சமீபத்தில் காலச்சுவடில் சுகிர்தராணி எழுதிய குடிக்கலாச்சாரம் பற்றிய கட்டுரை facebook ல் டீசே
வால் வெளியிடப்பட்டு வளர்மதி
மற்றும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் அது குறித்து விவாதித்தனர். இடையில் நண்பர் வளர்மதி நம்மையும் இழுத்ததால் அவரிடம் கூறியபடி இக்கட்டுரையை எனது மற்றொரு பதிவான உடலரசியலில் வெளியிடுகிறேன். எழுதத் தூண்டிய நணபர் ராமானுஜத்திற்கும், எழுதும்போது படித்து கருத்துக்களைக் கூறி ஊக்கப்படுத்திய முபாரக்கிற்கும்
நன்றி.
---- இக்கட்டுரை 10-09-2008 ல் நண்பர் ஒருவரின் குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றிற்காக எழுதப்பட்டது. அந்நூல் இதவரை வெளிவந்ததற்கான குறிப்புகள் எதுவும் தெரியவில்லை. ஒருவேளை கட்டுரையின் அலுப்பூட்டும் ஆய்வுமுறை ஏற்படுத்திய சுவராஸ்யமின்மை இதனை வெளியிடுவதற்கு அவருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் அதை சொல்லத்தயங்கி, நூல் வெளிவந்த குறிப்பு தெரிவிக்கப்படாமல்கூட இருந்திருக்கலாம். எப்படியோ, இதனை இங்கு வெளியிடுவதன் வழியாக 2 மாதங்கள் உழைப்பையும் நேரத்தையும் தின்ற இக்கட்டுரையினை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே. கட்டுரையின் நீளம் கருதி, பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது படிப்பதற்கு வசதியாக. எனது மற்றொரு பதிவான உடலரசியலில்.----
குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – சுற்று-1
- ஜமாலன்.
டு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழாவுக்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்துடன் அழைப்பு இணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 அன்று மாலை உங்களை எதிர்நோக்குகிறேன்.



