கலைகிறது மோடி மந்திரம்

குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு ஒட்டி நடந்த கலவரமும், அந்த ரயில் எரிப்பும் திட்டமிட்ட செயல் என்பதையம் அதற்கு காரணமான சங்பரிவார் அமைப்புகளையும் பல உண்மை அறியும் குழுக்கள் துவங்கி பல அறிவுஜீவிகள், ஜனநாயகவாதிகள் வரை தொடாந்து சொல்லி வருகின்றனர். அத்தனையும் செவிடன் காதில ஊதிய சங்காக நமது அரசியல் அமைப்புகளிலும் அதன் தலைவர்களிலும் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அடுத்து நடந்த தேர்தலில் இதையே வீரமிக்க செயலாக காட்டி முஸலிம்களை பயமுறுத்தி பெரும் வெற்றியைப் பெற்றது மோடி அரசு. இப்பொழுது தெகல்கா என்கிற நிறுவனம் சில உண்மைகளை படம்பிடித்து காட்சி ஊடகத்தின் வழியாக வெளிப்படுத்தியுள்ளது.

இணைப்பு: http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp


இன்றைய உலகம் காட்சி ஊடக உலகமாகிவிட்டதால் இத பெரும் அளவில் வெகுஜன தளத்தை பாதிக்கலாம். பிரச்சனை இவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்கள் இல்லை. பெரும்பாலான ஊடகங்கள் செய்தி என்ற அளவில்தான் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவையும் நாளடைவில் மற்ந்த போகலாம். அல்லது வரும் தேர்தலுக்கு முஸலிம்கள் மத்தியில் மீண்டும் மோடி பற்றிய பய உணர்வை பதற்றத்தை ஏற்படுத்தி அவை அவருக்ககு சாதகமான வாக்காக மாறலாம். ஏனென்றால் எதிர்மறை அம்சங்களின்மீது ஈர்ப்பு கொண்ட மக்கள் கூட்டம். கதாநாயகைனவிட வில்லனை நேசிக்கும் ஒரு எதிர்-செயல் மனநிலை என்பதே நமது மக்களின் கும்பல் உளவியலாக (mass psychology) உள்ளது. தனியராக இவர்கள் உளவில் வேறு. கும்பலாக மாறும்போது அல்லது பொதுவில் இணையும்போது.. ஆட்பட்டுவிடும் ஒரு கும்பல் மனப்போக்கே நிலவுகிறது. இச்சூழலில் ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகள் தீவிரமடைந்திருக்கும் இந்நிலையில் நமது மக்கள் சாதிக்கும் கள்ள மெளனம் பெரும் அயற்சியையே தருகிறது.

கொத்ரா சம்பவம் ஒரு இனசுத்திகரிப்பிற்கான செயல்திட்டம்தான். கூறியது கூற வேண்டாம் என்பதால், நமது எதிர்ப்புணர்வை பதிய வைக்க.. நண்பர் கார்கி அவர்கள் பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன். இக்கருத்தை எனது உணர்வில் என்னைவிட சிறந்த மொழிநடையி்ல் வெளியிட்ட நண்பர் கார்கியின் அனுமதியுடனும் நன்றியுடனும்.. மீளபதிவாகிறது.

மோடியின் ராமராஜ்யம்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்? இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

கார்கி
(கார்கியின் இணைப்பு: http://kaargipages.wordpress.com/)

பின்குறிப்பு: கட்டுரையின் அழுத்தம் (நிறம் மாறியவை) என்னுடையது. ஈழத்தில் நடைபேறும் படுகொலைகள் குறித்த கண்டனம் பிறிதொரு பதிவாக வெளியிடப்படுகிறது.

20 comments:

அசுரன் சொன்னது…

It is good to have Kargi's comments been published a seperate Post.

Thanks for that....

I feel very happy to see many people with Marxian affliation

Asuran

ஜமாலன் சொன்னது…

வாங்க தோழர் அசுரன்..

