அர்ப்பணம்

சிறுவயது முதல்
சிநேகிதனாய்
மனக்கவலையுறும்போதெல்லாம்
மலைபோல் காக்கும்
மறைபோல
13 எழுத்துக்களைக் கொண்ட
நான்கு திசைகளிலும்
பூதகணங்களாய் எழுந்தருளி
நான்கு பூக்களில் உலகை அளந்து
நான்கு ராஜாக்களில் -
அவ்வப்போது ஜோக்கராய் வந்து
அந்தஸ்தை உயர்த்தும்
ஆடுதன் ராஜாவுக்கு...


திருச்சி காவேரி
திரையரங்கின் பின்னுள்ள
தண்டவாளத்தை தாண்டிய
தகரக் குடிசையில்
'புதுசா'- எனக்கேட்டு
ஆண்மை என்கிற
அதிகாரத்தை கவிழ்த்த
கருத்தப் பெண்ணிற்கு..


பனந்தோப்பின்
கள் வாங்கித் தந்த
பால்ய நண்பனுக்கு..


இவர்களுடன்
குறத்தி முடுக்கிற்கு
அழைத்துச் சென்று
நாளை மற்றுமொரு நாளே
எனக்காட்டிய
உன்னத இலக்கியவாதி
ஜி. நாகராஜனுக்கு..


பி.கு.: எதையாவது யாருக்காவது அர்ப்பணிக்குனும்ல.. அதான்.
- ஜமாலன்

25 comments:

கே.என்.சிவராமன் சொன்னது…

என்ன ஜமாலன், இப்படி நாசுக்காக எழுதி விட்டீர்கள். விலாவாரியாக அனுபவங்களை எழுதியிருக்கலாமே. நீங்கள் சென்ற 'குறத்தி முடுக்கை' இலக்கியத்தின் வழியே நாங்களும் 'தரிசித்திருப்போமே!'

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரன் said...

//என்ன ஜமாலன், இப்படி நாசுக்காக எழுதி விட்டீர்கள். விலாவாரியாக அனுபவங்களை எழுதியிருக்கலாமே. நீங்கள் சென்ற 'குறத்தி முடுக்கை' இலக்கியத்தின் வழியே நாங்களும் 'தரிசித்திருப்போமே!'//

அதெல்லாம் பழைய கதை. நட்சத்திர வாரத்தை அர்ப்பணிக்கத்தான். தவிரவும் இந்த இரண்டு பிரதிகளும் கைவசம் இல்லை. இல்லாவிட்டால் அதற்கு ஒரு பதிவு போட்டிருக்கலாம்.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//திருச்சி காவேரி
திரையரங்கின் பின்னுள்ள
தண்டவாளத்தை தாண்டிய
தகரக் குடிசையில்
'புதுசா'- எனக்கேட்டு
ஆண்மை என்கிற
அதிகாரத்தை கவிழ்த்த
கருத்தப் பெண்ணிற்கு..
//

ஜமாலன்,
தண்டவாளத்துக்கு பின்புதான் இந்தவண்டவாளமா ? எங்க ஊர் பசங்க கூட தண்டவாளத்துக்கு அந்த பக்கம் என்று தான் சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கிறேன். இது பொதுவாக புழங்கும் இடமோ ?

தண்டவாளம் 'தற்'கொலை கதைகள் சொல்லும் இடமோ ?

ஜமாலன் சொன்னது…

நண்பர் கோவிக்கு,

//தண்டவாளம் 'தற்'கொலை கதைகள் சொல்லும் இடமோ ?//

நச்சன்னு உள்ளது பின்னோட்டம். எந்த ஊருங்க உங்க ஊரு? இதெல்லாம் அர்ப்பணம் என்கிற பெயரில் நடக்கும் அழும்பை கவிழ்க்கத்தான்.

நன்றி.

முரளிகண்ணன் சொன்னது…

உடல் அரசியல் மற்றும் பின்னவீனத்துவம் பற்றிய தீவிர கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம் இந்த வாரத்தில்

ஜமாலன் சொன்னது…

முரளி கண்ணன் said...

//உடல் அரசியல் மற்றும் பின்னவீனத்துவம் பற்றிய தீவிர கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம் இந்த வாரத்தில்//

வாங்க முரளி கண்ணன்... பதிவர்கள் பாஷையில் இதில் ஒன்னும் உள்குத்து இல்லையே...

அஜண்டாவில் இல்லை இருந்தாலும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இரண்டு நாளை ஒதுக்க முடியுமா? என்ற பார்ப்போம்.

ஒன்னும் காமெடி கீமடி பன்னுலேல...

சின்னக்குட்டி சொன்னது…

வணக்கம் ஜமாலன் ..நட்சத்திர வாழ்த்துக்கள்

ஜமாலன் சொன்னது…

வாங்க சின்னக்குட்டி

வாழ்த்துக்கு நன்றி...

