பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்) - 6


 தொகுப்புரையாக...1. இப்பெருவெளியனுள் உயிர்ப்புடன் இயங்கி தன்னை உருவமைத்துக் கொண்ட மனித உடல் தனது அடிப்படையான உயிர்த்தலையே சிதைக்கும் ஒரு சீரற்ற சமூக அமைப்பில் இயங்கி வருகிறதுமனித உயிர்ப்பின் அனைத்து அடிப்படை ஆதாரங்களிலும் குவிந்திருக்கும் அதிகாரமானது மனித உடலை தனக்குத்தக, தகவமைக்கவென குறிகளின் பிம்பவெளியை உருவாக்கி அதற்குள் மனித உடலை ஒடுக்கி வைக்கிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட மனித உயிர்ப்பின் ஆற்றலை சேமித்து, தன்னை பேராற்றல் மிக்கதாக கட்டமைத்துக் கொண்டியங்கும் அதிகாரத்தின் செயலேவாழ்தல்தொழில்நுட்பமாகும்இது குற்றம், அச்சம், பாதுகாப்பு என்கிற முப்பரிமான வெளியின் செறிவுமிக்க ஆற்றலினை பொருண்மையாக மாற்றி... ஒரு குறியியல் புலத்தை கட்டமைக்கிறதுஇக்குறிகளின் இயக்கவிசை மனிதசெயலை ஒடுக்கி பெருவெளியின் முன் பொருண்மைத் தன்மையற்றவர்களாக மனிதர்களைக் கட்டமைக்கிறதுஅதிகாரத்தின் பொருண்மை தத்துவத்தினுள் செறிந்து அரசியலில் இயக்கம்பெற்று, அரசால் வழிமுறைப்படுத்தப்படுகிறது. எனவே. ஆதிக்க வன்முறை கொண்ட அதிகாரத்தின் குறிகளையே தனது குறிகளாக தகவமைத்துக் கொண்டிருக்கும் அடிப்படை மனித வர்க்கமானதுநான்என்கிற வாழ்தலின் வழி தன்னையும், தன்னிருப்பையும் அடையாளப்படுத்திக் கொள்கிறது.
அதிகாரத்தினால் முன் வைக்கப்பட்டு பல பிம்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு கதியற்றிருக்கும் இவ்வர்க்கம் தனது மனித இருப்பை அறிய பல இயக்கங்கள், செயல்பாடுகள், குழு, கூட்டம் எனத் தேடிச் சென்றடைவது தவிர்க்க இயலாததாகிறது. தனது தன்முனைப்பை உணரத் துடிக்கும் மனோவியல் வன்முறையிலிருந்த விடுபட பல கனவுகள் பொய்யான, நிஜங்களின் பதிலீடுகளைத் தேடிச் செல்கிறதுஇப்பதிலீடு செயல், உணர்வு, இயக்கம் என்பதான பலவித சமூக வெளிப்பாடுகளாக அமைகிறது.

2. தனது பிறப்பிட பாதுகாப்புணர்வைப்பெறும் உடல்-பாலியல் நடவடிக்கையின் போது மட்டுமேநான்என்கிற சுய அறிதல் நிகழ்கிறது. தன்னை அறிதல் என்பது தன்னுடலை அறிதலாகும். தனது உடலை அறிதல் அடிப்படையில் ஒரு பாலியல் நிகழ்வாகும்இந்நிகழ்வே மனிதனின்நான்என்கிற சுயத்தை (I or Thou) கட்டமைக்கிறது. பாலியலை அரசு மற்றும் மதம் சார்ந்த அதிகார நிறுவனங்கள் தனது கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சுய அறிதல் என்கிற மூலநிகழ்வை ஒடுக்கித் தனது அதிகாரப் பரவலினால் உருவாக்கிய நிறுவனங்களின் மூலம் செயற்கையானசுய அறிதல்களைஎற்படுத்தி அதற்குள் உடல்களை ஒடுக்கி வைக்க முடிகிறது. இவ்வாறு இன உருவாக்கங்களின் போது நிகழ்ந்தக் கூட்டுச் செயல்களை சிதறடிக்க அதிகாரத்தின் நுட்பமான தொழில்நுட்பமாகவேபாலியல் கருவிகள்கட்டமைக்கப்பட்டுள்ளன.

எனவே, உயிர்வேதிச் செயலினாலும், உயி்ர்பௌதீகம், மூலக்கூறுகளின் இயக்கங்களாலும் உருவமைந்துள்ள மனித உடலானது தன்னை மனிதனாக தகவமைத்துக் கொள்வதற்கான நிகழ்ச்சிகளின் கணமானது (set of events) அதிகாரத்தின் இயங்குதளமாக வடிவமைந்துள்ளவாழ்தல்என்ற சொல்லாடலின் கூறுவெளிக்குள்ளேயே (sample space) செயல்படுவதால், ஒரு மனிதன் என்னவாக பிறக்கிறான்? என்னவாக வாழ்கிறான்? என்ன அர்த்தங்களை உருவாக்குகிறான்? எதை நோக்கி நகர வேண்டும்? - போன்ற மனித அமைவுகளுக்கான பிரச்சனைகளை தேர்ந்துகொள்ளும் உரிமையானது-தத்துவம் மற்றும் அரசியலின் உள் அலகுகளில் அமைந்துள்ள அதிகாரத்தின் நிகழ்தகவுக்கு உட்பட்டே செயல்பாடடைகிறது.

(இன்னும் வரும்)

-ஜமாலன் (1990)
ஜமாலன். Blogger இயக்குவது.