தமிழீழமும் தமிழர்களும் - உலகமய-காலனீயத்தின் சோதனை விளையாட்டு.

இலங்கை நண்பர் ஒருவரால் வெளியிடப்பட உள்ள ”எதுவரை” என்கிற பத்திரிக்கைக்கு எழுதப்பட்ட கட்டுரை இது. சூழல் கருதி இங்கு பதிவிடப்படுகிறது. 

imageஎந்த ஒன்றைப்பற்றியும் எழுதுவதற்கு முன்பாக எனது மனதில் ஓடும் முதல் வாசகம் 'check your politics, before you enter it' என்கிற எட்வர்ட் சைத்தின் வாசகம்தான். முதலில் எனது அரசியலை நான் பரிசோதித்துக் கொள்வது அவசியம். காரணம் நான் ஏற்றுக்கொள்ளும் அரசியல் குறித்து எப்பொழுதும் ஒருவகை சந்தேகம் எனக்கு உண்டு. அந்த சந்தேகத்துடன் எனது அரசியலை முதலில் சரிபார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக இங்கு குறிப்பிடப்படும் 'நான்' என்பது ஒருவகை அடையாளத்தை அடிப்படையாகக்கொண்டே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இவ்வாறு வெளிப்படும் தன்னடையாளம் குறித்து ஒரு விமர்சனத்துடன எழதத்துவங்குவது அவசியம். இந்த நானிற்குள் மதம், தேசியம், இனம், மொழி, பால், சாதி எனப் பல பிறப்படிப்படையிலான அடையாளங்கள் உள்ளது. மற்றவகை வர்க்கம் உள்ளிட்ட துணை அடையாளங்கள் இதன் மேல்தான் கட்டப்பட்டுள்ளது மற்றும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆக அடையாளம் என்பது பல பிடிப்புகளாக ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளது. இவ்வடுக்கில் சமூக இயக்கமானது ஒற்றை அடையாளத்தை இயக்கத்தளத்திற்கு கொண்டு வந்து மற்ற அடையாளங்களை உள்ளே மடிக்கிறது.  அடையாளம் என்றவுடன் ஏதோ இது காலகாலமாக நமது உடலுடன் பிறந்த அல்லது நமக்குள் இருத்தப்பட்டுள்ள சராம்ச உணர்வாகக் கருதவேண்டியதில்லை. யதார்த்தத்தில், அப்படி ஒரு சாராம்ச அடையாளம் இருப்பதாக நம்பப்படுவதிலும், அதற்கான கருத்தியல், வராலாற்று, இலக்கிய, பண்பாட்டு வேர்தேடி அலைந்து வரலாற்றை அடையாளத்திற்கேற்ப மறுவாசிப்பு செய்து கட்டமைப்பதின் வழியாக அதனை உடலின் ஓர் அரசியல் நிலையாக மாற்றுவதிலும்தான், அடையாள அரசியலின் மையமான இறுகலும், பாசிச மனப்போக்கும் உருவாகுகிறது.

அடையாளம் என்பது இரண்டு உடல்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதன் வழியாகவே உருவாகுகிறது.  இந்த எதிர்கொள்ளல் என்பது சமூக எதிர்வுகளாகக் கட்டப்படுகின்றன. இந்த எதிர்வுகள் தாம் X பிற என்கிற எதிர்வுகளாக அரசியல் வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதன் வழியாக அடையாளங்களாக இறுகுகிறது. இவ்வாறாக இறுகிய ஒரு அடையாளமே தமிழன் X சிங்களன் இன்னபிற இன அடையாளங்கள் எனலாம். உண்மையில் அடையாளம் நீக்கப்பட்ட ஒரு நிலையையே நமது அரசியலாக முன்வைக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு, என்றாலும் தற்போதைய பேதமுள்ள சமூக இயக்கத்தில் அது சாத்தியமற்ற நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்கள் அந்தந்த அரசியல் நிலைபாடுகளில் ஏற்பது என்பதே தற்போதைய நிலைப்பாடு. எனவே தமிழன் என்கிற அடையாளம் ஒடுக்கதலுக்குள்ளாகும்போது அதனை ஏற்று அதன் அரசியல் நிலையில் நிற்பது தவிர்க்க முடியாதது. அதே நிலை சிங்கள இன அடையாத்திற்கும் நடக்குமெனில் நாம் சிங்கள அடையாளத்தை ஏற்பதுவே ஜனநாயக அரசியலாக இருக்கும். தமீழீழப் பிரச்சனையில் தமிழகத்தில் பின்னப்படும் வலையில் எனது பிறப்படிப்படையிலான தமிழன் என்கிற இன அடையாளத்தை தவிர்த்து புறநிலையில் நின்று இதனை எழுத முனைவதற்கான ஒரு அலைதலே இது.

1983-ஜீலைக்கலவரம் ஏற்படுத்திய பாதிப்பில் முக்கியமானது  நண்பர் எஸ். சண்முகம் குறிப்பிட்டதுபோல தமிழகத்தில் தமிழக அறிவுஜீவிகள் பலரும் தமிழ்தேசியம் நோக்கி நகர்ந்ததுதான். குறிப்பாக மார்கசிய அறிவஜீவிகள்கூட இந்த தேசிய உணர்வால் பாதிக்கப்பட்டு பின் தேசியவாதத்தால் பீடிக்கப்பட்டனர். 1969-களில் உருவான தமிழ்தேசிய அலையை மட்டுப்படுத்தி மார்கசிய மற்றும் தமிழக இந்தியப் பிரச்சனைகளை மையமாக வைத்து எழுந்த அறிவுஜீவிகள், திடிரென இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தமிழ்தேசியம் பற்றிய மறுவாசிப்பை நிகழ்த்தினர். இந்த 25-ஆண்டுகளில் தமிழகத்தின் பல முக்கியப் பிரச்சனைகள் குடிநீர், மணல்வேட்டை, விளைநிலங்கள் அழிப்பு, பண்ணாட்டு மூலதனக் குவிப்பு, சூழல் சீர்கேடுகள், பெருகிவரும் வறுமை என பலவும் பின்னுக்குத் தள்ளப்பட்டன அல்லது தமிழகத்தின்  பிரச்சனகைளை அனுகுவதற்கான ஒரு ஆதிக்க கருததியலாக இந்த இனப்பிரச்சனை முன்னுக்கு வந்து, ஆழ்மனத் தணிக்கையாக இதனை ஒட்டியும் வெட்டியும் விவாதங்களை கட்டமைத்தது எனலாம். இந்நிலையில் இன்று இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் மீண்டும் தமிழ்தேசிய உணர்வு ஒன்று மேலெழும்பி வந்துள்ளது. திலீபனின் உண்ணாவிரத மரணம், திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரவுப்பின் தீக்குளிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக இன்று முத்துக்குமார், மதுரை ரவி, மலேசியத்தமிழர் என தீக்குளிப்புகளும், மரணமும் நிகழ்ந்துள்ளது. இவை தமிழ் தேசியம் வினைபுரியம் ஈழம், தமிழகம், இந்தியா ஆகியவற்றின் அரசியல் நிலைபாடுகள் குறித்து புரிந்துகொள்ளத் தூண்டுவதாக உள்ளது.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தெற்காசியாவில் 1947-ல் இந்தியா பாகிஸ்தான் என்று இந்து, முஸ்லிம் என்கிற மத அடிப்படையில் இரண்டு நாடுகளையும், 1948-ல் தமிழ் சிங்களம் என்கிற இன அடிப்படையில் இருந்த இலங்கை என்கிற நிலப்பரப்பை சிலோன் என்கிற ஒரே நாடாகவும் விடுதலை செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு வெளியேறியது. இந்த “விடுதலை“ என்கிற காலனிய அரசியலில் மத அடிப்படையில் இரண்டு நாடுகளிலும் அமைதியின்மைக்கான விதையையும், இன அடிப்படையில் இலங்கையில் அமைதியின்மைக்கான விதையையும் ஊன்றிவிட்டு சென்றது. “சர்வதேசியம்“ என்கிற உலகஅமைப்பிற்குள் இரண்டாம் உலகப்போருக்கு பின்பாக விடுவிக்கப்பட்ட பல காலனிய நாடுகளில் உருவான பின்காலனிய அரசியலின் மையமாக  மதவாதம் மற்றும் இனவாதம் என்கிற சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டு, உலகம் மற்றும் இச்சமூக மனிதர்களின் தினவாழ்வு உட்பட அனைத்தும் இச்சொல்லாடல்கள் வழி அடையாளமாக்கப்பட்டு அர்த்தமாக்கப்பட்டன. காலனியம் தான் கொன்று புதைத்த நவீனத்திற்கு முந்தைய மனித உடலை தனது இச்சொல்லாடல்கள் வழி உயிர்ப்பிக்க முனைவதறகான ஒரு பின்காலனிய அரசியலை உருவாக்கி தந்தது. இந்தியா என்கிற தீபகற்பத்தை மதபிரிவினைகள் மூலமும், இலங்கை என்கிற தீவை இனஅடிப்படையிலும் அதாவது ஒன்றை பிரிப்பதன் மூலமும், மற்றொன்றை பிரிக்காமல் இனைப்பதன் மூலமும் இந்நாடுகளை அமைதியற்ற நாடுகளாக இருக்க வைத்ததுதான் பிரித்தானிய காலனியத்தின் மிக முக்கிய அரசியல் ஆகும்.   அதன் தொடர்ச்சியே இன்றைய பிரச்சனைகளாக வடிவெடுத்துள்ளன.

இன்று இலங்கையில் உருவாகி உள்ள தமிழ் இனவாதம் என்பது சிங்கள இனவாதத்திற்கு ஒரு எதிர் குரலாகவே உருவானது. இந்த சிங்கள இனவாதம் என்பது ஆங்கிலேயக் காலனியக் காலங்களிலேயே கட்டமைக்கப்பட்ட ஒன்று ஆகும். ஆங்கிலேயே காலனிய ஆட்சியில் புராட்டஸ்டன்ட் கிறித்துவ மதத்தை தழுவியதால் உருவான தமிழ் மற்றும் சிங்கள மேட்டிமைக்குடி ஒன்று கல்வியில் வளர்ச்சிப்பெற்று அரசின் முக்கியப் பணியிடங்களில் அமர்ந்து ஒரு மத்தியதரவர்க்க அதிகார வர்க்கம் ஒன்று உருவாகியது. அந்த அதிகார வர்கக்த்திற்கு எதிராகவே, சிங்கள இனஉணர்வு கொண்டவர்களாலும், பௌத்த துறவிகளாலும் சிங்கள இனவாதம் என்பது கட்டமைக்கப்பட்டதாக குமாரி ஜெயவர்த்தனா விவரிக்கிறார். இந்த இனவாதம் சிங்கள மொழி, சிங்கள இனம், பௌத்தம் என்கிற அச்சி்ல் தனது அடையாளத்தை கட்டமைத்தது. காலனீய அரசை எதிர்ப்பதைவிட கிறித்துவ வளர்ச்சிக்கு எதிரான “தர்மயுத்தம்” எனப்படும் புனிதப்போர் ஒன்றை இந்த மேட்டிமை கிறித்தவர்களுக்கு எதிராக துவக்கினர். இந்த சிங்களர்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கோரும் இன உணர்வு என்பது ஆரிய-பௌத்த அதாவது இன-மத மேலாண்மை என்கிற உணர்வின் அடிப்படையில் இனவாதமாக வளர்கிறது.    இலங்கை என்பது தம்மதிவிபா (dammadvipa - island of faith) என்கிற புத்த-சிஙகள-ஆரிய மேலாண்மை என்கிற கருத்துருவாக்கத்தால் இனவாதமாகவும், பௌத்தத்தை காப்பது என்பது தனது இனத்தூய்மைக்கான அடிப்படை என்கிற உணர்வுடன், கிறித்துவத்திற்கு எதிரானப் போராட்டம் புனிதப்போராக பௌத்த துறவிகளால் கட்டமைக்கப்பட்டது. 1880-ல் கலோனல் ஓல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி அம்மையாரால் பரப்பப்பட்ட தியாசபிகல் சொசைட்டியின் புத்த கல்வியால் ஊட்டம் பெற்ற சிங்கள சுதந்திர சிந்தனையாளர்களின் வளர்ச்சி என்பது இந்த சிங்கள இனவாதக் கருத்தியலை இனவெறியாக காலனியத்திற்கு பிந்தைய சமூகத்தில் கட்டமைத்தது. இக்கட்டமைவு கீழ்கண்ட காரணங்களால் கட்டப்பட்டதை விளக்குகிறார் குமாரி ஜெயவர்த்தனா.

