நண்பர் நாகார்ஜீனனின் சமீபத்தில் வெளிவந்த ”நளிர்“ என்கிற நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் அக்டேபார்-2 வெள்ளியன்று நடைபெற உள்ளது. அய்யப்ப மாதவன் அவர்களால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ் கீழே உங்கள் பார்வைக்கு. சென்னை நண்பர்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்று பதிவிட்டால் எங்களைப்போல வெளியில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும். நண்பர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
உரையாடுபவர்கள் - பேரா. வீ. அரசு, முனைவர் தமிழவன், திரு. சண்முகம், திரு. வாசு மற்றும் நாகார்ஜீனன்
இடம் சிற்றரங்கம், தேவநேய பாவாணர் நூலகம், அண்ணா சாலை, சென்னை-6
நேரம் காலை 10 மணி, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009
அன்புடன்
ஜமாலன். – 30 செப்டம்பர் 2009.



