பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்) - 4

நான்” -  தொழில்நுட்பம்

மனித உடலின்மீது மூர்க்கமான வன்முறையை செலுத்திவரும் ஆதிநிலைப் பேரச்சமான மரண பயத்திலிருந்து விடுபட்டு மரணத்தை கடந்து செலல் மூலம் தப்ப நினைக்கும் தொழில் நுட்பமாகவே நான்வடிவம் கொள்கிறது. மரணத்தை கடப்பது என்பது உடல் அழிவிற்கு பின்னும் தனது வாழ்தலை நிலை நிறுத்தல் என்பதாக அறியப்படும்போது. உடல் அழிவின் அறிவியலுக்கு எதிராக சுய நிலைப்பு” – அல்லது நானைநிலைநிறுத்தல் என்பதை முன்னிலைப்படுத்தும் அவசியம் ஏற்படுகிறது. இங்கு நான்என்பதை மையமாகக் கொண்ட ஒரு வாழ்தலை சாத்தியப்படுத்த பல்வேறு வடிவ மற்றும் வடிவிலி நிலையிலான தொழில்நுட்பங்கள் கண்டறியப்படுகின்றது. இனப்பெருக்கம் மூலம் தனது உடலின் உற்பத்தியாக வேறொரு நான்”-சார்ந்த உடலை விட்டுச் செல்லுதல் முதல் பல்வேறு அறிவுப்பரவல்கள், கருத்துக்கள் வழி நானை” – கருத்தியல் நிலையில் புகழுடம்பாகவிட்டுச் செல்லுதல் ஆகியவற்றை இவ்வகை தொழில்நுட்பங்களாக அறியலாம்.

நான்”- தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இன்றைய மொழியியல் தளங்களே குடும்பம், திருமணம் போன்ற இணைக்கருவிகளின் தோற்றத்திற்கான காரணியாக உள்ளதுஎனவே, சுய இருப்பு / சுய அழிப்பு என்கிற முரணை மூலக்குறிகளாகக் கொண்டமைந்த இன்றைய வாழ்தலானது - மதம், அரசியல், தத்துவம் ஆகிய ஒழுங்கமைப்புகள் அனைத்தையும் அர்த்தப்படுத்தவதாகவும், இயைபுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் மனித உடலின் சுயஇருப்பு மறுக்கப்படும்போது, தவிர்க்க இயலாமல் சுயஅழிப்பையே வாழ்தலாக கொண்டு இயக்கம் பெறுகிறது. எனவே, தான் எதிர்கொள்ளும் அனைத்தும் தனது சுய அழிப்பை நிகழ்த்தக் கூடிய சாத்தியப்பாட்டைக் கொண்டிருப்பதால், அதிகார மயமாதலுக்கான பாதுகாப்பு மண்டலங்களின் குறியமைப்புகளுக்குள் ஒடுங்கிக் கொள்வதே சுயஇருப்பு என்பதாக அறியப்பட்டு அதிகார வரம்பிற்குள் கட்டமைக்கப்பட்ட மிகைப்பிம்ப ஒப்பிடல்களை நிகழ்த்திக் கொண்டிருத்தலே வாழ்தலாக பரிமாணம் கொள்கிறது.

இவ்வகை வாழ்தலின் கூறுகளை கட்டமைத்தநானைகளைவதாகப் புறப்பட்ட அனைத்துவகை இயக்கங்களும், சொற்களும் பிறிதொரு வகையில்நானை” - நிலைநிறுத்தும் மாற்றீடு ஒழங்கமைப்புகளாக உருவாயின. இவ்வொழுங்கமைப்புகள் கருத்தியல் தளத்தில் தத்தவ விசாரங்களாக உருவானபோது நடைமுறைத் தளத்தில் அரசியல் வடிவங்களாக இயக்கம் பெற்றதுதத்துவார்த்தநான்களின் எல்லைகளில் நுட்பமாக அரசியலின் தொழில்நுட்பங்கள் கற்றறியப்பட்டன. அரசியல் தன்னை தத்துவத்திலிருந்து வித்தியாசப்படுத்துவதாக அறிவித்துக்கொண்டு தத்துவச்சொல்லாடலை மாற்றி போட்டு தனது திருவிளையாடலைத் துவங்குகிறது. இதன் எச்சமே, இன்றைய அரசு மற்றும் அரசியல் தொழில்நுட்பத்தின் கச்சாப்பொருளாகும்.

(இன்னும் வரும்)

-ஜமாலன் (1990)

1 comments:

krishy சொன்னது…

நல்ல பதிவு ...
வாழ்த்துகள்
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

ஜமாலன். Blogger இயக்குவது.