1. தென்னிந்திய மன்னர்களின் தொடர் படையெடுப்புகள் பௌத்த வரலாற்றை அழித்ததாகவும், அதனால் சிங்கள இனம் ஒடுக்கப்பட்டதாகவும் ஆன தமிழ் வரலாற்றுடன் சேர்ந்து கட்டமைக்கப்பட்ட வரலாறு, பாடநூல்கள் வழியாக சிங்களரிடம் தென்னிந்திய பற்றிய ஒரு வரலாற்று அச்சத்தைக் கட்டமைத்தது. (இங்குதான் ராஜராஜன்-புலிக்கொடி-புலிச்சின்னம்-வெற்றிவாகை-தமிழினப்பெருமை இன்னபிற பிம்பங்களின் மீள்கண்டுபிடிப்பும் ஊடாட்டமும் முக்கியமான தமிழனப் பெருமையாக முன்வைக்கப்பட்டதை இணைத்து காணவேண்டும்.)

2. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய வரலாற்றுடனும், இந்திய பெங்கால் பகுதியிலிருந்து வந்து புர்வீகக் குடிகளான சிங்களர்கள், பௌத்ததத்தினால் அதன் தூய்மையை காப்பதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக தங்களை உணரும்படியும், இலங்கை வரலாற்றில் புர்வீக வரலாறு தங்களுடையதே என்கிற மரபின் அடிப்படையிலும் சிங்களம் என்கிற இனப்பெருமிதம் கட்டமைக்கப்பட்டது. தங்களை ஆரியர்களாக அவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டனர். இந்தியாவில் உருவான ஆரிய-திராவிட என்கிற காலனியக் கருத்தாக்க கட்டுமானத்தில் ஆரியர்களாக தங்களை உணருமாறு வரலாறு வாசித்துக் காட்டப்பட்டது. (தமிழின மேலாண்மை கைக்கொண்ட சைவமதப் பெருமிதத்திற்கு எதிராக இந்த ஆரிய-பௌத்த மேலண்மைக் கட்டப்பட்டது.)

3. சிங்களருக்கு என்று உலகில் வேறு நாடுகள் இல்லை, இது மட்டுமே தங்களது நிலம், தாங்கள் இதைவிட்டால் உலகில் தஞ்சம் புகுவதற்குக்கூட ஒரு மாற்று நிலம் தனது மொழி, இன அடிப்படையில் இல்லை  என்கிற முற்றுகையிடப்பட்டுள்ள ஒரு மனநிலையும் அதை ஒட்டிய அச்சமும் பெருக்கிக் காட்டப்பட்டது.  (இதில் பௌத்த மீட்டெடுப்பாளரான அனகாரிக தர்மபாலாவின் பங்கு மிகமுக்கியமானது. தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கென்று ஒரு நாடில்லை சிலவேளை நாதியில்லை என்கிற கோஷத்துடன் இது இணைத்து நோக்கத்தக்கது.)

4. இலங்கையில் உருவான இந்திய முதலாளி வர்க்கம் ஒன்று அந்த மக்களை சுரண்டுவதும், தங்களது வளங்களை கொள்ளையிட்டு இந்தியாவில் ஒருகால் இலங்கையில் ஒருகால் என வாழும் அவர்களுக்கு சிங்களநாட்டின் தனிச்சிறப்பு தெரியாமல் அது அழிக்கப்படுவதான உணர்வு மேலெழும்பியது. (இதில் இந்திய சிந்திகள், பார்சிகள், தமிழக செட்டியார்கள், மலையாள மேனன்கள் என இந்தியாவிலிருந்து பல சாதியப்பரிவினர் சிலோனின் வணிகப்பொருளதாரத்தை தங்கள் கையில் வைத்திருந்தனர்.)

5. பௌத்தம் என்பது தனிச்சிறப்பான மதமாக தன்னை காப்பதற்கான நிலமாக இலங்கையை தேர்ந்துகொண்டது என்பதால் அதனை அந்நிய மதங்களான, கிறித்துவம், இந்து, இஸ்லாம் போன்ற மதங்களின் தாக்குதலிலிருந்து காக்க அம்மதங்களை எதிர்த்து தர்மயுத்தம் (புனிதப்போர்) செய்யவேண்டும் என்றும் பௌத்த துறவிகளால் இந்த இனவாதம் ஊட்டி வளர்க்கப்பட்டது. (இது நவீன சமூகத்தின் மதஅடிப்படைவாதக் கருத்தியலான “மத-காப்புறுதி(இன்சூரன்ஸ்) புனிதப்போர்” என்கிற “கருத்தியல் பண்டத்தின்” ஒரு பின்காலனியத் தாக்கமாகும்.)

அனகாரிக தர்பாலாவின் புராட்டஸ்டண்ட் புத்தமதம் என்று அழைக்கப்பட்ட சீர்திருத்தவாதம், பௌத்த பொற்காலம் பற்றிய கனவுகளை பரப்பி சிங்களிரிடம் பௌத்த அடையாத்தை ஆழப்படுத்தி ஒன்றினைத்தது. ஆக, சிங்கள இனவாதம் என்பது ஒரு காலனிய எதிர்ப்பு வடிவமாக இல்லாமல், காலனியக்கால வர்க்க கட்டமைப்பில் முகிழ்த்து வந்த சிங்கள தேசியமுதலாளி வர்க்கத்தின் அதிகார பகிர்வுக்கான ஒரு பேரியக்கமாகவே உருவானது. (இதற்கு சமகாலத்தில்தான் இந்தவகை பேரியக்கமாக உருவானதே பெரியாரால் முன்வைக்கப்பட்ட தமிழ்தேசிய முதலாளித்துவக் குரலான திராவிட நாடு என்கிற கருத்தாக்கமும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.) இப்பேரியக்கம், காலனியம் உருவாக்கிய கிறித்துவ அதிகார வர்க்கத்திற்கு எதிரானதாக உருவானது. வரலாற்றின் நகைமுரண் என்னவென்றால், ஒரு மரபான கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவரான ஜெயவர்த்தனேதான் தமிழர்களுக்கு எதிரான சிங்கள் இனவெறியை அதன் முழுவீச்சில் கட்டமைத்து, சிங்கள இனத்தின் ஒரு ஒருமித்த குறியாகவும், பௌத்த துறவிகளின் மதவெறிக்கு ஒரு வடிகாலாகவும் இருந்தார். மதம் என்பதை இனம் என்பதால் மாற்றீடு செய்த பெருமை இவருடையதே. தனது சிஙகள இனவெறியின் தூய்மையைக் காக்கவும், அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் அவர் பின்னால் பௌத்த மதத்தை தழுவினார்.

காலனியக்காலத்தில் 1883 ஏப்ரல் மாதம் நடந்து மிகப்பெரும் கலவரம் பௌத்தர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையில் நடந்தது என்றால், சரியாக 100 ஆண்டுகள் கழித்து 1983 ஜீலையில் தமிழர்களுக்கும் சிங்களருக்கும் இடையில் மிகப்பெரும் கலவரம் நடந்தது. இரண்டு கலவரங்களில் ஒன்று மத அடிப்படையிலும், பிறிதொன்று இன அடிப்படையிலும் நிகழ்ந்தது. காலனியத்திற்கு பிறகான தேசம் மற்றும் தேசியம் பற்றிய சொல்லாடல்கள் இந்த கலவரங்களுக்கான அடிப்படை கருத்தியல் கட்டுமானமாக இருந்தன. ஆக, சிங்கள இனஅடையாளம் தவிர்க்க முடியாமல் இலங்கையில் அடுத்து பெரும்பான்மையாக உள்ள தமிழ் என்கிற இன அடையாளத்தை தனது மற்றமையாகக் கட்டியது.     

இனஅடையாளம் என்பது ஒரு கற்பிதம். அதற்குள் இனம் சார்ந்ததான எந்தவொரு சாராம்ச உணர்வும் இருப்பதில்லை என்பதை முன்பே சொன்னோம். தேசியவாதம் தனது வேர்தேடிச் சென்று ஒரு புர்விக வரலாற்றை, தேசம், தேசியம், இனம் என்கிற நவீன சொல்லாடல்கள் வழி மீள்வாசிப்பு செய்து, இந்த இனம் என்கிற உணர்வை வரலாற்றுக்கு முந்தையதான சாராம்சமான ஒரு அடிப்படை உணர்வாக, ஒரு உடலுக்குள் கண்டடைகிறது. ஒரு மக்கள்தொகுதியை உருவாக்கும், ஒரு அடையாளக் காரணியே இனம் என்பதற்கு பதிலாக, இனம் என்கிற அடையாளத்தால்தான் ஒரு மக்கள் தொகுதி உருவாகுகிறது என்பதாக இது சொல்லப்படுகிறது. இந்த கற்பித அடையாளத்தைக் கொண்டுதான் சிங்கள இனம்  என்கிற பேரினவாதம் தன்னை அடையாளப்படுத்தி தமிழர்களை அழித்தொழிக்கிறது. 

எதிரி ஒரு அடையாள நெருக்கடியை நோக்கி உந்தி தள்ளும்  ஒரு நிலையில் தவிர்க்கமுடியாமல் ஒரு தன்னடையாளத்தைப் பெற்று தன்னை ஒரு இனமாக உணரும் நிலை தமிழர்களுக்கு ஏற்படுகிறது. ஒருவன் தன்னை “தமிழனாக“ ஒரு தேசிய இனத்தவனாக உணர்வது என்பது இன்றைய அரசியல்-சமூக-பொருளியல்-உளவியல் வலைப்பின்னலில் தவிர்க்க முடியாததாக உள்ளது. அல்லது அந்த வலைப்பின்னலுக்கு ஏற்ப ஆடும் பாத்திரங்களாக மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த வலைப்பின்னலூடாக பிறிதொரு இணை வலைப்பின்னலை கடந்த 25 ஆண்டுகளாக  தமிழ் இன் உணர்வினால் அச்சமூட்டப்பட்ட சக்திகள் தமிழீழத்திற்கு எதிரான தங்களது “வஞ்சம்“ தீர்க்கும் நிலைப்பாட்டால் பின்னலாக்கி உள்ளன என்பது மிகையாகாது. இந்திய தேசியத்தில் தமிழ் தேசியம் கரைக்கப்பட வேண்டும் என்கிற கருத்துடன் இந்த வலைப்பின்னல் பின்னலாக்கப்பட்டு வருகிறது. இவ்வலைப்பின்னலினை உருவமைக்கும் சக்தியாக இநதியாவின் ஆதிக்க சொல்லாடலாக உள்ள மதவாதம் உள்ளது. அதாவது, இனம் சார்ந்த சொல்லாடல்களை இந்திய தேசியம் என்கிற ஒரு கலாச்சார தேசியத்தின் அடிப்படையாக உள்ள மதவாத சொல்லாடல் தனக்குள் அடக்க முனைகிறது.

