டாலர் மதிப்பு குறைவு.. ஆரம்பமாகிவிட்டது அரூபத்தின் வேலைகள்

மணோகரா படத்தில் வரும் ஒரு வசனம் இது "ஆரம்பமாகிவிட்டதடி அரூபத்தின் வேலைகள்" என்று. கீழ்கண்ட செய்தி அந்த வசனத்தைதான் ஞாபகப்படுத்துகிறது. மணோகரா படத்தை நவீன அரசியல் சூழலில் வைத்து சிந்தித்தால் அமேரிக்காவின் கூட்டனி சதிகளை வசந்தசேனை மற்றும் அவளது கள்ளக்காதலன் நடிகர் நடராஜன் (பாத்திர பெயர் நினைவில் இல்லை) கூட்டணியைத்தான் நினைவூட்டுகிறது. இனியாவது IT பணியாளர்களை காய்வதைவிட்டு பெரிய அண்ணனின் பின்னனியைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இச்செய்தி.

டாலர் மதிப்பு சரிவு: சம்பளத்தை குறைக்கும் டிசிஎஸ்-விப்ரோ
வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008

மும்பை: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபத்தில் பெரும் ஓட்டை விழுந்து வருகிறது. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களின் தங்களது ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்க ஆரம்பித்துள்ளன.


பல நிறுவனங்கள் ஊதிய உயர்வை மட்டுப்படுத்தியுள்ளன. சில நிறுவனங்கள் கொடுத்து வரும் ஊதியத்தையே குறைக்க ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களின் புராஜெக்டுகள் அமெரிக்காவையே சார்ந்துள்ளதால் இந்த நிலை.
ரூபாயின் மதிப்பு அதிகரித்துவிட்டதால், டாலர் மதிப்பில் இந்த நிறுவனங்கள் ஈட்டும் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 12 சதவீதம் அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்களின் வருமானம் 12 முதல் 15 சதவீதம் வரை குறைந்துவிட்டது.

இதையடுத்து விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் ஊதியத்தில் உள்ள வேரியபல் அலவன்ஸை (variable allowance) குறைத்துவிட்டன. இதன்மூலம் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன.

சிறிய நிறுவனங்களில் நிலைமை இன்னும் மோசம். அவை புதிதாக வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை நிறுத்த ஆரம்பித்துள்ளன.

அமெரிக்க பொருளாதாரத்தில் ேதக்கம் ஆரம்பித்துவிட்ட நிலையில் ரூபாயின் மதிப்பு இப்போதைக்கு குறையாது என்றே தெரிகிறது. இதனால் சாப்ட்வேர் நிறுவனங்கள் சந்திக்கும் இந்த சவால் இப்போதைக்கு சீராகாது.

டாலர் மதிப்பு குறைந்ததால் இந்தியாவில் ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியை சார்ந்துள்ள தொழில்கள் பெரும் அடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-செய்தி தட்ஸ்தமிழிலிருந்து. http://thatstamil.oneindia.in/news/2008/01/31/india-rising-rupee-hitting-wages-in-it-sector.html

17 comments:

குமரன் (Kumaran) சொன்னது…

ஐயா. இந்த செய்தி என்ன சொல்கிறது என்று புரிகிறது. டாலரின் மதிப்பு குறைந்துவிட்டதால் ஐரோப்பாவிற்குச் சென்றால் அதிகம் செலவு என்று இங்கே இருப்பவர்கள் சிலர் ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்வதையும் குறைத்துக் கொள்கிறார்கள். டாலரின் மதிப்பு குறைவதும் டாலரின் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து செய்த வேலைக்குப் பணம் பெறும் இந்திய நிறுவனங்கள் பாதிப்படைவதும் நடக்கிறது. அதனால் அந்தப் பகுதி புரிகிறது. ஆனால் இதில் பெரியண்ணனின் சதி என்ற பகுதி மட்டும் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் அந்த வகைப் பார்வையும் புரியும்.

ஜமாலன் சொன்னது…

வாங்க குமரன்.

பெரியண்ணனின் சதி என்பது அமேரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கும் உலகெங்கிலுமான சமச்சீரற்ற பொருளாதாரத்தின் பக்க விளைவு அல்லது உலகமயமாக்கலின் விளைவு என்பதைதான். நான் விரிவாக எழுதவில்லை.

மு. மயூரன் சொன்னது…

//நான் விரிவாக எழுதவில்லை.

//

எழுதுங்கள்.

விரிவாக எளிமையாக இதனை அடிக்கடி எழுதவேண்டிய தேவை நிறையவே உண்டு.

அதுசரி ஜமாலன்,

வார்ப்புருவை மாற்றியபிறகும் கூட இந்தப் பின்னூட்டநவீனத்துவம் ஆசிரியரைக் கொலை செய்யும் பிரச்சினை உங்களை விட்டுப்போகவில்லையே? ஏன் ஜமாலன் உங்களுக்கு இந்த நிலை? ஏன் உங்களை மட்டும் இந்தச்சனியன் இப்படிப்போட்டு ஆட்டுகிறது? ஐயகோ!!

