காஃபியின் புத்துணர்ச்சியோடு
துவங்கும் ஒரு காலையில்
தொலைக்காட்சியில் -
உயிருக்கு பயந்து
ஒளிந்துகொண்டிருந்த பங்கரில்
உணவின்றி அழுகிக்கிடந்தது
ஒரு உடல்
சிதறிக்கிடக்கும் உறுப்புகளுக்கிடையே
சிக்கிக்கொண்டிருக்கிறது
ஒரு சிறுமியின் புன்னகை
மதியத்திற்குள்
இன்னும் சில உலக நாடுகள்
தங்கள் படைகளை அனுப்பலாம்
போரும் அமைதியும்
புணர்ந்தும்
சலித்தும்
போனபின்
மாலைக்குள்
உடல்கள் உரமிடப்பட்ட அப்பாழ்வெளியில்
இன்னும் சில உயிர்கள் பூக்கலாம்.
அவற்றில் புன்னகைகளுக்குப் பதிலாக
துவக்குகள் சிரிக்கலாம்
காஃபியின் புத்துணர்ச்சியுடன்
துவங்கும் மற்றொரு காலையின்
தொலைக்காட்சியில் -
பயங்கரவாதம் படர்வதாக
செய்திகள் பரவலாம்
பார்த்துக்கொண்டிருக்கும்போது
நம் வீட்டில் குண்டுகள் வெடிக்கலாம்
சிதறிக்கிடக்கும் உறுப்புகளுக்கிடையே
சிக்கிக்கொண்டிருக்கும்
அந்த சிறுமியின் புன்னகை
நமது மகளின் புன்னகையாகவும் இருக்கலாம்.
-26-01-2009.
9 comments:
என்னமோ செய்கிறது
சொல்ல வார்த்தை இல்லை
:(
/உணவின்றி அழுகிக்கிடந்தது
ஒரு உடல் /
சடலத்திற்கு எதற்கு உணவு?
நன்றி திகழ்மிளர்.
நன்றி சுந்தர்.
//:(
/உணவின்றி அழுகிக்கிடந்தது
ஒரு உடல் /
சடலத்திற்கு எதற்கு உணவு?//
ஈழத்தமிழர் ஒருவர் பங்கரில் இறந்து கிடந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வில் எழுதியது. பங்கரில் உணவு கிடைத்திருந்தால் அவர் உயிர் வாழ்ந்திருப்பார். உயிர் பிழைக்க எண்ணி பங்கருக்குள் போனவர், உணவின்றி இறப்பது என்பது பாதுகாப்பு என பயந்து அகதியாக தஞ்சும் புகும் தமிழர்கள், தஞ்சம் புகுந்த இடத்திலும் மரணிக்கும் ஒரு அவலநிலைதான் வாய்த்துள்ளது என்பதை சொல்ல முயலும் வரிகள் அவை. குண்டடித் தாக்குதலால் இறந்தவர்களைவிட, உணவும், மருந்தும் இன்றி பயத்திலும், நிர்க்கதியிலும் இறந்தவர்கள்தான் அதிகம். முதல் வரியுடன் சேர்த்து வாசித்தால்... ஓரளவு நான் எண்ணியதை சொல்ல முயன்றதாகவே நினைக்கிறேன்.
//உயிருக்கு பயந்து
ஒளிந்துகொண்டிருந்த பங்கரில்
உணவின்றி அழுகிக்கிடந்தது
ஒரு உடல்//
இங்கு பங்கர் என்பது பாதுகாப்பு என்கிற நிலைபற்றியதுதான். அதிலும் பாதுகாப்பு இல்லை என்பதே.
இன்னும் தெளிவாக எழுதியிருக்க வேண்டுமோ? ))
அப்பப்ப உணர்ச்சிவசப்பட்டா இப்படித்தான். சுட்டியமைக்கு நன்றி.
http://abiprabhu.blogspot.com/
ரொம்பவும் சிந்திக்கவும் கணத்துப் போகவும் வைத்தக் கவிதைங்க ஜமாலன்.
கையேடு கூறியது...
//ரொம்பவும் சிந்திக்கவும் கணத்துப் போகவும் வைத்தக் கவிதைங்க ஜமாலன்.//
நன்றி நண்பரே!!
அருமையான கவிதை.
//
அந்த சிறுமியின் புன்னகை
நமது மகளின் புன்னகையாகவும் இருக்கலாம்.
//
யாருக்கோ தானே நடக்கிறது என்று ஜடம் மாதிரி இருக்காதீர்கள், என்பதை சாட்டையடியாக விளக்கிய வரிகள்.
"யாருக்கோ தானே" என்று எப்பொழுதுமே மெத்தனமாகவே இருந்து பழகிவிட்ட சில தமிழ்மக்களுக்கு இன்னுமொரு சாட்டை வீச்சு. வாழ்த்துக்கள் ஜமாலன். தொடர்க உங்கள் பணி. இன்னும் பல பதிவுகளை தரவேற்றுங்கள்; மழுங்கிக் கிடக்கும் மனங்களுக்கு உரமேற்றுங்கள்.
"யாருக்கோ தானே" என்று எப்பொழுதுமே மெத்தனமாகவே இருந்து பழகிவிட்ட சில தமிழ்மக்களுக்கு இன்னுமொரு சாட்டை வீச்சு. வாழ்த்துக்கள் ஜமாலன். தொடர்க உங்கள் பணி. இன்னும் பல பதிவுகளை தரவேற்றுங்கள்; மழுங்கிக் கிடக்கும் மனங்களுக்கு உரமேற்றுங்கள்.
கருத்துரையிடுக