ஆனால், தேசியஇனச் சொல்லாடல் மதவாத சொல்லாடலுக்கு எதிர்சக்தியாக அல்லது பிறிதொரு அரசியல் துருவமயமாக்கலுக்கான சக்தியாக உள்ளது. அதே நேரத்தில் ஈழத்தில் முன்வைக்கப்பட்ட தமிழ்தேசியம் என்கிற சொல்லாடல் முற்றாக முஸ்லிம்களை வெளித்தள்ளி ஒரு மதவாதச்சொல்லாடலுக்கான தேசியமாக மாறியது. இம்மாற்றத்தை குறிப்பாக விடுதலைப்புலிகள் முன்னின்று “சிறப்பாக“ நடத்தி முடித்தனர். ஆக, ஈழத்தமிழ் தேசியம் என்பதற்குள் முஸ்லீம்கள் உள்ளடக்கப்படாத ஒருவகை தூய-மதவாத-தேசியத்தை புலிகளின் ஈழத்தமிழ் தேசியவாதிகள் முன்வைத்தனர். இது ஈழத் தமிழ் தேசியத்தின் முதல் சக்திச் சிதறலாக ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்தியது. அதன்பின் இலங்கை புவிப்பரப்பில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அல்லது உயர்சாதி சைவவெள்ளாள தமிழர்கள் பிறசாதி மற்றும் தலித் தமிழர்களை தங்களது சொல்லாடலிலும், பொருளியல் மற்றும் வாழ்வியல் நிலையிலும் விளிம்பிலேயே வைத்திருந்தனர். இந்த சாதிய மனோபாவம் விடுதலை இயக்கங்களுக்குள் ஒரு சாதிய மனோபாவமாக மாறியதில், வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இச்சக்திகள் வெளியேறியதன் மூலம் மற்றொரு பலவீனத்தை சந்தித்தது. மலையகத் தமிழர்களை புறம் ஒதுக்கி அவர்களது வாழ்வியலுக்கான உத்திரவாதத்தை உருவாக்கும் கோரிக்கைகளை இணைக்காமல் ஈழத்தமிழ்தேசியம் அவர்களை இந்திய வம்சாவழியினர் என்று பிரித்ததின் வழியாக மூன்றாவது பலவீனத்தை சந்தித்தது. அதன் பின் மற்ற விடுதலை இயக்கங்களையும், அவற்றின் பிரதிநிதித்துவக் குரல்களையும் ஒடுக்கியதன்மூலம், ஒற்றை பிரதிநிதியாக மாறியதன்மூலம், விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத் தமிழ் தேசியத்தின் ஒற்றைக்குரலாக மாறியது. அவ்வியக்கம் வெறும் இராணுவப் போர்தந்திரங்களை மட்டுமே நம்பியதின் விளைவாக, தமிழ்தேசியத்தை பண்டைய புறநானூற்றுக்கால போர்பரணி பாடும் நிலைக்கு பின் தள்ளியது. சிங்கள இனத்தின் கொடுங்கனவுகளில் ஒன்றான ராஜராஜன் படையெடுப்பை நினைவுட்டும் வண்ணம் தன்னை புலியாக ராஜராஜனாக புலிக்கொடியுடன் அடையாளப்படுத்திக் கொண்டது. ஒரு தேசிய இனத்தையே இராணுவமாக (போராளிகளாக அல்ல) மாற்ற முயன்றது. ஒவ்வொரு குடும்பத்தினரும் இவ்வியக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களாக, அக்குடும்பத்தில் ஒருவரை தனது இராணுவத்திற்குள் இணைத்தது. போராளிகள் வேறு பொதுமக்கள் வெறு அல்ல என்ற நிலையை உருவாக்கியது. போராளிகள் மக்களிடம் தங்கியிருப்பது என்பது மக்கள் சக்தியின் பலத்தைப்பெற்று மக்களைப் பாதுகாக்க என்கிற கோட்பாட்டை, மக்களை ஆயுதம் கொண்டு அச்சமூட்டி ஆதரவு திரட்டும் ஒரு சர்வாதிகாரப் போக்காக நடைமுறைப்படுத்தியது.  ஜனநாயகத்தின் அனைத்து வழிகளையும் அழி்த்தொழித்துவிட்டு பின், தவிர்க்க முடியாமல் இன்று தமிழீழப் பிரச்சனை ஒரு சிக்கலான காலகட்டத்தில் சிக்கவைக்கப்பட்டுள்ளது.

ஈழத்துயரம், மனித  அவலம் பற்றிய பெருந்துயரை நமக்குள் உறையச்  செய்கிறது.  வாழ்வதற்கு இடமற்றதாக துரத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் இன்று சாவதற்கும் தனது சொந்த மண்ணற்றவர்களாக  சிதறடிக்கப்படுகிறார்கள். மரணம் என்பது எண்ணிக்கையாக மாறிவிட்ட இந்த அவலத்தில் மனிதம் என்பது வெறும் காட்சிகளின் நகல்களாக  மாறிவிட்டது. தமிழக மக்களிடம் இந்தபோர் பெரும் பதற்றத்தை உருவாக்கவில்லையே ஏன்? என்கிற கேள்வி நம்முன் எஞ்சியுள்ளது. ”புலியை முறத்தால் அடித்து துரத்தியதாக புறநானூற்றுப் பெருமை பேசும் நாம் இன்று ஏன் இந்த நிலைக்கு ஆளானோம்“ என்கிற கேள்வி நமது  தமிழ் சமூகவரலாற்றை சமூக உளவியல் மற்றும் அரசியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. இதன்பொருள் புலியை முறத்தால் அடித்தவனும் இன்றைய தமிழனும் உடலினால் ஒன்றாக இருக்கலாம் உணர்வினால் ஒன்றல்ல. இருவரிடமும் ஒரு வரலாற்று தொடர்ச்சியின்மை உள்ளது என்பதுதான். மணிரத்தினத்தின் “இருவரி“-ல் வரும் தமிழ்ச்செல்வன் பேசும் கவிதை வரிகள் போல “நமது புறநானூற்று வீரம் எங்கே? போர்பரணி எங்கே?“  தமிழ்திரையின் பாத்திரங்களாக மாறிப்போன நமது அரசியல் வரலாற்றுத் தலைவர்கள் உருவாக்கி உள்ள ஒரு மீ-யதார்த்த  (ஹைபர்-ரியல்) உலகில் தமிழனின் அகம் புறம் எல்லாம் அதீத உணர்விற்கு ஆட்பட்டு உண்மைகளின் நகல்களின் நகல்களின்….. நகல்களை அடைந்து, அது ஏற்படுத்தும் அதீ-யதார்த்த உணர்விலும்/உலகிலும் சஞ்சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம். போர் என்பது தொலைக்காட்சியின் மின்திரைப்பரப்பில்  வந்துபொகும் ஹாலிவுட் படக்காட்சிகளைப் போல எந்த உறைப்பும், உணர்வும் இல்லாமல் ஒரு “காட்சிகானும் எந்திரமாக“ மாறிவிட்டோம். தொலைக்காட்சியின் நெடுந்தொடர், விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு மத்தியில் கட்டமைக்கப்படும் செய்திகள் என்கிற  “உண்மைகளில்“ வரும் காட்சிகள்கூட நம்மை உறையவோ அல்லது உலுப்பவோ இல்லை என்பது கடந்த 25 ஆண்டுகாலமாக ஈழத்தை  வைத்து செய்யப்பட்ட தமிழக அரசியலின் ஒரு உச்ச விளைவு எனலாம். இந்த உணர்வு புலிகளையும் அவர்களது செயல்பாடுகளையும்  முன்வைத்து சிறுக சிறுக கட்டமைக்கப்பட்டது. இன்று ஈழத்தமிழினம் என்கிற ஒன்றே இல்லை அவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான் என்று  திராவிடர்கள் பெயரில் கட்சி நடத்தும் அம்மையார் ஜெயலலிதா பி.பி.சி. என்கிற உலகச் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் ஒரு  வெளிப்படையான நிலையை அடைந்துள்ளது. தமிழகமக்களிடம் இதற்கு ஒரு முனுமுனுக்கும் எதிர்ப்புக்கூட இல்லை என்பது அதைவிட  வியப்பளிக்கக் கூடியது.

ராஜிவ்கொலை என்பதை முன்வைத்து ஒரு இன அழிப்பிற்கு தூபம்போடும் கட்சிகள், ராஜிவைக் கொல்லவேண்டிய தேவை ஏன்? அதில்  உண்மையில் நலம் அடைந்தவர்கள் யார்? அதை செய்யத் தூண்டிய சக்திகள் எவை? அச்செயலால் பலன் அடைந்தவர்கள் யார்? என்பதை  வெளிப்படையாக அறிவிக்கவுமில்லை. குறிப்பாக, ராஜிவ் கொலைக்குப் பிறகான இந்திய அரசு முற்றிலும் வேறுமுகம் கொள்வதை நுட்பமாக அவதானிக்க முடிகிறது. இந்திய அரசியிலில் மதச்சார்பற்ற குரல்கள் அதோடு ஒருமுடிவிற்கு கொண்டுவரப்பட்டது என்பது முக்கியமான விஷயம். அதன்பின் காங்கிரஸ் என்கிற ஒரு பேரியக்கம், பிராந்திய கட்சிகளின் அளவிற்கு சுருங்கியும், பாரதிய ஜனதா ஒரு தேசியக் கட்சிக்கான அந்தஸ்த்தையும், ஆதரவையும் பெற்றது. ராஜிவிற்கு பின் உடனடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், பாபர் மசூதி இடிப்பினால், ஒரு அமைதியற்ற மதவாத நாடாக இந்தியாவை மாற்றியதும், உலக பொருளாதராத்திற்கு இந்திய சந்தையை திறந்துவிட்டதும் அவதானிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகளாகும். ஈராக்கை ஆதரித்த ராஜிவ், அமேரிக்காவிற்கு எதிரான தெற்காசிய சக்தியாக வளரத் துவங்கியதையும் இதனுடன் இணைத்து நோக்குவது அவசியம். ராஜிவ் கொலை என்பதன் பின்னணியில் உள்ள பல அரசியல் சார்நத நகர்வுகள், இயக்கங்கள் அலசப்படவேண்டியவை. அதற்காக அந்த ஒரு காரணத்தை முன்வைத்து ஒரு இனத்தை அழிப்பதற்கு அனுமதி தருவதுபோல நடந்தகொள்ளும்  இந்திய அரசின் நிலை என்பது இந்திய தெற்காசிய வல்லரசுக் கனவுத்திட்டத்தின் ஒரு பகுதியே.

இங்கு இந்திய தேசவெறியில் இந்திய ஆதிக்கம் ஈழத்தில் ஏற்படுவதால் இந்திய ஸ்திரத்தன்மை காக்கப்படும் என்பதான ஒரு இராஜதந்திர விவாதம் முன்வைக்கப்பட்டு, இந்தபோர் ஆதரிக்கப்படுகிறது. இந்திய அரசு என்பதன் ஆதிக்கம் ஈழம் போன்ற நாடுகளில் உருவாகுவது என்பது எந்தவகையில் இந்திய மக்களுக்கு சாதகமாகும் என்பது கேள்விக்குறியே? அப்படியே இந்திய மக்களுக்கு சாதகம் என்பதாக வைத்துக்கொண்டாலும், மற்றொரு நாட்டை அடிமையாக்க முனைவது இந்தியா தன்னை ஏகாதிபத்தியமாக மாற்றிக்கொள்வதற்கான முயற்சியே. இந்தியாவின் இந்த ஏகாதிபத்தியக் கனவு அடிப்படையில் மக்கள் விரோதமானது என்பதால் இது உடனடியாக எதிர்க்கப்பட வேண்டியது இந்திய ஜனநாயகவாதிகளின் கடமையாகும்.