ஜமாலன் சொன்னது…

நன்பர் மயூரனுக்கு...

உண்மையில் நான் பலவிதமாக எனது அறிவிற்க உட்பட்டு முயன்றுவி்ட்டேன். அதனை சரி செய்ய முடியவில்லை. நீங்கள் பின்னோட்ட பெயர்கள் தெரியாததைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. நானனெ comments page போயித்தான் பார்க்கிறேன்.

உதவிகள் இருந்தால் தாருங்கள். அதனை சரிசெய்ய. நன்றி.

பெயரில்லா சொன்னது…

டாலரின் மதிப்பால் வளைகுடா இந்தியர்களின் வாழ்க்கை ஓட்டப் பாதிப்பை ஏற்கனவே தாங்கள் எழுதிய ஞாபகம் உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இது உள்ளது.

மு. மயூரன் சொன்னது…

//நீங்கள் பின்னோட்ட பெயர்கள் தெரியாததைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்//

ஆமாம் ஜமாலன்.

//
உதவிகள் இருந்தால் தாருங்கள். அதனை சரிசெய்ய. நன்றி.//

இதே பிரச்சினை எனது இன்னொரு நண்பருக்கும் உண்டு. அவருக்கு இன்னும் நான் இதை சரி செய்து கொடுக்காதது, தனிப்பட்ட ரீதியில் தன்னை நான் கவனிக்காத தன்மையின் வெளிப்பாடு என்ற கருத்தும் உண்டு என்ன செய்ய?

உங்களுடைய வார்ப்புருவை தனிப்பட எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்க. ஏதாவது செய்ய முடியுமா பார்க்கலாம்.

பெயரில்லா சொன்னது…

/உதவிகள் இருந்தால் தாருங்கள்/
ஜமாலன், இந்தப் பக்கம் உதவி செய்யக்கூடும். ஒருமுறை எட்டிப்பாருங்கள்.
http://anniyalogam.com/go.php?u=higopi/2007/01/blog-post.html

சதுக்க பூதம் சொன்னது…

இந்த பிரச்சனைக்கு(உலகலாவிய பொருளாதார ஏற்றதாழ்வு due to டாலர்) அமெரிக்கா மட்டும் அடிப்படை காரணம் இல்லை.அடிப்படையை பார்த்தால் அரேபிய நாடுகளும் இதற்கு காரணம். இந்த பதிவை படித்து பாருங்களேன்.
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

ஜமாலன் சொன்னது…

நன்றி... நண்பர் DJ ற்கு. முஙற்சி செய்கிறேன்.

நன்றி மயூரன் மயற்சி பலிக்காதநிலையில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். உதவும் உங்களுக்கு நன்றி.

வளைகுடா கட்டுரையை சுட்டிய அனானிக்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

சதுக்க பூதம் said...

//இந்த பிரச்சனைக்கு(உலகலாவிய பொருளாதார ஏற்றதாழ்வு due to டாலர்) அமெரிக்கா மட்டும் அடிப்படை காரணம் இல்லை.அடிப்படையை பார்த்தால் அரேபிய நாடுகளும் இதற்கு காரணம். இந்த பதிவை படித்து பாருங்களேன்.
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html//

தாங்கள் விரிவாக இதனை போன ஆண்டே 2 கட்டுரைகளில் அனுகியுள்ளீர்கள். உங்களது மற்ற கட்டுரையின் சுட்டி:
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post_28.html

நல்ல அலசல்.

குறிப்பாக சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தனக்கென்று பிரத்யேகமான அரசியல் எதையும் கொண்டவை அல்ல. காரணம் அவற்றை வழிநடத்துவது அமேரிக்காவே. அதனால் அமேரிக்காவின் கைப்பாவையாகத்தான் அவை உள்ளன. குண்டூசி முதல் உயர் தொழில்நுட்பம்வரை அவை அமெரிக்காவைச் சார்ந்தே உள்ளன. அதனால் வளைகுடாவின் அரசியல் என்பது அமேரிக்க அடிவடி அரசியல்தான். இன்றுவரை அமேரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டவையே இந்நாடுகளின் பணங்கள். அதனால் தற்சமயம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதன் விளைவு வெளிநாட்டினர் வாழமுடியாத நிலை உருவாகி எல்லோரும் இங்கு காலியாகி ஊருக்கு திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. உள்ளூரில் 40 சதவீத விலைவாசி அதிகரிப்பு உள்ளுர் பணியாளருக்கு 40 சதவீதம் சம்பள உயர்வு செய்துள்ளது அரசு. இதை குறித்து மற்றொரு கட்டுரை ஏற்கனவே எழுதியுள்ளேன். தற்சமயம் உங்கள் கட்டுரையைப் படித்தவுடன் இவ்விஷயம் இன்னும் தெளிவடைந்துள்ளது.

வரகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

நன்றி, ஜமாலன். நானும் அந்தச் செய்தியைப் படித்தேன்!

இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா திவாலாகிவிடும் என்பது என்னுடைய ஆரூடம்! அதனையொட்டி, இப்போதே இந்திய நிறுவனங்கள் மற்றும் நமது அரசாங்கம், அமெரிக்க சார்தலை மாற்றி தூரக்கண்ணோட்டத்தோடு திட்டமிடல் வேண்டும் என்பது என் கருத்து!

