மக்கள்நல மருத்துவர் புகழேந்திக்கு காவல்துறை மிரட்டல்

கல்பாக்கம் அணு உலையை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக இலவசமாக மருத்துவப் பணியாற்றிவரும் மக்கள்நல மருத்துவர் புகழேந்தி அவர்கள் காவல்துறையால் காரணமற்றமுறையில் கொலைமிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். புகழேந்தி வெளியிட்டிருக்கும் இந்த திறந்த கடிதத்தை நண்பர்கள், மக்கள்நல ஆர்வலர்கள் பரவலாக மற்றவர்கள் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டியது அவசியமாகும். இக்கடிதத்தில் அவரை காரணமற்ற முறையில் என்கவுண்டரில் கொல்வதாக மிரட்டப்பட்டுள்ளதை முன்வைத்து உள்ளார் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, புகழேந்திக்கு நமது முழு ஆதரவையும் பக்கபலத்தையும் தரவேண்டியது ஒரு ஜனநாயகக் கடமை.

புகழேந்தி வெளியிட்டு உள்ள திறந்தமடல் -

http://www.countercurrents.org/pugazhenthi031211.htm

புகழேந்தி பற்றிய எனது அறிமுகப் பதிவு.

 http://jamalantamil.blogspot.com/2007/10/blog-post_23.html 

நண்பர்கள் புகழேந்தியின் இக்கடிதத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்வதன்மூலம் பரவலாக எடுத்துச் செல்லலாம். கூடங்குள அணுஉலைகளால் தமிழகம் கொலைகளமாக மாற்றப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அணு எதிர்ப்பாளர்களை அரசாங்கம் நசுக்கமுனைவது அதைவிட வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அன்புடன்

ஜமாலன் 04-12-2011.

2 comments:

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். பகிர்விற்கு நன்றி நண்பரே! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...""அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

ஜமாலன். Blogger இயக்குவது.