தற்சமயம் அழுத்தம் திருத்தமாக பத்தரிக்கைகள் கூறும் அமேரிக்க இராணுவ அமைச்சகம் திரிகோணமலை படைத்தளத்தை பார்வையிட்டது தளம் அமைக்கும் நோக்கில் இல்லை என்பது மற்றுமொரு அவதானத்திற்குரிய முக்கிய விஷயமாகும். திடிரென அமேரிக்கா புலிகளின் ஆதரவுநிலையிலிருந்து சிங்கள இராணுவப் பக்கம் சாய்ந்தது ஏன்? என்பதும் இதனுடன் இணைத்து சிந்திக்கத் தக்கது. உண்மையில் ஈழப் பிரச்சனையின் மையமாக கருதத்தக்கது அதன் திரிகோணமலைப் படைத்தளத்தைதான். இஸ்ரேல் போன்ற ஒரு முக்கிய புவிசார் அரசியல் புள்ளி அது. அங்கு உலக ஆதிக்கம் தெற்காசிய நாடுகளின் பிராந்திய அமைதியை குலைப்பதற்கான முயற்சியில் இந்த பிரச்சனையை கையாளுவதாக ஒரு சந்தேகம் 1983-லிருந்தே உண்டு. ஒருவகையில் சோவியத்-இந்திரா அரசு புலிகளை 70-களில் அமேரிக்க-திரிகோணமலை-படைத்தளம் என்கிற கோணத்தில்தான் அனுகினவோ என்கிற ஐயம் உண்டு. இன்றும்கூட சீன-பாகிஸ்தான்-உறவை சொல்லி சிங்கள அரசு இந்திய அரசை “பிளாக்-மெயில்“ செய்வதாகவே கருது இடமிருக்கிறது.

இந்திய அரசின் நிலை இது என்றால், தமிழினம் குறிப்பாக இந்திய தமிழர்கள் ஏற்படுத்தி உள்ள அரசியல் கசப்புணர்ச்சியின்  விளைவாக, இன்று இந்தியாவின் எந்த மாநிலமும் குரல்கொடுக்கத் தயாரில்லை என்பது மற்றொரு பேரவலம். இந்திய அரசின் வெளியுறவுக்  கொள்கைகளை தீர்மானிப்பவர்களின் சொந்த வெறுப்புணர்ச்சியின் விளைவாக, சிங்கள பேரினவாத அரசு இன்னும் ஊக்கமும் உற்சாகமும் பெற்று  ஈழத்தமிழர்களை புவியில்ரீதியாக நெருக்கி முல்லைத் தீவு என்கிற சிறு நிலப்பரப்பிற்குள் அடைத்துவிட்டது. உணவு, மருந்து மற்றும் வாழிடம்  என்கிற எந்த அடிப்படை வசதியுமற்ற நிலையில் நெருக்கடியான நிலையில் மக்கள் வசிக்கும் ஒரு பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது  முல்லைத்தீவு.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன், ராஜபக்ஷே சந்திப்புக்குப் பின்னர் “இந்திய, இலங்கை உறவு வரலாறு காணாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு பாரம்பரியமானது. ஆழமானது. காலத்தையும் கடந்து இது நிலை பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான தீவிரவாதத்திற்கு எதிரான போரில், இலங்கை, இந்தியாவுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது” என்றார் மேனன். இலங்கை வெளிஉறவு அமைச்சர் ரோகித போகல்லகாமா, ”நிலைமையைப் புரிந்து கொண்டு இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது பாராட்டுக்குரியது. இலங்கை இனப் பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும். இந்திய, இலங்கை ஒப்பந்தம்தான் தீர்வுக்கான சாத்தியமாகும்.“ என்று கூறியுள்ளார். இந்திய அரசின் தமிழினம்  மற்றும் இலங்கை குறித்த வல்லாண்மை செய்யும் அல்லது தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு “தாதாவாக“ மாற்றிக்கொள்ளும் நிலையை  வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு பேச்சே இது. உண்மையில் தற்போதையபோர், இந்தியாவின் ஆசியுடன் நடத்தப்படும் அல்லது இந்தியாவே நடத்தும் ஒரு மறைமுகப்போர் (proxy war) எனலாம். அதற்கான அறிவிப்பே இது. அதாவது, இலங்கை அரசு இன்று பிரிட்டன், பாகிஸ்தான், சீனா, ஜப்பான், ஈரான், இந்தியா மற்றும் அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லி்ம்களின் வடகிழக்கு பகுதிகளை பங்கிட்டு கொடுத்து இந்த யுத்தபேரத்தை நடத்திவருகிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காரணம், இப்பகுதிகளை உலக நாடுகளுக்கு திறந்துவிட்டு, அதன்மூலம் சிங்களப் பகுதிகளை ஸ்திரமானதாக மாற்ற முனைவதற்கான ஒரு திட்டம் யுத்தம் ஆரம்பித்த நாள்முதல் சர்வதேச அமைப்புகளிடம் கொண்டுள்ள இலங்கை அரசின் இராஜாங்க உறவில் வெளிப்படுவதாக உள்ளது. இது ஒரு புதுவகையான உலக-ஆதிக்கத்தையும், புதுவகையான உலகமய-காலனியமுறையையும் உருவாக்குவதாக உள்ளது.

இந்நிலையில், இலங்கையின் இந்த யுத்தம் ஈழத்தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய தமிழர்களுக்கும், இந்தியாவிற்குமான ஒரு யுத்த அச்சத்தை எதர்காலத்தில் உருவாக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. இச்சூழலில், தமிழக மக்களை அரசியல் படுத்தி பரவலான எதிர்ப்பை நாடு தளுவிய அளவில் இந்தியா முழுமைக்குமானதாக கொண்டு செல்வதற்கான ஒரு மக்கள் கட்சி என்பதோ ஒரு மக்கள்  முன்னணி என்பதோ இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் பெரிய இரண்டு கட்சிகள் கள்ள மௌனமும் நல்ல மௌனமும் சாதிக்கின்றன. மற்ற கட்சிகள் புலிகளின் தேசியவாதத்தால் பீடிக்கப்பட்டு ஓட்டு அரசியல் நடத்துவதாக உள்ளன.   எதிர்கட்சித் தலைவரான ஜெயலலிதா நேரடியாக எதிர்நிலையை எடுத்துள்ளார். ஆளுங்கட்சியான கருணாநிதியோ இந்திய அரசையும் உள்ளடக்கிய ஒருவகை தேசியத்தை பேசிக்கொண்டும், தனது பழம்பெருமையைக் கூறிக்கொண்டும்  அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார். தமிழக மக்களிடம் 25 ஆண்டுகாலமாக ஏற்படுத்தப்பட்ட புலிகள் மீதான பல அபிப்ராயங்கள், தமிழ் ஈழம்  என்றாலே புலிகள் என்பதான ஒரு சங்கேதமாக மாறிவிட்டது. ஒருவகையில் புலிகள் தவிர பிற ஜனநாயக அமைப்புகளோ அல்லது ராணுவ  அமைப்புகளோ இல்லை என்கிற ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஈழப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டுவிட்டது. பலகுரல்களை நசுக்கி  தன்னை ஒற்றைக் குரலாக மாற்றிக்கொள்ளும்போது பேச்சின் பிரதிநிதித்துவம்கூட அந்த ஒற்றைக் குரலின் பிரதிநிதித்துவமாக மாறிவிடுவதும், அந்த ஒருவரின் பலம் பலவீனம் அந்த பேச்சின்  நியயாத்தை சிக்கலாக்கிவிடுவதும் ஆன ஒரு கையறுநிலைதான் இன்று எஞ்சி உள்ளது. புலிகளின் பலவீனம் தமிழினத்தின், ஈழ விடுதலை என்கிற உணர்வின் பலவீனமாக மாற்றப்படுகிறது.

தமிழகம், இந்தியா, சர்வதேசநாடுகள் மற்றும் தமிழீழப் பிரச்சனைக் குறித்த பல விஷயங்களை இந்த யுத்தம் தெளிவாக்கியுள்ளது. 1. இந்தியா தனது மேலாதிக்கத்தையும் இலங்கையுடன் ஆன நட்பையும் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டது. தமிழர்கள் குறித்து இந்திய தேசியம் கொண்டிருக்கும் அலட்சியமும், தமிழர்களின் உணர்விற்கு ஒரு போலித்தனமான மதிப்பளிக்கக்கூடத் தயாரில்லை என்பதை அறிவித்துவிட்டது. பிரச்சனை இந்திய அரசிற்கு எதிரானதாக தமிழக மக்களின் உணர்ச்சிகள் கிளர்வதற்கு வழிவகுத்துவிட்டது. 2. தமிழக மக்களிடம் வழுக்குரைஞர்கள் மற்றும் மாணவ சமதாயம் ஏறபடுத்திய எழுச்சி இன்று பல போராட்ட வடிவங்களையும் மேலோ கொண்டுவரத் துவங்கி உள்ளது. 3. இப்போரை அடிப்படையாகக் கொண்டு உள்ளடங்கியிருந்த தமிழின விரோத சக்திகள் ஒன்றினைந்து தமிழ் என்கிற இனத்திற்கு எதிராக இதனை பயன்படுத்த முனைப்புகொள்கின்றன. 4. தமிழக ஓட்டுக்கட்சிகள் தமிழினத்தை எப்படி தங்களது அதிகாரத்திற்கு பயன்படுத்தகின்றன என்பது அம்பலமாகி உள்ளது. 5. புலிகள் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த ஒருவித “வெறுப்பும், எரிச்சலும்” கலந்த ஆழ்மன உணர்வு மக்களிடம் கட்டிப்போட்டிருந்த செயலின்மையால் தங்களுக்கு கீழ் திரட்டமுடியாமல் இருந்த தமிழக ஓட்டுக்கட்சிகள், திகைத்துப்போய் உள்ளன. 6. மீண்டும் வரலாற்றில் மாணவர்கள் தலைமை ஏற்கும் ஒரு அரசியல் நிகழ்வாக இது மாறியுள்ளது. 1983- ஜீலைக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள்தான் இன்றைய அரசியல் சக்திகளாக உள்னர். தற்சமயம் அடுத்த பத்திருபது ஆண்டுகளுக்கான அரசியல் சக்திகளை தயாரித்தளிக்க இவை உதவி உள்ளது. 7. மறந்துபோன தமிழ் இனநினைவை கட்டமைக்க மீண்டும் இந்திய தேசியம் தனது ஈழப்பிரச்சனையின் மீதும், அதை ஒட்டிய தமிழர்களது உணர்வுகளிலும் காட்டிவரும் மெத்தனத்தால் காரணமாகிவிட்டது. 8. இரண்டரை லட்சம் மக்கள் பலி பீடத்தில் இருத்தப்பட்டுள்ளனர். சிங்கத்திற்கும் புலிக்கும் நடுவில் சிக்கிக்கொண்டுவிட்ட அப்பாவி மக்களை சர்வதேச சமூகமும் கண்டு  கொள்ளாமல் தங்களது மேலாதிக்கத்திலேயே குறியாக உள்ளது. புவிசார் அரசியிலின் இரானுவ முக்கியத்துவத்திற்கான ஒரு பரப்பாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. 9. மனிதசமூகத்திற்கு வரப்போகும் பேரவலங்களை சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வாக இது மாறிவிட்டது. உலக அதிகாரம் மக்கள் சார்ந்த ஜனநாயகப் போராட்டங்களை, அதற்கான முன்னணிகளாக கட்டப்படும் இயக்கப் போரளிகளை அவர்களது இயக்கத்தை கொன்றொழிக்க ஒரு இராணுவ நுட்பத்தை கண்டடைவதற்கான சோதனையாக இப்போர் மாறி உள்ளது. 10. மனித அறம் பற்றிய அக்கறை உள்ள அரசு எதிர்ப்பு மற்றும் விடுதலை மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை எப்படி கட்டமைக்கக்கூடாது என்பதை கற்றுக் கொள்வதற்கான படிப்பினைகளை இது வெளிப்படுத்தி உள்ளது. உலக வரலாற்றில் முதன்முறையாக ஒரு போராளி இயக்கம் தனது கடந்தகால மற்றும் அடிப்படை மக்கள் நலக் கருத்தியலற்ற நடவடிக்கைகளால் இன்று தனது மக்களாலும், மற்ற உலக ஜனநாயக அமைப்புகளாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. 11. இந்தியாவில் தனது சொந்த சாதிய முரண்பாடுகளால் சிக்கித்தவிக்கும் தமிழ் தன்னிலைகளில், அரசு அதிகாரத்தில் ஆதிக்கம் வகிக்கும் மேல்சாதி குறிப்பாக பார்ப்பனீயத் தன்னிலைகள் தங்களது மனிதநேயத்தையும் மீறி பழி உணர்ச்சியில் திளைப்பதை இது வெளிப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அ-பார்ப்பனிய மேல்சாதி சக்திகள் மீண்டும் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது. 12. தமிழின் உன்னதம், வீரம், மறம் போன்ற சங்ககால இனநினைவு ஒன்று மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. 13. 1967- இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன உணர்வு என்பதும் மீண்டும் முன்னணி அரசியலுக்கான சொல்லாடல்களமாக வந்துள்ளது. இதனை ஒட்டி கட்டமைக்கப்பட்ட ஆரிய திராவிட முரண் என்பது மீண்டும் புதிய தலைமுறைக்கு நினைவுட்டப்பட்டுள்ளது. 14. இலங்கை உலகமய-காலனியமாதல் என்கிற ஒரு புதிய சர்வதேச ஆதிக்க முறைக்கான சோதனைக்களனாக மாற்றப்பட்டுள்ளது.