உங்களது பாராட்டததக்க உங்கள் பதிவுலகப் பணிக்க வவாழ்த்துக்கள். உங்களது பின்னோட்டம் மகிழ்ச்சியாக உள்ளது. எனது குறிப்புகள் இல்லாமல் வெளியிட்டிருக்கலாம்தான். தவறுக்கு வருந்துகிறேன். எனது கண்டனத்தை பதியவைக்கவே அது. நன்றி.

Unknown சொன்னது…

ஜமாலன் அவர்களே நன்றி இன்னும் குஜராத்தை மனுதர்மம் தான் அட்ச்சி செய்கிறது இன்மேலும் அது தான் செய்யும் அவர்களை திருத்தவே முடியாது நமது அம்மாவும் இதையே தான் செய்வார் நம் தமிழ்மக்களும் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது அம்மாவைத்தான்

ஜமாலன் சொன்னது…

ஜெயம் said...

வாங்க.. நன்றி.

//குஜராத்தை மனுதர்மம் தான் அட்ச்சி செய்கிறது இன்மேலும் அது தான் செய்யும் அவர்களை திருத்தவே முடியாது நமது அம்மாவும் இதையே தான் செய்வார் நம் தமிழ்மக்களும் அடுத்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவது அம்மாவைத்தான்?//

உங்கள் கணிப்பு சரிதான். இந்தியாவில் பாசிசம் என்பது மதவடிவில் வந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

கையேடு சொன்னது…

இச்செய்தியையும் இது தொடர்பான வீடியோக்காட்சிகளையும் எப்பொழுது பார்த்தாலும் ஒருவித நடுக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

இது தொடர்பான கோப்புக் காட்சிகளைத் தொகுத்து "FINAL SOLUTIONS" என்ற திரைப்படத்தில் முதுகெலும்புள்ள ராகேஷ் ஷர்மா வெளியிட்டார். ஆனால் இதைப் பார்ப்பதற்கோ அல்லது திரையிடுவதற்கோ எவ்வித திராணியும் தைரியமும் இல்லாமல் இருந்தது அரசு மற்றும் அரசு இயந்திரம். இரண்டாண்டுகள் கழித்து பெங்களூரில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் கூட இத்திரைப்படம் திரையிடத் தடைவிதிக்கப்பட்டது.

ஆழ்த்து புரையோடிப்போன சீழ்வடிகின்ற புண்களுடைய உடலையும், முகத்தையுமுடைய இந்தியாவை, தற்காலிக முகப்பூச்சுக்களின் உதவியில் மிளிரவைத்துக் கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்ற மயக்கத்திலிருந்து விழித்தெழவேண்டிய காலத்தின் கட்டாயப்பிடியிலிருக்கிறோம் என்றே உணர்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

கையேடு said...

//இச்செய்தியையும் இது தொடர்பான வீடியோக்காட்சிகளையும் எப்பொழுது பார்த்தாலும் ஒருவித நடுக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.//

//ஆழ்த்து புரையோடிப்போன சீழ்வடிகின்ற புண்களுடைய உடலையும், முகத்தையுமுடைய இந்தியாவை, தற்காலிக முகப்பூச்சுக்களின் உதவியில் மிளிரவைத்துக் கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்ற மயக்கத்திலிருந்து விழித்தெழவேண்டிய காலத்தின் கட்டாயப்பிடியிலிருக்கிறோம் என்றே உணர்கிறேன்.//

எனது உணர்வுகளுடன் ஒத்ததிரும் உங்கள் உணர்வு ஒரு தோழமையை ஏற்படுத்துகிறது. பேச்சை இழக்கச் செய்யும் இந்த நிகழ்வுகள்.. ஹிட்லரையும் மிஞ்சிவிட்டன.. மனச்சிதைவிற்கு ஆளாக்கும் இந்த அழிவுகள் தூக்கத்தண்டணை போன்ற விஷயங்களைக்கூட.. சாதரணமானதாக ஆக்கிவிட்டது.

