்னது…

ஜமாலன், நேற்றைய பின்னுட்டத்தின் பொருள் இப்பொழுது புரிந்தது :-) ஆழமான, சுவாரசியமான விஷயங்கள் வரும் என்று தீர்மானமாய் நம்புகிறேன்.

இளங்கோ-டிசே சொன்னது…

ஜமாலன் என்ற படைப்பாளியை உயிர்நிழலினூடாகத்தான் முதன்முதலில் அறிந்துகொண்டதாய் நினைவு. தற்போது உங்கள் பின் - நவீனத்துவக் கட்டுரைகளையும் அது சம்பந்தமான உரையாடல்களையும் விருப்புடன் வாசித்து வருகின்றேன். நீங்கள் -உங்களைப் பற்றிய அறிமுகத்தில் கூறும்- வலைப்பதிவில் எழுதுகையில் ஒரு 'அந்நியத்தன்மை' வருகின்றது என்பது புரிந்துகொள்ளப்படக்கூடியதே.வலைப்பதிவுகளின் கட்டற்ற சுதந்திரத்தைப் போல, வெவ்வேறு விதமான எழுத்துமுறைகளுக்கும்/வாசிப்புகளுக்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்வார்களென நினைக்கின்றேன். மற்றப்படி சக மனிதரோடு இருக்கும்போதே பல சமயங்களில் அந்நியமாகிவிடும்பொழுது வலைப்பதிவு அந்நியம் பெரிய விடயமல்லவே :-).

RATHNESH சொன்னது…

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஜமாலன் சார்,

நட்சத்திர வாரத்தின் கதம்பப் படைப்புகளை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

அக்கறையுடன் ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன். தங்களுடைய எழுத்துக்களில் இரண்டு மூன்று இடங்களில் கீழ்க்கண்ட வாசகங்கள் அல்லது அதே தொனியிலான வார்த்தைகள் இடம் பெறுகின்றன:

//பதிவுலகம் பலதரப்பட்ட அலைவரிசைகளைக் கொண்டது. இங்கே சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதற்கு முன்பு, அதன் அலைவரிசையின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய புரிதல் அவசியப்படுகிறது. ஒத்ததிராத அலைவரிசை புரியாமையை உருவாக்கும். இந்த சிக்கலிலிருந்து இன்னும் விடுபடாத எழுத்தியக்கமாக எனது எழுத்துக்கள் இருப்பதால், நான் பழகவேண்டிய எழுத்துநடை பதிவுலகில் அதிகமாகவே இருக்கிறது.//

இந்தக் கருத்தினை மறுதலிக்க விரும்புகிறேன்.

பதிவுலகம் ஒன்று தான் சிறுபத்திரிக்கை அளவுக்குக் கூட சமரசம் கொள்ள வேண்டிய அவசியம் இன்றி, நம் எழுத்தை இன்னின்னார் படிக்க வேண்டும் என்கிற முற்சாய்வு எதிர்பார்ப்பு ஏதும் இன்றி முழு சுதந்திரத்துடன் நாம் நினைப்பதை நாம் விரும்பும் நடையில் விதத்தில் வெளிப்படுத்தக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. (தடம் மாறுவது எல்லை மீறுவது போல் எதாவது நடந்தால் அதைப் பக்குவமாகத் தட்டிச் சொல்பவர்கள் இருப்பதால் ஒழுக்கத்திற்கு உத்தரவாதம் இருக்கிறது.)

தாங்களும் எந்த சமரசமும் வாசகன் குறித்த முன் அனுமானமும் இன்றி எழுதுங்கள். பின்னூட்டங்களோ வாசக எண்ணிக்கையோ மட்டும் எழுத்தின் தரத்திற்கான அடையாளம் அல்ல. உதாரணமாக உங்களின் 'அகதிகளின் காடுகள்' கவிதையை வாசித்து விட்டு அதிர்ந்து போய் உட்காரத்தான் முடிந்தது. என்ன பின்னூட்டம் எழுத முடியும்? இப்படித் தான் பலரும் உணர்ந்திருப்பார்கள்.