ஆக.. இந்நிகழ்வுகள் படிக்க பல பாடங்களை ஒரு சமூகவிஞஞான பார்வையாளர்களுக்கு தந்தாலும், இம்மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு? அவர்களை எப்படி காப்பாற்றுவது? என்பது கேள்விக்குறியாகி ஒரு தீர்க்க இயலாத குழப்பமான பிரச்சனையாக மாறி உள்ளது.  இந்நிலையில் புலிகள் செய்த அரசியலற்ற இராணுவத்தனமும் பாசிச மனமும்தான் காரணம் என்று விமர்சித்துக் கொண்டிருப்பதோ அல்லது சிங்கள இராணுவத்தின் பாசிச போக்கை பற்றி கதைப்பதோ காரிய சாத்தியமான தீர்விற்கு வழியாகாது. இந்திய அரசின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தவதும், சர்வதேசத்தின் மனசாட்சியை உலுக்கி அம்மக்கள் காப்பாற்றப்படுவதும் உடனடியாக செய்யப்பட வேண்டியது. புலிகள் தங்கள் இறுதி நிலையை அடைந்துள்ளனர். தனது கருத்தியல் மேல் நம்பிக்கை அற்றவர்கள் மட்டுமே காட்டிக்கொடுத்து விடக்கூடிய அச்சத்திற்கு ஆளாக நேரிடும். அதன் ஒரு விளைவே சாவைக் கோரும் சயனைட் குப்பி மாலைகள். புலிகள் தற்கொலை என்கிற நிபந்தனையுடன்தான் போராட்டத்தை துவக்கினார்கள். அச்சடங்கின் இறுதிநிலைக்கு இயக்கம் வந்துள்ளது. இராணுவ பலத்தில் மட்டுமின்றி மக்களிடமும் அவர்களது செல்வாக்கு சரிந்துவிட்ட நிலையே உள்ளது. இப்போதைய போர்நிறுத்த நடவடிக்கையும் மக்களை மீண்டும் வாழ்க்கைக்கு திருப்புவதும் மட்டுமே புலிகளை ஒட்டுமொத்தமாக மக்களிடம் அந்நியப்படுத்தும் நடவடிக்கையாக அமையும். அதேநேரத்தில் சிங்கள இராணுவம் தொடர் போரினால் மனநோய்க்கொண்ட இராணுவமாக மாறிவிட்ட நிலையில் முற்றிலுமாக இராணுவம் பின்வாங்கி சிங்கள அரசு அதனை சீரமைப்பது அவசியம். சமீபத்தில் கொலும்பில் தங்களது உறவினரான இறந்த இராணுவத்தினர் உடலைக்கோரி சிங்கள மக்கள் பேரணி நடத்தி உள்ளனர். யாழ்பானத்தில் தங்கள் உறவினரை விடுதலைப்புலிகள் விடுவிக்கவேண்டும் என்று கோரி தமிழர்கள் பேரணி நடத்தி உள்ளனர். இதுதான்நிலை. இந்த இரண்டு பேரணிகளும் ஒன்றாக நடத்தப்பட முடியாத நிலைதான் இதன் அடிப்படை சிக்கல்.

கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான போரில் எண்ணற்ற தமிழர்கள் கொல்லப்பட்டும், துரத்தப்பட்டும் ஒரு அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டபோது, தமிழகத்தில் எந்தவிதமான கொந்தளிப்பையும் அது ஏற்படுத்தவில்லை. தமிழக மக்களிடம் ஒரு நாடகத்தின் உச்சக்காட்சிக்காக காத்திருக்கும் உணர்வற்ற மரத்த நிலையே நிலவியது. ராஜிவ்கொலை மற்றும் புலிகள் குறித்து நிலவிய அதிருப்தி ஆகியன இந்த மனநிலைக்கு ஒரு காரணம் எனலாம். பிறகு, கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்த முத்துக்குமாரின் “உயிராயுதம்“ தேவைப்பட்டுள்ளது. இன்று மக்களை விழிப்புக் கொள்ளச்செய்வது என்பது இதுபோன்ற ஒரு மிகை நாடகத்தின் உச்சக்கட்ட விளைவுகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை உருவாகி உள்ளது. இதன்பொருள் முத்துக்குமாரின் மரணத்தை நாடகமாக கருதுவது அல்ல, மாறாக, முத்துக்குமாரின் மரணம் அவர் முன்வைத்த தெளிவான அரசியல் பிரதியின் வழியாக, ஒரு உணர்வுப் பெருக்கத்தையும், மரணத்தின் காரணத்தையும் ஆழமாக மக்கள் மனதில் எழுதிச் சென்றுள்ளது என்பதே. இதையே முத்துக்குமார் மரணம் இல்லாமல் பிரதியாக எழுதி பரப்புரை செய்திருந்தால் இந்த கொந்தளிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்க முடியாது என்பதுடன் அதை ஒரு அரசியல் பிரதியாகக் கருதக்கூட மக்கள் தயாராக மாட்டார்கள் என்பதும் இணைத்து சிந்திக்கத்தக்கது. முத்துக்குமார் தனது உடல் என்கிற வரைதோலில் நெருப்பால் எழுதிச்சென்ற பிரதி என்பதால்தான், அது தமிழக மக்களிடம் ஒரு பற்றிப் படர்ந்த போராட்ட மனநிலையை உருவாக்கியது. 

ஆக, மிகவும் முரண்பட்ட ஒரு நிலையில் ஒரு பெருஞ்சிக்கலில் இன்று மாட்டிக் கொண்டிருப்பது தமிழீழ மக்கள் மட்டுமல்ல உலகில் விடுதலைப்பற்றிய அத்தனை கனவுகளும்தான். உலகில் ஒரு விடுதலை இயக்கத்தை எப்படி அழிப்பது என்பதற்கான சோதனை முயற்சியை இன்று இலங்கை இராணுவம் தலைமையேற்று நடத்தி உள்ளது. ஒருவேளை புலிகள் இன்று போரை நிறுத்தி விலக்கிச் சென்றால் தமிழீழ மக்களின் நிலையை மேம்படுத்த இலங்கை அரசின், ஏன் உலகின் மற்ற எந்த அரசின் அல்லது ஐக்கிய நாட்டுசபையின் உத்திரவாதம் உண்டா? யார் அவர்களுக்காக களத்தில் நின்று உதவப்போவது? யார் அவர்களை மீண்டும் வாழ்க்கை நடத்துவதற்கான உத்திரவாதத்தை தருவது?

ஆக, முத்துக்குமாரின் மரணம் எழுப்பும் பலகேள்விகளில் ஒன்று. தீர்வி்ற்கான வழி என்ன? முத்துக்குமாரின் மரணநிலை என்பது இந்த தீர்க்க இயலாத முட்டுச் சந்தில் கொண்டுபோய் தமிழக மக்களையும், பலிகடாவாக தமிழீழ மக்களையும் நிறுத்தியதன் கையறுநிலைதான். உலகநாடுகள் இந்தப் போரை நிறுத்திவிட்டு புலிகளை தனிமைப்படுத்த முனைவதோ அல்லது தமிழீழ மக்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்வை உத்திரவாதப்படுத்துவதன் மூலம், புலிகளை மக்களிடமிருந்து கருத்தியல்ரீதியாக அந்நியப்படுத்த முனைவதோ தான் இப்பிரச்சனைக்கான உடனடி தீர்வாக அமையும். அதைவிட்டு இராணுவரீதியான தீர்வு என போர் செய்வது அனைத்து மனித அறத்திற்கும் எதிரானது. இராணுவரீதியான மற்றும் அரசியல்ரீதியான தீர்விற்கு முன்பாக மனிதநேயரீதியான தீர்வு இன்று அடிப்படை தீர்வாக உள்ளது என்பதை புரிந்துகொள்வது அவசியம். அதை புரிந்துகொள்வதற்கான ஒரு அடையாள-அரசியலற்ற மனநிலையே இன்றைய தேவை என்பதை வரலாறு மீண்டும் சொல்லிக் காட்டியுள்ளது.

-ஜமாலன் 07-02-2009

பின் குறிப்பு இக்கட்டுரை எழுதப்பட்ட பிறகு நிகழ்ந்த தீக்குளிப்புகள் மற்றும் ஈழம் சார்ந்த இறப்புகள் இதில் பேசப்பட வாய்ப்பில்லை என்பதை வாசிப்பாளர்கள் கவனத்தில் கொள்ளவும்..
---------------------------------------------------------------------------------------------------------------

யார் இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி ரோகிகள்? – தமிழவன்

உயிரோசையில் மதிப்பிற்குரிய பேராசிரியர் தமிழவன்">தமிழவன் எழுதிய இக்கட்டுரை இங்கு மீள்பதிவிடப்படுகிறது. ஈழப்பிரச்சனயை ஒட்டி சர்ச்சைக்குரிய முறையில் சாம்ஸ்கியை பயன்படுத்த முனையும் லங்கா கார்டியன் மற்றும் இந்து ராம் பற்றி விவரிக்கிறது இக்கட்டுரை. உலகில் அரசியல் மனோபாவங்கள் மற்றும் அரசியல் ஒப்புதல் கருத்தாக்கங்கள் உருவாக்கப்படுவதின் அரசியல் நுட்பம் பற்றியதும் சாம்ஸ்கி மற்றும் முக்கிய சமஸ்கிருத அறிஞர்களில் ஒருவரான ஸெல்டன் போலக்கையும் மொழி அடிப்படையில் இணைப்பது குறித்தும் பேசுகிறது இக்கட்டுரை. மற்றபடி அறம்/மறம் என்கிற அடிப்படையில் பேசப்படும் கருத்தாக்கங்கள் தொடர் உரையாடலுக்கும், மீளாய்வுக்கும் உரியவை.

நோம் சாம்ஸ்கி என்ற அமெரிக்க நாட்டு மொழியியல் அறிஞர் உலகின் மனசாட்சி என்று அறியப்பட்டவர். நான் தொடர்ந்து இவர் நூல்களைப் படிப்பவன்.

மொழியியலையும் தத்துவத்தையும் இணைத்து எழுதி உலகப் புகழடைந்தவர் சாம்ஸ்கி.

அமெரிக்காவின் ஒற்றை வல்லரசுத் தன்மையை அந்நாட்டால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கு விளக்கியவர். ‘எனது அமெரிக்கா’ எனப் புலம்பாதவர்.

