சிவாஜி

நண்பர்களே! தமிழன் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்ளும் எண்ணற்ற நிகழ்வுகளில் மற்றொன்று அரங்கேறுகிறது... சிவாஜி என்கிற மொண்ணை ராசாவின் பட வெளியீட்டு மூலம். பணம் பண்ண பல வழிகள் உண்டு. அதற்காக இப்படியா? மூண்று கால்உள்ள குரங்கு அல்லது இரண்டு தலை உள்ள பண்றி ஆகியவற்றை பார்க்க கூட்டம் கூடுவது போல...

தன்மீது நம்பிக்கையற்று படம் ஓட திருப்பதியில் உருள்வதும், இமய மலையில் உட்கார்ந்து ஜபிப்பதும்... இதனை எதற்குள் அடக்குவது.

ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். உலகில் சுயகெளவரவமற்ற தன்மானம் சொரணையற்ற ஒரு மக்கள் கூட்டம் தேடி தினம் சொறு தின்று வேடிக்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது தமிழ்க் கூட்டம்தான்.

தமிழர்கள் இரண்டு கோடிகளில் மட்டுமே வாழத் தெரிந்தவர்கள். ஒன்று அதீத அறிவாளி அல்லது அடிமுட்டாள். முட்டாள்களின் ஒன்றுகூடல் தழிழகமெங்கும் நடை பெறப்போகிறது ஜுன் 15-ல். அதுவும் காசு கொடுத்து. உங்கள் முட்டாள் தனத்தை நிரூபித்துக் கொள்வதால் சர்க்கஸ் கோமாளிகளை மீண்டும் வாழவைக்கப் போகிறீர்களா? அல்லது தமிழனின் தன்மானத்தை காக்க சர்க்கஸ் கொமாளிகளின் கூடாரத்தை காலி செய்து விரட்டப் போகிறீர்களா? இதுவே மானமுள்ள தமிழன் முன் உள்ள சொரணையுள்ள கேள்வி.

விடை..... உங்கள் மற்றும் உங்களைச் சார்ந்தவர்கள் கையில். நாம் நினைத்தால் நம்மால் முடிந்த 10-பேரை தடுத்து தன்மானத்தை காக்கலாம்தானே????????

1 comments:

பெயரில்லா சொன்னது…

இந்த கழிசடைப் படத்தை இண்டெர்நெட்டில் ஓசியா போட்டாகூட எவனும் பார்க்க மாட்டானு இதுவரைக்கும் போடல. நீங்க எதுக்குய்யா
காசு கொடுத்து பார்த்தீங்க?!

ஜமாலன். Blogger இயக்குவது.