கூடுவிட்டு கூடுபாயும் உடல்கள்


1995-ல் ஒரு நாள் அறையிலிருந்து 1 கி்மீ். தொலைவிள் உள்ள தமிழ் ரெஸ்டாரண்டிற்கு சாப்பிடப்போகும் வழியில் சரியான ஏப்ரல்-மே மாத வெயில் உச்சிமண்டையை பிளக்க அதில் ஏற்பட்ட சிந்தனையின் விளைவாக எழுதப்பட்டது. ரியாத் வெயில் மீசையை பொசுக்கிவிடும் சிலவேளைகளில். வெயிலின் கொடுமையில் எழுதப்பட்டதால் என்னவோ இந்த கட்டுரை வெப்ப இயக்கவியலை அடிப்படையாகக்கொண்டு உள்ளது. விஞ்ஞானம் படித்து விஞ்ஞானியாக(?) கனவு கண்டவனை கொண்டுவந்து மொட்டை பாலைவனத்தில் கணிப்பொறி வேலையில் கணக்கு பார்க்க சொன்னால் என்ன ஆகும்?  (இது கொஞ்சம் ஓவர் கற்பனைதான் என்கிறீர்களா) இயற்பியல்மேல் உள்ள காதலில் இக்கட்டுரை இப்படி உருவானது. அதன்பின் அதை 3 ஆண்டுகள் கழித்து திருத்தினேன். பத்திரிக்கைகளுக்கு எதற்கும் அனுப்பவில்லை என்றாலும் நெருங்கிய நண்பர்கள் சிலர் வாசித்து உள்ளனர். கட்டுரை எழுதியவுடன் அப்போது ரியாத்தில் இருந்த நண்பர் ராமானுஜம்தான் முதலில் வாசித்தார். உடனே அவர் என்ன இது புதிய வகைபாடாக உள்ளது என்றார். சிலர் இது புதிய வகைபாடாக இருப்பதால் சரியில்லை என்றார்கள். காரணம் வகைபாடுகள் என்பது அதிகாரக் கட்டமைவைக் கொண்டவை என்பதால். மற்றவர்கள் எல்லோரும் வித்தியாசமாக உள்ளது என்றார்கள்.  சில நண்பர்கள் விஞ்ஞானத்தை சிந்தனைமுறையாக மாற்றி எழுதிப்பார்த்திருப்பதால் நல்ல உருவகம் என்றார்கள். எப்படியோ இக்கட்டுரையை வெளியிட தயக்கம் அதிகம் இருந்தது. இப்போ தத்தவம், சிந்தனைமுறை உள்ளிட்ட உரையாடல்கள் நடைபெறுவதால் இதை வெளியிடுகிறேன்.   

ஏதேச்சையாக இன்று கூகுலிங் செய்து இந்த சுட்டியைப் பிடித்தேன். ( http://en.wikipedia.org/wiki/State_of_matter ) கட்டுரையின் முக்கியமான அடிப்படை விஞ்ஞானக் கருதுகோள்களை அறிய இந்த விக்கியை படித்து கொள்ளவும். நான் எழுதிய காலத்தில் பிளாஸ்மா பற்றிய அறிவு ஆரம்பநிலையில் இருந்தது என்பதை கவனம்கொண்டு படித்தல் நலம். அதனால் விஞ்ஞான கருதுகொள் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. நண்பர்கள் அறிய தந்தால் திருத்திக்கொள்வேன். 

File:Physics matter state transition 1 en.svg
கட்டுரை அன்று “ஜெம்ஸ்“ என்கிற இன்று அழிந்துபோன தமிழ் ட்ரு டைப் பாஃண்டால் தட்டப்பட்டது. அதை யுனிகொட்டிற்கு மாற்ற முடியவில்லை. நண்பர்கள் உதவலாம் அதற்கு வழி இருந்தால். அதனால் இது பிடிஎப்பாக தரப்படுகிறது.  இனி வாசிக்கலாம் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து.
படம் தெரியாதவர்கள் இந்த சுட்டியை கிளிக் செய்து வாசிக்கலாம். 
http://issuu.com/jamalan/docs/veppam1?mode=window&backgroundColor=%23222222

- ஜமாலன் (25-02-2012)
ஜமாலன். Blogger இயக்குவது.