பிம்பங்களின் இருத்தல்வினைச் சொல்லாடல்கள் (அதிகாரத்தின் அமிலச் சேர்க்கை பற்றிய யூகங்கள்) - 3

பகுதி -1 பிரச்சனைகள்

பகுதி-2 ஆய்வுரைகள்

உயிர்த்தலும் / வாழ்தலும்

உயிரின் அடிப்படை அலகாக செல்லைக் கொண்டிருக்கிறது உயிரியல், பொருளின் அடிப்படை அலகாக துகள்களைக் கொண்டிருக்கிறது இயற்பியல், சமூகத்தின் அடிப்படை அலகாக உடல்களைக் கொண்டிருக்கிறது சமூகவியல். மனித மூளையின் செயல்பாட்டுடன் தொடங்கிய சமூக இருத்தல் இதயத்தின் ஆதிக்கத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்ட ஒரு சமூகத்தில் இயங்கும் மனித உடலானது இதயம்-சார் வன்முறைக்குள் இருத்தி வைக்கப்பட்டுள்ளதை இதனூடே அனுமானிக்கலாம். மனித மூளையின் ஆதிக்கத்திற்கு காரணமான உடலின் அப்படையான உயிர்த்தல்” – என்பது இதய அமைப்பின் ஆதிக்கத்திற்கு உட்படும்போது வாழ்தலாக” –பரிமாணம் கொள்கிறது. உயிர்களுக்கே வாழ்க்கை என்பது வாழ்வதே உயிர் என்பதாக மாறுகிறதுமொழியில் பொருளைக் குறிக்க உருவான குறியானது. குறியை அர்த்தப்படுத்தவே பொருள் என தலைகீழாக மாறியதைப்போல...

உயிர்த்தல்தளத்தை வாழ்தல்” –பிடிக்க மூளையின் இடத்தை இதயம் பிடிக்கிறது, மூளை/இதயம்- என்கிற உடலியல் முரண் உயிர்த்தல்/வாழ்தல் என்கிற கருத்தியல் நடைமுறையாக வடிவம் கொள்கிறது. இதயம் என்கிற பௌதீகப் பொருளானாது உயிர்களின் இரத்த சுத்தீகரிப்புத் தொழில்நுட்பத்தை கொண்டியங்கும் கருவி என்பதிலிருந்து பதுக்கப்பட்டு அதன் மீது காதல், தாய்மை, அன்பு இன்னபிற... கருத்தியல் சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதுஇவற்றை பகுக்க அவை மனம்அல்லது இதயம் சார்ந்த இதம்என்கிற உணர்வாக மட்டுமே மிஞ்சும்இதம்வாழ்தலின் பொருட்டு மனிதன் அடைய விரும்பும் ஒரு புனைவுத் தன்மையுடைய மனவயப்பட்ட பாதுகாப்பு உணர்வே ஆகும். அல்லது உடலின் செல்களுக்குள் சுரக்கும் செல்கள் உயிர்ப்பிப்பதற்கான ஒரு வேதிமமாகவோ அல்லது குறிப்பிட்ட கோணங்களில் சுழன்று நரம்புகள் ஏற்படுத்தும் முடிச்சுகளின் கூடிக்கலையும் நிலை என்றோ ஊகிக்கலாம்

உயிர்த்தலின் இடத்தை வாழ்தல் பிடித்தவுடன்,வாழ்தல் நுண்ணிய தொழில் நுட்பமாக உருவாகி சீரற்ற சமூகப்பரப்பில் சீரான ஒழுங்குகளைப் புகுத்தி பாரீய தொழில்நுட்பமாக வளர்ந்து தனது ஆதிக்கத்தை பரப்புகிறதுஇப்பரவலின் வழி செயலுக்கு வரும் வாழ்தல்-சார் சிந்தனை ஆதிக்கம் பெற்று ஒரு வன்முறை கருவியாக கட்டமைக்கப்படுகிறதுசீரற்றவை என்பதை சிதைத்து சீரானவற்றை ஒழங்கமைத்த வாழ்தல் தொழில்நுட்பமே, பல நூற்றாண்டுகளாக தத்துவத்தின் சிக்குகளுக்கு பிடிபடாத தத்துவப் பிரச்சினையாக வடிவமெடுக்கிறது. இவை எழுப்பிய கேள்விகள் பிரபஞ்சத்தின் எந்த மூலையிலும், எந்த மொழியிலும் ஒன்றாகவே இருந்தன.

இவைகள் நான்” – என்கிற சொல்லாடலுடன் முட்டிமோதி வென்றுவிடத் துடித்தன. இத்துடிப்பானது நான்என்கிற தத்துவச் சொல்லாடலுக்குள் சமூக வன்முறையைஉள்ளுரை ஆற்றலாக உறைந்து போகச் செய்தது. நான்சார்ந்த சிந்தனையும், வாழ்க்கையும் இனங்களின் சமூகக் கூட்டை உடைத்து சிதறடித்தன. கூட்டுமனம்” – ”கூட்டு வாழ்க்கை” – ஆகிய நிலைபாடுகளுக்கு பதிலியாக மனித மனம், தனிமனிதன், சிந்தனை, வாழ்க்கை ஆகிய சிதைந்த கூறுகள் இயக்கம் பெற்றன. இதுவே, வாழ்வின் சுயம் என்பதாக மாற்றப்பட்டு ஆதிக்க வன்முறையாக செயலியக்கம் பெறுகின்றன.

(இன்னும் வரும்)

-ஜமாலன் (1990)


ஜமாலன். Blogger இயக்குவது.