சில எழுத்துக்களின் முதிர்ச்சி, பாராட்டுவதற்குக் கூட கூச்சம் ஏற்படுத்தும் தன்மையானவை. தங்களுடையவை அந்தத் தரத்திலானவை.

வாழ்த்துக்களுடன்,

RATHNESH

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஒரு வாரம் தொடர்ந்து உங்கள் கட்டுரைகளைப் படிக்கலாம் என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். வாழ்த்துக்கள்.

ஜமாலன் சொன்னது…

வாங்க நண்பர்களே...

அனைவரது ஊக்கத்திற்கும் நன்றி.

ஜமாலன் சொன்னது…

வாங்க நெற்றிக்கண்

பின்னோட்டத்திற்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

நண்பர் பைத்தியக்காரனுக்கு...

//தொடர்ந்த பயணத்தில் நினைத்துப் பார்த்து புன்னகை பூக்கும் நாட்களாக இந்த 7 நாட்களும் விளங்கும். தொடருங்கள்.//

உங்கள் இடைவிடாத ஊக்கதத்திற்கு நன்றி. முயற்சிப்போம்.

ஜமாலன் சொன்னது…

பாரி. அரசு க்ககு

//நட்சத்திரம் எரியும் என்றே எதிர்பார்க்கலாம் :)//

நன்றி.. சேர்ந்து கொளுத்துவொம்..

ஜமாலன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//நண்பர் ஜமாலன்,

நீங்கள் இந்தவார நட்சத்திரமாக இருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
:)

அடிச்சு தூள் கிளப்புங்க !//

நன்றி.. கிளப்புவோம்

ஜமாலன் சொன்னது…

ஜெகதீசன் said...

//வாழ்த்துக்கள் ஜமாலன் அவர்களே!!!//

வாங்க ஜெகதீசன். நன்றி

ஜமாலன் சொன்னது…

தம்பி said...

//குறைவான பின்னூட்டம் வர்றதுனால யாரும் வாசிக்கறதில்லன்னு முடிவுக்கு வந்துடாதிங்க. அவரவர்க்கு பின்னூட்டமிட நேரமில்லாமலும், வசதியில்லாமலும் இருக்கலாம். அதுவுமில்லாம பின்னூட்டம்தான் உங்களை ஊக்கப்படுத்தும்னா எல்லாரும் பின்னூட்டம் போடணும்னு சொல்ற மாதிரி. அதனால பின்னூட்டத்த பத்தி கவலபடாம கலக்குங்க //

வாங்க தம்பி. வருகைக்கு நன்றி. பின்னூட்டம் அதிகமாக வருனும் என்கிற ஆர்வத்தில் எழுதப்படவில்லை. அது சாத்தியமுமில்லை. ஒருவேளை எனது அறிமுகம் அப்படி ஒரு பார்வையை உருவாக்கியயிருந்தால். அது சரியில்லைதான். நன்றி.

தொடர்ந்து உங்கள் நண்பருக்கு பினநவீனத்தவம் பாடம் எடுத்து முடித்துவிட்டீர்களா? இல்லைய? நல்ல நையாண்டி..

ஜமாலன் சொன்னது…

ramachandranusha(உஷா) said...
//ஜமாலன், நேற்றைய பின்னுட்டத்தின் பொருள் இப்பொழுது புரிந்தது :-) ஆழமான, சுவாரசியமான விஷயங்கள் வரும் என்று தீர்மானமாய் நம்புகிறேன்.//

முயற்சிப்போம். உங்களைப்போல நகைச்சுவை உணர்வு சற்றுக் குறைவுதான் எனக்கு... நன்றி.

ஜமாலன் சொன்னது…

டிசே தமிழன்/ DJ said...

