காலக்குறி ஜனவரி 1996 இதழில் (ஜெராக்ஸ்ட் இதழ்) வெளிவந்த எனது புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம் சிறுகதை பற்றிய கட்டுரை காலக்குறி பதிவில் வெளியிட்டுள்ளேன். ஆர்வமுள்ள நண்பர்கள் அங்கு வாசிக்கலாம். தட்டச்ச நேரமின்மையால் அது “பிக்சர் பார்மெட்டில்“ வெளியிடப்பட்டுள்ளது. படத்தை கிளிக் செய்து பெரிதுபடுத்தி வாசிக்கலாம். இக்கட்டுரை எனது மொழியும் நிலமும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பித்தன் கதையை அழியாச்சுடர் பதிவில் வாசி்க்கலாம். எனது கட்டுரையை காலக்குறி பதிவில் வாசிக்கலாம்.
- ஜமாலன் 27-07-2011




4 comments:
ஜமாலன்
அபாரமான அலசல். தமிழில்(அல்லது உலகில்) வந்த அதிமுக்கிய சிறுகதையை ஆய்வுக்கு உட்படுத்தியது அருமை. புதுமைப்பித்தன் இக்கதையில் கீழை/மேற்க்கத்திய கலாச்சாரத்தை ஒரு புள்ளியில் இணைத்து மீண்டும் பிரித்து, கீழை உலகம் கலையை பார்க்கும் கோணத்தை தன் அபாரமான மொழியில் பகடி செய்து விளையாடிருக்கிறார்.பல பெரிய எழுத்தாளர்கள் எழுதுவது போல் கீழை கலாச்சாரமே ஆகச்சிறந்தது என்று ஒரு கண்ணியில் அடைக்காமல் மொழியின் வழியாக மற்றொரு கலாச்சாரத்தையும் தைத்து விளையாடியது புதுமைப்பித்தனின் சாதனை!
நன்றி வாசு.
”பல பெரிய எழுத்தாளர்கள் எழுதுவது போல் கீழை கலாச்சாரமே ஆகச்சிறந்தது என்று ஒரு கண்ணியில் அடைக்காமல் மொழியின் வழியாக மற்றொரு கலாச்சாரத்தையும் தைத்து விளையாடியது புதுமைப்பித்தனின் சாதனை!”
உங்கள் இந்த கருத்து முக்கியமானது.
-ஜமாலன்.
சிற்பியின் நரகம் குறித்த கட்டுரை நன்றாக இருந்தது.அறியப்படும் பொருள் அறிபவனை சார்ந்தே இயங்குகிறது என்பது உண்மை.அது ஏன் சில்பியின் நரகம் என்று எழுதியிருக்கிறீர்கள். கதை சம்பந்தமாக ஒரு கேள்வி. யவனவர்கள் என்பவர்கள் யார்? அவர்களை குறித்து அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?
நன்றி சர்வோத்தமன்
//அது ஏன் சில்பியின் நரகம் என்று எழுதியிருக்கிறீர்கள்.//
அக்கட்டுரை எழுதியபோது அக்கதையும் தலைப்பும் நினைவில் இருந்து எழதியது. இப்பெயரில் தருமு ஜீவ்ராம் இக்கதை பற்றி எழுதிய நினைவில் எழதியது.
//கதை சம்பந்தமாக ஒரு கேள்வி. யவனவர்கள் என்பவர்கள் யார்? அவர்களை குறித்து அறிய ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?//
யவனர்கள் கிரேக்கர்கள் என்று பழந்தமிழ் ஆய்வுகள் சொல்கிறது. கே.கே. பிள்ளையின் தமிழக வரலாற்று நூல் உதவும். யவனர்கள் பற்றிய தனிப்பட்ட ஆராய்ச்சிநூல்கள் இருக்கலாம் எனக்கு தெரியவில்லை அவைகள்.
நன்றி.
கருத்துரையிடுக