புதிய குடியரசுத்தலைவர்.

இந்தியக் குடியரசு தனது புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் வழக்கம் போல அரசியல் பலம் குறித்தான சண்டைகளை துவங்கியுள்ளது. குடியரசுத் தேர்தலில் இரட்டை வாக்குரிமை இருப்பதால் நிறுத்தப்படும் எல்லா வேட்பாளர்களுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது. அல்லது, போட்டி கடமையாக இருக்கிறது. அதிகாரம் உண்டு ஆணால் அதிகாரம் இல்லை என்கிற இரண்டக நிலையான இப்பதவிக்கு பெண்ணா? ஆணா? தொழில்நுட்ப வல்லுனரா? அதிகார வர்க்கமா? (Technocrat? or Bureaucrat?) என்பதான கருத்தியல் நிலைகள் விவாதத்திற்கு இறக்கி விடப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும்விட ஒரு அரசியல் பண்பாட்டில் பயிற்றுவிக்கப்பட்டவரே இதற்கு குறைந்த பட்சம் தகுதி உடையவர். இன்றைய வேட்பாளர்களில் அத்தகுதியை கொஞ்சமேனும் நிறைவேற்றக் கூடியவர் என்ற பார்த்தால் பிரதீபா பாட்டீலே பொருத்தமானவர். ஏனேன்றால் முதலிலேயே அவர் தனது உண்மை நிலையை புரிந்து கொண்டுள்ளார். அதாவது, தேர்ந்தெடுப்பதற்கு முன்பே நான் ஒரு “ரப்பர் ஸ்டாம்பாக” இருக்க மாட்டேன் என்ற கூறியுள்ளார். குடியரசுத்தலைவர் என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது பாமரனும் அறிந்த உண்மைதானே. தவிரவும் 5-ஆண்டுகளாக தான் மட்டுமின்றி இந்திய இளைஞர்களையும் கனவுகான சொன்ன கலாம் அரசியல்ரீதியாக எந்த முடீவுகளையும் எடுக்க முடியாதவராக இருந்தார் என்பதே உண்மை. சமீப காலங்களில் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் உச்ச நீதி மன்றத்தை ஓரளவேனும் கட்டுப்படுத்தவும் அல்லது அதன் செயல்பாடுகளின் தரத்தை புரிந்த கொள்ளவும் ஒரு சட்டம் தெரிந்த அரசியல்வாதி இன்று அந்த பதவிக்கு அவசியப்படுகிறார். அதனால் சட்டம் தெரிந்த அரசியல் நிர்வாகம் அறிந்த பிரதீபா பாட்டிலே ஓரளவுக்கேனும் பொருத்தமானவர் என்பதே நமது நிலைப்பாடு.

அமேரிக்காவிற்கு அணுவிஞ்ஞனத்தை அளித்ததால் பரிசாக 1948-ல் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிற்கு ஐன்ஸ்டீனை குடியரசுத்தலைவராகக் கோரியது அமேரிக்கா. அதற்கு ஐன்ஸ்டீன் “ஜியோனிஸம்” எனப்படும் யூதவெறியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்டும் ஒரு நாட்டிற்கு தலைவனாகி வரலாற்றப் பழியை ஏற்க தயாரில்லை என்று மறுத்துவிட்டார். அதோபால் கலாம் நடத்திய அனுகுண்டு சோதணைக்கு பரிசாக அளிக்கப்பட்ட பதவிதான் குடியரசுத்தலைவர் பதவி. ஆணால் கலாம் அதனை பெருமகிழ்ச்சியுடன் எற்றுக் கொண்டதுடன் இரண்டாவது முறையாகவும் தன்னை முன் நிறுத்திக்கொள்கிறார். இதுவே ஒரு விஞ்ஞானிக்கும் ஒரு தொழில்நுட்பவாதிக்கும் உள்ள உளவியல் மற்றும் அரசியல் வேறுபாடு எனலாம்.

