பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்) - 7
என்ன செய்யவேண்டும்?

. ”நான்என்ற ஒன்றை மையமாகக் கொண்டே இன்றைய வாழ்தல் முறை அமைந்துள்ளது என்பதை நாம் பேசி வந்திருக்கிறோம். இதுபல குழப்பங்களையும், புரிதலின்மையையும் உருவாக்கலாம்இன்றைய அரசு மற்றும் அரசியல் ஆகியவற்றின் தத்தவார்த்த உள்ளடக்கங்கள், மையங்கள், விளிம்புகள் ஆகியவற்றினை புரிந்துகொள்ள நம்முன் இயங்கிவரும் சொல்லாடல்களை பகுத்து சிதைப்பது அவசியமானது என்பதையும், சாசுவதமானதாக கருதிக்கொண்டிருக்கும் வாழ்வின் சகல தளங்களும் ஆதிக்கத்தின் வன்முறை படிந்த வரலாற்று எச்சமே என்பதையும் எடுத்துக் காட்டவே முனைந்திருக்கிறோம்இன்றைய அறிவார்ந்த வாழ்வின் உள்ளமைப்பில் செயல்படும் குற்றவியல் (criminality) வாழ்வின் அனைத்த நியாயங்களையும் சிதைப்பதாக அமைந்துள்ளது என்பதையும்அரசுஎன்கிற அவசியமான தீங்கு (necessary evil) நிறுவனத்தின் நியாயப்பாடு என்ன? மனிதனுக்கும், அரசுக்கும் இடையிலான உறவு என்ன? ஏன் அரசு இருப்பதை மௌன நிலையில் அங்கீகரிக்கும் மனோவியல் அமைந்துள்ளது - போன்ற கேள்விகளையும் எதிர்கொள்ள முனைந்திருக்கிறோம். இந்நிலையில் அரசியல்/தத்துவம் என பிரிக்கப்பட்டு சுயேட்சையான வரலாற்றுமயப் படுத்தப்பட்டுவிட்ட இருவேறு துறைகளுக்கும் இடையிலான அதிகார இயங்கியல் தத்தவமும், தத்தவத்தின் அரசியலும் ஆன மீள்வினை நிகழ்வின் நுண்ணியக்க கூறுகளின் பிணைவுகள்/பிளவுகள் ஆகியவற்றை படிப்பது அவசியமானதாகிறது.

: இவை நமது செயல்தளத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறீர்கள்?

: பிரச்சனை கோட்பாட்டுத் தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். ஆதிக்கத்தின் சகலகூறுகளையும் சிதைப்பதை அரசியல் பணியாகக் கருதுவதே நமது நோக்கம். அதற்கு முதல்நிலையில் சொல்லாடல்கள் மீதான தாக்குதலையும் பிம்பங்களின் இயக்கம்/வழிபடுதல் மீதான மன ஓட்டத்தையும் தகர்க்க வேண்டும். மதிப்பீடுகள்/ஒப்பீடுகள் ஆகியவற்றை விட்டுவிட்டு வெறுமையை நோக்கிய நம் ஆய்வை துவக்க வேண்டும்இது ஆதிநிலையைத் தேடிச் செல்வதோ, வெறுமைவாதமோ அல்ல, சொல்லாடல்கள் மீதான ஒருவகை அகழ்வாராய்ச்சி, தனது இயக்கத்தின் மூலம் மட்டுமே ஒருபொருள் வெறுமையான வெளியில் வடிவத்தையும் / இருத்தலையும் பெறுவதைப்போல... சொல்லாடல்கள் மீதான சிதைவானது பொருளின் பிம்பங்களை சிதைத்து இயக்க நிலைக்கு எடுத்துச் செல்லலாம்சிதைவுற்ற பிம்பங்களின் முன் மனிதன் வெற்றுப் பொருண்மையாக மிஞ்சுவான் என்பதாக நினைக்கலாம்உண்மையில் பிம்பங்களின் வெற்றியே இதுதான். பிம்பங்களற்ற வாழ்தல் சாத்தியமே இல்லை என்பதான மனோவியல் கட்டைமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டதுபிம்பங்களற்ற நிலையில் உயிர்வாழும் மனிதன் உயிர்த்தலுடைய அனைத்தவகை மகிழ்வானுபவங்களையும் விடுதலை உணர்வுடன் சுகித்து..... போரற்று / ஆதிக்கமற்று வாழமுடியுமா? என்கிற கேள்வி நம்முன் ஒரு கேள்வியாகவே உள்ளது.  பிம்பம் என்பதே ஒடுக்கப்பட்ட மகிழ்வானுபவம் பல்வேறு பதிலிகளை தேடுவதன் மூலம் உண்டாக்கப்படுவதேஅதனால்தான் பிம்பம் இதமான மன உணர்வுகளையும், கிளர்ச்சிகளையும் தருகிறது. எனவே, பிம்பமற்ற வாழ்தலே மனிதனின் நிஜமான உயிர்த்தலாக இருக்கும் என ஊகிக்கலாம்.