வாங்க டிசே...

//தற்போது உங்கள் பின் - நவீனத்துவக் கட்டுரைகளையும் அது சம்பந்தமான உரையாடல்களையும் விருப்புடன் வாசித்து வருகின்றேன்.//

பின்நவீனத்தவம் குறித்த உங்கள் கருத்துக்கள பகிர்ந்த கொண்டால் அதனை மேலலதிக புரிதலுக்கு எடுத்துச் செல்லாம்.

//நீங்கள் -உங்களைப் பற்றிய அறிமுகத்தில் கூறும்- வலைப்பதிவில் எழுதுகையில் ஒரு 'அந்நியத்தன்மை' வருகின்றது என்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே.வலைப்பதிவுகளின் கட்டற்ற சுதந்திரத்தைப் போல, வெவ்வேறு விதமான எழுத்துமுறைகளுக்கும்/வாசிப்புகளுக்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்வார்களென நினைக்கின்றேன். மற்றப்படி சக மனிதரோடு இருக்கும்போதே பல சமயங்களில் அந்நியமாகிவிடும்பொழுது வலைப்பதிவு அந்நியம் பெரிய விடயமல்லவே :-).//

சரியாகச் சொன்னீர்கள். இதுவும் ஒர பன்முகஎழுத்த அனுபவம்தானே.

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...
//நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஜமாலன் சார்,//

நன்றி ரத்ணேஷ்.

//பதிவுலகம் ஒன்று தான் சிறுபத்திரிக்கை அளவுக்குக் கூட சமரசம் கொள்ள வேண்டிய அவசியம் இன்றி, நம் எழுத்தை இன்னின்னார் படிக்க வேண்டும் என்கிற முற்சாய்வு எதிர்பார்ப்பு ஏதும் இன்றி முழு சுதந்திரத்துடன் நாம் நினைப்பதை நாம் விரும்பும் நடையில் விதத்தில் வெளிப்படுத்தக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு.//

உங்கள்வாதம் சரிதான்.

//(தடம் மாறுவது எல்லை மீறுவது போல் எதாவது நடந்தால் அதைப் பக்குவமாகத் தட்டிச் சொல்பவர்கள் இருப்பதால் ஒழுக்கத்திற்கு உத்தரவாதம் இருக்கிறது.)//

இதுவும் நுட்பமான கருத்துதான். இது பதிவுலகின் ஒரு தனிச்சிறப்பான அம்சம்.

//தாங்களும் எந்த சமரசமும் வாசகன் குறித்த முன் அனுமானமும் இன்றி எழுதுங்கள். பின்னூட்டங்களோ வாசக எண்ணிக்கையோ மட்டும் எழுத்தின் தரத்திற்கான அடையாளம் அல்ல.//

பொதுவாக எழுத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை என்றாலும்.. வாசகருக்கு புரியும் வண்ணம் எழுத்தை எடுத்துச் செல்வது அவசியம். நீங்கள் கூறுவதும் சரிதான்.. நாம ஏன் வாசகனை நமக்கு கீழான புரிதல் உள்ளவராக அனுமானிக் வேண்டும்.

//உதாரணமாக உங்களின் 'அகதிகளின் காடுகள்' கவிதையை வாசித்து விட்டு அதிர்ந்து போய் உட்காரத்தான் முடிந்தது.//

மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக எனது கவிதைகள் குறித்து எனக்கே நல்ல அபிப்ராயங்கள் இல்லை.

//சில எழுத்துக்களின் முதிர்ச்சி, பாராட்டுவதற்குக் கூட கூச்சம் ஏற்படுத்தும் தன்மையானவை. தங்களுடையவை அந்தத் தரத்திலானவை.//

Rathnesh இது கொஞ்சம் ஊங்களுக்டகே ஓவரா தெரியல.. உங்களது ஊக்கம் என்னை நிறைய எழுதவும். என்னுள்ளிருந்த நததையை கூட்டிற்குள்ளிருந்து வெளியே கிழப்பிவிட்டுவிட்டது.

