பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

http://mayunathan.blogspot.com/2007/08/blog-post_29.html

நல்ல பதிவு நல்ல தருணத்தில் வெளியிடவும் பட்டுள்ளது। நான் 4-மாதங்களுக்கு முன்புதான் வலைப்பதிவுகளை பற்றி யதேச்சையாக அறிந்து, பார்க்கத் துவங்கினேன்। எனது சூழலும் அப்படி। வலைப்பதிவுகளை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பட்டது இதுதான்। இது ஏதோ தனிமனிதர்களின் புலம்பலும் டைரிக் குறிப்புகளும்॥ என்று। படிப்படியாக சில நல்ல பதிவுகளையும் பார்த்தபின் இதன் பயன்பாடு புரிந்து நானும் எனது பதிவை துவங்கினேன்। இன்று காலை எனது பதிவில் இதைப் பற்றி எழுத எண்ணியிருந்தேன்। அதாவது இந்தியாவில் மீடியா என்பது மக்களுக்கு பயன்பாடற்ற நிலையில் செயல்படுவதுடன் பல புனைவுகளை கட்டமைத்து மக்களை மந்தைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது। இவற்றிற்கு ஒரு மாற்றுச் சக்தியாக இப்பதிவுர் உலகம் செயல்பட வேண்டும்। 1. ஒருவர் தனது உள்ளக்கிடக்கையை பகிர்ந்துகொள்வது தவறில்லை. அதை அவர் பொது நோக்கில் ஒரு ஆழமான புரிதலுடன் ஒரு கண்ணோட்டத்துடன் முன் வைப்பது படிப்பவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும். 2. பத்திரிக்கை செய்திகளைப்பற்றிய உண்மை நிலவரங்கள் மாற்று கண்ணோட்டங்கள் முன்வைப்பது அதனை புரிந்து கொள்ள பயன்படும். சிலவேளை அதுவேகூட ஒரு தரவாக மாறி॥ மக்களிடம் மீடியாக்கள் வழியாக பரவ வாய்ப்பு உண்டு. 3. பதிவு மட்டற்ற சுதந்திரத்தை தருவதால்॥ எவ்வளவோ அரிய விஷயங்களை தரலாம். 4. விவாதிப்பபதற்கான களமாக இதனை பயன்படுத்துவது பரந்த அறிவாற்றறலையும் ஒரு சிறந்த கருத்தியல் நிலைப்பாட்டையும் எடுக்க உதவும். 5. இப்படி நிறைய சொல்லலாம். அது தனிப் பதிவாகிவிடும்.

பதிவுகளை டைரிக் குறிப்புகளைப் போல பயன்படுத்துவதை தவிர்க்கலாம்। எத்தனையோ செய்திகள் இருக்கு சொல்லவும். கற்கவும். அதற்கு பயன்படுத்தலாம். குறைந்தபட்சம்॥ உங்களது எழுத்தாற்றலை கருத்து சொல்லும் உரிமையை காப்பதற்காகவாவது இதனை பயன்படுத்தலாம். தமிழ் எழுத்தாள பெருமக்களைப்போல புகழுக்கு அலையாமல்.. பயனுள்ளதான ஒரு சுதந்திர வெளியாக பயன்படுத்தலாம்.. நன்றி.

குறிப்பு: இது மாயா என்கிற பதிவிற்கு இட்ட பின்னோட்டம்।

4 comments:

மாயா சொன்னது…

என் பதிவை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி

TBCD சொன்னது…

தவறாக எண்ண வேண்டாம்..
அவரின் பதிவின் சாராம்சத்தை உடைப்பது போல் உள்ளது...

உங்கள் பின்னுட்டப் பதிவு....

மற்றபடி..தங்கள் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன்..

காரூரன் சொன்னது…

இப்படித்தான் வாழவேண்டும் என்று சிலர், எப்படியும் வாழலாம் என்றும் இன்னும் பலர். தமிழ் வலயத்தில் எமது எண்ணங்களை அதன் தரத்திற்கேற்ப வகைப்படுத்த ஒரு நெறிப்படுத்தும் ஊடகம் இல்லை. எங்கள் மன நிலைக்கு ஏற்றவாறு மற்றவர்கள் எழுதவேண்டும் என்று எண்ணுவதும், மற்றவர்களின் மனநிலையில் இருந்து நாங்கள் பார்க்கவில்லை என்று ஒரு சாரார் ஆதங்கப்படுவதையும் பார்க்கின்றேன்.
உதாரணமாக, மாயாவின் இணையத்தில் பொதுவான ஒரு பின்னூட்டம் விட்டேன், அதற்கு காண்டீபன் மறுப்பு தெரிவிக்கும் போது என்னை விழித்து ஒரு உதாரணம் கொடுத்திருந்தார். வலயத்தில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்ல முனையும் ஒருவர், தனது உணர்வு வேகத்தில் தானே நடைமுறையை மறந்து சிறுபிள்ளைத்தன்மாக நடந்து கொண்டுள்ளார். இதை நியாயப்படுத்த ஆயிரம் கட்டுரைகள் வளரும். இது தவிர்க்க முடியாத யதார்த்தம்.

ஜமாலன் சொன்னது…

//தமிழ் வலயத்தில் எமது எண்ணங்களை அதன் தரத்திற்கேற்ப வகைப்படுத்த ஒரு நெறிப்படுத்தும் ஊடகம் இல்லை.//
நண்பருக்கு அப்படி ஒரு ஊடகம் சாத்தியமில்லை. நம்மை பிறர் தரப்படுத்துவது ஒருவகை அடிமைத்தனமாகிவிடும். நம்மை நாமே தரப்படுத்திக் கொள்ளவேண்டும். அதுவே தேவை. ஒருவரது கருத்து சுதந்திரத்தை மறுக்க முடியாது.. மறுக்கவும் கூடாது. ஆணால் பொதுத்தளத்தில் இயங்கும்போது ஒரு குறைந்நத பட்ச அறத்தை பின்பற்றவேண்டும் என்பதே. ஒருவரை அம்பலப்படுத்த வேண்டுமென்றால் அவரது கருத்து மற்றும் செயல் குறித்த அடிப்படைகளை விமர்சிக்கலாம். அவரை தரக்குறைவாக எழுதுவது தவறு. எப்படியாயினும்.. தாங்கள் கூறியுள்ள பின்னோட்ட விவகாரம் தெரியவில்லை.. அனேகமாக இது மாயாவின் பதிவிற்கான உங்களது பின்னோட்டம் தவறாக போஸ்ட செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். எப்படியாயினும் பின்னோட்டத்திற்கு நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.