அறிவிப்பு - நூல்வெளியீடு

நண்பர்களுக்கு.  நான் தமிழகத்தில் 1-17வரை இருப்பேன். தொடர்புகொள்ள விரும்பும் நண்பர்கள் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். 

9551027420. 

சந்திக்க விரும்பும் நண்பர்கள் 2ந்தேதி சென்னையில் நடைபெறும் கீழ்கண்ட அறிவிப்பில் உள்ள அரங்கத்தில் சந்திக்கலாம். மற்ற நாட்களில் நான் எனது கிராமத்தில் இருப்பேன் என்பதால் சந்திக்க வாய்பில்லை.

நன்றி

அன்புடன்,
ஜமாலன் - 28/10/2011

சந்தேக சாம்பிரானியின் சலியா சந்தேகங்கள்


சந்தேகங்களை தீர்ப்பவர்களுக்கு சாம்பிரானியும் தீர்க்காதவர்களுக்கு சாம்பலும் பரிசாக வழங்கப்படும்.
1. ஷெல்பி்ற்கும் (self) பல்பிற்கும் (bulb) என்ன வேறுபாடு? (இது அமைப்பியல் சொல்லும் சின்டாக்மாட்டிக் சப்த ஒருமைக்காக சொல்லப்படவில்லை.) 

2. ஷெல்பிற்குள் பல்ப் எறியும். பல்பிற்குள் ஏன் ஷெல்ப் எரிவதில்லை?

3. காலந்தாண்டிய இலக்கியம் எழுத லாங்ஜம்ப்  (நீளந்தாண்டதல்) மற்றும் ஹைஜம்ப் (உரயம் தாண்டுதல்) கற்றால் போதுமா? அல்லது இலக்கிய கம்பு வைத்து இரண்டையும் தாண்டலாமா?

4. லாங்ஜம்பிற்கும், ஹைஜம்பிற்கும் பரவலாக அமைப்பிய, பின்அமைப்பிய, பின்நவீனத்துவ. ரசனைவாத இலக்கிய விமர்சகர்கள் பயன்படுத்தும் டைக்கரானிக் மற்றும் சின்க்ரானிக் முறைகளுக்கும் உறவு உள்ளதா?

5. மலம் அள்ளுபவர்கள் பற்றிய அழகியல் ரசனைவாதத்தில் இலக்கிய-சுவை நிரம்பிய கட்டுரை எழுதமுடியுமா?

6. விளிம்பநிலை இலக்கியத்திற்கும் களிம்புநிலை(1) இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

7. மொழிபெயர்க்கலாம் ஆனால் மொழியை பெயர்க்கமுடியுமா?  

8. தால்ஸ்தாயின் ரஷ்ய உடை அணிந்த குடியானவன் தமிழில் பெயர்க்கப்பட்டபின் கோவனம் கட்டிக் கொள்வது ஏன்?

9. தால்ஸ்தாய் கதாநாயகிகளை காதலிப்பது தவறா? மாஸ்லாவின் மீதான காதல் இதுவரை எனக்கு மாறவேயில்லையே ஏன்? 

10. மிஷினரி பொஸிஸன்களை ”கிறித்துவ மிஸனரிபோபியா” உள்ளவர்கள் பயன்படுத்தலாமா? அதாவது மேல்-கீழ் படிநிலைவரிசையை பயன்படுத்தலாமா இலக்கிய கோட்பாடாக?

அடிக்குறிப்பு

1. களிம்பு நிலை இலக்கியம் என்றால் மனிதநேயமற்ற மனங்களி்ன் குரூரத்தை அழகிய அழுகாச்சி காவியங்கள் வழியாக தடவி தடவி சிகிச்சை அளித்து சரி செய்யும் இலக்கிய வகைமைக்கு பெயர். இலக்கியம் என்பது அஞ்சாள் அரிப்பு மருந்து, வீரியம் தரும் சிட்டுக்குருவி லேகியம் போன்று களிம்புநிலை மருந்தாக செயல்படுவதால் எம்மனார் என்ப்படும் இலக்கிய மம்மனார்கள் இணைந்து இப்பெயரிட்டுள்ளனர்.

டிஸ்கி - இதற்கும் மகாகவி உரையாடலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று உலக இலக்கியம் உள்ள கன்னிமாரா நூலகத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

image courtesy- புகழ்பெற்ற கார்டுனிஸ்ட் ஆர். கே. லக்ஷமன் உருவாக்கிய திருவாளர் பொதுஜனம் (common men) நன்றியுடன்.

- ஜமாலன் 26-10-2011.