நீண்ட பின்னோட்டத்திற்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்,

RATHNESH

ஜமாலன் சொன்னது…

Jyovram Sundar said...

வாங்க.. பின்னொட்டத்திற்கு நன்றி. நட்சத்திர வாரத்திற்கு அப்புறம் எழுதுனா படிக்கக மாடடீங்களா?

ஆகா இதுதான் உள்குத்தா?

just for a fun. thanks.

Ayyanar Viswanath சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் ஜமாலன்..உங்கள மாதிரி ஆளுங்களத்தான் தேடிட்டு இருக்கேன் :)

இந்த வாரம் முழுக்க தொல்லை கொடுக்க தயாராகிடுறேன்..

முதல் டார்ச்சர்

/புதிய சிந்தனைத்துறைகளான பின்காலணீயம், அமைப்பியல், பின்-அமைப்பியல் மற்றும் பின்நவீனத்தும் ஆகியவற்றை குறித்த படிப்பும் அறிந்துகொள்வதற்கான ஆர்வமும்அவற்றை மார்க்சீய எல்லைக்குள் கொண்டுவந்து புரிந்துகொள்ள முயல்வதும்/

மார்க்சீய எல்லை அப்படின்னா புரியலிங்களே?.. மார்க்சீயம் மட்டும்தான் சிறந்தது..அத தாண்டி வேறெதாவது எழுதப்பட்டாலும் அதையும் இதன் எல்லைகளுக்குள்ள கொண்டுவந்திடனும் அப்படின்னு சொல்ல வர்ரிங்களா?

மீண்டும் நட்சத்திர வாழ்த்துக்கள்

துளசி கோபால் சொன்னது…

விண்மீனுக்கு வாழ்த்து(க்)கள்.

ஜமாலன் சொன்னது…

அய்யனார் said...

வாங்க அய்யனார். நன்றி
என்னடா முகாம்லேந்து ஆள காணுமேன்னு பார்த்தேன். வந்திட்டீங்களா?

//இந்த வாரம் முழுக்க தொல்லை கொடுக்க தயாராகிடுறேன்..//

இததான் இததான் நானும் எதிர்பார்த்தேன்.

//முதல் டார்ச்சர்

மார்க்சீய எல்லை அப்படின்னா புரியலிங்களே?.. மார்க்சீயம் மட்டும்தான் சிறந்தது..அத தாண்டி வேறெதாவது எழுதப்பட்டாலும் அதையும் இதன் எல்லைகளுக்குள்ள கொண்டுவந்திடனும் அப்படின்னு சொல்ல வர்ரிங்களா?//

மார்கசீயத்தை ஒரு எல்லையாக நிர்ணயிப்பது தப்புதான். ஒன்றை மட்டுமே சிறந்தது என்பதும் ஒருவகை மதவாத மணோபாவம்தான். ஓ.கே. ஒரு சின்ன தெளிவின்மைக்கான விளக்கம்.

அமைப்பியம் துவங்கி.. பின்நவீனத்துவம் வரை உள்ள சிந்தனைகள் முற்றிலும் புதிதாக அல்லது சுயம்புவாக தோன்றியவை அல்ல. அவைகளும் பன்னெடுங்கால வரலாறு பற்றிய ஆய்விலிருந்து வந்தவைதான். பின்நவீனத்தவ கருத்தாக்கங்கள் நாகார்ஜீணாரிடம் (நம்ப ரமேஷ் அல்ல) இருப்பதால் பின்நவீனத்துவம் பழமையான சிந்தனை என்றோ அல்லது நாகார்ஜீனர் புதுமையான சிந்தனையாளர் என்றோ கூறமுடியுமா? காலநிர்ணயம் என்கிற மையம்கூட பின்நவீனத்தவம் மறுக்கிறது. (ஈகோவின் பூஃகொஸ் பெண்டுலம் இக்காலம்பற்றிய விசாரணைதான் என்ற விமர்சனங்கள் படித்துள்ளேன். நாவல் படித்ததில்லை.) அமைப்பியலின் பல மொழிக்கொள்கைகள் தொல்காப்பியத்தில் இருக்கிறது. சசூர்கூட பாணினியத்தை படித்துவிட்டுதான் அமைப்ப மொழியியல் என்கிற கருத்தாக்கத்தை வினக்கினார்.
டிகன்ஸ்டரஷனின் அடிப்படையான 'அர்தங்களை ஒத்திப்போடுதல்' தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. 'பொருட்கு பொருள் தெரியின் அது வரம்பின்றே' தொல்.