Fuinal Solution பார்க்கவில்லை. அது வலை தளத்தில் கிடைத்தால் சுட்டி அனுப்பவும். commercial ஆக இருந்தாலும்.

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.
நன்றி

RATHNESH சொன்னது…

படிக்கிறவர்களை எரிச்சல் படுத்தும் என்றாலும் ஒரு நிதர்சனத்தை எழுதுவது குறித்து தயக்கம் இல்லை எனக்கு.

மீள்பதிவாகச் செய்யப்பட்ட ஷோலே, டான் மாதிரியான திரைப்படங்களுக்கு நேர்ந்த கதை தான் இந்த தெகல்கா வெளியீட்டுக்கும் கிடைத்துள்ளது என்பதே கசப்பான, எதிர்கொள்ள நாணவைக்கும் உண்மை.

எந்த மீட்யாவிலும் இது பரபரப்பை ஏற்படுத்தவில்லை. கேவலம், கர்நாடக எம்எல்ஏக்களின் சில்லறைத்தனமான பதவி ஆசைக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கூட இந்த பதைபதைப்பான விஷயத்துக்குக் கொடுக்கப்படவில்லை.

// ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள்// இந்த வாக்கியங்களை முஸ்லிம் பெண் என்கிற இடத்தில் பதவி என்கிற வார்த்தையைப் பொருத்தினால், இன்றைய கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக எம் எல் ஏக்கள் சொல்வதற்குப் பொருத்தமான வசனம் இல்லையா?

ஒருவேளை வேறுமாநிலம், வேறு மக்கள் என்று புதுப்படமாக இருந்தால் மக்கள் பார்ப்பார்களோ என்னவோ.

டி.அருள் எழிலன் சொன்னது…

எனக்கு நீண்ட நாட்களாக ரியல் ஜர்னலிசம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆசை உண்டு.ஆனால் சுற்றி சுற்றி ஐந்து அல்லது ஆறு குடும்பங்களிடம் சிக்கி தமிழ் பத்திரிகை காட்சி ஊடகங்கள் சீரழிவதில் ரியல் ஜர்னலிஅசம் சாத்தியமில்லை எனப் பட்டது.
ஆனால் அவ்வப்போது தெஹல்கா செய்கிற காரியங்களை பார்க்கிற போது பொறாமையாக இருக்கிறது..நீதிமன்றத்தாலும் நானாவதி கமிஷனாலும் ஆளும் வர்க்கங்களும் கூட்டு சேர்ந்து மறைத்த மனித குலத்திற்கெதிரான மிகப் பெரிய பொய்யை ஒரு பத்திரிகையாளர் ஆறு மாதகாலம் போராடி அவர்களின் வாய்களில் இருந்தே வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்பது ஜனநாயகம் இருக்கிறது என்று சொல்கிற இந்த நாட்டின் நீதி மன்றங்களை பார்த்து உண்மையைக் காட்டி சிரிக்கிறது தெஹல்கா.குற்றங்களைச் செய்த மோடிகள் ஒரு பக்கம்.மோடிக‌ளை த‌ண்டிப்ப‌தால் மீண்டும் அவ‌ர்க‌ள் தேசீய‌ நாய‌க‌ர்க‌ளாக‌ தியாகிக‌ளாக‌ கொண்டாட‌ப்ப‌ட்டு ப‌த‌விக்கு வ‌ந்து விடுவார்க‌ளோ என்ற‌ காங்கிர‌சின் ப‌ய‌ம் என‌ இந்த‌ சூதாட்ட‌த்தில் நாம் யார்?ம‌ரித்துப்போன‌ 3,000 பேரின் சாவுக்கும் என்ன‌தான் தீர்வு...காய‌ங்க‌ளை ம‌ற‌ந்து விட‌த்தான் வேண்டுமா?அப்ப‌டி ம‌ற‌ந்து விட்டால் அடுத்த‌ குறி நானாக‌ இருக்க‌ மாட்டேன் என்ப‌த‌ற்கு என்ன‌ உத்திரவாத‌ம்...வேத‌னையும் விர‌க்தியும்தான் மிஞ்சுகிற‌து...அசுற‌ க‌தியில் அகோர‌மாக‌ சிரிக்கிற‌ மோடிக‌ளின் குர‌ல் என் குழ‌ந்தையின் செவிப்ப‌றையில் அறைகிற‌து...