சமீபத்தில் நண்பர் நாகார்ச்சுனன், ‘லங்கா கார்டியன்’ பத்திரிகையின் வாஷிங்டன் பிரதிநிதி, சாம்ஸ்கியிடம்கேட்ட கேள்விகளையும் அவற்றிற்கு சாம்ஸ்கி சொன்ன மறுமொழியையும் என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

சாம்ஸ்கி தனக்கு இலங்கை பிரச்சினை பற்றி போதிய அறிவு இல்லை என்று கூறியுள்ளார். எனினும் லங்காகார்டியன் பிரதிநிதி சாம்ஸ்கியை விடவில்லை. புலிகளை நியுரன்பர்க் விசாரணை போன்ற ஒன்றின்மூலம்தண்டனை கொடுப்பதுபற்றி சாம்ஸ்கி என்ன நினைக்கிறார் என்று மடத்தனமாகக் கேட்கிறார். சாம்ஸ்கிமீண்டும் மீண்டும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களும் யுத்தக் குற்றவாளிகளும் கண்டிக்கத்தக்கவர்கள்என்கிறார். ஓரளவு இலங்கை அரசில் பல யுத்தக் குற்றவாளிகள் இருக்கமுடியும் என்ற தொனி சாம்ஸ்கியின்பதிலில் உள்ளது. ஆனால் ராஜபக்ஷவின் ஆதரவில் ஐ.நா.வில் வேலைபார்க்கும் லங்கா கார்டியனின்ஆசிரியரைத் திருப்திப்படுத்த முனைந்து நிற்கிறார் லங்கா கார்டியன் பிரதிநிதி. இந்த மாதிரி லும்பன்களிடத்தில்சாம்ஸ்கி பேச ஒத்துக் கொண்டிருப்பதே அவரது பெயருக்குக் களங்கம்.

சாம்ஸ்கி பற்றித் தொடர்ந்து உலகின் பல பாகங்களிலும் அக்கறை காட்டுகிறார்கள். இந்தியாவில் சாம்ஸ்கியைஅழைத்து அவரது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்பவர் சென்னையைச் சார்ந்த, ‘இந்து’ ராம். லங்காகார்டியனும் ‘இந்து’ பத்திரிகையும் கைகோர்த்து அகில உலக இடதுசாரி மனோபாவத்தை உற்பத்தி செய்யமுயல்கிறார்கள்போல. இந்தியாவின் சி.பி.எம். என்ற இடதுசாரி நிறுவனமும் ‘இந்து’ ராமும், இலங்கையின் ஜே.வி.பி.யும் லங்கா கார்டியன் போன்றனவும்ஓரணியில் வரமுடியும், இந்த ‘வேரில்லா’ நிறுவனத்தன்மைகொண்ட இடதுசாரிகள்பற்றி தனியான ஒரு சொல்லாடலை உருவாக்கி இவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சி.பி.ஐ.கட்சியின் தமிழ்சார் நிலைப்பாட்டை இந்த ஆய்வில் முக்கிய உரைகல்லாக நாம் எடுக்க முடியும்.

முத்துக்குமார் மரணத்தருவாயில் எழுதிய கடிதத்தின் மேற்கோளான திருக்குறள் மீண்டும் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. அறத்திற்கே அன்புசார்பென்பர் அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்ற கருத்து மீண்டும் மீண்டும் புதுப்புது அர்த்தங்களைப் படைத்துக் கொண்டே போகமுடியும். அரசு என்பது மறம். அத்தகைய மறம் பல்வேறு முறையில் வேறு மறத்தை உற்பத்தி செய்கிறது. புலிகளின் மறம், இலங்கை அரசின் ஒற்றைமுகமாக்கலை நோக்கிய கிரமமான வளர்ச்சிக்கான ஒரு தர்க்கரீதியான எதிர்வினை. அவ்வளவுதான். வன்முறைபற்றி சாம்ஸ்கி கூறும்போது அது தீர்வாகாது என்ற தொனியில் பேசுகிறார். ஐ.நா.சபை போரை நிறுத்தச் சொன்னாலும் தான் கேட்கப் போவதில்லை என்று கூறும் அரசின் மறத்தை இன்னொரு மறம்தான் தடுக்கமுடியும்.

மெதுமெதுவாக உலகமெங்கும் அதிகாரம் என்ற மறம் கோலோச்சுகிறது. அங்கு மறம் புதிய வடிவத்தை மேற்கொள்கிறது. மறத்திலிருந்து பயங்கரவாதம்தோன்றுகிறது. அகில உலகத்தின் வெளிவிவகார நடவடிக்கைகள் எப்போதும் ஒழுக்கக்கோட்பாட்டைப் பின்பற்றாதவை. அமோரல் (amoral) தன்மைகொண்டவை. இதனுடன் சம்பந்தப்பட்டவைதான் பயங்கரவாதம். பயங்கரவாதத் தன்மை அரசுகளின் ஒழுக்கத்துக்கப்பாற்பட்ட நடவடிக்கையோடுசம்பந்தமுள்ள காரியம்தான்.

ஜோசப் கான்ராட் நாவல் ஒன்றில் வெளிநாட்டுத் தூதுவர் இன்னொரு நாட்டில் குண்டுவெடிப்பதற்குச் செய்யும் நடவடிக்கைகள் வரும். பிற நாடுகளைஅழிப்பதற்கு உளவு பார்ப்பது, லஞ்சமாகப் பெண், பணம், பதவிகள், விருந்துகள் தருவதுதான் தூதுவர்களின் பணி.

பெண்கள், பிராமணர்கள், பசுக்களை யுத்தம் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நீதியின் காலம் மலைஏறிவிட்டது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும்உள்ள படைகள்தான் மனித ஒழுக்கத்தைக் கேள்விகேட்கும் நிறுவனங்கள். நீதி, நியாயம், அன்பு, பாசம் எதுவும் செயல்படாத நிறுவனம் இது. இதனைப் புரிந்தசில தெய்வத்தன்மை கொண்ட மனிதர்கள் சேர்ந்து ஓருலகம் என்ற (one world) கோட்பாட்டைச் சிந்தித்தார்கள். பெட்ரண்ட் ரஸ்ஸல் பெயர் இந்த இடத்தில்எனக்கு ஞாபகம் வருகிறது.

இப்போது என் மேசைமீது சாமஸ்கியின் ‘அறிவு மற்றும் விடுதலை பற்றிய பிரச்சினைகள்’ என்ற நூல் இருக்கிறது. இரண்டு கட்டுரைகள் இந்தச் சிறிய நூலில்உள்ளன. இரண்டும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கியால் சொற்பொழிவுகளாகக் கொடுக்கப்பட்ட கட்டுரைகள். லண்டன் டிரினிடி கல்லூரியில் 1971-ஆம் ஆண்டுபெட்ரண்ட் ரஸ்ஸல் நினைவுச் சொற்பொழிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்ஸ்கியும் பெட்ரண்ட் ரஸ்ஸலும் இரண்டு மகாமனிதர்கள்.அரசுகளைத்தாண்டி மனித நியாயத்தை யோசித்தவர்கள். அரசுகளின் கையில் இருக்கும் அணுக்குண்டுகள், படைகள், சட்டதிட்டங்கள், ஆள்பலம் இவற்றைமீறிக் கருத்துககளால் செயல்படமுடியும் என்பதை நம்பியவர்கள். யுத்தங்களைவிட கருத்துகள் வலிமையானவை எனக் கூறியவர்கள். ஏனெனில்கருத்துகள் மொழியில் உருவாக்கப்படுபவை என்ற தத்துவச் சிந்தனையை இருவரும் ஏற்கிறார்கள்.

சாம்ஸ்கியின் சிந்தனையான இயல்புக் கொள்யை (Innate Principle) இன்று பலருக்குப் பரிச்சயமானது.மொழியானது அகில உலக மனிதர்களின் ‘உறைந்த இயல்பு’ என்பது போன்ற சிந்தனைஇது. மொழியும் மனிதச்சிந்தனையும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எல்லா மனிதர்களும், சாதி, இன, மத, மொழி வேறுபாடற்றுஉயர்ந்தவர்கள் என்ற சிந்தனையைக் கூறுகிறது இக்கோட்பாடு.

முதல் கட்டுரையில் இயல்புக் கோட்பாட்டோடு உலகின் முக்கியமான தத்துவவாதிகள் சிலரின் சிந்தனைகளைஒப்பிடுகிறார். கூட்மன், லாக், லெப்னிஸ், கான்ட், ஹ்யும், ரஸ்ஸல் போன்றோரின் சிந்தனைகளை சாம்ஸ்கிதன் சிந்தனைக்கருகில் கொண்டு வந்து ஒப்பிடுகிறார்.

விஞ்ஞானத்தின் அடிப்படை உண்மைகள் பரஸ்பர அனுபவத்திற்கு உட்பட்டவை. இன்னொருவருக்குஎடுத்துக்காட்டி விளக்கலாம். அந்த எடுத்துக்காட்டி விளக்கும் பண்பையும் எடுத்துக்காட்டி விளக்கமுடியாததன்மையையும் ஒப்பிடுகிறார் ரஸ்ஸல். அப்படிப்பட்ட எடுத்துக்காட்டி விளக்கமுடியாத பண்போடு,மொழியியல் மூலம் தான் கண்டுபிடித்த இயல்புக் கோட்பாட்டை ஒப்பிடுகிறார் சாம்ஸ்கி.

எனக்கு இந்த இடத்தில் ழான் பவுல் சார்த்தரின் சிந்தனை ஞாபகத்துக்கு வந்தது. அவர் முன்-அறிவுத்தளம் (Pre-Cognitive) ஒன்றைப்பற்றிக் கூறுகிறார்.

இந்தச் சிந்தனைகள், அமைப்பியலில் நிராகரிக்கப்படுகின்றன என்பது வேறு விஷயம்.

மொத்தத்தில் தீவிரமான அரசியல், செயல்பாடு, தத்துவம் எல்லாம் மனித வாழ்வு தீவிரமாகும்போது ஒன்றிணைகின்றன.

நோம்சாம்ஸ்கி இத்தகைய ஒன்றிணைவின் அரிதான உதாரணம். அவர் ஒரு அறிவுஜீவி என்பது மட்டுமல்ல அவரை நாம் புகழ்வதற்கான காரணம்.

இத்தகைய நோக்கில்தான் அவரைப் புரிந்து கொள்ளவேண்டும். இத்தகைய நோக்கில் புரிந்துகொள்ளாத இந்துஇதழின் வெளியீடான ஃப்ரன்ட்லைனின்வலைத்தளம் சாம்ஸ்கியை சொந்தம் கொண்டாடுவதுஅபத்தம். இந்து, சாம்ஸ்கியுடன் தன்னை இணைப்பது கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தனதுவாலை ஆட்டுவது போன்றது. லங்காகார்டியனும் இந்து வரிசையில் இணைவது அபத்தத்தின் உச்சம் என்பதுதான் எனது கணிப்பு.

இன்னொரு கோணத்திலும் யோசிக்கவேண்டியுள்ளது. சாம்ஸ்கியை லங்காகார்டியனும் (1983இல் இப்பத்திரிகை நடுநிலையாக இருந்தபோது பல நல்லகட்டுரைகளை வெளியிட்டது) இந்து குழுமமும் ஏன் தங்கள் சொத்தாக மாற்றப் பார்க்கின்றன? தங்களுக்கு காஸ்மாபாலிட்டன் புத்திஜீவி என்ற பெயர்வேண்டியிருக்கிறது. காஸ்மாபாலிட்டனிசத்தில் தமிழ் சேரமுடியுமா என்ன? எல்லை தாண்டிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது இதன் முக்கிய குணம்.ஈழப் பிரச்சினை பற்றிப் பேசாமல் பாலஸ்தீனிய பிரச்சினை பற்றிப் பேச வேண்டியது இதன் முக்கியத் தேவைகளில் ஒன்று. இந்து ராம், அருந்ததிராய், வேறுசில அரைகுறைகள் எல்லாம் இங்கே அணிவகுத்து நிற்கும். இன்னொரு கூட்டம் உண்டு. சீ, தேசிய இனவாதி ஆகிவிட்டானய்யா என்று லேபல் குத்துபவர்கள்அடிப்படையில் காஸ்மாபாலிட்டனிசத்தின் மீதான மோகவியாதிதான் இதற்கெல்லாம் காரணம். இந்த காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவி அந்தஸ்துக்காகஆசைப்படும் உளவியல் ரோகிகளுக்கும் சி.பி.எம்.மின் மேல்தட்டு கட்சித் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால்தான் சோம்நாத் சட்டர்ஜிபாராளுமன்ற அவைத்தலைவரானவுடன் சி.பி.எம்.மிலிருந்து தப்பிவிட்டார். இவர்களெல்லாம் தங்கள் அசிங்கங்களை மறைக்க ஒரு சாம்ஸ்கியைப்பிடித்துவந்து தங்கள் சொத்தாக்க முயலுகிறார்கள். கடைசியாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது லங்கா கார்டியன்.