ஜமாலன் சொன்னது…

தஞ்சாவூரான் said...

//இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா திவாலாகிவிடும் என்பது என்னுடைய ஆரூடம்! அதனையொட்டி, இப்போதே இந்திய நிறுவனங்கள் மற்றும் நமது அரசாங்கம், அமெரிக்க சார்தலை மாற்றி தூரக்கண்ணோட்டத்தோடு திட்டமிடல் வேண்டும் என்பது என் கருத்து!//

ஆருடம் பளிக்கட்டும். கருத்துக்கு நன்றி.

சதுக்க பூதம் சொன்னது…

பாராட்டுக்கு நன்றி.தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் விளை ஏற்றத்தை திறமையாக உபயோகித்தால் அரபு நாடுகளின் நிலை எங்கோ போய்விடும். அதை செய்வார்களா?(அல்லது செய்ய பட விடுவார்களா?) என்பது பெரிய கேள்விகுறி

ஜமாலன் சொன்னது…

சதுக்க பூதம் said...

//தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் விளை ஏற்றத்தை திறமையாக உபயோகித்தால் அரபு நாடுகளின் நிலை எங்கோ போய்விடும். அதை செய்வார்களா?(அல்லது செய்ய பட விடுவார்களா?) என்பது பெரிய கேள்விகுறி//

நீங்கள் சொல்லியருப்பது ஒரு தெளிவான அரசியல் வாக்குமூலம். அதை இந்த அரசுசுகள் என்றுதான் உணரப்போகிறதோ?

இந்த பெட்ரோல் விலை ஏற்றத்திலேயே ஒரு அரசியல் இருக்கிறது. பெட்ரோல் விலை ஏற்றம் உண்மையில் அரேபியாவில் விலைவாசிகளை ஏற்றாமல் கட்டுக்கள் வைத்திருக்க வேண்டும். அல்லது விலைவாசி குறைந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்க வில்லை. பெட்ரோல் விலை ஏற்றம் அரேபியாவில் விலைவாசியையும் எற்றியுள்ளதின் மர்மம்தான் விளங்கவில்லை.

பெயரில்லா சொன்னது…

There is nothing unusual in this.
Because when dollar's value with reference to Rupee falls their income gets lesser.Now it is cheaper to import from USA in terms of rupees but for expoters
the profit margins get squeezed.
US alone is not responsible for this.When it becomes a major crisis Indian government will intervene to help exporters.
You have jumped to some conclusions.

K.R.அதியமான் சொன்னது…

/////இன்னும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா திவாலாகிவிடும் என்பது என்னுடைய ஆரூடம்! அதனையொட்டி, இப்போதே இந்திய நிறுவனங்கள் மற்றும் நமது அரசாங்கம், அமெரிக்க சார்தலை மாற்றி தூரக்கண்ணோட்டத்தோடு திட்டமிடல் வேண்டும் என்பது என் கருத்து!//

ஆருடம் பளிக்கட்டும். கருத்துக்கு நன்றி.////

:)))
then this google and free blogging will be over along with most of internet and other communications.
and we shall get back to the good old days of printed pages..
(and no annoy attacks) :))))

K.R.அதியமான் சொன்னது…

////அதனால் வளைகுடாவின் அரசியல் என்பது அமேரிக்க அடிவடி அரசியல்தான். இன்றுவரை அமேரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டவையே இந்நாடுகளின் பணங்கள். அதனால் தற்சமயம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன./////

No nation can force the rest of the world to accept its currency as the reserve/world trade currency. until WW 2, Sterling pound was the reserve currency of the world. only in the past 60 years did USD become the reserve currency of the world. the key word is 'trust worthiness' of the currency and size, stability of the currency issuing nation.
it took US nealy 250 years to acheive this thru hard work, thirft, economic growth and innovation. no magic wand or use of brute millitary power can do it.
The Swiss Franc (until Euro replaced it) was very respected currecny even though the Swisserland hardly has anu millitary clout.

OF course USA has mis-managed its economy, lives beyond its means and sqaunders its reserves. all this is recent history and it was very different in the 50s and 60s.
probably Euro will replace USD as the reserve currency of the world.

But the Asian govt central banks (mainly Japanese, Chinese and Indian,etC) have parked most of their dollar reserves with US treasury bills (several trillion dollars worth) so that their currencies may not appreciate with respect to USD, to help their export driven economic growth. the vested interests of such nations have been a very important factor in the huge distortions in international fiancial markets.

Lots of artificial distortion are there in this international fin. markets like yen carry trade (due to nealy 1 % interest rates in Japan and free convertiblity of yen), huge fiscal and trade deficts of US govts (trillions) which are ably financed by the rest of the world, etc. if really free markets with little govt intervention had operated then this huge a crisis would not have arisen and there would have been painful but temporary adjustments then and there, which balances global and local distortions / recessions / etc..

it is a very compex subject and more inputs needed to really understand the issues...

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.