இப்படி பலவும் மரபுகளின் மறக்கப்பட்ட, அமுக்கப்பட்ட, விடுபட்டு வந்தவற்றைதான் உரைகூறும் அல்லது பாஷ்யம் எழுதும் முறைகளில் வழியாக கண்டடையப்பட்டவையே மேற்கண்ட சிந்தனை முறைகள். புதியவிடயம்.. மனிதனை மையமாகக் கொண்ட சித்தாந்ததங்களை அதாவது மறுமலர்ச்சிக்கால முதலாளித்துவ சித்தாந்தத்தை இவை (பிந போன்றவை) இவற்றில் பொருத்தி விளக்கமளித்தன.

மார்க்சியம் மட்டுமே பண்டைய மரபான பார்வைகள் இன்றி உருவான ஒரு சமூக விஞ்ஞானம். அதனால்தான் அதில் ஐரோப்பிய மையவாதம் இருப்பதான ஒரு விமர்சிக்கின்றனர். டார்வினின் பரிணாமம், பிராய்டின் உளப்புகுப்பாய்வு, நியூட்டன்-ஐன்ஸ்டின் நவீன இயற்பியல் போன்று. மார்கசிய எல்லை என்பதன் பொருள் சிறந்தது என்கிற உயர்ந்த எல்லை என்கிற பொருளில் அல்ல, இரண்டையும் ஒரு பொருத்தப்பாட்டிற்குள் உரையாடல்கள் வழி தீஸிஸ்-ஆண்டி தீஸிஸ்-சிந்தஸிஸ் போல ஒருங்கிணைப்பதே இது தத்துவ வெல்டிங் இல்லை என்பது புரியும் என நினைக்கிறேன்.

எனது எழுத்த தவறான தொனியை உருவாக்கி இருந்தால், இதுதான் நான் கூறவருவது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்த தெளிவற்ற இருந்தால்... பேசுவோம்.. மேலதிகமாக புரிதலை அடைய.

நன்றி.

ஜமாலன் சொன்னது…

துளசி கோபால் said...

//விண்மீனுக்கு வாழ்த்து(க்)கள்.//

வாங்க துளசி... நன்றி..

Unknown சொன்னது…

ஜமாலன்,

நட்சத்திர வாரத்தில் வழக்கம் போல சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

உங்களது பதிவுகளை படிப்பதுண்டு. பின்நவீனத்துவம் பற்றிய மூன்று பதிவுகளையும் படித்தேன். சில கேள்விகளும் எழுகின்றன. எழுத வேலையும், படித்துவருகிற புத்தகங்களுமாக தொடர்ந்து உரையாட நேரமின்மையால் பின்னர் உரையாடலாம். உங்களது மொழியும், நிலமும் நூல் இந்த முறை ஊருக்கு போகும் வேளை வாங்க வேண்டும்.

ஜமாலன் சொன்னது…

Thiru said...

வாங்க திரு...

//நட்சத்திர வாரத்தில் வழக்கம் போல சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.//

முயற்சி செய்வோம்.

