முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு பின்பு தமிழகம் ஒரு விழிப்பு நிலை கொள்ளத் துவங்கியிருக்கிறது. இதற்கிடையில் பல தகவல் புரளிகள் பரப்பப்பட்டு வருவதும், சர்வதேச அளவில் பத்திரிக்கைகளின் குரல்வளையை நெறிக்கும் சிங்கள அரசை எதிர்த்தும். போர் நிறுத்தங்கோரியும் பல ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் வழக்கமாக நடைபெறும் தமிழின் தனிச்சிறப்பான (ஆரிய- திராவிட மற்றும் பார்ப்னிய-அ.பார்ப்பனிய) அரசியல் சண்டைகள் இதில் இனம் காணப்படுவது வருந்ததக்கதாக உள்ளது.
தமிழகத்திலிருந்து நேற்று காலை தோழர் லீனாமணிமேகலை ஒரு போராட்டம் பற்றிய அறிவிப்பை குறுஞ்செய்தியாக எனக்கு அனுப்பியிருந்தார். அதனை அறிவிக்கவே இப்பதிவு.
“இனப்படுக்கொலைக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து மாணவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், திருநங்கைகள் (அரவானிகள்) பங்கேற்கும் மாபெரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டம தில்லி பராளுமன்றத்திற்கு முன்பாக பிப்ரவரி 12ல் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி –1 சென்னை எக்மோர் மீசியம் அருகில் உள்ள IKSHA Center –ல் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் இக்கூட்டத்தில் ஈழ இனப்படுகொலைக்கு எதிரான அனைவரும் பங்கு கொள்ளவருமாறு அழைக்கிறோம்.”
நன்றி. தொடர்பிற்கு தோழர் லீனாமணிமேகலை - 09841043438
ஈழம் தொடர்பான மற்ற சுட்டிகள்.
1. வன்னியிருந்து ஒரு செய்தி தமிழில். இரண்டு இராணுவங்களுக்கு இடையில்
2. வன்னியிருந்து ஒரு செய்தி ஆங்கிலத்தில். Between Two Armies
3. மறைந்த முததுக்குமாரின் மரண சாசனம். விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை- முத்துக்குமார்.
4. பிரபாகரனுக்கு எழதப்பட்ட சூன்யத்தின் விமர்சனத்திற்குரிய திறந்த கடிதம்- இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…
5. கருத்தப்படம் - ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் !
6. முத்துக்குமார் மரணம் பற்றிய மாலனின் பார்வை – முத்துக்குமார்
7. முத்துக்குமார் மரணம் பற்றி வினவு - ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?
8. தற்போதைய ஈழச்சூழல் பற்றிய எனது பதிவு - தமிழா இன உணர்வுகொ(ல்)ள் – தமிழீழமும் தமிழர்களும்.
9. சண்டே லீடர் ஆங்கிலப் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்காவின் மரண சாசனம்
10. ஈழம் - சாதலும் புதுவது அன்றே – நண்பர் நாகார்ஜீனனின் பதிவான இது ஈழம் குறித்து வந்த மிக முக்கிய பதிவகளில் ஒன்று. இதில் தொடரும் உரையாடல் பெரும் ஊடகங்களில் நிகழ்த்ப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டியவை. (தாமதமாக பார்க்க நேர்ந்ததால் இன்று இதனை இணைக்கிறேன்.)
இச்சுட்டிகள் மாறுபட்ட பல பார்வைகளைத் தரக்கூடியவை. சிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை இந்தியக் கழுகுகள் மேலிருந்து கூர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அவலச்சூழலில், தமிழ் மக்களைக் காப்பாற்ற பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் நிறைந்த ஒன்று. கருத்த மோதல்களையும் பழைய வஞ்சங்களயும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெறுப்பின் அரசியலை விதைக்காமல் விருப்பின் அரசியலை உருவாக்க நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு. ஒன்றுபடுவோம், நமது வலிமையை திரட்டிக்காட்டுவோம். நமக்குள் உள்ள வேறுபாடுகளையும், வெறுப்பையும் களைவோம்.
இந்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நடைபெறும் இவ்வுண்ணாவிரதத்திற்கு நம்மால் முடிந்து ஆதரவை தரும்படி தமிழக மக்களையும், மாணவர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன்
- ஜமாலன். 31-01-2009
6 comments:
இந்தியகழுகுகளா? கைகளா?
http://twitter.com/ivansivan
நல்ல சேதி ஜமாலன்.
லீனா மணிமேகலையின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தமிழர் போராட்டத்தைப் பற்றி ஒருங்கிணைந்த தகவல் தரும் இணையதளம் இல்லாத நிலையில், உங்களைப் போன்ற பதிவர்கள் தரும் செய்திகள் மக்களுக்கு உதவியாய் உள்ளன. மிக்க நன்றி.
இந்திய கழுகுகளா?
அய்யோ பாவம்.
பெயரில்லா நண்பரே அய்யோ பாவம்தான் இன்று ஈழத் தமிழர்கள். நாளை....?
நன்றி குலவசனப்பிரியன்.
It will be yet another fast in New Delhi where they get least noticed.
What they want to achieve by this.The DMK and PMK are partners in the govt and are keeping quiet.
நல்ல செய்திதான்.
ஈழம் பற்றிய லிஸ்டில் இதையும் இணைத்துகொள்ளலாம்.
http://kadananathi.blogspot.com/2009/01/blog-post.html
நன்றி
கருத்துரையிடுக