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...

//படிக்கிறவர்களை எரிச்சல் படுத்தும் என்றாலும் ஒரு நிதர்சனத்தை எழுதுவது குறித்து தயக்கம் இல்லை எனக்கு.//

சிந்திக்க வைக்கும் நகைச்சுவை யாரையும் எரிச்சல்படுத்தாது.

//மீள்பதிவாகச் செய்யப்பட்ட ஷோலே, டான் மாதிரியான திரைப்படங்களுக்கு நேர்ந்த கதை தான் இந்த தெகல்கா வெளியீட்டுக்கும் கிடைத்துள்ளது என்பதே கசப்பான, எதிர்கொள்ள நாணவைக்கும் உண்மை.//

வெடக்கேடான விஷயம்தான். நீங்கள் சொல்வதுபோல் கர்நாடக அரசியல்அளவிற்கு கொல்லப்பட்ட 3000 உயிர்கள் மதிப்பற்று போய்விட்டது.

//இந்த வாக்கியங்களை முஸ்லிம் பெண் என்கிற இடத்தில் பதவி என்கிற வார்த்தையைப் பொருத்தினால், இன்றைய கர்நாடக மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக எம் எல் ஏக்கள் சொல்வதற்குப் பொருத்தமான வசனம் இல்லையா?//

பதவிக்கு அலைவதுதான் இவர்களது முக்கியம்.

//ஒருவேளை வேறுமாநிலம், வேறு மக்கள் என்று புதுப்படமாக இருந்தால் மக்கள் பார்ப்பார்களோ என்னவோ.//

இதுதான் உண்மை ரத்ணேஷ் தமிழகத்தின் தலை எழுத்து இதுதான்..

ஜமாலன் சொன்னது…

அன்னியன் said...

//எனக்கு நீண்ட நாட்களாக ரியல் ஜர்னலிசம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா?அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆசை உண்டு.ஆனால் சுற்றி சுற்றி ஐந்து அல்லது ஆறு குடும்பங்களிடம் சிக்கி தமிழ் பத்திரிகை காட்சி ஊடகங்கள் சீரழிவதில் ரியல் ஜர்னலிஅசம் சாத்தியமில்லை எனப் பட்டது.//

உண்மைதான் இந்தியாவின் பத்திரிக்கைகள்தான் முதலில் களையெடுத்து சீர்படுத்த வேண்டிய துறை. இந்திய ஜனநாயகம் சீரழிந்த நிலைக்கு இந்த பத்திரிக்கைள் ஒரு முக்ககிய காரணம்.

//நீதிமன்றத்தாலும் நானாவதி கமிஷனாலும் ஆளும் வர்க்கங்களும் கூட்டு சேர்ந்து மறைத்த மனித குலத்திற்கெதிரான மிகப் பெரிய பொய்யை ஒரு பத்திரிகையாளர் ஆறு மாதகாலம் போராடி அவர்களின் வாய்களில் இருந்தே வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்பது ஜனநாயகம் இருக்கிறது என்று சொல்கிற இந்த நாட்டின் நீதி மன்றங்களை பார்த்து உண்மையைக் காட்டி சிரிக்கிறது தெஹல்கா.//

தெஹல்காவின் இப்பணி சிறப்பானது. அதற்கான மதிப்பை வெகுமக்கள் அளிப்பது அவர்களை ஊக்கப்படுத்தும்.

