இது கர்நாடக அரசியல் பற்றியது அல்ல

முட்டாள்களில் 3 வகை என்பார்கள்.

1. தன்னை முட்டாள் என்று தெரியாத முட்டாள்
2. தன்னை முட்டாள் என்று தெரிந்த முட்டாள்
3. தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்.

இதில் யார் என்ன வகை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பதிவி்ன் தலைப்பில் சொன்னபடி இது கர்நாடக அரசியலுக்காக எழுதப் பட்டது அல்ல. அதையும் மீறி நீங்கள் முடிச்சுப் போட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

டிஸ்கி: நான்காவது ஒரு முட்டாளை சொல்ல மறந்து விட்டேன். இதற்கு பின்னும் தொடர்ந்து ஓட்டுப்போடுவதை ஒரு கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் நானும் நீங்களும்தான்.

8 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஓட்டுப் போடுவதைக் கடமையாக நினைப்பதில்லை; ஒரு விடுமுறையாகத் தான் கொண்டாடுவேன் தேர்தல் நாட்களை.

ஆனாலும் முதல் மூன்றில் கண்டிப்பாக வந்து விடுவேன்.))

ஜமாலன் சொன்னது…

சுந்தர்

நானும் அந்த 3-ல் ஒன்றுதான். தேர்தல் நாள் அன்று எல்லா கட்சி பூத்துகளிலும் போய் உட்கார்ந்து வேடிக்கை பர்ப்பது சுவராஸ்யமான விஷயம். நம்ம ஒரு பலபட்றன்ன எல்லாருக்கம் தெரிவதால் கட்சிப் பாகுபாடு இன்றி எல்லோருடனும் சுற்றலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டிஸ்கி: நான்காவது ஒரு முட்டாளை சொல்ல மறந்து விட்டேன். இதற்கு பின்னும் தொடர்ந்து ஓட்டுப்போடுவதை ஒரு கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் நானும் நீங்களும்தான்.//

நான்காவது முட்டாள் தன்னையும் முட்டாளாக்கி மற்றவர்களையும் ஐந்து ஆண்டுகளுக்கு முட்டாளாக்கும் திருவாளர் வாக்காளர்கள் தான்.

எப்படியாவது சாதிக்காரன், மதககாரன், கட்சிக்காரன் என்கிற வட்டத்துக்குள் வேட்பாளர் இல்லாமலா போகிறார்கள். போட்டுத்தானே ஆகனும் !
:))

RATHNESH சொன்னது…

மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்க வேண்டாம் என்று முயன்றதாலேயே கீழக்கண்ட ஒப்பீடுகள்:

தன்னை முட்டாள் என்று தெரியாத முட்டாள் - பாஜக

தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் - தேவெகௌடா

தன்னை முட்டாள் என்று அறிந்த முட்டாள் - காங்கிரஸ்

பொருத்தமான BALANCE தான் கர்நாடகாவில்.

நான்காவதான பிரிவு மட்டும் எனக்கு ஒப்புதல் இல்லை ஜமாலன் சார். மக்களை முட்டாளாக நான் எண்ணவில்லை. அவர்கள் தான் இந்த மூன்று வகை முட்டாள்களையும் ஆட்டி வைத்து, கொடுத்த வரிப்பணத்திற்கான பொழுது போக்காக உருமாற்றிக் கொண்டு சந்தோஷிக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

ஜமாலன் சொன்னது…

ரத்ணேஷ்..

//நான்காவதான பிரிவு மட்டும் எனக்கு ஒப்புதல் இல்லை ஜமாலன் சார். மக்களை முட்டாளாக நான் எண்ணவில்லை. அவர்கள் தான் இந்த மூன்று வகை முட்டாள்களையும் ஆட்டி வைத்து, கொடுத்த வரிப்பணத்திற்கான பொழுது போக்காக உருமாற்றிக் கொண்டு சந்தோஷிக்கிறார்கள் என்று கருதுகிறேன்.//

எனக்கும் மக்களை முட்டாள் என்று சொல்வதில் உடன்பாடில்லை. இது ஒரு கழிவிரக்கத்தில் வேளிப்படும் இயலாமையின் கோபம்தான். நீ்ங்கள் கூறுவதுபோல மக்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது அல்லது ஊடகங்கள் அப்படி இவற்றை ஒரு காடசியின்பமாக மாற்றிக் கொண்டுள்ளன.

கிருது சொன்னது…

நாம் அனைவரும் முட்டாள் என்பது இதன் மூலம் வெட்ட வெளிட்சமாகிவிட்டது.

ஜமாலன் சொன்னது…

வாங்க கிருது

நன்றி.

பெயரில்லா சொன்னது…

தன்னை முட்டாள் என்று தெரிந்த முட்டாள்

(S)he is not a fool, but a wise person.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.