தமிழீழப் பிரச்சனைக் குறித்த கூட்டங்கள் அறிவிப்பு.

 

image

நண்பர்கள் படத்தை கிளிக் செய்து பெரிதுபடுத்தி வாசிக்கவும். சிங்களர்கள் மத்தியல் தமிழருக்கு வரும் ஒரு ஆதரவுக் குரல் என்ற வகையில் இக்கூட்டங்கள் முக்கியத்தவம் வாய்ந்தவை. கலந்துகொள்ளும் நணபர்கள் பேசியவற்றை பதிவில் பகிர்ந்நதால் இங்கு இணைப்பு கொடுக்கலாம்.

ஈழப்பிரச்சனைப் பற்றிய முக்கியமான உரையாடல் நடக்கும் நண்பர் நாகார்ஜீனனின் ஈழம், இனி தடுப்புமுகாம்-அகதிமுகாம் வடிவத்தில்?பதிவை நணபர்கள் வாசித்து தங்களது கருத்துக்களையும் ஆலொசனையும் சொல்ல வேண்டுகிறேன்.

ஈழத்தமிழர் ஆதரவுக்குரல் தோழர்கள் போராட்டம் டெல்லியில் நடைபெற்றுபோது அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளனர். போராட்டம் டெல்லிவரை சென்று இந்தியா முழுமைக்குமான ஒரு பார்வையை திருப்பியதில், மற்ற மாநிலத்தவரையும் கவனப்படத்தியதில் அதன் வெற்றியை அடைந்துள்ளது. கலந்துகொண்ட மாணவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அனைத்து தரப்பினரது போர்ககுணத்திற்கு  நமது வீரவணக்கங்கள்.

குறிப்பும் அறிவிப்பும்

ஜமாலன். 13-02-209

6 comments:

thiru சொன்னது…

ஜமாலன்,

தகவலுக்கு நன்றி!

தமிழகத்தில் 'முற்போக்குகளாக' காட்டிக்கொள்ளுகிற மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகள் சிந்திக்க வேண்டிய நேரமிது. தோழர் சிறிதுங்க ஜெயசூர்யா உரைகளை கேட்டக ஆவல். கலந்து கொள்பவர்கள் வலையேற்றினால் நன்று!

சிகப்பு சிந்தனையாளர்களாக காட்டிக்கொள்ளும் பலர் 'புலியெதிர்ப்பு' என்ற பெயரில் தமிழர்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்த நேரத்தில் இலங்கையிலிருந்து தோழர் சிறிதுங்க ஜெயசூர்யா போன்றவர்களது குரல்கள் உரக்க ஒலிக்க வேண்டும்.

மு. மயூரன் சொன்னது…

தகவலுக்கு நன்றி ஜமாலன்.

ஈழத்தமிழர்களது இப்பெரும் அவலத்தைத் தடுத்து நிறுத்தும் மாபெரும் சக்திகளாக இந்திய மக்களும் இலங்கைச் சிங்கள மக்களுமே இருப்பதாக நான் கருதுகிறேன்.

இவ்வவலத்தை எம்மீது ஏவி விட்டிருக்கும் இரு அரச, அதிகாரவர்க்க பயங்கரவாதங்களுக்கு கடிவாளமிடும் வல்லமை இவ்விரு மக்கள் கூட்டத்துக்கே இப்போது உள்ளது. பன்னாட்டு ஊர்வலங்கள், தீக்குளிப்புகளில் நம்பிக்கை இல்லை எனக்கு.

சிங்கள முற்போக்கு அணிகளோடு கைகோர்க்க வேண்டிய, சிங்கள மக்களை பொது உடன்பாட்டோடு எம்மோடு திரட்டவேண்டிய பாரிய அவசியத்தை எமது தேசிய அரசியற் தலைமைகள் 2002 இலாவது செய்திருக்கவேண்டும். அதைத்தட்டிகழித்ததுடன் "சிங்கள"-"தமிழ்" பிளவினை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணியினையே (பஸ் குண்டு வெடிப்புக்களை நினைவிற்கொள்க) அவை மேற்கொள்ளத்தலைப்பட்டன.

இப்போக்கின் விளைவுகளை அனுபவிக்கிறோம்.

நம்பிக்கையூட்டும் சிங்கள முற்போக்குத்தலைமைகள், மக்கள் இயக்கங்கள் நிறையவே உள்ளன. அவற்றோடு விட்டுக்கொடுப்புக்களுடனான பொது உடன்பாட்டோடு, அவர்களது பிரச்சினைகளைத்தீர்க்கும் கோரிக்கைகளையும் சேர்த்துக்கொண்டு எமது போராட்டத்தினை திசைவழிப்படுத்தவேண்டிய அவசியம் உண்டு.

இது நம்பிக்கையூட்டும் செய்தி.

ஜமாலன் சொன்னது…

நன்றி திரு.

கண்டிப்பாக இலங்கை இனப்பிரச்சனையில் மார்க்சிவாதிகளின் நிலை தேசியசுயநிர்ணய உரிமை என்கிற லெனினிய நிலைப்பாடுதான்.நானும் கலந்துகொள்ளும் நண்பர்களின் கருத்தை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன்.

ஜமாலன் சொன்னது…

நண்பர் மயுரன்

உங்களது விரிந்த பார்வை முக்கியமானது. பிரச்சனை சேர்ந்துவாழும் நிலை என்பதற்கான அல்லது பொது உரைாயடலுக்கான களங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இரண்டு இனங்களும் எதிர் எதிரானதாக ஆக்கபட்ட நிலையில் இப்பிரச்சனையில் இதுபோன்ற எதிர் தரப்பின் ஆதரவுக் குரலகள் முக்கியமானவை. இவர்களால்தான் ஒரு பொது உரையாடலுக்கான களத்தை உருவாக்க முடியும்.

விரிவான உங்கள் கருத்திற்கு நன்றி.

Jayakumar சொன்னது…

ஜமாலன்,

உங்களது பதிவில் பார்த்துவிட்டுத்தான் கூட்டத்திற்குச் சென்றேன். நன்றி.

கூட்டம் பற்றிய எனது பதிவுகள். தமிழில் ஆங்கிலத்தில்

ஜமாலன் சொன்னது…

நன்றி ஜே.கே.

உங்கள் கூட்டம் பற்றிய பதிவுகளை பார்த்தேன். அவரது உரை முழுவதும் யாராவது பிரசுரித்தால் நல்லது.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.