சந்தேக சாம்பிரானியின் சலியா சந்தேகங்கள்


சந்தேகங்களை தீர்ப்பவர்களுக்கு சாம்பிரானியும் தீர்க்காதவர்களுக்கு சாம்பலும் பரிசாக வழங்கப்படும்.
1. ஷெல்பி்ற்கும் (self) பல்பிற்கும் (bulb) என்ன வேறுபாடு? (இது அமைப்பியல் சொல்லும் சின்டாக்மாட்டிக் சப்த ஒருமைக்காக சொல்லப்படவில்லை.) 

2. ஷெல்பிற்குள் பல்ப் எறியும். பல்பிற்குள் ஏன் ஷெல்ப் எரிவதில்லை?

3. காலந்தாண்டிய இலக்கியம் எழுத லாங்ஜம்ப்  (நீளந்தாண்டதல்) மற்றும் ஹைஜம்ப் (உரயம் தாண்டுதல்) கற்றால் போதுமா? அல்லது இலக்கிய கம்பு வைத்து இரண்டையும் தாண்டலாமா?

4. லாங்ஜம்பிற்கும், ஹைஜம்பிற்கும் பரவலாக அமைப்பிய, பின்அமைப்பிய, பின்நவீனத்துவ. ரசனைவாத இலக்கிய விமர்சகர்கள் பயன்படுத்தும் டைக்கரானிக் மற்றும் சின்க்ரானிக் முறைகளுக்கும் உறவு உள்ளதா?

5. மலம் அள்ளுபவர்கள் பற்றிய அழகியல் ரசனைவாதத்தில் இலக்கிய-சுவை நிரம்பிய கட்டுரை எழுதமுடியுமா?

6. விளிம்பநிலை இலக்கியத்திற்கும் களிம்புநிலை(1) இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

7. மொழிபெயர்க்கலாம் ஆனால் மொழியை பெயர்க்கமுடியுமா?  

8. தால்ஸ்தாயின் ரஷ்ய உடை அணிந்த குடியானவன் தமிழில் பெயர்க்கப்பட்டபின் கோவனம் கட்டிக் கொள்வது ஏன்?

9. தால்ஸ்தாய் கதாநாயகிகளை காதலிப்பது தவறா? மாஸ்லாவின் மீதான காதல் இதுவரை எனக்கு மாறவேயில்லையே ஏன்? 

10. மிஷினரி பொஸிஸன்களை ”கிறித்துவ மிஸனரிபோபியா” உள்ளவர்கள் பயன்படுத்தலாமா? அதாவது மேல்-கீழ் படிநிலைவரிசையை பயன்படுத்தலாமா இலக்கிய கோட்பாடாக?

அடிக்குறிப்பு

1. களிம்பு நிலை இலக்கியம் என்றால் மனிதநேயமற்ற மனங்களி்ன் குரூரத்தை அழகிய அழுகாச்சி காவியங்கள் வழியாக தடவி தடவி சிகிச்சை அளித்து சரி செய்யும் இலக்கிய வகைமைக்கு பெயர். இலக்கியம் என்பது அஞ்சாள் அரிப்பு மருந்து, வீரியம் தரும் சிட்டுக்குருவி லேகியம் போன்று களிம்புநிலை மருந்தாக செயல்படுவதால் எம்மனார் என்ப்படும் இலக்கிய மம்மனார்கள் இணைந்து இப்பெயரிட்டுள்ளனர்.

டிஸ்கி - இதற்கும் மகாகவி உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று உலக இலக்கியம் உள்ள கன்னிமாரா நூலகத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

image courtesy- புகழ்பெற்ற கார்டுனிஸ்ட் ஆர். கே. லக்ஷமன் உருவாக்கிய திருவாளர் பொதுஜனம் (common men) நன்றியுடன்.

- ஜமாலன் 26-10-2011.

5 comments:

manjoorraja சொன்னது…

கலக்கறீர்...

ஜமாலன் சொன்னது…

நன்றி manjoorraja.

தமிழ்நதி சொன்னது…

என் சார்பில் ஒரு கேள்வி... ஒருவரைப் படித்துப் புரிந்துகொள்ள ஆழ்ந்த வாசிப்பு அவசியம் என்கிறார்கள். ஆழம் என்றால், எத்தனை அடி ஆழம்? கட்டுரை zigzag ஆகச் சென்றால், ஆழத்தைக் கணக்கெடுப்பது எங்ஙனம்?

ஜமாலன் சொன்னது…

@தமிழ்நதி இவ்வளவு ஆழமான சந்தேகங்கள் கேட்ட சந்தேக சாம்பிரானி என்ன செய்வார்? ஒவ்வொரு zig ற்கும் ஆழமாக போய் வரவேண்டியதுதான். இருந்தாலும் சாம்பிராணிய கேட்டுதான் சொல்லனும்.

gulf-tamilan சொன்னது…

:))))சந்தேக சாம்பிரானி நல்லாயிருக்கு தலைப்பு!!!

ஜமாலன். Blogger இயக்குவது.