இது காலம்/வெளி போன்றவற்றுடன் எவ்வகை உறவைக் கொள்கிறது என்பதையும், மகிழ்வானுபவம் என்பதையும் இன்னும் சற்று விளக்க முடியுமா?

. காலம் என்பது ஒப்பீட்டு நிலையில் ஏதோ ஒரு புள்ளியில் மனித வரலாற்றுடன் பிணைக்கப்பட்ட உடலியல் வளர்ச்சிக் கூறுகளின் ஒருபடித்தான அளவிடுதலே ஆகும். மனிதனின் காலம் பிரபஞ்சக் காலத்துடன் ஒப்பிடும்போது புறக்கணிக்க கூடியதாக உள்ளது. அதேபோல், ஒத்திசைத் துகளின் (resonance particle) காலத்துடன் (10|-23 sconds) ஒப்பிடும்போது நியுரான்கள்-மூளைக்கிடையிலான உடலியங்கியல் நிகழ்வு நேரத்துடன் ஒப்பிடும்போது மனிதனின் காலம் மீப்பெரும் காலமாகும். இந்நிலையில் காலம் பற்றிய கருதுகோளே நிலையான சாத்தியப்பாடுகள் அற்று உள்ளதுஒளியின் மீப்பெரு வேகத்தைத் தாண்டிச் செல்லக்கூடிய ஒரு துகளுக்கோ, பொருளுக்கோ காலம் என்பது எதிர்திசையில் குறைந்து செல்லக்கூடிய எதிர்க்குறியில் (-ve) செயல்படக் கூடியதாக உள்ளது என்கிறது நவீன இயற்பியல். எனவே, காலம் என்பது வெளியின் இயக்கத்துடன் சார்பியல் உறவைக் கொண்டே வடிவமைக்கப்பட்டள்ளது. இவ்வெற்றுப் பிரபஞ்சம் வெறுமையாகவும், புலமாகவும் மாறக்கூடிய நிலையில் காலம் என்பது கணிப்பிற்கும் அரிதானதாக அமைந்திருப்பது இன்றைய துகள் பௌதீகவியலாளருக்கு (particle physicst) புரியும்எனவே,, காலம்/வெளி என்பதை மனிதனுடன் பிணைத்தே கூறமுடியும். மனித உடலின் வெளி/மனித உடலின் காலம் ஆகியன வரலாற்றின் திருகு சுழற்சியில் அதிகாரத்தின் காலம்/வெளியாக கட்டமைக்கப்பட்டிருப்பதையே.... நாம் விளக்க முனைகிறோம்.

அடுத்து, மனிதன் பற்றிய பிம்பங்களின் இயக்கமே காலம்/வெளியின் அர்த்தக் கட்டமைப்புகளாக அமைந்துள்ளது. எனவே, வரலாற்றின் நகர்வாக அறியப்பட்டிருக்கும் பல பிம்பங்களின் தொடர்ச்சியே காலத்தை குறிப்பதாகவும் (கி்மு/கி.பி.) வரலாற்றை நகர்த்திய சில பிம்பங்களின் வாழ்தல் களமே வெளியாகவும் (வரலாற்றுக்களம்) அர்த்தம் தருவதாக கட்டமைந்துள்ளனபிம்பங்களற்ற உயர்த்தலில் மனிதனின் காலம்/வெளி ஆகியன வெறுமையும்/துகளும் கொள்ளும் உறவைப்போல் உறைந்துபோன காலமாகவும், மென்பொதிகளான (sponges) வெளியாகவும் இருக்கலாம்.  மனித காலத்தின் ஒரு வினாடி என்பது அனைத்துவகை உயிராற்றலையும் ஒருங்கிணைத்து மனித உடலின் பேராற்றல்மிக்க விசைகளாக வெளிப்படும் அல்லது மனிதனின் மகிழ்வானுபவம் என்பது முற்றிலும் வேறுவிதமானதாக இருக்கும்இன்றைய குற்றம்/அச்சம்/பாதுகாப்பு எனும் முப்பரிமாண வெளியின் ஊடாட்டங்களினால் ஏற்படும் மகிழ்வும்/துயரமும் ஆன ஒடுக்குதல் செயலிழந்து போகும் எனறெல்லாம் நமது ஊகங்களை விரித்துச் செல்லும் சாத்தியங்கள் இருக்கிறது.