இந்திய சமூகத்தில் உருவாகிவரும் எழுச்சிகளுக்கும் குடியரசுத்தலைவர்களுக்கும் ஒரு அடையாளத் தொடர்ப இருப்பது யதேச்சையானதா? அல்லது அதுவும் அரசியல் திட்டமிடலா? என்பது ஆய்விற்கு உரியது. எப்படியென்றால்,


  • சீக்கியர்கள் மத்தியில் உருவான தேசிய எழுச்சியின்போது ஜெயில்சிங் குடியரசுத்தலைவராக்கப்பட்டார். மிகக்கடுமையான சீக்கிய ஒடுக்குமுறையை அரச கட்டவிழ்த்துவிட்டது.

  • தலித்துகள் மத்தியில் உருவான தீண்டாமை மற்றம் சமூக புறக்கணிப்பிற்கு எதிரான எழுச்சியின்போது கே.ஆர். நாராயண் குடியரசுத்தலைவராக்கப்பட்டார். தலித்துகளுக்கு எதிரான அரசு மற்றம் சமூக பயங்கரவாதங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

  • இஸ்லாமியர்கள் மத்தியல் கடந்த 5-ஆண்டுகளாக விழிப்பணர்வு உருவாகி வருகிறது. அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார். குஜராத் உள்ளிட்ட பாசிச பயங்கரவாதங்களை கட்டவிழ்த்துவிட்டது அரசு.

இத்தகைய எல்லா நிகழ்வுகளின்போதும் இவர்களது மத, சாதீய அடையாளங்கள் இவர்களை வாய்மூடி மெளணியாக்கிவிட்டது எனலாம். இது ஒரு பொருத்தப்பாடு அவ்வளவுதான். நமக்கு வழக்கம்போல் நம்பவதற்கான அடிப்படையாகக்கொண்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆவணங்கள் கைவசம் ஏதுமில்லை என்னிடம். இது ஒரு பொதுபுத்தியின் தொடர்பாட்டில் உருவான ஒரு கருத்து அவ்வளவுதான். தற்பொழுது உலகெங்கிலும் குறிப்பாக இந்தியாவிலும் பெண்ணிய சிந்தனை என்பது பரவலான கவனத்தைப் பெற்று மேலெழுந்து வருவதால் ஒரு பெண் குடியரசுத்தலைவரை அரசு எந்திரம் முன் மொழிகிறது. இது பெண்களுக்கு எதிரான அரசபயங்காரவாதத்தை பயற்சி செய்வதற்கான ஒரு கொடுங்காலமாகிவிடக் கூடாது என்பதே நமது அச்சமாக உள்ளது. நிற்க.