//குற்றங்களைச் செய்த மோடிகள் ஒரு பக்கம்.மோடிக‌ளை த‌ண்டிப்ப‌தால் மீண்டும் அவ‌ர்க‌ள் தேசீய‌ நாய‌க‌ர்க‌ளாக‌ தியாகிக‌ளாக‌ கொண்டாட‌ப்ப‌ட்டு ப‌த‌விக்கு வ‌ந்து விடுவார்க‌ளோ என்ற‌ காங்கிர‌சின் ப‌ய‌ம் என‌ இந்த‌ சூதாட்ட‌த்தில் நாம் யார்?ம‌ரித்துப்போன‌ 3,000 பேரின் சாவுக்கும் என்ன‌தான் தீர்வு...காய‌ங்க‌ளை ம‌ற‌ந்து விட‌த்தான் வேண்டுமா?அப்ப‌டி ம‌ற‌ந்து விட்டால் அடுத்த‌ குறி நானாக‌ இருக்க‌ மாட்டேன் என்ப‌த‌ற்கு என்ன‌ உத்திரவாத‌ம்...வேத‌னையும் விர‌க்தியும்தான் மிஞ்சுகிற‌து...அசுற‌ க‌தியில் அகோர‌மாக‌ சிரிக்கிற‌ மோடிக‌ளின் குர‌ல் என் குழ‌ந்தையின் செவிப்ப‌றையில் அறைகிற‌து...//

இந்த உணர்வுதான் என்னையும் செயல்படவுடாமல் அடிக்கிறது. மனித உடலும் உயிரும் மதிப்பற்ற குப்பைகளாகப்போனபின் வாழ்வதற்கானஅர்த்தம் என்ன? என்கிற கேள்வியே மிஞ்சுகிறது.

பனிமலர் சொன்னது…

இவரை தான் அடுத்த பிரதமராக கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார் சோ இராமசாமி. இந்தியாவை ஆளக்கூடிய தகுதியும் திறமையும் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றும். இது வரை ஊழழ்ளற்ற ஆட்சியை அருமையாக நடத்தி காண்பித்து இருக்கிறார் என்றும் சொல்லுகிறார்.

ஜமாலன் சொன்னது…

பனிமலர் said...

வாங்க பனிமலர்

//இவரை தான் அடுத்த பிரதமராக கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார் சோ இராமசாமி. இந்தியாவை ஆளக்கூடிய தகுதியும் திறமையும் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றும். இது வரை ஊழழ்ளற்ற ஆட்சியை அருமையாக நடத்தி காண்பித்து இருக்கிறார் என்றும் சொல்லுகிறார்.//

சோ.ராமசாமி பற்றி ஏற்கனவே நீங்களும் ரத்ணேஷும் பதிவிட்டு அதை பேசிவிட்டோம். இவர் அப்படித்தான் தனது கோமாளித்தனத்தை அவ்வப்பொழுது வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

கருத்துக்கு நன்றி.

கையேடு சொன்னது…

"FINAL SOLUTIONS"-நான்கு பாகங்களாக நண்பர் ஒருவர் மூலம் குறுந்தகடுகளில் கிடைத்தது. இணையத்தில் கூகுள் வீடியோக்களில் இருந்ததாகவும் பின்னர் அது அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிகிறேன். ஆதலால் இணைப்பு எதுவும் வழங்கயியலாத சூழலில் உள்ளேன், மன்னிக்கவும். வேறு வழிகளில் உங்களுக்கு அதைக் கிடைக்கச் செய்யமுடியுமா என்று முயற்சிக்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

கையேடு said...