. மேலே நாம் விவாதித்துள்ள பிரச்சனைகளுக்கும் இப்பொழுது பேசியவற்றிற்கும் இடையிலான உறவைக் கூற முடியுமா?

. நாம் மேலே பேசிவந்த வாழ்தல்/உயிர்த்தல் முரனில் வாழ்தலின் பொருட்ட பின்னலாக்கப்பட்ட பல பிம்பங்கள் சிதைத்து அழிக்கப்படவேண்டியவைஇச்செயலக்குவாழ்தலைக்கொண்டு கட்டமைக்கப்பட்டள்ள பாதுகாப்புச சார்ந்த சொல்லாடல் அழித்தொழிக்கப்பட்டுஉயிர்த்தலைக்கொண்ட எதிர் சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட வேண்டும்உயிர்த்தல் என்பது உடற்பாலியல் நிகழ்வாக அமைவதால் உடலை மையமாகக் கொண்ட உயிர்மொழியியல் சொல்லாடல்கள் பின்னலாக்கப்படவேண்டியது அவசியமாகும். இத ஒரு புதிய மொழித்தளமாக அமையலாம்இங்கு வாழ்தல் என்பது உயிரியல் ரீதியானதாக அமையும்மனிதம் என்பது வெறுமையாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய உயிர்பௌதீக செயல்பாடாக நடைபெறும்இச்செயலுககான மொழியாக உயிர்மொழியியல் (bio-Linguistics) ஒன்றின் தேவை எழுகிறது. இவற்றிற்கான நமது முதல்நிலை அனுமானங்கள் சில..      

- ஒவ்வொரு மனித செயலுக்குமான உயிர்வேதி, பௌதீகச் செயல்பாடுகளைக் கண்டடைதல்.

- கவிதை, இசை, சினிமா.. இப்படி கருத்தியல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட எந்தவொரு மனித வினைக்குமான உடல் நரம்பு - இயங்கியல் மற்றும் மூளையின் மின்வேதிச் செயல் பௌதீக இயக்கம் என விஞ்ஞர்ன ரீதியான பொருள்முதல்வாதத்திலிருந்து வரையறைகள் உருவாக்குதல்.

- உயிர்த்தலுக்கான மேற்பரப்பை உடைத்து உள்ளே ஒடுக்கப்பட்டிருக்கும் உயர்த்தலின் மௌனத்தை பேச வைக்கலாம். இதன் மூலம் ஒருபுறம்மதம்சார்ந்த ஒழுங்கமைவுகளை உடைக்கலாம்மனித உயிர்த்தலின் உள்ளுரை ஆற்றலுக்கான விஞ்ஞான தரவுகள்/உண்மை நிலையை அறியலாம்.

- எண்ணற்ற மக்களுக்கு பிம்பங்களின் ஒப்பீடுகளற்ற வெறுமை சார்ந்த அறிதலை உருவாக்குதல்வெறுமை சார்ந்த அழகியலைக்கட்டமைத்தல்.

- ”பாமர மக்கள்” - என்ற குறிக்கப்பட்டுள்ள எண்ணற்றோருக்கு அவர்கள் முன் இயங்கும் பிம்பங்கள் சிதைக்கப்பட்டுவிட்டால் அவர்களது வாழ்தல் தளம் நிச்சயமாக பண்புரீதியான மாற்றத்தைக் கோரும்கருத்தியல்ரீதியான இந்நடைமுறையே.... எண்ணற்றோரின் ஒடுக்கப்பட்ட ஆற்றல் களத்தை திறந்துவிடும் அரசியல் செயலாக அமையலாம்.

- உயிர்மொழியியல் என்பதற்கான மொழித்துகள் உயிர் வேதியியல்உயிர் பௌதீகவியல், நரம்பு உடலியங்கியல்  - ஆகியவற்றினைக் கொண்டும், மனித மூளையின் செய்திப் பரிமாற்றம்... மூளையின் நினைவக வேதிச்சேர்ம எழுதுதல் ஆகியன பற்றியதாக இருக்கும்.

இந்நிலையில் நாம் பேசும் தத்தவங்கள் மனித மூளையுடன் எவ்வாறு வினைபடுகிறது என்பதை புரிந்துக்கொண்டு அதன்படி பௌதீக சக்தியாக மக்களை மாற்றும் அதன் இயக்கத்தை பொருண்மையாக உணரலாம்.

-ஜமாலன் (1990-ல் எழுதப்பட்டு 19-06-1994 ல் திருத்தி எழுதப்பட்டது.)
(காலக்குறி - ஜீன் 1994 ல் வெளிவந்தது.)

ஜமாலன். Blogger இயக்குவது.