ஆனால் சமீபத்தில் ஒரு புதுச்சிந்தனை இந்தியவியல் ஆய்வில் தலைகாட்டியுள்ளது. இதனை முன்னெடுப்பவர் ஷெல்டன் போலக் என்ற சமஸ்கிருதப்பேராசிரியர். இந்திய ஆய்வில் சமஸ்கிருதம் பிராந்திய மொழியோடு (உதாரணம் கன்னடம்) தொடர்பு கொள்கையில் ஒரு காஸ்மாபாலிட்டன் வெர்னாக்குலர்தோன்றுகிறது என்கிறார் ஷெல்டன் போலக். தமிழ் பற்றிய கணிப்பில் இவர் தோற்றாலும் சமஸ்கிருதத்தின் அரசியலைச் சரியாகக் (இவரது சமஸ்கிருதத்தின்சாவு என்ற கட்டுரையைப் பார்க்க) கணிக்கிறார்.

இந்தியாவில் நடமாடும் காஸ்மாபாலிட்டன் அறிவு ஜீவிகளுக்கு போலக்கின் தர்க்கம் தெரியாது. அதாவது பிராந்திய மொழி அல்லது பிரச்சினையில்ஈடுபடும்போதுதான் உண்மையான காஸ்மாபாலிட்டானிசம் உருவாகிறது. இந்தப்பார்வையை எனக்குத் தந்ததற்கான அடிப்படை போலக் கட்டுரைகளில்உள்ளன. சாம்ஸ்கியை, போலக்கோடு இணைக்கவேண்டும். இந்தியச் சூழலில் சரியான அரசியல் பார்வை என்பது பிராந்திய மொழி சார்ந்த பார்வைதான்.ஜார்ஜ் ஹார்ட் என்ற பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் எழுத்துகளிலும் இந்த அழுத்தம் உண்டு. எனவே தமிழின் தனித் தன்மையைப் பற்றிஹார்ட் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த வழியில் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி செய்த கிரேக்க இலக்கியத்தோடான ஒப்பீடு முக்கியமான ஆய்வுநடவடிக்கைகளாகும்.

சாம்ஸ்கியைப் போலக்கோடு இணைக்கத் தெரியாத ‘இந்து’த்தனமான காஸ்மாபாலிட்டன் அறிவுஜீவித்தனம் போலியானது. சாம்ஸ்கியை அழைத்துச்சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது. சிருஷ்டிபரமாக சாம்ஸ்கியை அணுகத் தெரியாதவர்கள் தங்கள் ரோகத்துக்கான புனுகாக மட்டுமேசாம்ஸ்கியைப் பயன்படுத்தமுடியும்.

- நன்றி உயிரோசை

குறிப்பும் மீள்பதிவும் – ஜமாலன். – 24-02-2009

இலங்கையில் நடக்கும் போர் குறித்து நோம் சோம்ஸ்கி கூறியிருக்கிற கருத்துகளுக்கான நம் பதில்

நண்பர்கள் அனைவருக்கும்,

கீழே பதிக்கப்பட்டிருக்கிற அறிக்கையை வாசிக்கவும். உலகின் சிறந்த மொழியியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வரிசையில் முக்கிய இடம்பெறும் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) (விக்கியில் இவரைப்பற்றி) இலங்கையிலிருந்து வெளிவரும் “லங்கா கார்டியன்” பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவரது பேட்டி பற்றிய விமரிசனமாகவும் அந்த பேட்டியில் சோம்ஸ்கியை சாதுர்யமாக தனது இனவாதத்திற்கு பயன்படுத்த முனையும் பேட்டியாளரின் நோக்கத்தை சோம்ஸ்கிக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஈழத்தில் நடக்கும் உண்மை நிலைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடும் எழுதப்பட்ட அறிக்கையே இது.

சோம்ஸ்கி தொடர்ந்து உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு அதரவு அளிப்பதுடன் அமேரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து விமரிச்சித்து வருபவர். ஏற்கனவே சென்னையில் வளைகுடா யுத்தம் பற்றிய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். உலகளவில் நன்கு அறியப்பட்ட ஒரு செயல்பாடுமிக்க அறிவுஜீ்வி. மொழியியல் குறித்து உலக அளவில் வளமிக்க புதிய கண்டுபிடிப்புகளையும், பங்களிப்புகளையும் செய்தவர். கிழக்குத் திமூர் துவங்கி காஸாவரை தொடர்ந்து போராட்டங்களை கவனித்து தனது கருத்தக்களை உலக அறிவஜீவிகள், அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்பவர். அவரது கவனத்திற்கு ஈழப்பிரச்சனையின் பரிமாணங்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவானதே இந்த அறிக்கை.

ஈழம் குறித்து நமக்குள் பல்வேறு அரசியல் மாறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். அவைகள் அப்படியே இருக்கட்டும். ஆனால் ஈழம் பற்றி உருவாக்கப்படும் கருத்துப் பரவலில் அதன் உண்மை நிலையை கொண்டு செல்வதில் நமக்கு அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வரையப்பட்டிருக்கிறது, உங்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை நம்மால் முடிந்த இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இணையத்தில் எழுதும் நண்பர்கள் என அனைவரிடமும் கையெழுத்து பெற்று இதனை சோம்ஸ்கி கவனத்திற்கு ஒரு கூட்டுக்குரலாக கொண்டு செல்வதே நமது நோக்கம்.

சோம்ஸ்கி-யின் நேர்காணலை இந்த இணையத்தளங்களில் நீங்கள் வாசிக்கலாம்:

Z-net

Sri Lanka Guardian

Countercurrents

நீங்கள் செய்யவேண்டியது:

1. "'I AGREE WITH THIS RESPONSE" என்று "SUBJECT" -ல் உங்கள் சம்மதத்தை அறிவித்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். response2chomsky@gmail.com

மின்கடிதத்தில், உங்களைப்பற்றி-- உங்கள் துறை, பணியாற்றும் களம் (அதாவது எழுத்தாளர், அரசியல் களப்பணியாளர் என்பது போல-- ஒரு சிறு குறிப்பையும் எழுதுங்கள். இது அறிக்கையை அதிகக்கவனம் பெறச்செய்யும்.

2. சோம்ஸ்கி-யின் நேர்காணலையும் அறிக்கையையும் வாசித்த பின்னரே உங்கள் ஒப்புதலை, கையெழுத்தை அனுப்புங்கள்.

3. வாய்ப்புள்ள நண்பர்கள் தங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் மற்றும் ஈழப்பிரச்சனையில் அக்கறை உள்ளவர்களிடம் இந்த நிலைப்பாட்டை விளக்கி ஒரே அச்சுப்பிரதியில் கையெழுத்து பெற்று அதனை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கவும். கையெழுத்துடன், இடுபவர்கள் பற்றி மேற்சொன்னது போல சிறு குறிப்புகளையும் அனுப்புங்கள்.

4. வரும் திங்கள் 23 பிப்ரவரி, நேரம் 0630 GMT or 1230 IST or 0100 US Eastern Standard Time-க்குள் நீங்கள் உங்கள் கையெழுத்து மின்கடிதமும் நண்பர்களிடம் கையெழுத்துப் பெற்ற அச்சுப்பிரதியின் ஸ்கேன் செய்யப்பட்ட பக்கமும் அனுப்பி வைக்கவும்.

இவற்றை தொகுத்து நாங்கள் நோம் சோம்ஸ்கியின் முகவரிக்கு அனுப்பிவிட்டு உங்களுக்கும் அதை தெரியப்படுத்துகிறோம்.

அன்புடன்

response2chomsky@gmail.com -க்காக ஜமாலன், பெருந்தேவி

நண்பர்கள் நாகார்ஜீனன், பெருந்தேவி வலைபக்கத்திலும் இதனை வாசிக்கலாம்.

The interview, as can be seen below, sidesteps the crucial issue of suffering of the Tamil people during the war in Wanni. Hence, the following response has been circulated by friends after a thorough discussion (Please see Nagarjunan's blog entry) to focus on this issue and urging him to have a relook at his own interview.

Response to Noam Chomsky’s comments on the ongoing war in Sri Lanka

We (the undersigned), who have immense respect for Professor Noam Chomsky’s work for peace on a global scale, are nevertheless dismayed by his recent comments on the ongoing war in Sri Lanka, made in a telephonic interview to a military analyst working for a journal known to be close to the Sri Lankan government (1).

The interviewer describes Professor Chomsky as a “a self-described anarchist… probably most famous for his strong stances in support of suffering peoples, such as those in Palestine and Somalia” and hopes to “apply his years of experience and insight to Sri Lanka to help the nation make the transition from a house divided to a united and peaceful country.”

Ignoring loss of lives

The interviewer and, more unfortunately, Professor Chomsky clearly sidestep the key issue of the suffering of the ordinary Tamil people in the Wanni region facing the artillery and aerial onslaughts of the Sri Lankan armed forces in its drive against the Tamil Tiger guerrillas fighting for a separate Tamil State.

Professor Chomsky does state, right at the outset of the interview, that “I don't feel that I have a profound enough knowledge of the details to offer a confident opinion”, but “it is clear that.. the military aspect of the conflict seems to be coming to an end.” But the interview totally ignores that this war is increasingly fought away from the eyes of the world, with enormous cost of lives.

A war without witnesses

Professor Chomsky should have been aware that the Sri Lankan government, on 16 September 2008, ordered all international relief organizations out of the Wanni region which was under the control of the Tamil Tiger guerrillas. The Sri Lankan armed forces have repeatedly charged the Tamil Tiger guerrillas, probably numbering around 5,000, of holding around 150,000 to 200,000 civilians at ransom in an ever-shrinking patch, now around 50 sq. km in the coastal Mullaitivu district; something denied by the Tamil Tiger guerrillas.

No journalist, domestic or foreign, is allowed to go beyond Vavuniya town to independently verify information emanating from the battlefields; all journalists travelling to these areas are embedded with the armed forces; unofficial censorship on news from the front including those of casualties of armed forces has been in force in Sri Lanka. One Colombo-based journalist who tried to verify such information, Chris Morris of the British Broadcasting Corporation (BBC), received an open threat from Sri Lanka’s Defence Secretary, Gothabaya Rajapakse, who also happens to be the President’s brother and a US citizen, that he would be chased from Sri Lanka. In a few days, Mr. Morris left the country. (2)

Enduring suffering

Reports from the battlefields nevertheless indicate that more than 1,000 civilians, all of whom ordinary Tamil people, have been killed; a far higher number of people injured, as the Sri Lankan armed forces have shelled homes, roads, makeshift hospitals and even homes for the aged and bombed civilians, which if proved, could amount to war crimes. The suffering endured by the people is in addition to the lack of food, shelter, water, transport, essential drugs and medical care. Some of the targets lay in designated safe zones by the Sri Lankan armed forces where people had taken shelter. The International Red Cross alone has a thin presence of medical personnel in the region and they have recently managed to ship 1,150 injured persons to Trincomalee port for emergency medical treatment.

The armed sources estimate that around 25,000 people have made it from the battlefields to the areas now fully controlled by the armed forces; we understand that they are being held in several makeshift detention camps after a screening process. Some reports say the Tamil Tigers have attacked civilians fleeing the war. Very few independent journalists or political leaders have met with those who had fled the battlefields or had been evacuated from there (3). We also learn that plans are afoot to detain the fleeing population a period of three years in five “model villages”, which is in gross violation of international norms for taking care of internally displaced persons (4).

World aids the war

More importantly, the Sri Lankan government conducts this war with various levels of military assistance from governments around the world - the United States, the United Kingdom, some European nations, India, Pakistan, China and Iran. Thus, the Sri Lankan government is emboldened to ignore calls from international humanitarian agencies including those of the United Nations, to ensure safety of civilians caught in war; it has also ignored calls from prominent human rights organizations including the Amnesty International and Human Rights Watch, for a truce and a humanitarian corridor to provide relief for the suffering people; the only exception so far has been the ships which have evacuated 650 injured persons to Trincomalee.