//"FINAL SOLUTIONS"- வேறு வழிகளில் உங்களுக்கு அதைக் கிடைக்கச் செய்யமுடியுமா என்று முயற்சிக்கிறேன்.//

உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி... அதற்கு ஏன் மன்னிக்கவும் போன்ற பெரிய வார்ததைகள் எல்லாம். சிரமம் எடுக்க வேண்டாம்.. நான் சென்னை வரும்போது பார்க்கலாம்.

சன்னாசி சொன்னது…

//இணையத்தில் கூகுள் வீடியோக்களில் இருந்ததாகவும் பின்னர் அது அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிகிறேன்.//

எனது பழைய பதிவொன்றில் சமீபத்தில் சேர்த்த
பிற்சேர்க்கையிலுள்ள வீடியோவில் பார்க்கலாம். கூகிள் வீடியோவின் சுட்டி இங்கே

http://video.google.com/videoplay?docid=3829364588351777769&hl=en

அசுரன் சொன்னது…

இதனை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...


பின்னூட்டங்களும்கூட இந்த நிகழ்வு குறித்த வெறு கோணங்களை முன் கொண்டு வருகின்றன. குறீப்பாக கிசு கிசுவுக்கு நமது மக்களை பழக்கப்படுத்தியுள்ள ஊடகங்கள்.... குஜராத்தும் கூட ஒரு கிசு கிசு அளவுக்கே மக்களிடம் செல்கிறது எனில் அது உறுதியாக மக்கள் விடுதலைக்காக செயல்படும் புரட்சிகர ஜனநாயக சக்திகளில் செயல்பாட்டு குறையே அன்றி மக்களின் குறை அல்ல.

ஊடகங்கள் என்ன மக்களின் கருவிகளா? அவை என்றென்றைக்கும் ஆளும் வர்க்க கருவிகளே. ராமன் விவகாரத்தில் கருணாநிதியைத்தான் விமர்சித்தன இந்த பார்ப்பன ஊடகங்கள். பினாயக் சென் என்ற மனித உரிமை போராட்டக்காரர் அனியாயமாக கைது செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளில் கண்டிக்கும் போது சஞ்சய்தத்தின் நியாயமான கைது குறித்து கிசு கிசு பேசின இந்த ஊடகங்கள். அவற்றை அம்பலப்படுத்துவதுதான் நமது கடமை.

மக்களை குறை சொல்லி சோம்பிக் கிடப்பதில் யாருக்கென்ன லாபம்? மாறாக இந்த மோனநிலை கிழித்து எழுப்பும் வகையிலான களப்பணிகளில் ஈடுபடுவதே சரி. பகத்சிங்கும் அதைத்தான் செய்தான். இந்திய விடுதலையின் தீப்பொறீயாய் அது விழுந்து பற்றி படர்ந்து எரிந்தது.


இதோ வரலாறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்துத்துவம் குறித்தும் ராமன் என்கிற நாய் குறித்தும் பார்ப்பனய பயங்கரவாதிகளின் கீழ் அணி திரண்டுள்ள கும்பலுடன் வீதிகளில் சொல்லாடல் செய்யவும் வாய்ப்பிருந்தால் கல்லாடால் செய்து மண்டையொடைக்கவும் மிக அருமையானதொரு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் மோன நிலை கலைத்து கிசு கிசு மயகத்திலிருந்து மீட்டெடுக்கலாம். பார்ப்ப்னியம் தற்காப்பிலிருந்து போர் தொடுக்கும் ஒரு குறுகிய காலகட்டம் இது என்பதை மறந்து விடாதீர்கள்.


அசுரன்

ஜமாலன் சொன்னது…

தோழர் அசுரன்

உங்கள் கருத்துக்கள் ஒரு நிதர்சனத்தை தருகின்றன. உண்மைதான் ஜனநாயக சக்திகளின் குறைபாடே ஒழிய மக்களின் குறைபாடு அல்ல. ஊடகம் என்பது ஆளும் வர்கக்த்தின் ஊதுகுழல்தான். நாம்தான் எதாவது செய்யவேண்டும். இறங்க வேண்டும்.