"ஜனநாயகம்" என்கிற மேற்கத்திய கருத்தாக்கம் ஒருவகைமாதிரியாக புரிந்துகொள்ளப்பட்டு பிறிதொரு வகைமாதிரியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகம் என்பது பெரும்பாண்மை என்கிற புள்ளிவிபரம் சிறபான்மை என்கிற புள்ளிவிபரத்தின்மீது செலுத்தும் ஒரு ஆதிக்கம் ஆகும். மக்கள்தொகையை கணக்கிட்டு வகைப்படுத்தி பட்டியலிட்டு வெறும் உடலற்ற உணர்வற்ற எண்களாக விஞ்ஞான ஆய்விற்கான தகவல்களாக மாற்றியது ஆங்கிலேய மற்றும் காலணீய ஐரொப்பிய 'எஜமானர்கள்'தான். இவர்கள்தான் உலகெங்கிலும் தேசியத்தை கட்டமைத்தனர். இன்றைய குடியரச அமைப்பை உருவாக்கினார்கள். தேச எல்லைகளை வரைபடங்களாக வரைந்து தந்தார்கள். தங்களுக்கு ஏவல் பணி செய்யும் இரண்டாந்தர குடிமக்களாக ஒரு கலப்பினத்தை (Hybrid Community) உருவாக்கினார்கள். இவர்களை அவர்களத பாணியிலெயே ஆள்வதற்கான ஓரு அதிகார வர்க்கத்தையும் படைத்தளித்தார்கள். டிவள்ளயயின நாகரிகமான ஐரோப்பியன் என்கிற உயர்ந்த லட்சியத்தை நமக்குள் விதைத்தார்கள். அதன் விளைவே இன்று ஒரு வேரும் அற்று விழுதும் அற்று அந்தரத்தில் மிதக்கும் ஆலமரமாக பழம்பருமை பேசிக்கொண்டிருக்கிறோம். வலைப்பதிவுகளில் அடையாளம் தேடி மிதக்கும் வெளிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மேற்கண்ட விவாதம் மற்றொரு கட்டுரையாக பிறிதொரு சந்தர்பத்தில் விவரிப்போம். மீண்டும் ஜனநாயக குடியரசு தலைவர் குறித்த உரையாடலைத் தொடரலாம். சர்வாதிகாரம் என்பதை ஜனநாயகத்திற்கு எதிர்மறையாக பார்க்க முடியாது. ஜனநாயகம் என்கிற பெயரில்கூட சர்வாதிகாரம் நடைமுறைப்படுத்தப்படலாம். இதற்கு இந்திரா காந்தியின் மிசா மற்றும் பி.ஜே.பி-யின் போடாக்கள் உதாரணம். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டில் காட்டும் தீவிர தடைகள்கூட ஒருவகை ஜனநாயக மறுப்புதான். ஜனநாயகம் என்பதில் சிறபான்மை என்கிற புள்ளி விபரத்திற்கு ஒரு இடமும் அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கான உத்திரவாதமும் தரப்பட வேண்டும். ஆக ஜனநாயகம் என்பது மேற்குலகில் பின்பற்றப்படும் அதே அடிப்படைகளில் இங்கு பின்பற்றபடுவதில்லை. ஆணால், ஜனநாயகம் என்கிற பெயரில் ஒருவகை எதேச்சதிகாரமே இங்கு நடைமுறையில் இருப்பதை காண்கிறோம். இது கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

ஜனநாயகம் என்பதும் பின்காலணியம் உருவாக்கிய கலப்பின தெசிய கருத்துருவத்துடன் இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும். பின்காலணியச் சூழலைக் கொண்ட இந்தியாவில் ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் அரசியல்ரீதியான அலசலுக்கு உட்பட்டது. அதாவது, இந்திய காலணிய கட்டுமானத்துடன் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் மாவோ சீனாவில் மேற்கத்திய ஜனநாயகத்திற்கு எதிராக புதிய ஜனநாயகம் என்கிற வரையறையை முன்வைத்தார்.
இதனை மீண்டும் தொடரலாம் பிறகு....

4 comments:

பெயரில்லா சொன்னது…

Your ignorance of facts and shallow knowledge is appaling.
Kalam was made President in 2002 July where as the communal clashes in Gujarat happened in Feb-Mar 2002.
ஜனநாயகம் என்பதில் சிறபான்மை என்கிற புள்ளி விபரத்திற்கு ஒரு இடமும் அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்கான உத்திரவாதமும் தரப்பட வேண்டும். ஆக ஜனநாயகம் என்பது மேற்குலகில் பின்பற்றப்படும் அதே அடிப்படைகளில் இங்கு பின்பற்றபடுவதில்லை.
India is one of the most liberal
countries when it comes to rights
of minorities.

சதுர்வேதி சொன்னது…

அருமையான பதிவு. உங்களை எட்டு போட அழைத்து இருக்கிறேன்!

சிறப்பாக செய்யுங்கள்.

மொழியும் நிலமும் சொன்னது…

அனானிமஸ்... விபரப்பிழையைச் சுட்டியதற்குகு நன்றி.. காலவித்தியாசம் அதிகமில்லை என்பதுடன்.. அந்நத கேஸ் பெஸ்ட் பேக்கரி வழக்குகு மற்றும் மன்த உரிமை ஆணையத்தின் அறிக்கை.. இன்னும் தொகுத்தால்.. 5-ஆண்டுகளில் நடந்த முஸ்லிம்களுக்க எதிரான வன்முறை.. நிறைய உண்டு. கட்டுரை புள்ளி விபரங்களை தவர்த்தது..

மொழியும் நிலமும் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜமாலன். Blogger இயக்குவது.