Procuring consent for war

We can well understand the interviewer’s motive in suppressing the above information. But we wonder why Professor Chomsky, having been eloquentl on the US administration and media’s attempts to manufacture consent for war efforts in Afghanistan and Iraq, fails to question this (Ironically, the interviewer later asks Professor Chomsky about such strategies of the US administration!). Professor Chomsky appears to be unaware of the Sri Lankan government’s tactics of intimidating and bulldozing sections of the media which have refused to be part of the machinery manufacturing consent for this war. Several journalists who have questioned the cost of this war, in terms of lives of civilians and soldiers which are unreported or deliberately underreported, have faced intimidation and even murder.

Indeed, the most well-known case has been that of Lasantha Wickramatunga, editor of the Sunday Leader, a prominent critic of the government who was gunned down last month in Colombo while he was on his way to work (5). Following his murder, at least five journalists who have criticised the Sri Lankan government have fled the country so far (6). Earlier this month, the BBC World Service suspended the flow of its Sinhala and Tamil language services to the state-owned Sri Lanka Broadcasting Corporation after the latter censored selective programmes since November last (7). These indicate that Sri Lanka continues to be one of the most dangerous places for journalists; paramilitary organizations widely perceived to be supported by the authorities stand accused of suppressing media and killing journalists, something which the Tamil Tigers earlier stood accused of (8).

No to truce, yes to war

The interviewer continues to attempt to procure Professor Chomsky’s consent for the Sri Lankan government’s stand of ignoring the demands for a truce and resumption of peace talks with the Tamil Tiger guerrillas. He advocates a bitter fight to the end and asks Professor Chomsky: “Might it be that more lives will be saved if conflicts are allowed to see themselves out and decisive military victories and defeats are allowed to be determined instead of stopping a war before it can be really resolved?” Professor Chomsky’s reply to this, advocating a peaceful resolution of the conflict, is most welcome (9).

The interviewer is keen to ask Professor Chomsky about the fate of the Tamil Tiger guerrillas, whether those charged with atrocities and war crimes should be tried in tribunals; however, when he deals with those committed by the Sri Lankan armed forces, he slips in the word “people”: “what do you think should be the fate of the tens of thousands of people who have fought with the LTTE (Tamil tigers) over the decades, including lower level soldiers all the way up to leading officers?” The interviewer, as seen above, does not even acknowledge the suffering of the Tamil people in the ongoing war, tries to equate members of the armed forces who are fighting on behalf of a majoritarian government, with “people”, revealing a clear bias (10).

Federalism denied

At the political level, the interviewer tries to lead Professor Chomsky to the point that “it is in the best interests of the island to remain as one independent nation, or one united nation, rather.” Professor Chomsky, while replying to this issue, puts forth a “federal arrangement,” listing the Basque, Catalina, Wales and Scotland questions, all in Europe. Strangely, he does not cite the more intractable Irish national question. It is also important to point out that for both Basque and Catalonia regions of Spain, federal systems were reached after a prolonged civil war which also was part of the Second World War. These issues continue to be raised in some manner. Thus, Europe appears to have arrived at this “federal arrangement” after two world wars, but the recent Balkan experience belies this as well.

Professor Chomsky does not cite the post-USSR experience where countries were able to secede without much violence. Also, more crucially, Professor Chomsky does not discuss longstanding similar issues in Asia and Africa, much of which are fallouts from the colonial era and have been characterised by violence. He also does not cite the fact that colonial powers divided regions and incited discourses based on rivalry, identity and ethnicity.

Knowledge is must

As for Sri Lanka, Professor Chomsky says “without a really deep knowledge of these matters would be just too presumptuous for an outsider to offer opinions.” Nevertheless, it will not be difficult for him to recognize that:

• the country’s majoritarian political establishment remained averse to any federal arrangement, provoking the Tamil youth to take up arms in the seventies; thus, when the democratic rights of the Tamil people have been violated by successive governments, a violent form of resistance grew.

• Sri Lanka continues to have a unitary constitution giving preferential treatment to the majority in terms of ethnicity and religion (Sinhala-Buddhism) and its cavalier treatment of the minorities has a long history;

• time and again, Sri Lanka’s major political parties have missed opportunities to amend the constitution towards a secular, federal framework and failed to ensure equal rights to minorities and nationalities in the country.

• Sri Lanka has long failed to punish those responsible for carrying out attacks and pogroms against the Tamil minorities; its independent institutions including the judiciary have shown no signs of ensuring justice for the victims of such attacks. The armed forces and the police continue to be majoritarian in their constitution and outlook.

• the Sri Lankan government appears wanting to force its current solution framework of provincial councils, under the 13th amendment, on a population which has suffered war, forced internal displacement, detention in camps, displacement to several countries including India (The Tamil chief minister of the newly-formed eastern provincial council, a former guerrilla leader, is already out complaining that he does not even have powers to appoint clerks and schoolteachers. ). And it is not at all clear whether, in the long run, this will satisfy Tamil political demands.

Peace with honour

We wish to remind Professor Chomsky that it that it is necessary to go further than depending on information received from media establishments in Sri Lanka and India which have not risen to the occasion to cover this war independently and courageously. We also urge him to independently check all information, including all that we have said above, and get fully equipped to make any further comments on the ongoing war in Sri Lanka.

Given the above background and context, it is necessary to be sensitive to the suffering of a minority population during their struggle for their legitimate civil and political rights towards a solution which genuinely satisfies them. The ordinary Tamil people of Wanni are facing the despair of a brutal war of aggression unleashed by a majoritarian government aided by governments across the world. What they seek is peace with honour. And we urge Professor Chomsky to recognize this.

References

1. Professor Chomsky on Sri Lanka And American Affairs, Interview by Sri Lanka Guardian's Washington correspondent Eric Bailey, Sri Lanka Guardian, 12 February 2009.

2. Paranjoy Guha Thakurta, Sri Lanka: government targets media under civil war cover, Inter Press Service, 9 February 2009. For more on authorities’ bid to suppress information, see below.

3. One journalist, Emily Wax in Vavuniya town met with fleeing refugees who were critical of the Tamil Tigers and praised the Sri Lankan armed forces. It was also evident that these people were scared and dependent on the mercy of the armed forces after the interviewer departs from the scene. See: Sri Lanka Debates Fate of War Refugees in Government Camps, The Washington Post, 15 February 2009; In Sri Lanka, Tales Of Jungle Terror: Civilians Fleeing War Describe Forbidding Terrain, The Washington Post, 13 February 2009.

4. Jeremy Page, Barbed wire villages raise fears of refugee concentration camps, The Times UK, 14 February 2009. International humanitarian and human rights organizations have already protested against this and have taken this up with governments which have promised aid to Sri Lanka.

5. Amnesty International, Outspoken Journalist Killed in Sri Lanka, 9 January 2009. This was followed by an attack on a private television channel.

6. Melani Manel Perera, Sri Lanka government behind murder of journalist, Speronews, 21 January 2009. Also, BBC services rebroadcast suspended, Journalists at risk in Sri Lanka: BBC

7. In its Press Freedom Index for 2008, Reporters sans Frontiers ranked Sri Lanka in 165th place out of a total of 173 countries. Earlier this week, Reporters sans Frontiers expressed revulsion at the death of a Tamil journalist, Satyamoorthy, in the ongoing bombardment as a “war crime.”

8. Professor Chomsky states: “There's a terrible burden of proof to bear for those who would advise violence as a solution, and I think the resort to violence has almost always been harmful, almost bitterly so, so I think the first assumption should be that international peacekeepers and diplomacy would be a far preferred outcome and only if it is simply impossible to execute should the situation be allowed to deteriorate into violence, which is usually very harmful for everyone.”

9. Professor Chomsky goes on to caution the interviewer that war crimes are usually committed by both sides and that all of them need to be investigated if a tribunal were to sit on judgment; instead, he recommends that the society decide on the issue of amnesty and suggests a truth or reconciliation commission without punitive powers on the lines of South Africa, El Salvador or Guatemala. Professor Chomsky’s recommendation is a welcome step which can be part of a peaceful resolution.

10. Ravi Nessman, Sri Lanka war near end, but ethnic tension remains, Associated Press, 5 February 2009.

தமிழீழப் பிரச்சனைக் குறித்த கூட்டங்கள் அறிவிப்பு.

 

image

நண்பர்கள் படத்தை கிளிக் செய்து பெரிதுபடுத்தி வாசிக்கவும். சிங்களர்கள் மத்தியல் தமிழருக்கு வரும் ஒரு ஆதரவுக் குரல் என்ற வகையில் இக்கூட்டங்கள் முக்கியத்தவம் வாய்ந்தவை. கலந்துகொள்ளும் நணபர்கள் பேசியவற்றை பதிவில் பகிர்ந்நதால் இங்கு இணைப்பு கொடுக்கலாம்.

ஈழப்பிரச்சனைப் பற்றிய முக்கியமான உரையாடல் நடக்கும் நண்பர் நாகார்ஜீனனின் ஈழம், இனி தடுப்புமுகாம்-அகதிமுகாம் வடிவத்தில்?பதிவை நணபர்கள் வாசித்து தங்களது கருத்துக்களையும் ஆலொசனையும் சொல்ல வேண்டுகிறேன்.

ஈழத்தமிழர் ஆதரவுக்குரல் தோழர்கள் போராட்டம் டெல்லியில் நடைபெற்றுபோது அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளனர். போராட்டம் டெல்லிவரை சென்று இந்தியா முழுமைக்குமான ஒரு பார்வையை திருப்பியதில், மற்ற மாநிலத்தவரையும் கவனப்படத்தியதில் அதன் வெற்றியை அடைந்துள்ளது. கலந்துகொண்ட மாணவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அனைத்து தரப்பினரது போர்ககுணத்திற்கு  நமது வீரவணக்கங்கள்.

குறிப்பும் அறிவிப்பும்

ஜமாலன். 13-02-209

தமிழீழம் - இந்திய அரசிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது (2)…

 
பாராளுமன்றம் முன் மறியல் போராட்டம்

வணக்கம்,
ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கெதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
01.02.2009-ல் நடந்த முதல் கூட்டத்தில், தில்லி பாராளுமன்றத்தின் வரும் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.2009) பாராளுமன்றத்திற்கு முன் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்திய அரசே,
1. ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கு!
4. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்!
5. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு!

 
என்ற கோரிக்கைகளை முன் வைத்து தில்லி பாராளுமன்றம் முன் நடத்த விருக்கும் மறியலில் பங்கேற்க விரும்பும் அனைவரும் ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி,

தொடர்புக்கு
அமைப்பாளர்கள்
லீனா மணிமேகலை, 9841043438.
பா.செயப்பிரகாசம், 9444090186.

Dharna Before Parliament

Greetings,
Dharna Before Parliament

We the Student Groups, Writers, Artiste, Human Rights Activists, Women Organisations, Enuchs, Journalists, IT Professionals, Lawyers and Working Class, have gathered in one platform and formed ‘Voice for Eelam Tamils’.

This People Front, met on 01.02.2009 and decided to launch continuous and rigorous struggles against Genocide of Tamils in Srilanka.

In the first phase, a rally and dharna will be organised on 12.02.2009 during the forth coming parliamentary session in New Delhi putting forward the following demands,

Indian Goverment should,

1. stop abetting the genocidal war of the Srilankan Goverment on Eelam Tamils.
2. recognise the liberation struggle of Eelam Tamils.
3. revoke the ban on LTTE.
4. ensure Eelam Tamil’s right to live.
5. take action against Srilankan Government for killing Tamil Fishermen.

‘Voice of Eelam Tamils’ request all the enthusiasts to contact the organisers, confirm their participation and make the Dharna a massive Struggle.
Thanking You,

Co-ordinators

Leena Manimekalai 9841043438.

Pa. Seya Prakasham 9444090186.

தொடர்பிற்கு - voice.for.eelamtamils@gmail.com

-அன்புடன்

ஜமாலன். 03-01-2009