எனது பார்வை மத்தியதரவாக்க மேட்டிமைப் பார்வை என்பதை சரியாக சுட்டியுள்ளீர்கள். நான் இன்னும் எனக்குள் சிதைத்து ஆகக் கீழான மனிதனாக உணர்ந்து போராடுவதற்கான நிலைக்கு மாற வேண்டும். மக்களை குறைசொல்லிக் கொண்டிருப்பதைவிட.. சொல்லாடல் அல்லது கல்லாடல் என்பதுவே சரி.

தறுதலை சொன்னது…

//ஊடகங்கள் என்ன மக்களின் கருவிகளா? அவை என்றென்றைக்கும் ஆளும் வர்க்க கருவிகளே. ராமன் விவகாரத்தில் கருணாநிதியைத்தான் விமர்சித்தன இந்த பார்ப்பன ஊடகங்கள். பினாயக் சென் என்ற மனித உரிமை போராட்டக்காரர் அனியாயமாக கைது செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளில் கண்டிக்கும் போது சஞ்சய்தத்தின் நியாயமான கைது குறித்து கிசு கிசு பேசின இந்த ஊடகங்கள். அவற்றை அம்பலப்படுத்துவதுதான் நமது கடமை.//
வழிமொழிகிறேன்.

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

பாவெல் சொன்னது…

உணர்ச்சி தெறிப்பு மிக்க பதிவு
சில இடங்களில் இயலாமையும்
சில இடங்களில் மிருகத்தனமான
வெறியும் மட்டு மீறுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலமைகளின் கீழ் நாமும் வாழ்கிறோம் என்பதை எண்னும் போது அவமானகரமாக இருக்கிறது பார்ப்பன பயங்கரவாத கும்பலில்
உள்ள ஒவ்வொருவனுடைய ஈரல் குலையையும்
மோடி,அத்வானி,தெகாடியா,எச்.ராஜா,இல.கணேசன்
என்று ஒவ்வொருவனுடைய ஈரல் குலையையும் உருவி எடுக்க வேண்டும் என்கிற வெறித்தனமான
ஆசை மீண்டும் மீண்டும் எழுகிறது நாம் அந்த ஆசையை
நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் இல்லையெனில்
நாமும் குற்றவாளிகள் தான்....

ஆனால் இது பற்றி எந்த குற்றவுணர்வுமற்று,
சொரணையுமற்று
வாழும் ஜென்மங்களை என்ன செய்வது ?

தாய் நாவலில் கார்க்கி கூறியிருப்பதைப் போல
அவர்களின் மூளைக்குள் முள்ளம்பன்றிகளைத் தான்
தினிக்க வேண்டும் தன் முற்களை சிலுப்பிக்கொண்டு நிற்க்கும்
முள்ளம் பன்றிகளை !

சரியான தருணத்தில்
உணர்ச்சி மிகை படாமல்
பிறரையும் அந்த உணர்ச்சிக்குள் தள்ளிவிடும் பதிவை எழுதிய தோழர் கார்க்கிக்கும் பதிவை மீண்டு பதிப்பித்து பரவலான கவனத்திற்கு
கொண்டு சென்ற தோழர்களுக்கும் நன்பர்களுக்கும் நன்றி.

ஜமாலன் சொன்னது…

பாவெல் said...

//சரியான தருணத்தில்
உணர்ச்சி மிகை படாமல்
பிறரையும் அந்த உணர்ச்சிக்குள் தள்ளிவிடும் பதிவை எழுதிய தோழர் கார்க்கிக்கும் பதிவை மீண்டு பதிப்பித்து பரவலான கவனத்திற்கு
கொண்டு சென்ற தோழர்களுக்கும் நன்பர்களுக்கும் நன்றி.//

விரிவான உங்கள் கருத்துக்கு நன்றி தோழர்...

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.