பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்) - 5

குற்றவியல் பரிமாணங்கள்

இப்படியாக, தத்துவம் அரசியல் ஆகியவற்றிற்கு இடையிலான இயங்கியல் உறவினை கட்டமைத்த நுண்ணிய கூறுகளின் வினைபடுதலை புரிந்துகொள்ள முடிகிறது. தத்துவம் மனித இருத்தலின்நான்சார்ந்த அச்சம் இருப்பதை அறிந்து அறிவிக்கிறது. அரசியலானது தத்துவத்திலிருந்த விலகி அச்சம்இயற்கையானதுஎன்பதாக, தத்துவப் பிரச்சனையை வாழ்வின் அச்சமாக பரிமாணம் கொள்ளச் செய்வதன் மூலம் யதார்த்தமாக்கி சமூக நினைவிலிப் புலத்தில்அச்சம்என்பதைக் கட்டமைக்கிறது.

சமூக அதிகாரமானதுஅசசத்தின்நிகழ்வைப் பெறகுற்றம்என்ற நிகழ்ச்சியைப் பற்றிய கருத்தமைப்புகளைக் கண்டறிவிக்கிறது. குற்றம் ஒழங்கின்மையாக மாற்றம் செய்யப்படுகிறது. இம்மாற்றம் ஒழுங்குகள் குறித்த புதிய உலகக்கண்ணோட்டமாக மலர்கிறதுஅறவியலில் ஒழுக்கமின்மையாகக் குறிக்கப்பட்ட கருத்தாக்கம் அரசியலில் குற்றமாகத் தளமாற்றம் பெறுகிறதுஇவ்வுலக கண்ணோட்டத்தை கொண்டியங்குவதாகக்கூறும்அரசுவாழ்தலின் மீது பிரயோகிக்கப்படும்அச்சம்தவிர்க்க முடியாதது என்பதாகவும், ”நானற்றபொதுமையை உருவாக்க மனித வாழ்வின் மீதுஅச்சத்தைபிரயோகிப்பதன் மூலம் உயிர்த்தல் என்கிற மனிதனின் அடிப்படை உயிராற்றலை (bio-power) வலுவிலக்கச் செய்கிறது. இச்செயலானது மனித உடல்களை அழிப்பது இயல்பானது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறது.

அதனால்தான், ஒவ்வொரு மனிதனும் தனது சகமனிதனை அச்சத்துடன் அனுகுகிறான்.  தன்னை ஒரு குழுவுக்குள் இருத்திக்கொள்ள முனைகிறான். அதற்காக பிற குழுக்களை தனது எதிர்வுகளாக பாவிக்கிறான். கூட்டம்., குழு மக்கள் பெருக்கம் ஆகியன தேவையற்ற சதைப்பிண்டமாகத் தோன்றுகிறது.  ”தான்”, ”தனதுஎன்பதானநான்சார்ந்த பாதுகாப்பை நாடுதல் தவிர்க்க முடியாததாகிறதுசமூகத்தில் நடைபெறும் படுகொலைகள், வன்முறை ஆகியன பேரளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் போய்விடுகிறது. மரணத்திலிருந்துமறத்தல்என்ற செயல் மூலம் மௌனமாக விலகிச் செல்லும் போக்கு உருவாகுகிறது. மரணம் மறக்கடிக்கப்பட்ட ஒரு உறைந்த மௌனப்போக்கு உருவாகுகிறது. தனது நெருக்கடிக்கும், பிரச்சனைக்கும் காரணம் சகமனிதன் இருப்பே என்பதான உணர்வு உறையத் துவங்குகிறது. இதிலிருந்து மனித வாழ்வுசாவிலிருந்த தப்பிப் பிழைப்பதேஎன்பதான ஒரு கோட்பாட்டு பின்புலம் விஞ்ஞானபரமாகக் கட்டமைக்கப்படுகிறது.

இவ்வாறு, அரசியல் தத்துவத்தை தனது மௌனத்திற்குள் பதுக்கும்போது அரசு அரசியலை தனது மௌனத்திற்குள் பதுக்குகிறதுபௌதீக யதார்த்தமாக நமமுன் இருக்கும் அரசு - வாழ்தலின் அடிப்படையில் பிறந்தஅச்சத்திற்குமுரணாக கட்டமைக்கக்பட்டிருக்கும் பாதுகாப்பு செயலியக்க (defense mechanism)மாக உணரப்படுகிறது.

இவ்வுணர்வே நினைவில் மனப்புலத்தில் பதுக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனிதனின் நான் என்கிற சுயம் (ego) சார்ந்த பாதுகாப்பு உணர்வு உள்ளமைப்பில் குற்றம் மற்றும் அது குறித்த அச்சம் ஆகியவற்றின் எதிர்வடிவமே ஆகும்மனித பிறப்பே “பாவத்தில்“ உருவானது என்கிற மதங்களின் உள்ளடக்கங்கள் இங்கு கவனத்தில் இருத்த வேண்டியவைஇவ்வகை உணர்வுகள் உறையச்செய்த மனித மனங்களின் உள்ளுரை ஆற்றல்களேஅரசின் தவிர்க்க இயலாத் தன்மைஎன்கிற தோற்றத்திற்கும்அரசியல் சர்வியாபகமானதுஎனகிற காரணமாக அமைகிறது.

இன்று, சமூகமாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கும் மனித உறவுகள், பொருளியல் நிலைகள், கலாச்சார சமிக்ஞைகள், இலக்கிய ஆக்கங்கள், அரசியல்வாதிகள்... இன்னபிற சேர்ந்த அமைப்பை கட்டமைத்துள்ள ஒழுங்கமைவுகளை உடைத்தல், எதிர்த்தல், பிறழ்தல் ஆகியனசமூக குற்றமாகமாற்றப்படுகின்றனஇக்குற்றம் பற்றிய அச்சமானது பாதுகாப்பை நாடிச் செல்கிறதுபாதுகாப்பின் பௌதீக யதார்த்ததமான அரசு குற்ற உணர்விலிருந்த விடுபடவென பலதளங்களில் ஒழுங்கமைப்புகளை உருவாக்கி உள்ளது. மதம், (ஆதிமதம் அரசு உருவாக்கத்திற்கு முன்பே தோன்றியிருந்தாலும், அரசுமதத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது அல்லது இணை அதிகார கருவிகளாக இரண்டும் உள்ளனஅறவியல், இலக்கியம்... போன்ற கருத்தியல் அமைப்புகளுக்கு இனையாக சிறைச்சாலை, குடும்பம், மனநலக்காப்பகம் - போன்ற நிறுவன ஒழுங்கமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. இவை குற்றம், அச்சம், பாதுகாப்பு என்கிற முப்பரிமாண அனவீட்டுக் கருவிகளை கொண்டமைக்கப்பட்டுள்ளனஇங்கு அரசு என்பதை தனித்த ஒன்றாக பார்க்கமுடியாத... இவை எல்லாம்தான் அரசு.

(இன்னும் வரும்)

-ஜமாலன் (1990)
ஜமாலன். Blogger இயக்குவது.