Unknown சொன்னது…

ஜமாலன், ஆண்மை என்கிற
அதிகாரத்தைக் கவிழ்த்த
கருத்தப் பெண்ணைப் பற்றி எப்போதாவது எழுதவும். ஏனென்றால், ஜி.நாகராஜனிடம் கிடைத்த வாசிப்பனுபவம் தங்களிடமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பினால்தான்.

முரளிகண்ணன் சொன்னது…

இது நேயர் விருப்பமே. உள்குத்து இல்லை

ஜமாலன் சொன்னது…

தாமோதர் சந்துரு said...

//ஜமாலன், ஆண்மை என்கிற
அதிகாரத்தைக் கவிழ்த்த
கருத்தப் பெண்ணைப் பற்றி எப்போதாவது எழுதவும். ஏனென்றால், ஜி.நாகராஜனிடம் கிடைத்த வாசிப்பனுபவம் தங்களிடமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பினால்தான்//

வாங்க தாமோதர் சந்துரு..

நன்றி. ஜி. நாகராஜன் வாசிப்பனுபவம்ல கிடைக்கிற அளவிற்கு நம்ம எழுத்து ஒன்னும் அவ்வளவு பெருசு இல்லசார். நான் எழுதுன்னா அது மொக்கையா இருக்கும் இல்லனா? சரோஜாதேவிமாதிரி இருக்கும்.

ஜமாலன் சொன்னது…

முரளி கண்ணன் said...

//இது நேயர் விருப்பமே. உள்குத்து இல்லை//

நன்றி...

SP.VR. SUBBIAH சொன்னது…

///திருச்சி காவேரி
திரையரங்கின் பின்னுள்ள
தண்டவாளத்தை தாண்டிய
தகரக் குடிசையில்
'புதுசா'- எனக்கேட்டு
ஆண்மை என்கிற
அதிகாரத்தை கவிழ்த்த
கருத்தப் பெண்ணிற்கு..///

அர்ப்பணத்தில் அந்தப் பெண்ணையும் நினைததுதான்
மனதைப் புரட்டிபோடுகிறது

வித்தியாசமான அர்ப்பணம்தான்

தொடர்ந்து ஜமாயுங்கள் ஜமாலன்!

ஜமாலன் சொன்னது…

SP.VR. SUBBIAH said...

வாங்க சப்பையா சார்...

//அர்ப்பணத்தில் அந்தப் பெண்ணையும் நினைததுதான்
மனதைப் புரட்டிபோடுகிறது

வித்தியாசமான அர்ப்பணம்தான்//

அர்ப்ணிப்பு செய்வதில்கூட நாம் உயர்ந்தது தாழ்ந்தது என்கிற பாரபட்சம் பார்க்ககூடாது என்பதற்காகத்தான்.

பின்னோட்டத்திற்கு நன்றி.

ஜீவி சொன்னது…

நட்சத்திர வார வாழ்த்துக்கள் ஜமாலன்.

எடுத்த பணி செம்மையுடன் சிறக்க வாழ்த்துக்கள்.

ஜமாலன் சொன்னது…

ஜீவி said...

வாங்க ஜீவி..

//எடுத்த பணி செம்மையுடன் சிறக்க வாழ்த்துக்கள்.//

நன்றி.

தமிழ்நதி சொன்னது…

அர்ப்பணமே அமர்க்களமாயிருக்கிறது. எல்லோரும் 'தகரக் குடிசை'க் கதை கேட்கிற ஆவலில் இருப்பதைப் பார்த்தால் ஜி.நாகராஜன் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.:) 'நாளை மற்றுமொரு நாளே', 'குறத்தி முடுக்கு'இரண்டுமே யதார்த்த அழகியல் பொருந்தியவை. ஜி.நாகராஜன் அவர்களைப் பற்றி சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய நினைவோடை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவர் மீதான பிரமிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறைந்தும் தோன்றுகிற விசித்திரம் அவர் என்று நினைத்துக்கொண்டேன். நட்சத்திர வாரங்களின் நிலவாக வாழ்த்துக்கள் நண்பரே!

ஜமாலன் சொன்னது…

நண்பர் தமிழ்நதிக்கு,

முதலில் ஆடுதன் ராஜாவிற்கும், ஆடுதன் ராணிக்கு மட்டும்தான் அர்ப்பணிக்கலாம் என்று இருந்தேன். மற்றதெல்லாம் எழுத எழுத சேர்ந்து கொண்டது.

//'நாளை மற்றுமொரு நாளே', 'குறத்தி முடுக்கு'இரண்டுமே யதார்த்த அழகியல் பொருந்தியவை. ஜி.நாகராஜன் அவர்களைப் பற்றி சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய நினைவோடை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.//

நாகார்ஜுணன் ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். தமிழில் ஜி.நாகராஜனை அறிமுகப்படுத்தியவர்களில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. நீங்கள் வாய்ப்பிருந்தால் அதைனையும் படியுங்கள்.

