தமிழீழப் பிரச்சனை உக்கிரமடைந்து கடும் போர் நிகழும் இச்சூழலில் தமிழகத்தில் நடந்தவரும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான பல போராட்டங்களில் தமிழகக் கவிஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் ஒப்பாரிப் போராட்டம் இது. இப்போராட்டம் குறித்து குறிப்பிடத் தகுந்த உடல்மொழிக் கவிதைகளை எழுதிவருபவரும், திரைப்படத்துறையில் மாற்றுத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டு வருபவருமான தோழர் லீணா மணிமேகலை இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலி்ல் தெரிவித்திருந்தார். தமிழக் கவிஞர்களுக்கான ஒரு புதிய வலைப்பதிவும் உருவாக்கி உள்ளனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான “ஒப்பாரிக் கவிதைகளை” எழுதி தங்களது ஆதரவையும் இலங்கை அரசின் இனப்போருக்கு எதிரான உணர்வையும் பதிய வைக்க எண்ணம் உள்ளவர்கள் இந்த வலைப்பதிவிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலோ, அலைபேசி எண்ணிலோ, மின்-அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் சமூக உணர்வை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் எல்லோரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன். ஏற்கனவே தமிழக ஓவியர்கள் ஏற்பாடு செய்த போரட்டம் குறித்து நாகார்ஜீனன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
சென்னையைச் செர்ந்த பதிவுலக நண்பர்கள் இதில் கலந்துகொண்டு இந்நிகழ்வு பற்றிய பதிவுகளில் எழுதினால் எங்களைப்போல அயல்தேசத்தில் இருப்பவர்களுக்கு அப்போராட்டத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். பதிவுகள் மாற்று ஊடகம் என்பதன் பொருள் இதுபோல் மைய ஊடகங்களால் புறக்கணிக்கப்ட்ட நிகழ்வுகளை பதியவைப்பதுதான். நண்பர்கள் இதுகுறித்து எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,
நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி, தொடர்புக்கு மின்னஞ்சல் : tamilpoets@gmail.com செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604 |
நண்பர் கென்னின் அறிவிப்பு இங்கு.
தமிழீழம் குறித்து எனது பழைய பதிவு. யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்
-குறிப்பும் அறிவிப்பும் ஜமாலன். 25-11-2008
படங்கள்.
தமிழர்கள கொண்று லாரியில் வாரிச்செல்லும் காட்சி. இறந்துபோன சகோதரனுக்கு கிளிநொச்சிக்கு வெளியில் உள்ள அமரர்கள் இடுகாட்டில் அஞ்சலி செலுத்தும் தமிழ்பெண்.
0 comments:
கருத்துரையிடுக