பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் மணிவிழா

தமிழ் கணினிக்கு பங்காற்றியவரும், தமிழ் அறிஞரும், தமிழ்மொழித்துறை தலைவராக சென்னைப் பல்கழைக் கழகத்தில் பணிபுரிபவருமான பேராசியர் ந. தெய்வசுந்தரம் அவர்களுக்கு மணிவிழா. பேராசிரியர் அவர்களை 1985-ல் சிலமுறை அவரது துறை அலுவலகத்தில் சென்னை பல்கழைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். பொதுவான தமிழ் மொழி ஆர்வத்தில் இலக்கிய பற்றி அறிந்துகொள்ள அவரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  இன்று என்னை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பேராசிரியருக்கு அவை முக்கியமான சந்திப்புகள் இல்லை என்றாலும், என்னால் அவை மறக்க முடியாத சந்திப்புகள் என்பதை நினைவுகூர்கிறேன்.

புதியவர்கள், சிறியவர்கள் என்றெல்லாம் தகுதி பார்க்காது சமமாக பாவித்து உரையாடுபவர் பேராசிரியர். சமூகவியல் நோக்கு கொண்டவர். சிறந்த மொழியியல் அறிஞர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு கருத்தரங்குகள் போடுவதை மட்டுமே பணியாகக் கொள்ளாமல், தமிழ் மென்பொருள்கள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தி தமிழ் மென்பொருட்களை உருவாக்கியவர். பேரா. கணேசனுடன் இணைந்து தமிழ்ச்சொல் திருத்திகள், இலகணத் திருத்திகள் மென்பொருள்களை உருவாக்கி உள்ளார். அவரது மணிவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பற்ற கடல்கடந்த தேசத்தில் இருப்பதால், இதனை வாசிக்கும் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இங்கு நான் முனைவர் ப. குமார் பற்றி குறிப்பிட வேண்டும். எனது பதிவுகள் வழியாக அறிமுகமாகி, என்னுடன் வாய்ப்புள்ளபோது உரையாடியில் பேசிக்கொண்டிருப்பவர்.  அவர்தான் இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார். அவருக்கு நான் பேராசிரியர் பற்றி விசாரித்தபோது, இருவருக்கும் ஆச்சர்யம். காரணம் அவரிடம்தான் தற்பொழுது பணியாற்றிக் கொண்டிருப்பதாக அவர்கூறியது. நண்பர் முனைவர் ப. குமாருக்கு நன்றிகள்.

எனது அஞ்சலுக்கு வந்த அவரது அறிவிப்பு
மதிப்பிற்குரியீர்....

வணக்கம்....

பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் மணிவிழா 19.04.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். தாங்கள் தவறாது வருகைதருமாறு வேண்டுகிறேன். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால் ndsmanivizha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

நன்றி.

அன்புடன்
முனைவர் ப. குமார்
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசியரை வாழ்த்தும் வயது இல்லை என்பதால், தமிழி கணினியிலும், தமிழ் மொழி குறித்த கோட்பாட்டு சிந்தனைகளிலும் இன்னும் மிகச்சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்று ஒரு மாணவனாக வேண்டுகோள் வைக்கிறேன்.


அன்புடன்
ஜமாலன் (17-03-2010)

அழைப்பிதழ்




Share |
ஜமாலன். Blogger இயக்குவது.