வாழ்த்துக்கு நன்றி.

cheena (சீனா) சொன்னது…

சீட்டாட்டம், மது, மாது, இலக்கியம் இவை அனைத்திற்கும் இவ்வாரத்து பதிவுகளை அர்ப்பணித்தது புதுமை யாக இருக்கிறது

ஜமாலன் சொன்னது…

cheena (சீனா) said...
//சீட்டாட்டம், மது, மாது, இலக்கியம் இவை அனைத்திற்கும் இவ்வாரத்து பதிவுகளை அர்ப்பணித்தது புதுமை யாக இருக்கிறது//

பின்னோட்டமிட்ட நண்பர்களுக்கு, சீனா அவர்களுக்கு அளிக்கும் பதிலின் வழியாக.. எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன்.

இது அர்ப்பணம் என்கிற வார்த்தைக்கு தரப்படும் உயர்ந்த தளத்திலான புணித அந்தஸ்த்தை தலைகீழகாக்குவதற்காக எழுதப்பட்டது. அவ்வளவுதான். வெறும் வார்த்தையை வைத்துக் கொண்டு காட்டப்படும் விளையாட்டு. அதற்குமேல் இதில் ஒன்றுமில்லை. இதை ஏன் எல்லோரும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம் என்பதுதான் மொழியின் தனிச்சிறப்பான விளையாட்டு..

பாரதி தம்பி சொன்னது…

வாழ்த்துக்கள். நட்சத்திர அறிமுகப்பகுதியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும், 'இது என்னைப்பற்றிய அறிமுகம் அல்ல. என்னை பற்றி நீங்கள் என்ன எண்ண வேண்டும் என்பதைப்பற்றியது' என்ற வார்த்தைகள் துணுக்குற வைத்து மறுபடியும் வாசிக்க வைத்து, யோசிக்க வைத்து இப்போது பின்னூட்டமிடவும் வைத்திருக்கின்றன. இதே போன்றதொரு உணர்வை, 'திருமணம் என்னும் உடல் ஒடுக்க எந்திரம்' என்ற வார்த்தையை படித்தபோதும் உணரமுடிந்தது. வாழ்த்துக்கள்.

ஜமாலன் சொன்னது…

ஆழியூரான். said...

வாழ்த்துக்கு நன்றி.

//வாழ்த்துக்கள். நட்சத்திர அறிமுகப்பகுதியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும், 'இது என்னைப்பற்றிய அறிமுகம் அல்ல. என்னை பற்றி நீங்கள் என்ன எண்ண வேண்டும் என்பதைப்பற்றியது' என்ற வார்த்தைகள் துணுக்குற வைத்து மறுபடியும் வாசிக்க வைத்து, யோசிக்க வைத்து இப்போது பின்னூட்டமிடவும் வைத்திருக்கின்றன. இதே போன்றதொரு உணர்வை, 'திருமணம் என்னும் உடல் ஒடுக்க எந்திரம்' என்ற வார்த்தையை படித்தபோதும் உணரமுடிந்தது.//

இவை அதிர்ச்சி மதிப்பிற்கான வார்ததைகள் இல்லை. உணர்வுபூர்வமாக எழதப்பட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தன்னிலையை சிதைத்துக்கொள்தல் என்பது உலகை அதன் இயல்பில் உணர்ந்தத கொள்வதற்கான முதல் முயற்சி. சித்தர்கள் முதல் புத்தர்வரை இதற்காகத்தான் தேடி அலைந்து ஞானத்தைப் பெற்றார்கள். வேட்கையில்லாமல் அல்லது விழைவு இல்லாமல் பொருட்களுடன் உறவு கொள்வதே அல்லது அறிந்து கொள்வதே புத்தரின் போதனை. புதிதாக எதுவும் நான் சொல்லவில்லை.

திரைகளை கிழித்து கண்ணடிக்கும் அப்படம் மிகப்பெரிய அர்த்தங்களைத் தருவதாக உள்ளது.

பாரதி தம்பி சொன்னது…

எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, நீங்கள் சுட்ட வந்த உண்மையை உணர்ந்ததால் ஏற்பட்டது. அந்த வார்த்தைகள் தரும் நிர்வாணத்தின் துணுக்குறல் அது.

ஜமாலன் சொன்னது…

ஆழியூரான். said...

//எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, நீங்கள் சுட்ட வந்த உண்மையை உணர்ந்ததால் ஏற்பட்டது. அந்த வார்த்தைகள் தரும் நிர்வாணத்தின் துணுக்குறல் அது.//

உங்கள் பரிதலுக்கும் பகிர்தலுக்கம் நன்றி.

Perundevi சொன்னது…

"தன்னிலையை சிதைத்துக்கொள்தல் என்பது உலகை அதன் இயல்பில் உணர்ந்தத கொள்வதற்கான முதல் முயற்சி. சித்தர்கள் முதல் புத்தர்வரை இதற்காகத்தான் தேடி அலைந்து ஞானத்தைப் பெற்றார்கள்."

இப்போதுதான் பொன்னான இந்த வாக்கியங்கள் கண்ணில்பட்டன. மிகச்சரி. உருவாகியிருக்கும் தன்னிலையை விளையாட்டாகக் கலைத்துபோட்டு
வாழ்க்கையை ஆடவேண்டும். சரி தானே, திருநாகேஸ்வரம்?

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.