//உங்களது பதிவுகளை படிப்பதுண்டு. பின்நவீனத்துவம் பற்றிய மூன்று பதிவுகளையும் படித்தேன். சில கேள்விகளும் எழுகின்றன. எழுத வேலையும், படித்துவருகிற புத்தகங்களுமாக தொடர்ந்து உரையாட நேரமின்மையால் பின்னர் உரையாடலாம்.//

நேரம் கிடைக்கும்போது நிசசயமாக உரையாடலாம்.

நன்றி...

சின்னக்குட்டி சொன்னது…

வணக்கம் ஜமாலன் ..நட்சத்திர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

ஜமாலன் வாழ்த்துக்கள்!
உங்கள் பதிவுகளை நான் இன்றுதான் பார்த்தேன்.
அது கூட நட்சத்திரம் ஆனதினால்தான்.
நன்றி தமிழ்மணம்.
வித்தியாசமாய் சிந்திக்கிறீர்கள்.
தொடர்ந்து பார்ப்பேன்!
படிப்பேன்!!
மறுபடியும் வாழ்த்துக்கள்!!!
அன்பன்.

மாயன் சொன்னது…

ஜமாலன் சார்.. நேரம் கிடைக்கவில்லை... தாமதமான வாழ்த்து என்றாலும் வாழ்த்து வாழ்த்து தானே... வாழ்த்துக்கள்..

(உங்கள் பதிவுகளை கூகிள் ரீடரில் இணைத்துள்ளேன்...)

ஜமாலன் சொன்னது…

மாயன் said...
//ஜமாலன் சார்.. நேரம் கிடைக்கவில்லை... தாமதமான வாழ்த்து என்றாலும் வாழ்த்து வாழ்த்து தானே... வாழ்த்துக்கள்..

(உங்கள் பதிவுகளை கூகிள் ரீடரில் இணைத்துள்ளேன்...)//

நன்றி..

கூகிள் ரீடரில் இணைத்தற்கும். அதற்குள் இன்னும் நுழையவில்லை.. பார்க்கிறேன்.

முரளிகண்ணன் சொன்னது…

\\சில எழுத்துக்களின் முதிர்ச்சி, பாராட்டுவதற்குக் கூட கூச்சம் ஏற்படுத்தும் தன்மையானவை. தங்களுடையவை அந்தத் தரத்திலானவை\\

வழிமொழிகிறேன். நட்ச்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்

முபாரக் சொன்னது…

அன்பிற்குரிய ஜமாலன்,
நட்சத்திர வாழ்த்துக்கள்

கடந்த சில நாட்களாக உங்கள் பதிவுகளையே தீவிரமாக வாசித்து வருகிறேன். பொதுவாய் நான் வாசிக்க விரும்பும் விடயங்களை எழுதுகிறீர்கள்.

நீங்கள் சவூதியிலா இருக்கிறீர்கள்?

ஜமாலன் சொன்னது…

முரளி கண்ணன் said...

வாங்க.. நன்றி முரளி கண்ணன்.

ஜமாலன் சொன்னது…

முபாரக் said...

வாங்க முமுபாரக். நன்றி.

//கடந்த சில நாட்களாக உங்கள் பதிவுகளையே தீவிரமாக வாசித்து வருகிறேன். பொதுவாய் நான் வாசிக்க விரும்பும் விடயங்களை எழுதுகிறீர்கள்.//

ஒத்ததிர்வு உள்ளவர்கள் பகிர்ந்த கொள்வது ஒரு பலம்தான். வாய்ப்பிரந்தால் மெயில் அனுப்புங்ககள். அல்லது subscribe-ல் மெயல் ஐடி கொடுங்கள் படைப்புகள் உங்கள் மின்னஞ்சல் தேடி அதாக வரும்.

//நீங்கள் சவூதியிலா இருக்கிறீர்கள்?//

ஆடடோ வைக்காதவராக இருந்தால் ஆமாம். நீங்கள்....?

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.